Editor's Choice

வீட்டு உபயோகப் பொருட்களை முழு பணத்தையும் கொடுத்து வாங்குவது அரிது. அதற்கு மாற்றாக ஜீரோ வட்டி கடனில் அப் பொருட்களை வாங்கி நுகர்வதுதான் அதிகம். உண்மையில் ஜீரோ வட்டியில் கடன் அளிக்க முடியுமா? இதனால் என்ன பயன்?  

இருக்கிற கடன்களிலேயே விரைவாக வழங்கும் கடன் என்றால் அது நுகர்வு சாதனக் கடன்தான். இந்த நுகர்வு சாதனக் கடனில்தான் ஜீரோ வட்டி என்ற கடன் திட்டம் மிகவும் பிரபலமானது. ஜீரோ வட்டி என்பது உண்மையில் ஜீரோ வட்டி கிடையாது. நீங்கள் வாங்கும் சாதனங்களுக்கு வழங்கும் தள்ளுபடியை வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனில் சேர்க்கப்பட்டு நுகர்வோருக்கு ஜீரோ வட்டியில் கடன் அளிப்பது போன்று பாசாங்கம் செய்யப்படுகிறது.

நீங்கள் ஜீரோ வட்டி கடன் திட்டத்தில் நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது கடைக்காரர்கள் தள்ளுபடி எதுவும் செய்யமாட்டார்கள். மேலும் இக்கடனை பரிசீலிக்க கட்டணம் ஒன்றையும் வசூலிப்பார்கள். இது உங்களிடமிருந்து மறைமுகமாக வசூலிக்கப்படும் வட்டியாகும்.

நீங்கள் வாங்க ஆசைப் பட்ட செல்போனின் விலை 15 ஆயிரம் ரூபாய் என்று வைத்துகொள்ளுங்கள். முழு பணத்தை செலுத்தி செல்போன் வாங்குவதாக இருந்தால் கடைக்காரர் அதை 15 சதவீகிதம் தள்ளுபடி செய்து 12 ஆயிரத்து 750 ரூபாய்க்கு கொடுப்பார். உங்களுக்கு தள்ளுபடியாக 2 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். அதுவே கடனில் வாங்கும் போது மாதம் 15 சதவிகிதம் வட்டி என்ற கணக்கில் மூன்று மாத தவணையில் கொடுக்கும் போது வட்டியாக 2 ஆயிரத்து 250 மறைமுகமாக வசூலிப்பர். 

இதுவே கடன் அளிக்கும் நிறுவனத்துக்கு அளிக்கப்படுவதால் செல்போனை பணத்தை கொடுத்து வாங்கும் போது உங்களுக்கு வழங்கப்படும் விலையான 12 ஆயிரத்து 750யோடு கூட்டும் போது 15 ஆயிரம் ரூபாய் வந்துவிடும். இதனை மாதம் 5 ஆயிரம் என்று மூன்று தவணையாக கட்டும் போது 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள். இப்போது மேலே சொன்ன கணக்கோடு ஒப்பிட்டு பார்த்தால்  உண்மை என்ன என்பது விளங்குமே.

இதில் இன்னொரு கூத்தும் இருக்கிறது. எந்த தள்ளுபடியும் கிடையாது. செல்போன் விலை 15 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் வட்டியான 2 ஆயிரத்து 250 ரூபாயை சேர்த்து 17 ஆயிரத்து 250 ரூபாய் என்று சொல்லுவார்கள். இதை மூன்று மாத தவணையில் மாதம் 5 ஆயிரத்து 750 ரூபாய் செலுத்துவீர்கள். நீங்கள் செல்போனின் விலையை மடடும்தான் கொடுத்து வாங்கினோம் என்று நினைப்பீர்கள். கூடுதலாக எந்த பணமும் கொடுக்க வில்லை என்று எண்ணுவீர்கள். ஆனால் உண்மை இல்லை.

இந்த நுகர்வோர் சாதனக் கடன் வாங்க சில தகுதிகள் இருக்க வேண்டும். உங்கள் வயது, வேலை, வேலை செய்யும் நிறுவனம், மொத்த சம்பளம், நிகர சம்பளம் ஆகியவற்றை கணக்கீட்டு உங்களுக்கான கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் வாங்கும் நுகர்வோர் சாதனத்தின் விலையை அப்படியே கடனாக அளிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட சதவிகிதம் பணத்தை செலுத்திய பின்னர்தான் கடனில் அந்த நுகர்வோர் சாதனம் அளிக்கப்படுகிறது.

