சனிபகவான் என்றால் ஏன், அவ்வளவு பயம்?

SOCIAL SHARE
Pin It

மனிதற்குள்ளேயும் மிருகம் உண்டு! மிருகத்துக்குள்ளேயும் மனித நேயம் உண்டு!. வேப்பூவிலும் தேனுண்டு, ஆனால் அதை யாரும் கவனிப்பது இல்லை. அதே போல சனிபகவான் நல்லவர். நல்லதை தருபவர், கஷ்டத்திற்கு பின்!. எதுவுமே சுலபமாக கிடைத்தால் அதன் மதிப்பு நமக்கு தெரியாது. கஷ்டப்பட்டு, பிரயத்தனப்பட்டு, முட்டி மோதி கிடைத்த பொருளை, வீணாக்க, தவறவிட ஏன்! செலவு செய்யவும் மனம் வராது. செல்வம் என்பது, நம்மிடம் இருந்து செல்வது ஆகும்!. சம்பத் என்பது நிலைத்து இருப்பது உன்பது பொருள். நிலையானதை தருவார் சனிபகவான்.

பனிரெண்டு ராசி, லக்னத்திற்கும் சனிபகவான் என்ன என்ன, பாவாதிபதி என்று பார்ப்போம். 1) மேஷம் ஜீவன& லாபாதிபதியாக வந்தாலும், சரராவிக்கு சனிபகவான் பாதகஸ்தானாதிபதியாக வருவதால் நல்லதை முழுமையாக தர இயலாது. 2) ரிஷபம் பாக்கிய& ஜீவனாதிபதியாக சனிபனவான் வருகிறார். சனிபகவான் பாதகாதிபதியாக வருகிறார். இங்கேயும் அதே கதைத்தான். 3) மிதுனம் அஷ்டம&பாக்கியாதிபதி இருக்கிறார். எட்டாமிடம் இயற்கையாகவே நல்லதை தராது. முதலில் துயரம் முடிவில் உயரம் என்றாலும், துயரம் துயரம் தானே! 4) கடகம் களத்திர& அஷ்டமாதிபதியாக வருகிறார். இங்கேயும் எட்டாமிடம், குனிய குனிய குட்டும்! 5) சிம்மம் சத்ரு& களத்திராதிபதியாக இருக்கிறார். மாரகாதிபதியாக வருவதால் எதிரியை போல தொல்லை தருவார். 6) கன்னி புத்ர& சத்ருபாவாதிபதியாக வருகிறார். தடை தாமதத்திற்கு காரணம் ஆகிறார்.

7) துலாம் சுக&பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருகிறார். பூர்வபுண்ணிய பாவத்தை கொடுத்து, சுகத்தை தடுப்பார். 8) விருச்சிகம் சகோதர& வாகனாதிபதியாக இருக்கிறார். ஆர்வமே கோளாராக இருக்கும். வெற்றிக்கு தாமதம் செய்வார். 9) தனுசு குடும்ப& தைர்யாதிபதியாக இருக்கிறார். பேச்சு மட்டுமே இருக்கும், அல்லது பேச்சால் காரியம் தடையாகும். 10) மகரம் ஜென்ம தனாதிபதியாக வருகிறார். 11) கும்பம் ஜென்ம விரயாதிபதியாக இருக்கிறார். வமம்பை விலைக்கு வாங்குவது என்பார்களே, அது நடக்கும். தன் விரலே தன் கண்ணை தாக்கும். அவர்கள் வருத்தத்திற்கு, அவர்களே காரணமாக இருப்பார்கள். 12) மீனம் லாப& விரயாதிபதி சனிபகவான். முதலில் லாபம், பிறகு விரயம்! ஆசையை காட்டி மோசம் செய்யும் அமைப்பு.

ஆக பனிரெண்டு ராசிக்குமே, சல்லதை குறைவாகவும், எதிர்மறை பலனை முறையாக, சரியாகவும் தரும் ஸ்தானம் பெற்று விடுகிறார்! இது அவர் குற்றம் இல்லை. அப்படியே நியமித்துவிட்டு பிறகு ஏன், சனிபகவனை குறை கூறவேண்டும். இன்னும் ஒன்று, சனிபகவான் கர்மகிரஹம் ஆவார். அதாவது நாம் செய்த பாப புண்ணியத்திற்கு ஏற்ப பலன் தருவார். அவர் இஷ்டத்திற்கு, நமக்கு கஷ்டம் தருவது இவர் நோக்கம் அல்ல!

வினை ம¨ன்று வகைப்படும்& முன்ஜென்மத்தில் செய்தவினை, இதற்கு பிராரப்த கர்மா என்று பெயர். சஞ்சித கர்மா& செய்து கொண்டுள்ள வினை. ஆகாம்ய கர்மா& செய்ய போகிற வினை. வினை என்றார் நல்லதும் அடக்கம். தீயதும் அடக்கம். இதை தருவது தான், சனிபகவானின் தலையாய கடமை, கட்டளை!

நேர்மையான ஆசாமியை நீதிபதியாக நியமித்து விட்டு, தப்புக்கு தண்டனை தருகிறார் என்றால், அது யார் குற்றம்!. அம்பு நோகக்கூடாது, எய்தவரை பார்க்க வேண்டும். அம்பு சனிபகவான், எய்தது நம் வினை!

வேறெந்த பிறவிலும் கிடைக்காத பெறும் பாக்கியம் மனித பிறவிக்கு உண்டு. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார், கூழு க்கு பாடிய ஔவையார். நம் அனைத்து வினைகளையும் அதாவது, பழவினை, தொல்வினை, தொடரும் வினை, வல்வினையை போக்க இந்த மானிட பிறவியில் மட்டுமே சாத்தியம். கஷ்டத்தை ஏற்று முழுமையாக அனுபவித்து விட்டால், திரும்பவும் வராது, தொடராது. இல்லையேல் எத்தனை பிறவி எடுத்தாலும் வினை, தொடரும். இரட்டிப்பாக மாறும். ஒருவர் பத்தாண்டு சிறை தண்டனை என்றால், ஐந்தாண்டிலேயே தப்பித்தால் மேலும் பத்தாண்டு அதிகமாகும். அதே பத்தாண்டில் ஒழுக்கமாக இருந்து வருந்தி, திருந்தினால் ஆறாவது ஆண்டிலே கூட விடுதலை பெறலாம். அந்த ஒழுக்கம் தான் பூஜை புனஸ்காரம், பரிகாரம்& ஜப ஹோமமாகும். இதற்கு தான், நீதிபதி, நீதி தவறாதபதி, நிதிக்கு அப்பார்ப்பட்டவர், நியதி நியமமாக நியமிக்கபட்டவர் சனிபகவான் ஆவார்.

அவர் முதலில்& வில்லன். முடிவில்& ஹீரோ. கேரட்டர்& குணச்சித்திரம், என்னபலன் தருவார் என்பது காலமும், சூழ்நிலையும் தான் முடிவு செய்யும். மொத்தத்தில் உத்தம வில்லன், வில்லங்கமான உத்தமன்!

- அ. குருமூர்த்தி சிவம், Cell : 80123 46795

ARUNACHALAM