Editor's Choice

ஆஸ்கர் விருதுகளுக்கான, சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இருந்து, மலையாள திரைப்படமான, ஜல்லிக்கட்டு வெளியேறியது.

அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது, சர்வதேச அளவில் திரைப்படத் துறைக்கான முக்கிய விருதாக கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, வரும் ஏப்ரல் 25ல் நடைபெறுகிறது.இதில், சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான பிரிவில், மலையாள மொழி திரைப்படமான, ஜல்லிக்கட்டு தேர்வானது. மலையாள எழுத்தாளர் ஹரீஷ் என்பவர் எழுதிய, மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கினார். கடந்த, 2019ல், வட அமெரிக்க நாடான, கனடாவின் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில், இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்தது.

இதையடுத்து, 93வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க, இத்திரைப்படம் தேர்வானது.மொத்தம், 93 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவுக்கான போட்டிக்கு தேர்வாகின. அதில் இருந்து முதல்கட்டமாக, 15 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அதில், ஐந்து படங்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகும். இதில், நம் நாட்டின் சார்பில் தேர்வான ஜல்லிக்கட்டு திரைப்படம், போட்டிக்கான தேர்வில் இருந்து வெளியேறியது.

சிறந்த குறும்படங்களுக்கான பிரிவில், கரிஷ்மா தேவ் துாபே இயக்கிய, பிட்டு என்ற ஹிந்தி குறும்படம், அடுத்த சுற்றுக்கு தேர்வாகி உள்ளது.  ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள திரைப்படங்களின் பட்டியல், அடுத்த மாதம், 15ல் அறிவிக்கப்பட உள்ளன.

Editor's Choice

சென்னை சேப்பாக்கத்தில் பிப்ரவரி 13 முதல் நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

கொரோனா காரணமாக, பார்வையாளர்கள் அனுமதி இல்லாமல் முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால், இரண்டாவது டெஸ்ட்டுக்கு 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டோடு கலந்தாலோசித்து கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி இரண்டாவது டெஸ்ட்டுக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10 மணி முதல் தொடங்குகிறது.

http://www.paytm.com மற்றும் http://www.insider.in இணையதளங்கள் வழியாக டிக்கெட்டை புக் செய்யலாம். இந்தமுறை நேரடியாக வந்து டிக்கெட் வாங்க கவுன்ட்டர்கள் கிடையாது. ஆனால், ஆன்லைனில் புக் செய்த எண்ணைக்காட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டிக்கெட் பெற வேண்டும். இதற்கான கவுன்ட்டர் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விக்டோரியா ஹால் சாலையில் உள்ள 3-ம் எண் பூத்தில் செயல்படும். 11-ம் தேதி காலை 10 மணி முதல் மேட்ச் நடைபெறும் நாட்கள் வரை இந்த கவுன்ட்டர் திறந்திருக்கும்.

2012-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் போட்டிக்குப்பிறகு சென்னை மாநகராட்சியால் மூடப்பட்ட I,J,K ஸ்டாண்டுகள் 8 ஆண்டுகளுக்குபிறகு முதல்முறையாக இந்தியா - இங்கிலாந்து போட்டிக்குத் திறக்கப்படுகிறது.

C,D,E லோயர் ஸ்டாண்டுகளுக்கான டிக்கெட் விலை 100 ரூபாயாகவும், D,E அப்பர், F,H,I,J,K லோயர் ஸ்டாண்டுக்கான விலை 150 ரூபாயாகவும், I,J,K அப்பர் ஸ்டாண்டுக்கான விலை 200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயிரங்களில் விற்பனை செய்யப்படும் பெவிலியன் ஸ்டாண்டு உள்பட ஏசி பாக்ஸ் சீட்டுகள் இந்த டெஸ்டுக்கு இல்லை. அதனால்தான் டிக்கெட்களின் அதிகபட்ச விலையே 200 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15,000 டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் விற்கப்படும் எனத்தெரிகிறது.

ஸ்டேடியத்திற்குள் நுழையும் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது.

Editor's Choice

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான எம் ஆர் ராதாவைப் பற்றி பிரபலம் ஒருவர் பேசியுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகரான சிவாஜி கணேசனே குருவாக ஏற்றுக்கொண்ட நடிகர் என்றால் அது எம் ஆர் ராதாதான். அந்த அளவுக்கு தனது நடிப்பு மற்றும் உடல்மொழியால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர். இப்போது கூட அவரின் ரத்தக்கண்ணீர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது.

