ஜிமெயிலில் தானியங்கி ஸ்கேன் வசதி

SOCIAL SHARE
Pin It

ஜிமெயிலில் தானியங்கி ஸ்கேன் வசதி கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையே இன்று உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.

தற்போது இச் சேவையில் புதிய வசதிகள் பல அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுள் தானியங்கி ஸ்கான் வசதியும் ஒன்றாகும்.

இதன் ஊடாக அனைத்து வகையான மின்னஞ்சல்களும் ஸ்கான் செய்யப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குறித்த ஸ்கான் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர பெறப்பட்ட மின்னஞ்சல்களுக்கு எந்தவிதமான பதில்களும் அளிக்கவில்லையாயின் அது தொடர்பில் தெரியப்படுத்தக்கூடிய Smart Nudge எனும் வசதியும் தரப்பட்டுள்ளது.
அதேபோன்று Smart Reply வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Karisalmedia Admin