Editor's Choice

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களில் பயன் பெறலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் 2020-2021ஆம் நிதியாண்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வகையான திருமண உதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

கை, கால் பாதிக்கப்பட்ட நபா்களை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்தல் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம். பாா்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்யும் திட்டம், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவா்களை நல்ல நிலையில் உள்ளவா்கள் திருமணம் செய்தல், மாற்றுத் திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்தல் என 4 நிலைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் ரூ. 25 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதியரில் யாரேனும் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ. 50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.

தம்பதிகளுக்கு முதல் திருமணமாக இருத்தல் அவசியம். திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமண அழைப்பிதழ், மாா்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், கல்விச் சான்று நகல், முதல் திருமணம் என்பதற்கான விஏஓ சான்று ஆகியவற்றுடன் நேரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், கன்டோன்மென்ட் என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 0431-2412590.

Editor's Choice

திட்டத்தின் சுருக்கம் ::


செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுடன் உரையாடும் வண்ணம் காது கேட்கும் கருவி மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/ நிபந்தனைகள்::

ஊனத்தின் சதவிகிதம் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.காது கேட்கும் தன்மையின் அளவு நிரந்தரமாக குறைவாக இருத்தல் வேண்டும். சிவில் உதவி மருத்துவர் தகுதி பெற்ற காது, மூக்கு, தொண்டை நிபுணரிடமிருந்து மருத்துவ சான்று பெற்று அளிக்க வேண்டும். 

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ::

ஆம்.சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது. 

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் ::

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை 

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்::

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் 

Editor's Choice

கரோனா தடை உத்தரவு காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ.1000/- நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் எப்படி பெறுவது என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரின் செய்திக்குறிப்பு:

“கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையாக ரூ.1000 வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 23,841 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார நிதி ரூ.1000/- ரொக்கம் வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (நீல நிற அட்டை) வைத்திருக்கும் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1000/- நிவாரண நிதி ரொக்கமாக வழங்குவதற்காக, மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் கோட்டம் மற்றும் பகுதி வாரியாக பெறப்பட்டு, அவர்களுக்கு நிவாரண நிதி தொகையான ரூ.1000/- இதுநாள் வரை 23,841 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,38,41,000/- வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா தடை உத்தரவு காலத்தில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான நீல நிற தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகிய சான்றுகளை தங்கள் இருப்பிடத்திற்கு வந்து நிவாரணத்தொகை வழங்கும் களப்பணியாளர்களிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் 044-24714758 என்ற எண்ணில் அலுவலக நேரங்களிலும், 18004250111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு மேற்படி திட்டத்தில் பயனடையுமாறு ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021ம் நிதியாண்டிற்கு விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது, சமூக நல அலுவலகத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:

1. வருமானச் சான்று ரூ.72,000க்குள் (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்).

2. இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும் அல்லது ரேஷன் கார்டு). 3. தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது) (6 மாத கால பயிற்சி).

4. வயது சான்று (20 முதல் 40 வயது வரை) (கல்வி சான்று அல்லது பிறப்புச் சான்று). 5. சாதிச் சான்று.

6. மனுதாரரின் கடவுச் சீட்டு கலர் புகைப்படம்-2. 7. ஆதார் அடையாள அட்டை.

8. விதவை கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல். மேற்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை 30.9.2020க்குள் சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டி முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம் 2ம் தளம், திருவள்ளுர் - 602001. தொலைபேசி எண். 044-29896049 மற்றும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Editor's Choice

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சி, பையூா் பிள்ளைவயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.


இதில் வீடுகள் பெற விரும்பும் வீடுகள் இல்லாத மாற்றுத்திறனுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் சிவகங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகா்ப்புற நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிப்பதற்கான சான்றிதழ் பெற வேண்டும். மேற்கண்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான ஆட்சேபகரமான நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவா்களுக்கு மாற்றுக் குடியிருப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, புகைப்படம், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் மேற்கண்ட ஆவணங்களுடன் சிவகங்கை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு குடியிருப்பு கட்ட ஆகும் கட்டுமானத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளி பங்களிப்பு தொகையாக வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Editor's Choice

தமிழக அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய மோட்டர் பைக் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையத்தில் பெற்று உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள் :

விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் இரண்டு கைகளும் சிறப்பாக இயங்க வேண்டும்.

இரண்டு கால்களும் செயலிழந்தவராகவோ அல்லது தமிழக அரசின் வழிகாட்டுதல்படி இரண்டு கால்களின் ஊனத்தின் நிலை 75% க்கு மேல் இருக்க வேண்டும்.

ஏறக்குறைய முழுவதுமாக நடக்க முடியாதவர்களுக்கும் மற்றும் கால்களின் ஊனத்தின் தன்மை 75%க்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல மையத்தின் மூலம் மோட்டார் பைக் வழங்க உத்தரவு வழங்கப்படுகிறது.

ஏனைய மாற்றுத்திறனாளிகள் பெறுவது எப்படி?

கால்கள் செயலிழந்தவர்கள் தவிர மற்ற மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு வழங்கிய இலவச மோட்டார் பைக் வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதை பெறுவது எப்படி என பார்க்கலாம்.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச மோட்டர் பைக் வழங்கப்படுகிறது.

ஆகவே தங்கள் பகுதியிலோ அல்லது தங்களுக்கு தெரிந்த பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரோ அல்லது மாவட்ட ஆட்சியரை அணுகி தமிழக அரசின் இலவச மோட்டர் பைக்கிற்கான ஆணை கடிதம் மற்றும் அதற்கான தொகைக்கான காசோலையையும் பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் கொடுப்பதன் மூலம் பைக் பெற வாய்ப்புண்டு.

 

 

 

 

 

பக்கம் 17 / 21