Editor's Choice
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளதான தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது. திருமண தேதியை ரகசியமாக வைத்து இருப்பதாகவும், நயன்தாரா தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இன்றுவரை தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நயன்தாராவுக்கு வயது 36.  2015-ல் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது.
 
இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். புதிய பட நிறுவனம் தொடங்கி பட தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது அடுத்த மாதம் திருமணத்துக்கு தயாராவதாக புதிய தகவல் பரவி வருகிறது. நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய 3 படங்கள் உள்ளன. மலையாளத்திலும் 2 படங்களில் நடிக்கிறார்.
 
விரைவில் திருமணம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என தெரிகிறது.
Editor's Choice

அதிபர் பதவியில் இருந்து வெளியேறி இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், எச்-1பி விசாவுக்கான தடையை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் அதிக அளவில் பயனடைபவர்கள் இந்திய ஐடி ஊழியர்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதால், பல அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் அமெரிக்கர்களின் வேலையை உறுதி செய்ய, வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்களுக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.

2020ம் ஆண்டு டிசம்பர் இறுதி வரை தடை நீடிக்கும் என உத்தரவிட்டார். இது இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விசா மீதான கடந்த 31ம் தேதியுடன் முடிய ஒரு சில மணி நேரங்களே மீதமிருந்த நிலையில், இத்தடையை மேலும் 3 மாதத்திற்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ‘‘கொரோனா பாதிப்புகள் குறையாததால் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என கூறி உள்ளார்.

இதனால் பணி நிமித்தமாக அமெரிக்கா செல்ல எதிர்பார்த்திருக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப்பின் பதவிக்காலம் இன்னும் 18 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடென், எச்-1பி விசா மீதான தடை உள்ளிட்ட குடியேற்ற விவகாரத்தில் டிரம்ப்பின் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக உறுதி அளித்துள்ளார். எனவே, பிடென் பதவியேற்ற பின் தடை நீக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Editor's Choice

ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில், 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்தம் கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள ராமர் சிலையை, விஷமிகள் சிலர், சமீபத்தில் சேதப்படுத்தினர். அதேபோல் அங்குள்ள ராஜ மூர்த்தி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சேதப்படுத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில் விஜயவாடாவில் உள்ள சீதாராமர் கோவிலில் உள்ள களிமண்ணால் ஆன சீதா தேவி சிலை, மற்றொரு கோவிலில் இருந்த கேது சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப்படுவது கடந்த சில மாதங்களாகவே ஆந்திராவில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக அரங்கேறி வருகிறது. இதற்கு தெலுங்கு தேசம், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆந்திராவில் கடந்த 18 மாதங்களில் இதுவரை 127 கோவில்களில் இவ்வாறு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5, 6 கோவில்களில் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை கண்டித்தும், கோவில்களில் உள்ள ஹிந்து சிலைகளை பாதுகாக்குமாறும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்த சம்பவங்களை டுவிட்டரில் பகிர்ந்து பலரும் கோவில்களை காப்பாற்றுமாறு #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக்கில் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர், கடந்த செப்டம்பரில் 60 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க கோவில் தேர் தீவைக்கப்பட்டது, 12ம் நூற்றாண்டு நந்தி சிலை உடைப்பு என அடுத்தடுத்து கோவில்களில் சம்பவங்கள் நிகழ்வதால், ஆந்திராவில் கோவில்களுக்கு ஆபத்து' என பதிவிட்டுள்ளனர்.

ஹிந்து கோவில்களில் விஷமிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த செயலை கண்டித்தும், டுவிட்டரில் பகிர்ந்து வருவதால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டிரெண்டானது. இதுவரை ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மேல் இந்த ஹேஸ்டேக் மூலமாக ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு குரல் கொடுத்து வருகின்றனர்.

Editor's Choice
வங்கியில் 134 காலியிடங்கள்
 
ஐ.டி.ஐ.பி., வங்கியில் சிறப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: டி.ஜி.எம்., 11, ஏ.ஜி.எம்., 52, மேனேஜர் 62, அசிஸ்டென்ட் மேனேஜர் 9 என மொத்தம் 134 காலியிடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.வயது: சில பதவிகளுக்கு 25 - 35, சில பதவிகளுக்கு 28 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 
 
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் பணி
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: நீதிபதிக்கான தனி உதவியாளர் 66, பதிவாளருக்கான தனி உதவியாளர் 8, துணை பதிவாளருக்கான தனி கிளார்க் 3 என மொத்தம் 77 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.வயது: 1.7.2020 அடிப்படையில் ..
 
தேசிய உர நிறுவனத்தில் பணியிடங்கள்
 
மத்திய அரசின் தேசிய உர நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி பதவியில் கெமிக்கல் 4, மெக்கானிக்கல் 7, எலக்ட்ரிக்கல் 4, இன்ஸ்ட்ரூமென்டேசன் 5, சிவில் 1, கெமிக்கல் லேப் 7, பயர் & சேப்டி 2 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., 
 
ரயில் நிறுவனத்தில் வேலை
 
தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : சீனியர் எக்ஸ்கியூடிவ் பிரிவில் (சிவில் 53, எலக்ட்ரிக்கல் 2, எஸ் & டி 3, ஜெனரல் 2) அசிஸ்டென்ட் மேனேஜர் 1 என மொத்தம் 61 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் மேனேஜர், சீனியர் எக்ஸ்கியூடிவ் (ஜெனரல்) பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் ..
 
