Editor's Choice

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெண் விமானிகளால் மட்டும் ஏர் இந்தியா விமானம் ஒன்று இயக்கப்பட்டது. பெங்களூரு வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரையிலான 16,000 கி.மீ., நீளமுடைய சவால் நிறைந்த பாதையை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடக்க வேண்டும். இத்தகைய சவால் நிறைந்த தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான அனுபவமும், திறமையும் கூடிய தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும். பல காலமாக இத்தகைய நீண்ட விமான பயணத்திற்கு ஆண் விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானிகள் கூட்டாக இணைந்து வட துருவத்தின் மேலான இந்த நீளமான பாதையில் விமானத்தை இயக்கினர். விமானப் பயணத்தை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு சோயா அகர்வால் என்ற பெண் கேப்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 9ம் தேதி இரவு 8.30 மணிக்கு சான்பிராஸ்கோவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நான்கு பெண் விமானிகள் மற்றும் 238 பயணிகளுடன் புறப்பட்டது. பின்னர் வடதுருவத்தைக் கடந்து அட்லாண்டிக் கடல் வழியாக சுமார் 17 மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணித்த விமானத்தை இன்று அதிகாலை 3.20 பெங்களூர் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரை இறக்கியுள்ளனர் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள்.

238 பயணிகளுடன் பாதுகாப்பாக பெங்களூரு வந்து இறங்கி வரலாற்று சாதனைப் படைத்த கேப்டன் சோயா உள்ளிட்ட நான்கு பெண் விமானிகளுக்கு கெம்பகவுடா சர்வதேச விமான நிலைத்தில் ரோஜாப் பூ கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து  சோயா அகர்வால் கூறுகையில், "வட துருவத்தின் மேல் வெற்றிகரமாக பறந்துள்ளோம். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதுவும் வட துருவத்தின் மீது உலகின் மிக நீண்ட விமானப் பாதையில் பறந்தது மகிழ்ச்சிக்கு உரியது. என்னுடன், அனுபவம் வாய்ந்த தன்மாய் பாபகரி, ஆகான்ஷா சோனவனே மற்றும் சிவானி மன்ஹாஸ் ஆகிய பெண் விமானிகள் இருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. எந்தவொரு தொழில்முறை விமானிக்கும் இது பெரும் சாதனை கனவாகும்” என்று கூறியுள்ளார்.

Editor's Choice

எல்லா மக்களுக்கும், Pan Card மற்றும் Aadhaar Card இருப்பது மிகவும் முக்கியமானது. இந்த இரண்டு அட்டைகள் இல்லாமல், எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஆதார் அட்டையின் உதவியுடன், நிமிடங்களில் e-pan வழங்கப்படும். 

உடனடி பான் வசதியின் கீழ் ஆதார் அட்டை மூலம் E-PAN அட்டையை வழங்க சுமார் 10 நிமிடங்கள் ஆகும் என்று வருமான வரித் துறை (Income Tax Department) தெரிவித்துள்ளது. இந்த வசதியின் கீழ் இதுவரை சுமார் 7 லட்சம் பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

NSDL மற்றும் UTITSL மூலமாகவும் பான்கார்ட் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த வசதிக்காக சில கட்டணம் வசூலிக்கின்றன. மறுபுறம், நீங்கள் வருமான வரித் துறை போர்ட்டல் மூலம் பான் கார்டைப் பயன்படுத்தினால், நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு PDF வடிவத்தில் பான் அட்டை கிடைக்கும். இது ஒரு QR code-யை கொண்டிருக்கும். இதில், உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். உங்கள் e-PAN பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப செயல்முறை முடிந்ததும், நீங்கள் 15 இலக்க பதிவு எண் (Acknowledgment number) பெறுவீர்கள். உங்கள் பான் அட்டையின் மென்மையான நகலும் உங்கள் அஞ்சல் ID-க்கு அனுப்பப்படும்.

பான் கார்டை இலவசமாகப் பெறுவதற்கான வழி

1. முதலில், https://www.incometaxindiaefiling.gov.in/home-க்குச் செல்லவும்.

2. உங்கள் இடது பக்கத்தில் இருக்கும் Instant PAN through Aadhaar விருப்பத்தை கிளிக் செய்யவும்.

3. அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் Get New Pan விருப்பத்தைக் காண்பீர்கள். இதையும் சொடுக்கவும். 

4. இப்போது புதிய பக்கத்தில் உங்கள் ஆதார் அட்டை எண்ணை  (Aadhaar Card Number) உள்ளிடுமாறு கேட்கும். உங்கள் ஆதார் எண்ணை இங்கே உள்ளிட்டு 'I Confirm' என்பதைத் தட்டவும்.

