- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 198
பிரெஞ்சு ஆடம்பர பொருட்களுக்கான பிரபல குழுமம் LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 186.2 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளதாக, ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
போர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர் தரவரிசைப்படி, அர்னால்ட் அவர்களுக்கு 186.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்து உள்ளது. அமேசான் ஜெப் பெசோஸின் 186 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உடன் ஒப்பிடும்போது, இது 300 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்து அதிகம் உள்ளது.
டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX )தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), ஜெப் பெஸோஸ் ஆகியோரை விட அர்னால்ட் முன்னிலையில் இருக்கிறார், எலான் மஸ்கிற்கு 147.3 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து உள்ளதாக ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.
உலக வர்த்தகம், தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, வர்த்தக நிறுவங்களுக்கு சேவை அளித்து வரும் கன்பேரிசன் என்ற நிறுவனம், உலகின் வளர்ந்த நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், வர்த்தகம் நடவடிக்கைகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகளும் பெருகத் தொடங்கியுள்ள நிலையில், ஆடம்பர சந்தையின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. இதன் மூலம் பல ஆடம்பர பிராண்டுகளை வைத்திருக்கும் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்ததுள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமேசான் நிறுவனர் 2026 ஆம் ஆண்டிலேயே உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்றும், அந்த நேரத்தில் அவருக்கு 62 வயது இருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வருகிற ஜூலை 1, 2021 முதல் புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வருகிறது. புதிய கட்டணங்கள் ஏடிஎம் திரும்பப் பெறுதல், காசோலை புத்தகம், பரிமாற்றம் மற்றும் பிற நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். எந்தவொரு நபரும் எஸ்பிஐ (SBI) அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கைத் தொடங்க முடியும்.
எஸ்பிஐ (SBI) அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. இந்த கணக்கு வைத்திருப்போருக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் வழங்கப்படுகிறது. BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி கிளை மற்றும் ஏடிஎம்கள் மூலம் 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுக்கலாம். அதன்பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.15 +GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
எஸ்.பி.ஐ தனது BSBD வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிதியாண்டில் 10 செக் லீப்களை இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு, 10 லீப் செக் புக்கிற்கு ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். 25 லீப் செக் புக்கிற்கு ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் அவசரமாக செக்புக் தேவைப்பட்டால் அதில் 10 அல்லது அதன் ஒரு பகுதிக்கு ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் BSBD கணக்கு வைத்திருப்பவர்களால் நிதி அல்லாத பரிவர்த்தனை மேற்கொண்டால் எந்த கட்டணமும் இருக்காது.
மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.
ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுஷில் குமாரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த ஆண்டு PVC ஆதார் அட்டையை அறிமுகம் செய்தது. இதை பராமரிப்பது எளிதானதாக இருப்பதுடன் இதை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் வைத்துக்கொள்ள முடியும்.
இதுவரை ஆதார் அட்டை காகிதத்தில் அச்சிடப்பட்டு வந்துகொண்டிருந்தது. ஆனால் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்துக்கும் UIDAI ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, ஆதார் அட்டையை நமது மொபைலில் பதிவிறக்கம் செய்து சேவ் செய்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்தலாம். டிஜிட்டல் ஆதார் அட்டைக்கு பிசிக்கல் அட்டையைப் போலவே அனைத்து அங்கீகாரமும் உள்ளது.
இப்போது ஒரே ஒரு மொபைல் எண்ணுடன் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC ஆதார் அட்டையை உருவாக்கிவிடலாம். PVC ஆதார் அட்டையை பராமரிப்பது மிகவும் எளிதானதாகும். இது பிளாஸ்டிக்கில் இருப்பதால் இதை வைத்திருப்பது எளிதாகிறது. இதன் அளவு ஏடிஎம் டெபிட் கார்டு போன்றுதான் இருக்கும். அதை எளிதாக உங்கள் பாக்கெட்டில் அல்லது பணப்பையில் வைத்துக்கொள்ளலாம். PVC ஆதார் அட்டையை உருவாக்கிக்கொள்ள வெறும் 50 ரூபாய் கட்டணத்தை செலுத்தினால் போதும்.
1. பி.வி.சி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், uidai.gov.in அல்லது resident.uidai.gov.in என்ற வலைத்தளத்தில் அதை செய்யலாம்.
2. ஆதார் அட்டை எண், மெய்நிகர் அடையாள எண் (Virtual ID Number) அல்லது பதிவு எண் ஆகியவற்றை இணையதளத்தில் உள்ளிட வேண்டும்.
3. 50 ரூபாய் கட்டணம் செலுத்தி இதை ஆர்டர் செய்ய வெண்டும். சில நாட்களுக்குப் பிறகு அது உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் மொபைல் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், அந்த நிலையிலும், நீங்கள் பி.வி.சி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக, இந்த வழியை பின்பற்ற வேண்டும்.
1. https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint இன் வலைத்தளத்துக்கு செல்லவும்
2. ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்யுங்கள்
3. பாதுகாப்பு குறியீட்டை நிரப்பவும். 'my mobile not registered' அதாவது 'என் மொபைல் பதிவு செய்யப்படவில்லை' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
4. பாதுகாப்புக் குறியீட்டை நிரப்பி, 'my mobile not registered' அதாவது 'என் மொபைல் பதிவு செய்யப்படவில்லை' என்ற பெட்டியில் டிக் செய்யவும்.
5. உங்கள் மொபைலில் வந்த OTP ஐ உள்ளிடவும்
6. ரூ .50 கட்டணத்தை செலுத்தியவுடன் உங்கள் விண்ணப்பம் நிறைவடையும்.
பி.வி.சி ஆதார் அட்டை வழக்கமாக ஆன்லைனில் விண்ணப்பித்த இரண்டு வாரங்களுக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கியதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. எனினும், சர்வதேச எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன.
பக்கம் 14 / 90



