Editor's Choice

பப்பாளிப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது பலரால் வெறுக்கப்படுகிறது. ஏனென்றால் இது அசாதாரண மென்மைத்தன்மை கொண்டுள்ளதோடு இனிப்புச் சுவை மட்டுமல்லாமல், கடைசியில் கசப்புச் சுவையும் சேர்ந்தே இருப்பதால், பலர் இதை விரும்புவதில்லை.

இந்தப் பழம் கரிகா பப்பாளி தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா என்றாலும், இந்தியா முழுவதும் இது பரவலாகக் கிடைக்கிறது.

உடலில் நடைபெறும் பொதுவான உடலியல் செயல்முறைகளால் நம் உடல் முக்கிய உறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ஏராளமான அடிப்படைக்கூறுகளை உருவாக்கும். அது மட்டுமல்லாமல், மாசுபடுதல், வெப்பம், வைரஸ்கள் மேலும் இதைப்போன்ற பிற அம்சங்கள் போன்ற ஏராளமான சுற்றுச்சூழல் காரணிகளாலும் பாதிக்கப்படுகிறோம், இவையும்கூட ஏராளமான ஃப்ரீ ரேடிகல்ஸ் என்று குறிப்பிடப்படும் அணுக்கள் உருவாக வழிகோலுகின்றன.

தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ்தான் புற்றுநோய், இதய நோய்கள், பக்க வாதம் போன்ற பல நிலவரங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

பப்பாளியில் ஏராளமான ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது என்பது ஒரு நல்ல விஷயம். இந்த ஆண்டிஆக்ஸிடண்ட்கள் கரோட்டினாய்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இதோடு, இதில் உடலுக்கு உடலுக்கு வழக்கமாகத் தேவைப்படுவதைக் காட்டிலு மிக அதிக அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது, இதில் நம் கண்களை, பார்வையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான   வைட்டமின் ‘ஏ’ செறிந்து காணப்படுகிறது.

இதை மேலும் அதிகமாக வலியுறுத்தவே இதைத் தனியாகக் குறிப்பிடுகிறேன். பப்பாளியில் ஆற்றல் வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்கள் செறிந்துள்ளது – இது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உடலில் பாதுகாப்புத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவை முதுமையடைவதற்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கின்றன. உண்மையில், பப்பாளிச் சாறு ஃப்ரீ ரேடிகல்ஸ் உருவாக்கத்தால் உண்டாகும் அல்சீமர் நோய் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

ஃப்ரீ ரேடிகல்ஸ் நீரிழிவு, கல்லீரல் நோய், தைராய்டு நோய் உண்டாவதற்கும் காரணமாக உள்ளன. இந்த ஃப்ரீ ரேடிகல்ஸ்களை சமன்படுத்துவதன் மூலம் பப்பாளி நம் ஆரோக்கியத்தை இந்தப் பிரச்சினைகளிலிருந்து தடுக்கும் நன்மையைச் செய்கிறது

பப்பாளியில் சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்ட லைகோபீன் நிறைந்து காணப்படுகிறது. உண்மையில், சில சமயங்களில், இதன் பாதுகாக்கும் பண்புகளுக்காக புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களை தினமும் பப்பாளி உண்ணச் சொல்கிறார்கள். இதிலும்கூட இதன் பாதுகாக்கும் அம்சங்களுக்குக் காரணமாக இருப்பது இதில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள். புற்றுநோயின் வளர்ச்சியின் முக்கிய அம்சமாக உருவாகும் ஆக்ஸிஜனேற்றம் பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களால் சேதமடைகிறது.

புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்க வேண்டும் என்றால் தினமும் பப்பாளி சாப்பிடுவது நன்மை பயக்கும். பப்பாளிச் சாறுகள் மற்றும் அவை உண்மையில் எவ்வாறு உதவும் என்பது தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

Editor's Choice

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, 90 வயது மூதாட்டி கார் ஓட்டும், 'வீடியோ' சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மஹாராஷ்டிராவின், தானே மாவட்டதின் பாதல்பூரை சேர்ந்தவர், கங்காபாய் மிர்குடேவுக்கு வயது 90. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர், இவரது பேரனிடம் இருந்து, மூதாட்டி கங்காபாய், தற்செயலாக கார் ஓட்ட கற்றார். இவரது பேரன் சமீபத்தில் வாங்கியுள்ள புதிய காரை பாட்டியிடம் காட்டி, ஆசி வாங்க வந்தார். அப்போது, அந்த காரை, மூதாட்டி கங்காபாய் மிக திறமையாக ஓட்டியதை கண்டு ஆச்சரியமடைந்தார்.

அதை தன், 'மொபைல் போனில்' படம் பிடித்த பேரன், சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த பலர், மூதாட்டி கங்காபாயின் மன உறுதியை பாராட்டி வருகின்றனர். மூதாட்டி கங்காபாய்க்கு, ஓட்டுனர் உரிமம் இல்லை. 'விரைவில் பிறந்த நாள் கொண்டாடும் பாட்டிக்கு, ஓட்டுனர் உரிமத்தை பரிசாக அளிக்க உள்ளோம்' என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கற்றுக் கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை அந்த மூதாட்டி நிரூபித்துள்ளார்.

Editor's Choice

அமெரிக்க இராணுவத்தில் பணியில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அமெரிக்க ராணுவம் தனது சீருடை விதிகளை திருத்தியுள்ளது.

