Editor's Choice

அனைத்து வகையான டிஜிட்டல் தரவையும் சேமிக்க பென் டிரைவ்கள் மிகவும் பயன்படுகின்றன. வழக்கமாக நாம் தனிப்பட்ட தகவல்கள், அலுவலக தகவல்கள் என அனைத்தையும் பென் டிரைவில் சேமித்து வைக்கிறோம். ஆனால் பல கணினிகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகளில் இந்த பென் டிரைவைப் பயன்படுத்தும்போது, ​​அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் அனுமதியின்றி உங்கள் தனிப்பட்ட தரவை யாரும் பார்க்கக்கூடாது என நீங்கள் எண்ணினால், சில எளிய வழிகள் மூலம் நீங்கள் உங்கள் தரவுகளைப் பாதுகாக்கலாம்.  ங்கள் உங்கள் பென் டிரைவை லாக் செய்யலாம்.

உங்கள் பென் டிரைவின் தரவும் பாதுகாப்பாக இருக்கும், வேறு யாரும் அதை உபயோகிக்க முடியாது. பென் டிரைவில் பாஸ்வேர்ட் அமைக்க மென்பொருள் எதுவும் தேவையில்லை. 

முதலில், USB Pen Drive-ஐ கணினியில் செருகவும்.  டிரைவில் வலது கிளிக் செய்யவும். பின்னர், ‘Turn on BitLocker’-ஐ செலக்ட் செய்யவும்.

இப்போது 'Use Password to protect the Drive’-ல் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, பாஸ்வர்டை (Password) உள்ளிடவும். இந்த பாஸ்வர்டை இரு ஃபீல்டுகளிலும் உள்ளிடவும்.

'Save the key for future reference’ என்ற செய்தி வரும் வரை ‘next’ பட்டனை அழுத்தியபடி இருக்கவும்.

இப்போது குறியாக்க செயல்முறை (Encryption Process) தானாகவே தொடங்கும். இதற்குப் பிறகு, நீங்கள் அமைத்த பாஸ்வர்ட் மூலம் உங்கள் PenDrive பாதுகாக்கப்படும்.

 

Editor's Choice

ஆஸ்திரேலிய கடல் விஞ்ஞானிகள் நுண்பாசி வகை ஒன்றை மனிதர்களுக்கான உணவாக மாற்றுவதற்கான வழியை கண்டறிந்துள்ளனர். இந்த நுண்பாசி வகை இறைச்சி  மற்றும் முட்டை போன்ற உணவுகளுக்கு மாற்றாக இருக்கும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆஸ்திரேலிய கடல் பகுதியில் காணப்படும் ஒருவகை பாசிகளை ஆராய்ச்சி செய்து வந்த அந்நாட்டு விஞ்ஞானிகள், மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான புரத சக்தி அதில் அதிகளவு நிறைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த பாசிகளை மனிதர்களின் உணவாக மாற்றும் ஆய்வக சோதனையில் ஈடுபட்டு இருந்த அவர்களுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய உணவு சந்தைகளில் இந்த கடல் பாசி உணவு வகை அறிமுகம் ஆகியுள்ளது.

Editor's Choice

கேக் பல வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. டைனோசர், பறவை, மிருகம், பனிப்பாறை என்று பல விதத்தில் தயாரிக்கப்பட்ட கேக் தற்போது மனித வடிவத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக்-இன் புகைப்படங்கள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் இந்த மனித வடிவிலான கேக்கை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் இவர், இந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சுபிசராமல் வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.

Editor's Choice

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தில் ஆரம்பித்து தற்போது 2019 ஆம் ஆண்டு வெளியான ஹீரோ படம் வரை தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இதையடுத்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ‘டான்’ படத்தின் அப்டேட்களும் நாளுக்கு நாள் வந்துக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூரி, சமுத்திரக்கனி, ப்ரியங்கா மோகன், முனிஷ்காந்த் ஆகியோர் உள்ள நிலையில் RJ விஜய் மற்றும் குக் வித் கோமாளி சிவாங்கி டான் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் விருந்தினராக சென்றிருந்த போது சிவாங்கியை பாராட்டி, சிவாங்கி போல் நடித்தும் காமித்தார். பின்பு குக் வித் கோமாளி செட்டில் இருக்கும் அனைவருடனும் சேர்ந்து வேலை செய்ய ஆசையாக உள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

'டிஜிலாக்கர்' செயலில், அடுத்தகட்டமாக, நம்முடைய இன்ஷுரன்ஸ் பாலிசி ஆவணங்களையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். நம்முடைய முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக, அறிமுகம் செய்யப்பட்டது தான் 'டிஜிலாக்கர்' செயலி.

இந்த செயலியை பயன்படுத்தி, தற்போது, நம்முடைய ஓட்டுனர் உரிமம், கார் பதிவு, வாக்காளர் அட்டை, பான் கார்டு, கல்லுாரி மற்றும் பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் பல ஆவணங்களை, டிஜிட்டல் ஆவணங்களாக சேமித்து வைத்து கொள்ள முடியும்.

இந்நிலையில், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ. காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 'டிஜிலாக்கர்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, காப்பீட்டு பாலிசி ஆவணங்களை அதில் சேமிப்பதற்கு உதவ வேண்டும் என, தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் செலவுகளை குறைப்பதுடன், பாலிசி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க முடியும்.

Editor's Choice

ஏலே படம் வெளியீடு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளதால், சமுத்திரகனி நடித்துள்ள ஏலே திரைப்படம் தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியான 14 வது நாளில், அப்படம் அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகளில் வெளியாகின்ற படத்தை சுமார் 30 நாட்களுக்கு பிறகுதான் ஒடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற புதிய விதியை சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஏலே திரைபடத் தயாரிப்பாளர் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 30 நாட்களுக்குப் பிறகுதான் ஒடியில் ரிலிசாகும் என்ற கடிதம் கொடுக்காமல் விட்டுவிட்டார். இக்கடிதம் கொடுத்தால்தான் ஏலே படம் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர் தரப்புக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

எனவே பிப்.,12 தேதி ரிலீசாக இருந்த ஏல்சே படம் வெளியாவது தாமதமாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது,ஏலே படம் வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளது.

அதில், தியேட்டர் உரிமையாளர்களின் புதிய விதியால் ஏலே திரைப்படத்தை எங்களால் தியேட்டர்களில் வெளியிடமுடியவில்லை எனறு தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பக்கம் 59 / 90