Editor's Choice

கடந்த ஆண்டு அக்டோபரில் ஐபோன் 12 மாடல் அறிமுகமானது. இதில் கேமரா, மெமரி, டிஸ்பிளே பேட்டரி என வழக்கம் போல நிறைய அப்டேட்களை தந்துள்ளது.  கீழே விழுந்தாலும் பெரிதாக சேதமடையாத வகையில் செராமிக் கவசம்  அம்சம் காக்கும் என விளம்பரங்களில் கூறி வருகிறது. அந்த வகையில் புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதின் ஷாவ்னேவின் 'தி கான்ப்ரன்ஸ்' என்ற பாடலை பயன்படுத்தியுள்ளது.

ஆப்பிள் வெளியிட்ட வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஐபோன் 12 மாடல் மொபைலில் பேசியபடி சாலையில் நடந்து செல்கிறார். போனை மற்றொரு காதுக்கு மாற்றும் போது அது நழுவுகிறது. அப்போது ததிகிட ததிகிட தா என்று தபாலே இசையுடன் பாடல் தொடங்குகிறது. கீழே விழப்போகும் போனை பிடிக்க அப்பெண் செய்யும் முயற்சிகளுக்கு இணையாக அந்த இசையும் பயணிக்கிறது. இறுதியில் போன் தரையில் விழ, ரிலாக்ஸ் இது ஐபோன் என விளம்பரம் முடிகிறது.

ஐபோனின் இந்த சிறப்பம்சத்தை விட அதில் பயன்படுத்தி இருக்கும் இந்திய பாரம்பரிய இசையை அனைவரும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். அவ்விளம்பரம் 9 லட்சம் பார்வைகளை நெருங்கி வருகிறது. அந்த இசை 1999-ம் ஆண்டு நிதினால் வெளியிடப்பட்ட 'பியான்ட் ஸ்கின்' என்ற ஆல்பத்தில் இருந்த பாடல் ஆகும். இசையமைத்த நிதினின் பூர்விகம் பஞ்சாபின் ஜலந்தர் ஆகும்.

 

Editor's Choice

டாக்டர் கமலா செல்வராஜூம், அவரது மகன், டாக்டர் தீபுவும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தினமும் நோய் எதிர்ப்புச் சக்திக்கான கஷாயம்  அருந்தவேண்டும் என்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

ஊசி போட்ட பின், மது அருந்துவது, நீச்சல் பயிற்சி செய்வது தவிர, வேறு எந்த கட்டுப்பாடும் இல்லாமல், வழக்கமான வேலைகளை செய்யலாம் என்றும் வாய்ப்பு உள்ள அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கமலா செல்வராஜே ஒரு கஷாயத்தை தயாரித்து, கடந்த பல மாதங்களாக தினமும் குடிப்பதாகவும், பணி செய்பவர்களுக்கும் கொடுப்பதாக அவர் கூறுகிறார்.

வெற்றிலை, இரண்டு; தவசி முருங்கை இலை, கற்பூரவல்லி, வேப்பிலை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு இலை, இரண்டு; துளசி இலை, ஒரு கொத்து; பிரியாணி இலை, கறிவேப்பிலை, ஒரு கொத்து; மல்லி தழை சிறிது; புதினா சிறிது; சின்ன வெங்காயம், 2; பூண்டு, 2 பல்; இஞ்சி, ஒரு துண்டு; எலுமிச்சைப் பழம், 1; மிளகு கால் ஸ்பூன்; சீரகம் அரை டீ ஸ்பூன்; கிராம்பு, 4; ஓமம் ஒரு டீ ஸ்பூன்; பீட்ரூட் கால் அளவு; நெல்லிக்காய், 4. இஞ்சி, பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி, நெல்லிக்காயை விதை நீக்கி, எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி, மேற்கூறிய அனைத்து பொருட்களையும், 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும் .