இவருக்கு பல மனைவிகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதில் சிலர் சினிமா துறையில் நடிகர்களாக பிரகாசிக்கின்றனர். இந்நிலையில் பழங்கால சினிமாவின் தயாரிப்பு நிர்வாகியான வீரையா என்பவர் எம் ஆர் ராதாவோடு நெருங்கி பழகியவர். அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘எம் ஆர் ராதா ஒரு பெண்ணை தொட்டு விட்டார் என்றால் அவருக்குக் கண்டிப்பாக ஒரு வீடு உண்டு’ எனக் கூறியுள்ளார்.

Editor's Choice

இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் உலகில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் விளையாட்டில் ஜொலித்தாலும், இவரது குடும்பம் படிப்பை பின்னணியாக கொண்டது. இவரது பெற்றோர் இருவருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள்.

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ISSF) ஒருங்கிணைத்த போட்டிகளில் இதுவரை அவர் ஏழு தங்கப்பதக்கங்களும், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஜூனியர் உலகக்கோப்பைப் போட்டியில் முதல் பெரிய சர்வதேச வெற்றியை பெற்ற வாலறிவன் அதில் தங்கம் வென்றதோடு, தான் போட்டியிட்ட பிரிவில் புதிய உலக சாதனையும் படைத்தார்.

ஒரு சில காரணங்களால் இந்த வெற்றி தனக்கு மிகவும் நெருக்கமானது என்று அவர் கூறுகிறார். போட்டிக்கு ஒரு நாள் முன்புதான் சிட்னி சென்று சேர்ந்த அவர், விமானப் பயணத்தால் சோர்ந்துபோய், கால்களில் அதிக வீக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் நடந்த ISSF உலகக் கோப்பையில் அவர் தங்கம் வென்றார். மேலும் 2019ஆம் ஆண்டு சீனாவின் புடியனில் நடந்த ISSF உலகக் கோப்பை போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிகழ்வுகளில் அவர் வெளிப்படுத்திய திறன், அவரை உலக அளவில் முதலிடத்தை பெற வைத்தது.

உலகின் முதலிடம் என்ற நிலையை அடைந்தவுடன், பொதுவாக மக்கள் தன் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் உயர்ந்ததாக கூறும் வாலறிவன், ஆனாலும் அது தன் விளையாட்டை எந்த வகையில் பாதிக்கவில்லை என்கிறார்.

ஆரம்பத்தில் வாலறிவனுக்கு தடகள நிகழ்வுகளில்தான் அதிக ஆர்வம் இருந்தது. அவரது தந்தையே துப்பாக்கிச் சுடுதலை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். தந்தையின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட வாலறிவனுக்கு, உடனடியாக அந்த விளையாட்டு பிடித்துவிட்டது. துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபடுவது தன்னை சாந்தப்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

துப்பாக்கி சுடுதலில், அதிக கவனமும் பொறுமையும் தேவை. அதனால் இந்த விளையாட்டுக்கு அவர் மன ரீதியாக தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. போட்டிகளில் பங்கேற்க அவருக்கு சரியான மனநிலை இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.

பயிற்சியின் ஆரம்ப காலத்திலேயே, அவருக்கு இந்த விளையாட்டில் இயற்கையாகவே திறன் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து முன்னாள் இந்திய துப்பாக்கிச்சுடும் வீரரான ககன் நரங்கின் கவனத்தை ஈர்த்தார் வாலறிவன். துப்பாக்கிச்சுடுதலில் வாலறிவனின் திறன்களை மேம்படுத்த உதவ முன்வந்தார் நரங்.

2014ல் தொழில்முறையாக துப்பாக்கிச்சுடுதலில் ஈடுபட்ட வாலறிவன், ககன் நரங் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்திருந்த மாவட்ட நிலையிலான விளையாட்டுப் பள்ளியில் பயிற்சியை மேற்கொண்டார்.

பயிற்சியின் ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த சவால்களை நினைவுகூரும் இவர், முதலில் பயிற்சி எடுக்க தினமும் துப்பாக்கிச் சுடும் சரகத்தை (manual range) அமைத்து, மீண்டும் கழட்ட வேண்டி இருந்ததாக கூறுகிறார்.