உதாரணமாக நுகர்வோர் சாதனத்தின் விலை ஒரு லட்சமாக இருக்கும் பட்சத்தில் 80 ஆயிரம் ரூபாய் மடடுமே கடனாக கொடுக்கப் படுகிறது. மீதி 20 ஆயிரம் ரூபாயை மார்ஜின் பணமாக அதை உங்கள் கைவிட்டு கடைக்காரருக்கு அளிக்கிறீர்கள்.

இந்த நுகர்வோர் சாதனக் கடனானது குறைந்த காலத்தில் திரும்பி செலுத்தும் விதத்தில் கொடுக்கப் படுகிறது. அதாவது ஆறு மாதம் முதல் அதிக பட்சம் மூன்று வருட காலம் வரைதான் அளிக்கப்படுகிறது. இக்கடனுக்கு எந்தவித வரி சலுகையும் கொடுப்பதில்லை.

இந்த வகை கடன்களை முன்கூட்டியே கடன் செலுத்தும் காலத்திற்குள் திருப்பிச் செலுத்த விரும்பினால், அதற்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் கட்டணமும் வசூலிக்கப்படும். இது கடன் நிலுவைத் தொகையில் மூன்று சதவிகிதம் முதல் ஐந்து சதவிகிதம் வரை வசூலிக்கப்படும்.

இந்த நுகர்வோர் சாதனக் கடனில் பொருட்களை வாங்குவது சரியா தவறா என்பது உங்களை பொறுத்துதான் இருக்கிறது. அந்த நுகர்வோர் சாதனம் அவசியம் என்றால் இக்கடனில் வாங்கலாம், நண்பர்கள், உறவினர்கள் வாங்கியிருப்பதால் நாமும் வாங்கவேண்டும் என்று வரட்டு கவுரவத்திற்காக வாங்குவது என்றால் அவதிப்பட நேரிடும்.

Editor's Choice

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்ற எம்ஜிஎம் நிறுவனத்தை, அமேசான் நிறுவனம் 8.45 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது 61.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

ஹாலிவுட்டில் நீண்ட பாரம்பரியம் கொண்ட தயாரிப்பு நிறுவனம் எம்ஜிஎம். கிட்டத்தட்ட 4,000 திரைப்படங்களையும், 17,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துத் தன் வசம் வைத்துள்ளது. இவை அமேசானின் ஸ்டுடியோஸ், திரைப்படம், ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைக்காட்சிப் பிரிவுகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

இதற்கிடையில் எம்ஜிஎம்மின் படைப்புகளை அவர்களது அணியுடன் சேர்ந்து தொடர்ந்து மேம்படுத்தவும், புத்துயிர் கொடுக்கவும் தயாராக இருப்பதாக, ப்ரைம் வீடியோ மற்றும் அமேசான் ஸ்டுடியோசின் துணைத் தலைவர் மைக் ஹாப்கின்ஸ் கூறினார்.

கடந்த சில வாரங்களாகவே எம்ஜிஎம் நிறுவனத்தை அமேசான் வாங்கவிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இரு தரப்புமே இதுகுறித்து உறுதி செய்யாத நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

 'ஜேம்ஸ் பாண்ட், ராக்கி, பேஸிக் இன்ஸ்டின்க்ட், ரோபோ காப்' உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்கள் எம்ஜிஎம் தயாரித்தவையே. மேலும் 'பார்கோ, வைகிங்ஸ்' உள்ளிட்ட வெப் சீரிசையும் தயாரித்துள்ளது. இவை அனைத்தும் அமேசான் வசம் சேர்ந்திருப்பதால், ப்ரைம் ஸ்ட்ரீமிங் தளத்தில் இருக்கும் படைப்புகளின் எண்ணிக்கை இனி கணிசமாக உயரும். இதனால் ப்ரைமுக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

Editor's Choice
ஜப்பான் நாட்டின் மேற்கே எஹிம் மாகாண கடற்பகுதியில் 11,454 டன் எடை கொண்ட அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில், ரசாயன பொருட்களை ஏற்றி கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றுடன், சரக்கு கப்பல் மோதி விபத்திற்குள்ளானது.
 
திடீர் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் சேதமடைந்து நீரில் மூழ்க தொடங்கியது.  அந்த கப்பலில் 12 மாலுமிகள் இருந்தனர்.  சரக்கு கப்பல் 27ம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் கடலில் மூழ்க தொடங்கியது.  இந்த விபத்தில் மாலுமிகளில் 3 பேரை காணவில்லை.
 
