Editor's Choice
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்தபோது, அந்த பிராந்திய மக்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டில் 5 ஆண்டுகள் வசிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறி இங்கிலாந்தை கண்டித்தது.

மேலும் ஹாங்காங் மக்களுக்கு இங்கிலாந்து வழங்கியிருந்த பாஸ்போர்ட் இனி செல்லாது எனவும் சீனா அறிவித்தது.‌இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு தொடங்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த புதிய விசாவைப் பெற விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இங்கிலாந்தின் குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டம் குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “இந்த நடவடிக்கை இங்கிலாந்தின் முன்னணி காலனியான ஹாங்காங்குடன் இங்கிலாந்தின் வரலாறு மற்றும் நட்பின் ஆழமான உறவுகளை கவுரவிக்கிறது” என்றார்.
Editor's Choice

எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் டைரக்டர் சங்கருக்கு 'பிடிவாரண்ட்' விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "எந்திரன்" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்து வெற்றிகரமாக ஓடியது. ஆனால், 1996 ஆம் ஆண்டிலேயே தான் எழுதிய கதையைத் தான் டைரக்டர் ஷங்கர் திருடிவிட்டதாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு பதிவு செய்தார்.

ஆரூர் தமிழ்நாடன் "ஜுகிபா" என்ற  பெயரில் எழுதிய கதையை, ‘தித் திக் தீபிகா’ என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு வெளியிட்டதாகக் கூறி அதற்கான ஆதாரங்களும் தனது கதையை திருடிவிட்டார் ஷங்கர் என்று வழக்குத் தொடர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். 

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீசுக்கு பதில் வராததால், சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில், எந்திரன் படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டத்தின் புகார் அளித்த்தார் ஆரூர் நாடான்.

நீண்டகாலமாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கலாநிதிமாறன் மற்றும் டைரக்டர் ஷங்கருக்கு எதிராக எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கிரிமினல் வழக்கு தொடுத்தார். 

வழக்கில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இருவருக்கும் எழும்பூர் 13 ஆவது நீதிமன்றம் 2011-ல்  சம்மன் அனுப்பியது.  அந்த சம்மனுக்கு பதிலளித்த கலாநிதி மாறனும், ஷங்கரும்  கதைத் திருட்டு எதுவும் நடைபெறவில்லை என்றும், கிரிமினல் வழக்கு செல்லாது என்று உத்தரவிடும்படி கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 

அதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்து இருந்தது. எந்திரன் தொடர்பான சிவில் வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.

விசாரணையில் காப்புரிமை மீறல் இருப்பது தெரிவதால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டத்தின் கீழ் தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இயக்குனர் சங்கர் செய்த  மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் கதை திருட்டு வழக்கு 11 வருடங்களுக்குப் பின் மீண்டும் விசாரணை தொடங்கியது. கடந்த 29ஆம் தேதியன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்குத் தொடுத்த ஆருர் தமிழ்நாடன் நேரில் ஆஜராகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

ஆனால், இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகவில்லை என்பதோடு, அவர் தரப்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட், திரைப்பட இயக்குநர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். அதோடு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தொடங்கும் என்றும் உத்தரவிட்டார்.

Editor's Choice

வங்கி லாக்கர் வசதி, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்படுகிறது. எனவே, புதிதாக லாக்கர் வசதிக்கு விண்ணப்பிக்கும் போது, குறிப்பிட்ட அந்த கிளையில் லாக்கர் வசதி காலியாக இருந்தால் மட்டுமே அதை பெற முடியும். எனினும், லாக்கர் வசதி கோரி விண்ணப்பிக்கலாம்.

வங்கி கிளையில் உடனடியாக வழங்கப்பட லாக்கர் வசதி இல்லை எனில், அதற்காக விண்ணப்பித்து காத்திருக்கலாம். ரிசர்வ் வங்கி நெறிமுறைகள்படி வங்கிகள், இத்தகைய காத்திருப்பு பட்டியலை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பமும் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான காத்திருப்பு எண் வழங்கப்படும்.

வங்கி லாக்கர் வசதி பெற்றவர்களில் யாரேனும் அதை விலக்கிக் கொள்ள நேர்ந்தால், காத்திருப்பு பட்டியலின் படி அந்த லாக்கர் ஒதுக்கப்படும். லாக்கர் வசதி பெற, அந்த வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. எனினும், லாக்கர் வசதி பெற, வைப்பு நிதி கணக்கு துவக்க, வங்கிகள் வலியுறுத்தலாம்.