மத்திய அரசில் சேர விருப்பமா
 
மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் 1, தொல்லியல் துறை இயக்குநர் 1, தொல்லியல் துறை இன்ஜினியர் 3, அசிஸ்டென்ட் கிளினிக்கல் எம்ப்ரியாலஜிஸ்ட் 1, டயாலஜிஸ் மெடிக்கல் ஆபிசர் 5, அசிஸ்டென்ட் புரபசர் 13, கப்பல் சர்வேயர் 5 என மொத்தம் 29 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
Editor's Choice

கரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இன்றைய பெரும்பாலான முக்கிய ஒப்பந்தங்கள் அனைத்துமே ஆன்லைன் மூலமே நடைபெறுகின்றது. இதுபோன்ற சூழலில், பெரும்பாலான இன்டெர்வியூகள் ஆன்லைனில் நடப்பதால், நாம் எவ்வாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்? என்பவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

1) பொதுவாக எல்லா விதமான இன்டெர்வியூக்கும்  உடையின் கலர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், அவை தான் உங்களிடம் இன்டெர்வியூ எடுப்போருக்கு உங்கள் மீது நல்ல பிம்பத்தை உருவாக்கும்.

நீங்கள் லைட் கலர் சுவருக்கு எதிராக உட்காரப் போகிறீர்கள் என்றால், நீல கலர்  உடையினை தேர்ந்தெடுங்கள். நீங்கள் டார்க் கலர் சுவருக்கு எதிராக உட்காரப் போகிறீர்கள் என்றால், அப்போது இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் மென்மையான வெளிர் நிறங்களில் உடைகளைத் தேர்வுசெய்வது பார்ப்பவருக்கு பிரகாசமாகத் தோன்றும்.

2) பொதுவாக ஜூம் இன்டெர்வியூக்கு உங்கள் உடலின் மேல் புறம் மட்டுமே தெரியும் என்பதால், நீங்கள் அணிய தேர்வு செய்யும் ஆடையின் கழுத்துப்பட்டை மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு உயர்-கழுத்து ஒரு வட்டக் கழுத்து அல்லது ஆடை குறைப்பு என்பது சில சமயங்களில் உங்களைச் சற்று தடுமாறச் செய்யலாம்.  

 3) உடை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பெரும்பாலான நிறுவனங்களில் நேரடி இன்டெர்வியூ செல்பவர்கள் பிளேஸர் (blazers) உடை அணிவது வழக்கம். ஆனால், ஜூம் இன்டெர்வியூவில் அதுபோன்ற ஆடை அணிவது குறைவு.

ஜூம் இன்டெர்வியூ ஆரம்பிக்கும் முன்பு, சட்டையில் அனைத்து பொத்தான்களும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

4) உங்கள் தலைமுடி கருப்பாக இருந்தால், கருப்பு நிற உடையினை தேர்வு செய்யவேண்டாம்.

 ஏனெனில்,  சில சமயங்களில் இந்த கலர் காமினேஷம் ஆன்லைன் ஜூம் இன்டெர்வியூக்கு சிறந்த தெளிவுத்திறனை வழங்காது. மேலும், இந்த கலர் காமினேஷன் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும் பட்சத்தில் உங்களை இன்டெர்வியூ செய்பவரைக் குழப்பவும் நேரிடும். எனவே, கறுப்புக்கு மாறாக மாறுபட்ட கலர் உடையினை தேர்வுசெய்வது சிறந்தது.

 5)ஒரு ஆன்லைன் ஜூம் இன்டெர்வியூக்கு  நீங்கள் அதிக நகை அணிய வேண்டியதில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். குறைந்தபட்ச ஆபரணங்களை அணிவது நல்லது. அழகாக வெட்டப்பட்ட நகங்கள் வேண்டும். தேவையான சிகை அலங்காரம் முக்கியமானவை.

 

Editor's Choice

அமெரிக்க அரசு அமைப்புகளின் தகவலை திருட முயன்ற ரஷ்ய ஹேக்கர்களால் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படவில்லை, அவர்களால் எந்த சோர்ஸ் கோடையும் மாற்ற முடியவில்லை என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அரசின் 40க்கும் மேற்பட்ட துறைகளின் பணிகளை மைக்ரோசாப்ட் கவனித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி சில ஹேக்கர்கள் மைக்ரோசாப்ட் தகவல்களை திருட முயற்சித்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

இதன் பின்னணியில் ரஷ்ய ஹேக்கர்கள் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. ரஷ்ய ஹேக்கர்கள் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சித்திருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘‘ஹேக்கர்கள் சில சோர்ஸ் கோடிங்களை மட்டும் பார்த்துள்ளனர். முழு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதால், அவர்களால் எதையும் மாற்ற முடியவில்லை. இந்த ஹேக்கிங்கில் எந்த தனிப்பட்ட தகவலும் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படவில்லை’’ என தெரிவித்துள்ளது.

பக்கம் 76 / 90