ராணுவத்தில் உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை போனிடெயிலாக போட்டுக்கொள்ளலாம் என்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம் என்றும் ஆண்கள் நக பாலிஷ்களை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்காகவும் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது உள்சட்டை ஒன்றை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றங்கள் பிப்ரவரி 24 முதல் நடைமுறைக்கு வரும்.

இது பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய போக்கை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சி என்று கூறிய அமெரிக்க இராணுவம், பெண் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மாறுபட்ட தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்காக அதன் சீர்ப்படுத்தும் தரத்தை புதுப்பித்துள்ளது.

கடந்த காலங்களில் நீண்ட தலைமுடி கொண்ட பெண்கள் அதை கொண்டையாக போட வேண்டியிருந்தது. இது அவர்களுக்கு அசௌகரியத்தை அளித்ததோடு, தலைக்கவசம் அணியும் போதும் அதிக பிரச்சனைகளைக் கொடுத்தது.

இராணுவத்தின் இந்த முடிவு சமூக ஊடகங்களில் கலவையான பின்னூட்டங்களைப் பெற்றது. பலர் இந்த நடவடிகையை பாராட்டினர். சிலர் இதை கிண்டலும் செய்தனர்.

சேவையில் உள்ள பெண்கள் எவ்வாறு தங்கள் கூந்தலை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த அமெரிக்க விமானப்படை தனது விதிகளை மாற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) திங்களன்று ஒரு உயர்நிலை ஆணையில் கையெழுத்திட்டார்.  இது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான, அவருக்கு முந்தைய அதிபரால் விதிக்கபட்ட, சர்ச்சைக்குரிய தடையை ரத்து செய்தது. இது எல்.ஜி.பீ.டி.கியூ ஆதரவாளர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. இதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதி ஒன்றையும் ஜோ பைடன் பூர்த்தி செய்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி ஆகியோர் உடனிருக்கையில் பைடன் ஓவல் அலுவலகத்தில் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

 

Editor's Choice

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழை கிண்டலடித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “தமிழ் மொழியை ஆதாம், ஏவாள் பேசினார்கள், செவ்வாய் கிரகத்தில் இருப்பவர்கள் கூட தமிழ் பேசுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அவ்வப்பபோது செய்திகளில் அடிபடுவது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜுவின் வழக்கம். அவ்வப்போது தமிழ் குறித்தும், தமிழர் குறித்தும் சீண்டல் கருத்துக்களை வெளியிடுவார்.  அந்த வகையில் சமீபத்தில் சில இந்தி பாடல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தவர், அந்த பாடல்களை தமிழர்கள் மனப்பாடம் செய்து பாடினால், இந்தி மீதான விரோதப் போக்கு மறையும் என்று குறிப்பிட்டார்.

கிண்டலான அந்த பதிவுக்கு பலரும் சீரியஸாக அவரை விமர்சித்தனர். இதனால் கடுப்பான கட்ஜு, ஜோக்கை கூட புரிந்துகொள்ளாத அளவிற்கு தமிழர்கள் உள்ளார்கள். வளர வேண்டும் என்றார். அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், மீண்டும் ஒரு கிண்டல் பதிவை போட்டுள்ளார். அதில், “இந்த பூமியில் பழமையான மொழி தமிழ். ஆதாம் - ஏவாளால் கூட பேசப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் வாழும் மக்களால் கூட பேசப்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் கேரள மக்களை நேசிக்கிறேன். அவர்களுடனான ஒரே பிரச்சனை என்னவென்றால், உடனுக்குடன் தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பு கொண்டவர்கள். ஒருமுறை நான் திருவனந்திபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்றபோது, அங்குள்ள பணியாளர்களுக்கு அரை டஜன் தொழிற்சங்கங்கள் இருப்பதைக் கண்டேன்.” என பதிவிட்டுள்ளார். தமிழர்களும், கேரளத்தவர்களும் அவருக்கு பதிலடி தந்து வருகின்றனர்.

Editor's Choice
விஜய்யின் மாஸ்டர் படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகையில் திரையரங்குகளில் வெளியிட்டனர். ரசிகர்கள் அதிக அளவில் தியேட்டர்களில் வந்து மாஸ்டர் படத்தை பார்த்தனர். 
 
நல்ல வசூலும் ஈட்டியது. அடுத்து மாஸ்டர் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கபட்டது.  இதன்படி, மாஸ்டர் திரைப்படம்  ஒடிடியில் வெளியானது.  தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வரும். ஆனால் மாஸ்டர் 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளியாவது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனாவால் ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவி நடித்துள்ள பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Editor's Choice
சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் என ராதிகா சரத்குமார் கூறி உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
 
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். சரத்குமாரை தொடர்ந்து கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா பேசினார்.
 
தமிழகத்தில் கொரானா தொற்றால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தனர், அப்போது கட்சியின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களுக்காக சேவையாற்றினர். 
 
அதேவேளையில் கட்சியின் தலைவரும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தமைக்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
2021-ம் ஆண்டில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும். 2 முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும், வருகிற தேர்தலில் முழுமையாக ஈடுபட உள்ளேன். 
 
அதற்காக சின்னத்திரையில் நான் நடித்து வரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் என ராதிகா கூறினார்.

பக்கம் 65 / 90