பாதியாக வற்றியதும், பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து, நாள் முழுதும் சிறிது சிறிதாக குடிப்பேன். வேப்பிலை இருப்பதால். லேசாக கசக்கும்; அதை பொருட்படுத்தக் கூடாது. இந்த நீரில் வைரசை அழிக்கும் எதிர்ப்பு சக்தி, இயற்கையாகவே உள்ளது.

இது தவிர, காலை, மாலை இரு வேளையும், கொதிக்கும் நீரில் நீலகிரி தைலம் அல்லது சிறிது விக்ஸ் போட்டு, ஆவி பிடிப்பேன்; உஷ்ணத்தில் கிருமிகள் அழிந்துவிடும்.

இந்த மாதிரி ஒரு கஷாயத்தை நீங்களே தயார் செய்து வைத்து, அவ்வப்போது குடியுங்கள். ஆவி பிடித்து, பயப்படாமல், அதே நேரம் கவனமாக இருங்கள் என்கிறார் டாக்டர் கமலா.

Editor's Choice

வாட்ஸ்அப் செயலியில் உலா வரும் செய்திகள் சில சமயங்களில் தவறானவையாக, புரளிகளை கிளப்புவதாக இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் பரவும் தவறான செய்திகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது, மேலும் இது ஸ்பேம் செய்திகளின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. 

இனிமேல் WhatsApp மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் ஒரு தனித்துவமான ஆல்பா-எண் ஹாஷ் விசையை நிறுவனம் உருவாக்கும். அதில் A முதல் Z வரையிலான எழுத்துக்களும் 0 முதல் 9 வரையிலான எண்களும் இடம் பெற்றிருக்கும்.

ஒவ்வொரு செய்திக்கும் உருவாக்கப்படும் ஹாஷ் விசைகள் தனித்தன்மை வாய்ந்தவை என்பதால், இது ஒரு செய்தியை முதலில் அனுப்பியவர் அல்லது உருவாக்கியவர் யார் என்பதை தெரிந்துக் கொள்வதை சுலபமாக்கும். அத்துடன் வாட்ஸ்அப் குறியாக்க தொழில்நுட்பத்தையும் மீறாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு செய்திக்கும் ஆல்பா-எண் ஹாஷ் ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாட்ஸ்அப்பை உரையாடல்களில் இறுதி முதல் குறியாக்கம் (end-to-end encryption) உறுதி செய்யப்படும்.

Editor's Choice

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சில மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல் மூக்குவழியாக செலுத்தி கொரோனாவை அழிக்கக்கூடிய சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த சானோடைஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ள நைட்ரிக் ஆக்சைட் நேசல் ஸ்பிரே மருந்தானது (என்ஓஎன்எஸ்), 99.9 சதவீதம் செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாநில பல்கலைக்கழகத்தின் ஆன்டிவைரல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த பரிசோதனையில் செயல்திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை 2ம் கட்டத்தில் உள்ளது. இது நல்ல பலனை தருவதால், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டனில் உள்ள ஆஷ்போர்ட் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைகள் என்எச்எஸ் அறக்கட்டளை மூலம் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் பணி வேகமாக நடைபெறுகிறது.

எனவே, பிரிட்டனில் விரைவில் இந்த மருந்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்தால், கொரோனா வைரசானது நுரையீரலுக்குள் செல்வதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுகிறது. மக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கொரோனா வைரஸ் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும். இதேபோல் தொண்டையில் மருந்து படும்படி வாய் கொப்பளித்தல், மூக்கு துவாரங்களில் மருந்தை செலுத்தி சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையும் செய்ய முடியும்.

மனித உடலுக்குள் நைட்ரிக் ஆக்சைடின் முக்கியத்துவம் மற்றும் அதன் குணப்படுத்தும் பண்புகளை முதன்முதலில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபெரிட் முராத் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புக்காக அவர் உள்பட 3 பேராசிரியர்களுக்கு 1998 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது. பேராசிரியர் முராத், சானோடைஸ் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்துபவை. ஒருவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் கணினித் திரையில் படங்களாக உருவாவதும், எழுத்தாக பரிமாணம் பெறுவதும் சாத்தியம் என்கிறது புதிய தொழில்நுட்பம். இது நிதர்சனமானால் எப்படி இருக்கும் என்ற திகைப்பும் ஆச்சரியமும் ஏற்படுகிறது.

பேஸ்புக் ஒரு கைக்கடிகார சாதனத்தை உருவாக்கி வருகிறது, இது மூளையில் இருந்து மோட்டார் சிக்னல்களை ஒரு கணினியில் பெரிதாக்கி, அதற்குக் உருவத்தைக் கொடுக்கிறது. மூளையில் இருந்து கைக்கு அனுப்பப்படும் தகவல்களை மாற்ற அனுமதிக்கும். இது எலெக்ட்ரோமோகிராஃபி (electromyography (EMG)) எனப்படுகிறது. 

இது தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட "கற்பனை" திட்டங்களில் ஒன்றாகும், இது கணினிகளுடனான மனித தொடர்புகளின் பரிணாமத்தையே மாற்றக்கூடும். புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, பயனர்கள் மூளையில் தோன்றுவது கணினித் திரையில் உருவாகும்.

பேஸ்புக் முன்பு AR க்காக ஒரு இடைமுகத்தை உருவாக்குவதாகக் கூறியது, இது "நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்வதா அல்லது நமது சாதனங்களுடன் தொடர்பு கொள்வதா என்ற குழப்பத்தை போக்கும். இரண்டிற்கும் இடையே தேர்வு செய்யும் கட்டாயத்தை அகற்றும்."

" எப்போதும் கிடைக்கக்கூடிய AR கண்ணாடிகளைப் பயன்படுத்தி, தொடர்புகொள்வதற்கான இயற்கையான, உள்ளுணர்வு வழிகளை உருவாக்கி வருகிறோம், ஏனென்றால் இது அருகிலுள்ள மற்றும் தொலைதூர மக்களுடன் நாம் இணைக்கும் முறையை மாற்றும் என்று நம்புகிறோம்," என்று அது கூறியது.

பேஸ்புக் ரியாலிட்டி லேப்ஸ் (Facebook Reality Labs (FRL)) ஆராய்ச்சியானது, ஒரு சாதனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடியது. நீங்கள் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் கைக்கடிகாரம் மூலம், மனதில் எழும் கட்டளைகள் மணிக்கட்டு வழியாக கைக்கு செல்லும் மின்சார மோட்டார் நரம்பு சமிக்ஞைகளை (electrical motor nerve signals) மொழிபெயர்க்கும். அதற்கு எலக்ட்ரோமோகிராபி (electromyography)  சென்சார்களைப் (sensors) பயன்படுத்துகிறது.

இந்த சமிக்ஞைகள் உங்கள் சாதனத்திற்கு மிருதுவான ஒரு பிட் கட்டளைகளைத் தொடர்புகொள்வதற்கு உங்களை அனுமதிக்கும். இது தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் பல சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தக்கூடியது.  

மனதில் தோன்றுவதை கணினியில் உருவம் கொடுக்க முடியும் என்ற தொழில்நுட்பம் அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Editor's Choice

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டவுடன் மது அருந்தக்கூடாது. 2வது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 10 மண்டலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது. மண்டலங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.வரும் 16 ம் தேதி தடுப்பூசி வழங்கும் பணியை முதல்வர் பழனிசாமி துவங்கி வைக்கிறார். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டு கொண்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி வரும். முதல் டோஸ் போட்டவுடன் மது அருந்தக்கூடாது. 2வது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி போடும் நபர்களை தனிமைப்படுத்த வேண்டாம். தடுப்பூசி போட, அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

பக்கம் 12 / 21