அங்கு 2017ஆண்டு வரை பயிற்சியாளர்கள் நேஹா சௌஹான் மற்றும் நரங் ஆகியோரிடம் இருந்து பயிற்சி பெற்றார் வாலறிவன்.

சர்வதேச அளவில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் தான் பங்கேற்க, நரங்கின் பயிற்சி மற்றும் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறுகிறார்.

மேலும் குஜராத் விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையமும் தனக்கு மிகுந்த ஆதரவு அளித்ததாக வாலறிவன் கூறுகிறார்.

2017ல் தான் தேசிய அணியில் இடம் பெற்றதில் இருந்து, வசதிகள், இருப்பிடம் என அனைத்தும் தரம் உயர்ந்துள்ளதாகவும், 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வாலறிவன்.

Editor's Choice

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் அமேசான் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச பரிசுகள் வழங்கி வருகிறது.

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால் அமேசான் வினாடி வினா பிப்ரவரி 6 பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில்  கேள்விகள் காண்பிக்கப்படும்.

கீழே அமேசான் தளத்தில் இருக்கும் கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 அமேசான் பே பேலன்ஸ் பரிசாக வழங்கப்படுகிறது.

கேள்வி 1: Who was the Man of the Series in the recently concluded Test series between India and Australia?

விடை- Pat Cummins

கேள்வி 2: UNGA celebrated the first ever International Day of __ __ on 27 December 2020. Fill in the blanks

விடை- Epidemic Preparedness

கேள்வி 3: Which is the first private company in India to successfully test launch a homegrown rocket engine?

விடை- Skyroot Aerospace

கேள்வி 4: Which popular medium sized dog breed is this?

விடை- Golden Retriever

கேள்வி 5: Name this video game character created by Nintendo.

விடை- Mario

துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது. குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

விளையாட்டுத் துறைக்கு மகத்தான பங்களிப்பு செய்ததற்காக, கனடா மற்றும் அமெரிக்க உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சியாளரான ஜேம்ஸ் நைஸ்மித் (James Naismith) என்ற மாபெரும் விளையாட்டு கண்டுபிடிப்பாளருக்கு, கூகுள் நிறுவனத்தின் தேடுபொறியான கூகுள்  டூடுல் மரியாதை செலுத்துகிறது.   

டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்தாட்டத்தை கண்டுபிடித்தார் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கியவர் டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக "தடகள கவனச்சிதறல்" (“athletic distraction”) என்பதை கண்டறிந்தார்.   

ஜேம்ஸ் நைஸ்மித்தின் நினைவாக, கூகுள் டூடுல் இன்று கூடைப்பந்து மற்றும் நைஸ்மித்துடன் இரண்டு குழந்தைகள் விளையாடுவதை சித்தரிக்கும் அனிமேஷனை அர்ப்பணித்தது. இந்த அனிமேஷனைக் கிளிக் செய்தால், அவரைப் பற்றி பேசும் பல்வேறு பக்கங்களுக்கு கூகுள்  உங்களை கொண்டு செல்லும். அங்கு நைஸ்மித் மற்றும் கூடைப்பந்தாட்டத்துடனான அவரது உறவைப் பற்றி படிக்கலாம்.  

1861ம் ஆண்டு நைஸ்மித் நவம்பர் 6ஆம் தேதியன்று Ontario என்ற ஊரில் பிறந்தார். புகழ்பெற்ற மெக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill University) உடற்கல்வி கல்வியைப் பயின்றார். நைஸ்மித்க்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்.

அமெரிக்கா சென்றா நைஸ்மித்,   மாசசூசெட்ஸில் உள்ள ஒய்.எம்.சி.ஏ சர்வதேச பயிற்சி கல்லூரியில் உடற்கல்வி துறையில் சேர்ந்து மாணவர்களுக்கு கற்பித்தார். நைஸ்மித் கூடைப்பந்தாட்ட உதவியுடன் நிறுவனமயக்கப்பட்ட இனவெறியை அகற்ற முயன்றார் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

மாணவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களைத் தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்பதும், ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல்ரீதியான தகுதி தேவை என்பதன் அடிப்படையில் நைஸ்மித் கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தார்.

பக்கம் 60 / 90