5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியில் OTP வரும். அதை தளத்தில் வைத்து சரிபார்க்கவும்.

Editor's Choice

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி சமீபத்தில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறி வருகிறது. இது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே 4 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், வாட்ஸ்ஆப்புக்கு மாற்றாக 'சிக்னல்' செயலியை பயன்படுத்துமாறு கோரினார். இதையடுத்து சிக்னல் செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியா மட்டுமின்றி ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, பின்லாந்து, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் 'சிக்னல்' செயலி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஆப் ஸ்டோரின் இலவச பயன்பாடுகள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சிக்னல் நிறுவனம் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, அதில் வாட்ஸ்ஆப் இரண்டாமிடத்திலும், 'சிக்னல்' முதலிடத்திலும் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சிக்னல் செயலி நிறுவனத்தின் பங்கு கடந்த வியாழக்கிழமை 527 சதவீதமும், வெள்ளிக்கிழமை கூடுதலாக 91 சதவீதமும் உயர்ந்துள்ளது.

Editor's Choice

சத்தீஸ்கரின் பஸ்தரில் வினோதமான திருமணம் நடைபெற்றது. ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட அதிசயம் ஜனவரி 5 ஆம் தேதி நடந்தது. இந்த திருமணத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.  

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரம் தொடங்கியது, மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தார் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தின் விவசாயியும் தொழிலாளியுமான சந்து மெளரியா 21 வயது பழங்குடி பெண் சுந்தரி காஷ்யப்பை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.  ஒரு வருடம் கழித்து உறவினரின் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு சந்தித்த ஹசீனா மீது சந்துவுக்கு காதல் ஏற்பட்டது. 

ஆனால், தனக்கு ஏற்கனவே காதல் இருப்பதை சந்து ஹசீனாவிடம் சொல்லிவிட்டார். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார் ஹசீனா.

“ஹசீனா மற்றும் சுந்தரி இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு என்னை திருமணம் செய்து ஒன்றாக வாழ   ஒப்புக்கொண்டனர். நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தோம், ஆனால் ஒரு நாள் ஹசீனா என் வீட்டிற்கு வந்துவிட்டார். ஹசீனா இங்கே வந்துவிட்டதை அறிந்த சுந்தரியும் என் வீட்டிற்கே வந்துவிட்டார. நாங்கள் மூவரும் குடும்பமாக ஒன்றாக வாழ ஆரம்பித்துவிட்டோம்” என்று சாந்து கூறுகிறார்.

இரண்டு பெண்களும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் யாரையும் விட்டுவிட முடியாது என்றும் சந்து சொல்கிறார். பெண்கள் இருவரும் அவருடன் ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டனர்.

Editor's Choice
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்ததாக விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரவித்துள்ளது.
 
இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பல் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும், ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.
Editor's Choice

எதற்கும் நேரம் இல்லாமல், பரபரப்பாக செயல்படும் போது, என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியவில்லை.

பெற்றோருக்கு தைராய்டு குறைபாடு இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் வருகிறது. இது தவிர, உணவுப் பழக்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. 30 வயதிற்குட்பட்ட பெண்கள் தைராய்டு கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.

வெளியில் கிடைப்பதை, அந்த நேர பசிக்கு வாயில் போட்டுக் கொள்கின்றனர். 'ஜங்க் புட்' அதிகம் சாப்பிடுகின்றனர். 'ஏசி' அறையில் அமர்ந்து வேலை செய்யும் பெண்கள், எட்டு முதல், 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதில்லை. 'ரிலாக்ஸ்சேஷன்'னுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை.

பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடுவ தில்லை. பொரித்த அசைவ உணவுகளை சாப்பிடுவது அதிகம். வறுத்த, பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால், அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் பாரம்பரிய உணவுகளை, பெரும்பாலும் தவிர்த்து விடுவதும், தைராய்டு பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம்.

இட்லியைப் போல சிறந்த உணவு வேறு இல்லை என்பது, உலகம் முழுதும் கூறுகின்றனர்; ஆனால், நாம் அதை தவிர்த்து, நுாடுல்ஸ் சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.

அடிப்படையான சில விஷயங்களை பின்பற்ற துவங்க வேண்டும். காலை உணவில், இட்லி, தோசை, இடியாப்பம் என்று, ஆவியில் வெந்த வழக்கத்தில் உள்ளதை சாப்பிட வேண்டும். குறைந்தது, 45 நிமிடங்கள் நடைபயிற்சி. மனதை ரிலாக்சாக வைக்க தியானம், யோகா என்று இருந்தால், தைராய்டு மட்டுமல்ல, எந்தப் பிரச்னையும் வராது.

பக்கம் 75 / 90