ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் தினமும் 2GB விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்!!
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) இலவச டேட்டா (Free Data) கார்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர்.
இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2GB Data பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