அவர்கள் ஜப்பானிய நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  மார்ஷல் தீவில் பதிவு செய்யப்பட்ட 2,696 டன் எடை கொண்ட வெளிநாட்டு கப்பலில் 13 பேர் இருந்தனர்.
 
அவர்களில் 8 பேர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்கள்.  மற்ற 5 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள்.  அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர்.  இதனை ஜப்பானிய கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது.  காணாமல் போன 3 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
 
Editor's Choice
உலக ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அசிந்தா ஷிலி ‘ஸ்னாட்ச்’ முறையில் 141 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 172 கிலோவும் என மொத்தம் 313 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். இந்தோனேஷியா வீரர் ஜூனியன்யா ரிஸ்கி ‘ஸ்னாட்ச்’ முறையில் 155 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 194 கிலோவும் என மொத்தம் 349 கிலோ எடை தூக்கி புதிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்றனர்.
Editor's Choice

ஓஎன்வி குறுப் விருது என்பது ஞானபீட விருது பெற்ற ஓஎன்வி குறுப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதாகும். இந்த ஆண்டிற்கான விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது.

வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில், பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு அளித்தது குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த உமன் இன் சினிமா கலெக்டிவ், பல்வேறு புகார்களை எதிர்கொள்ளும் வைரமுத்துவுக்கு இந்த விருது எப்படி அளிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வியெழுப்பியது. 

வைரமுத்துவின் எழுத்துகளுக்காகவே இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய நடத்தை ஆராய்வது தங்கள் நோக்கமல்ல என்று ஓஎன்வி குறுப் கல்சுரல் அகாடமியின் தலைவரும் இயக்குனருமான அடூர் கோபலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில்,  ஓஎன்வி கல்சுரல் அகாதெமியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. "தேர்வுக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த ஆண்டு அளிக்கப்பட்ட விருது மறுபரிசீலனை செய்யப்படுகிறது" என அந்த அறிக்கை கூறுகிறது.

 
Editor's Choice

சார்லி பிட் மை பிங்கர்' என்ற 55 வினாடிகள் ஓடக்கூடிய 'யு டியூப் வீடியோ' 5.54 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஹாரி மற்றும் சார்லி சகோதரர்கள் குழந்தைகளாக இருந்தபோது 2007ம் ஆண்டு அவர்கள் வீட்டில் ஒரு சிறிய வீடியோ தற்செயலாக எடுக்கப்பட்டது.

மூத்த சகோதரனான ஹாரி தன் தம்பி சார்லியின் தோள் மீது கைபோட்டபடி அமர்ந்திருப்பான். அண்ணனின் விரல்களை தன் வாயில் வைத்து சார்லி சந்தோஷமாக கடிப்பான்.

விரல்களை எடுக்கும் ஹாரி தம்பியின் வாயில் விளையாட்டாக மீண்டும் விரல்களை வைப்பான். இந்த முறை சார்லி வெடுக்கென விரல்களை அழுத்தமாக கடிப்பான். வலி தாங்க முடியாமல் ஹாரி அழுவான்.

இதை காணும் சார்லி சந்தோஷத்தில் சிரிப்பான் தம்பியின் சிரிப்பை பார்த்து அழுகையின் இடையே ஹாரி புன்னகைப்பான். 14 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோ யு டியூப் சமூக வலைதளத்தில் இதுவரை 80 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.'டிஜிட்டல்' கலைப் படைப்புகளை ஏலம் விடும் நடைமுறை என்.எப்.டி. அதாவது 'நான் பன்ஜிபிள் டோக்கன்' என அழைக்கப்படுகிறது.

இந்த வகையில் 'சார்லி பிட் மை பிங்கர்' என்ற வீடியோ ஏலம் விடப்பட்டது. இதில் 11 நாடுகள் பங்கேற்றன. இறுதிகட்ட ஏலத்தில் 'மீம்மாஸ்டர்' மற்றும் '3எப் மியூசிக்' என்ற இரு நிறுவனங்கள் மோதின. இறுதியில் '3எப் மியூசிக்' நிறுவனம் 5.54 கோடி ரூபாய்க்கு அந்த வீடியோவை ஏலத்தில் எடுத்தது.

தற்போது யு டியூப் தளத்தில் காணக்கிடைக்கும் இந்த வீடியோ விரைவில் அதில் இருந்து நீக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முன் 'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனர் ஜாக் டார்சியின் முதல் டுவிட்டர் பதிவு 21 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பக்கம் 12 / 90