இந்திய, ஆப்பிரிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீன்களின் பன்முகத்தன்மை அதிகமாகவும் மிதவெப்ப கடலுடன் ஒப்பிடும்போது மீன் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.
பருவகால மாற்றத்தால் ஏற்படும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப வெப்பமண்டலத்தில் வாழும் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. ஒரு சுண்டு விரல் அளவு இருக்கும் நெத்திலி மீனில் இருந்து, மனிதர்களைவிட பெரிதாக வளரும் சுறா மீன்வரை அனைத்து மீன் வகைகளும் ஒரு சில காலகட்டங்களைச் சார்ந்தே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
கரைப் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, கரைப் பகுதியில் உணவு தேட வரும் சில மீன் வகைகள் மிகவும் முக்கியமானவை. இதில் தீவன மீன்களாகத் திகழும் நெத்திலி, மத்தி, பொருவா போன்ற சிறிய மீன் இனங்கள் கடல் உணவு சங்கிலியின் பகுதியாக மட்டும் இல்லாமல், கரையை ஒட்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் முக்கிய உணவுப் பொருளாகவும், அவர்களுக்குத் தினப்படி வருமானத்தை ஈட்டித்தருபவையாகவும் உள்ளன. சொந்த நாட்டு மீன்களைப் பற்றி ஆழ்ந்து ஆராயாமல், கண்மூடித்தனமாக மேற்கத்திய நாடுகளில் கண்டறிந்த மீன்பிடி அறிவியலையே பயன்படுத்திவருகிறது.
வெப்பமண்டலக் கடலின் மீன் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, மீனவ மக்களும் வெவ்வேறு முறைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருகின்றர்.ராமேஸ்வரம் பகுதியில் அன்றாடம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை வெளி உலகத்துடன் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறது கடல்ஓசை எப்எம். “இரு நாடுகளின் கடல் எல்லையில் அமைந்திருக்கும் பாக் நீரிணை பகுதியில் இழுவலை படகுகள் மூலம் மீன் பிடிப்பதைத் தடை செய்ய இந்தியத் தரப்பில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை பிரதிநிதிகளிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டது.” என்ற வானொலி பண்பலை. மீனவர்களின் மேம்பாட்டுக்காக பாம்பன் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கி வரும் நேசக்கரங்கள் என்ற அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த வானொலி ஒலிபரப்பை, கடலுக்குள் சுமார் 17 நாட்டிகல் வரை கேட்கலாம் என்று கூறப்படுகிறது.













