அமெரிக்காவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு

SOCIAL SHARE
Pin It

2019-2020ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த புள்ளி விவரங்களை அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 120 ஆண்டுகளில் அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம்  குறைந்த விகிதத்தில் அதிகரித்துள்ளது. ஜூலை 2019 முதல் 2020ம் ஆண்டு ஜூலை வரையிலான கால கட்டத்தில், அமெரிக்க மக்கள் தொகை 0.35 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11 லட்சம் அதிகமாகும். கடந்த ஜூலை நிலவரப்படி, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 32.9 கோடியாகும்.

கலிபோர்னியா உட்பட 16 மாகாணங்களில் மக்கள் தொகையானது 0.18 சதவீதம் குறைந்து 39 லட்சமாக உள்ளது. கொரோனா தொற்றின் பிரதான மையமாக இருந்த நியூயார்க் நகரம், 1,26,000 பேரை இழந்துள்ளது, மக்கள் தொகையில் 0.65 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கு முன் எந்த நூற்றாண்டிலும் அமெரிக்காவில் இந்தளவுக்கு மக்கள் தொகை பெருக்க சதவீதம் குறைந்தது கிடையாது.


கடந்த 1918 - 1919ல் உலகத்தில் ஸ்பேனிஷ் காய்ச்சல் பரவிய காலத்தில் கூட, அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம் 0.49 சதவீதமாக இருந்தது.

 

ARUNACHALAM