Editor's Choice

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கமேனி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் இருக்கும் இளம் தலைமுறையினரிடையே ஹிஜாப் அணியும் பழக்கம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். கற்பனை கதாப்பாத்திரங்களுக்கு ஹிஜாப் தேவையில்லை என்றாலும், இஸ்லாமிய முறையை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
ஈரானைப் பொறுத்தவரையில் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணியாமல் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அவர்களிடம் அபராதம் வசூலிக்கும் காவல்துறையினர் ஒருசில நேரங்களில் கைது செய்து சிறையிலும் அடைத்துவிடும் நிலை தற்போதும் நடைமுறையில் உள்ளது.
 
அயதுல்லா அலி கமேனியின் இந்த புதிய உத்தரவு அந்நாட்டில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 
Editor's Choice

OTT Platform இல் பொழுதுபோக்க இணையம் தேவையில்லை. Netflix ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் உதவியுடன் நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் இதனை பெற முடியும்.

Netflix சமீபத்தில் Download for you என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உதவியுடன், உங்களுக்கு பிடித்த வலைத் தொடர் மற்றும் திரைப்படம் தானாகவே பதிவிறக்கப்படும்.

Netflix பயன்பாட்டின் செயற்கை நுண்ணறிவுடன் பணிபுரியும் அம்சத்தை பதிவிறக்குங்கள். நீங்கள் ஒரு வலைத் தொடரைப் பார்க்கிறீர்கள் என்றால், நெட்ஃபிக்ஸ் அடுத்த எபிசோடை உங்கள் மொபைலில் பதிவிறக்கும். இதே போல் திரைப்படங்களை பதிவிறக்கும். பயணத்தின் போது அல்லது தொலைதூர பகுதிகளில், இந்த அம்சம் பொழுதுபோக்குக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த அம்சம் Netflix இல் புதியதாக இருக்கலாம். ஆனால் சில காலத்திற்கு முன்பு Smart Downloads என்ற ஒரு அம்சம் வலைத் தொடருக்கு (Web Series) மட்டுமே பயன்படுத்தப்பட்டது. புதிய அம்சத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், திரைப்படங்களையும் அதில் பதிவிறக்கம் செய்யலாம்.

தகவல்களின்படி, Netflix இல் Download for you பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இதற்காக, முதலில் இந்த பயன்பாட்டின் பதிவிறக்க விருப்பத்திற்குச் செல்லவும். இப்போது நீங்கள் இங்கே பதிவிறக்க விரும்பும் உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும். மொபைலின் நினைவகத்திற்கு ஏற்ப வலைத் தொடர் அல்லது திரைப்படம் பதிவிறக்கம் செய்யப்படும்.

 

Editor's Choice

அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். காலில் பலத்த காயமடைந்த அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கோல்ப் வரலாற்றில் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராக வலம் வரும் டைகர் உட்ஸ், 15 முக்கிய கோல்ப் சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். சமீபத்தில் தான் அவர் தனது முதுகில் ஐந்தாவதாக அறுவை சிகிச்சை செய்திருந்தார். இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த உட்ஸ், எதிர்பாராமல் விபத்தில் சிக்கினார்.

அவரது கார் கவிழ்ந்து, புல்வெளியில் உருண்டு விபத்துக்குள்ளானது. காரில் உட்ஸ் மட்டும் இருந்த நிலையில், அவர் படுகாயம் அடைந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். காலில் பலத்த காயம் அடைந்த அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Editor's Choice

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் முடித்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையரில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற 34 வயதான சானியா மிர்சா இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல தீவிரம்காட்டி வருகிறார். இதுகுறித்து பேசிய சானியா, ஒலிம்பிக் என் மனதில் உள்ளது. நான் தினமும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்கிறேன், ஆரோக்கியமாக இருக்க முயற்சிப்பதாக தெரிவித்தார். 

ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான சவாலுக்கு தன்னை பொருத்தமாக வைத்திருப்பதாகவும், இது எனது 4வது ஒலிம்பிக் போட்டியாகும் என கூறினார். ