Editor's Choice

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. 

அதுமட்டுமின்றி, குப்பையை தீ வைத்து எரித்தல், வாகனப்புகை, கட்டுமானத்துறை பணியின் போது ஏற்படும் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனாவில் நிலவிவரும் காற்று மாசுபாடும் நேபாளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
 
காற்று மாசுபாடு காரணமாக பள்ளி செல்லும் மாணவ\மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சுவாசப்பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் நேபாளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 2 வரை மூடப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காற்று மாசுபாடு காரணமாக நேபாளத்தில் பள்ளிகள் மூடப்படுவது இதுவே முதல்முறையாகும்.
Editor's Choice

கருஞ்சீரகத்தில்  இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான அமினோ அமிலங்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் என பலவிதமான சத்துக்களையும் கொண்டுள்ளது.

நாள்பட்ட புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் கருஞ்சீரகம் குணப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, மனிதர்களின் நோய் எதிர்பாற்றல் முறைமையை கருஞ்சீரகம் வலுப்படுத்தும் என்றும் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றது,

கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது.

மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி (PCOD) எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic Ovary syndrome) பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும். 
 
கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும் அருமருந்து கருஞ்சீரகம். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பப்பையில் இருக்கும் கசடுகள் சுத்தமாக வெளியேறிவிடும்.  

Editor's Choice

வாய் விட்டு சிரித்தால் வாய் விட்டு போகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சிரிப்பதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லது படித்திருக்கிறோம். அது உண்மையும் கூட. அதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் அழுவதாலும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அழுவதும் ஒரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமானது, இது அவரது மனதை அமைதிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வாய் விட்டு சிரித்தால் வாய் விட்டு போகும் என்று கூறியுள்ள நம் முன்னோர்கள், கவலைகளை சுவற்றிடமாவது சொல்லி அழு எனவும் கூறியிருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்

ஒருவருக்கு அதிக மன அழுத்தம் இருக்கும்போது, ​​அவரது உடலில் பல நச்சுகள் உருவாகின்றன. இந்த நச்சுகள் உடலில் இருந்து வெளியே வரவில்லை என்றால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அழுவதன் மூலம், இந்த நச்சுகள் உடலில் இருந்து மெதுவாக வெளியேற்றப்பட்டு, மனிதனின் மன அழுத்தமும் குறைகிறது.

அழுத பிறகு தூக்கம் நன்றாக வருகிறது என்று ஆய்வு ஒன்றில் கண்பிடிக்கப்பட்டுள்ளது. உண்மையில், அழுவது ஒருவரின் மனதை அமைதிப்படுத்துகிறது, அதனால் அவருக்கு நல்ல தூக்கம் கிடைக்கிறது. பெரும்பாலும் அழுதபின்னர் குழந்தைகள் நன்றாக தூங்குவதை பார்க்க முடியும். 

ஒருவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தால், மனம் கனப்பதை போன்று, மனது மிகவும் பாரமாக இருப்பதை போல உணருகிறார். அப்போது, அந்த நபர வாய் விட்டு அழுதால், மனது இலேசாகிறது. அவனது மன அழுத்தமும் நீங்குகிறது. கூடுதலாக, இது உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்ஸ் என்ற ரசாயனத்தையும் வெளியிடுகிறது, இது ஒரு மனிதனின் மனநிலையை உற்சாகப்படுத்துகிறது.

மாசு அதிகரித்துள்ளதாலும், கணிணி மொபைல் போன்றவற்றை அதிக பயன்படுத்துவதாலும்,  கண்கள் மிகவும் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் நன்றாக அழும் போது, கண்களில் இருந்து மாசுக்கள் நீங்கி கண்கள் தெளிவாகின்றன. மேலும், கண்களில் ஈரப்பதம் ஏற்படுகிறது.  இது நம் கண்களுக்கு மிகவும் அவசியம்.

மனபாரத்தை போக்கி, கண்களை தூய்மையாக வைத்திருக்க அவ்வப்போது அழுவதும் அவசியம்.

Editor's Choice

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவில் கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினேன். இருப்பினும் இது குறித்த லேசான அறிகுறிகள் தெரிந்ததால் சோதனை செய்து கொண்டேன். இதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை.

வீட்டிலேயே என்னை நானே தனிமைபடுத்தி கொண்டுடேன். டாக்டர்களின் அறிவுறைப்படி தேவையான வழிமுறைகளை கடைபிடித்து வருகிறேன். உங்களின் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Editor's Choice

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணான கிளாரி வைஸ்மேன், வழக்கம் போல் பார்டி, ஆடல், பாடல், என காலத்தை கழித்து வந்தார். 

திடீரென்று ஒரு நாள் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, அவள் தனது அம்மாவை அழைத்தாள். அவளது அம்மா உடனேயே அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். அங்கே அவளுக்கு, 5 நிமிடத்தில் குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமான குழந்தையாகவும் இருந்தது. அதன் எடை 3.48 கிலோவாக இருந்தது. 

அந்த பெண்ணிற்கு, பிறந்தது தனது குழந்தை தான் என நம்பவே முடியவில்லை.  ஏனென்றால், அவருக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லை. திடீரென குழந்தை பிறந்தது, அவருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. 

குழந்தை பிறந்த முதல் 12 மணி நேரத்திற்கு, கிளாரி வைஸ்மேன் குழந்தையின் முகத்தை கூட பார்ப்பதை தவிர்த்தார். அந்த அளவிற்கு அவர் அதிர்ச்சியில் இருந்தார்.

குழந்தை பிறந்தபோது, ​​கிளாரிக்கு 25 வயது, அவரது  காதலனுக்கு 21 வயது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த க்ளாரிக்கு, கர்ப்ப்பமாக இருந்த காலத்தில் உடல் எடை எதுவும் அதிகரிக்கவும் இல்லை.

Editor's Choice

டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை மயக்கி, தனது வலையில் விழவைக்க தனக்கு ஒருவர் அறுபதாயிரம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ.51 லட்சம்  தர முன்வந்ததாக தெரிவித்துள்ளார் செர்பியாவை சேர்ந்த மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசிக். அதோடு அதனை படம் பிடித்து பகிரவும் அந்த நபர் தன்னை கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

செர்பியாவுக்கு புகழை சேர்த்து வரும் ஜோகோவிச்சிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் நான் அவரை மயக்க வேண்டுமென்றும், அதனை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைக்கப்பட்ட கேமராவில் பதிவு செய்ய வேண்டுமெனவும்
லண்டன் நகரை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார். 
 
அதுமட்டுமல்லாது உலகத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் நான் இன்பச் சுற்றுலா போகலாம் எனவும் அவர் சொன்னார். அதை கேட்டதும் எனக்கு அவரை அடிக்க வேண்டுமென தோன்றியது. இருந்தாலும் நான் அதை செய்யவில்லை.
 
ஜோகோவிச் நல்ல மனிதர், சிறந்த விளையாட்டு வீரர்  என மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசிக்   தெரிவித்துள்ளார்.

பக்கம் 55 / 90