லாக்கர் வசதி பெற, வைப்பு நிதி கணக்கை துவக்கும் படி கூற, ரிசர்வ் வங்கி நெறிமுறைகள் வழி செய்கிறது. பொதுவாக, மூன்றாண்டு லாக்கர் வாடகை மற்றும் பொருந்தக்கூடிய இதர கட்டணத்திற்கு ஏற்ப வைப்பு நிதி தொகை அமையும். இது, ‘செக்யூரிட்டி டெபாசிட்’டாக கருதப்படும்.

லாக்கர் வசதிக்கு வாடகை செலுத்த வேண்டும். இதற்காக துவங்கிய வைப்பு நிதி வட்டியில் இதை பிடித்தம் செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. லாக்கர் வசதியை அடிக்கடி இயக்க வேண்டும், இல்லை எனில், லாக்கரை ரத்து செய்து, அதை திறந்து பார்க்கும் உரிமை வங்கிக்கு உள்ளது.

Editor's Choice

இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில்  வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமாகச் செயல்பட்டு வருகிறது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இப்படியான வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு “Naked Cleaning Company” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை நிக்கி பெல்டோன் மற்றும் அவரது மனைவி லியன் வுல்மேன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். அப்படி என்ன சிறப்பு என்றால், இந்தநிறுவனத்தின் மூலம் வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் வேலை செய்யும் நேரத்தில் மேலாடை இல்லாமலோ அல்லது நிர்வாணமாகவோ தான் வேலை செய்வார்களாம்.

இவர்களின் தனித்துவமே இது தானாம். அந்நாடுகளில் இது போன்ற நிறுவனங்கள் சட்டவிதிமுறை மீறல்கள் இல்லை. அதனால் அவர்கள் தைரியமாக நடத்துகின்றனர். தற்போது இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தினர் இதை அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

Editor's Choice

பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள்  ஆகியோர், அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு தகுதி உடையவர் என தாங்கள் நினைக்கும் பல்வேறு பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். 

2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக (Nobel Peace Prize 2021) பரிந்துரைக்கப்படும் பெயர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.  முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg ), உலக பொது சுகாதார அமைப்பு (WHO) ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump )இரண்டாவது முறையாக இந்த பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர இனவெறிக்கு எதிராக இயக்கமான ‘BLACK LIVES MATTER’  பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2020 மே மாதம் செய்திகளில் பிரபலமாகத் தொடங்கியது பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) இயக்கம்.

2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பட்டியலை பரிசீலிக்கும் நோபல் கமிட்டி குழு வரும் அக்டோபரில் நோபல் பரிசு பெருபவரின் பெயரை அறிவிக்கும்.

கடந்த ஆண்டு ஐ.நாவின் (UN) உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 

Editor's Choice

மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மீண்டும் சர்ச்சையானார் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில், நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். இவர் தான் தற்போது இந்திய அளவில் அதிகமாக பேசப்படுபவர். சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி பேசுப்பொருளாக மாறியுள்ளார். போக்சோ' சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, 'உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்' என, சமீபத்தில் தீர்ப்பளித்தார்.

அதுமட்டுமல்லாமல், மற்றொரு வழக்கில், 'சிறுமியின் கையை பிடித்திருப்பதும்; பேன்ட், 'ஜிப்' திறந்திருப்பது ஆகியவை, பாலியல் அத்துமீறலாகாது' என, தீர்ப்பளித்தார். மேலும் ஒரு பாலியல் வழக்கில், 'பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்திருந்தால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும். ஆனால், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இல்லை என மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதால், இருவரின் விருப்பதிலேயே சம்பவம் நடந்துள்ளதாக' கூறி, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இப்படியாக அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். புஷ்பாவின் தீர்ப்புகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால், மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் திரும்ப பெற்றது.

இந்நிலையில், நீதிபதி புஷ்பாவின் அதிரடி தீர்ப்புகள் முடிந்தபாடில்லை. மனைவியிடம் கணவன் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு பிரசாந்த் ஜாரேவை திருமணம் செய்துக்கொண்ட பெண், கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதால் 2004ல் தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரை விசாரித்த மும்பை யவத்மால் அமர்வு நீதிமன்றம், கணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாரே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா கனேதிவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஐபிசி பிரிவு 498ன் படி, மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது,' என்று கூறி, குற்றவாளி பிரசாந்த் ஜாரேவை விடுதலை செய்திருக்கிறார் புஷ்பா கனேதிவாலா. மேலும், 'ஜாரேவின் மகள், தனது தாயை அடித்து, துன்புறுத்தி வலுக்கட்டாயமாக விஷமருந்த செய்ததாக தெரிவித்தும், போலீசார் தற்கொலை என வழக்குப் பதிந்தது ஆச்சரியமளிக்கிறது,' எனவும் கருத்து தெரிவித்தார்.

பக்கம் 64 / 90