பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாக்கில் நீர் ஊறும். ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களில் சிக்கன் பிரியாணி முதலிடத்தை பெற்றுள்ளது.
பெண்கள் வீடுகளில் விதவிதமாக சமைத்தாலும், அனைவருக்கும் பிரியாணி மீதான ஈர்ப்பு உண்டு.
ஸ்விக்கியின் 5-வது வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்வதில் இந்தாண்டும் பிரியாணி முதலிடம் பிடித்து உள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்ட முதல் ஐந்து உணவுகளில் பிரியாணி இரண்டு முறை இடம்பெற்றது. மட்டன் பிரியாணியை விட வாடிக்கையாளர்கள் சிக்கன் பிரியாணியை அதிகம் விரும்பி ஆர்டர் செய்து உள்ளனர். மக்கள் விரும்பி ஆர்டர் செய்த உணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் உள்ளது, மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் பிரைட் ரைஸ், மற்றும் மட்டன் பிரியாணி ஆகியவை தொடர்ந்து உள்ளன.
மதிய உணவுக்குப் பிறகு டீ மற்றும் காபிக்கான ஆர்டர்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது, 2020 ஆம் ஆண்டின் மற்றொரு மிகவும் விரும்பப்பட்ட தெரு உணவு பானி பூரி ஆகும், இது 2.4 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.













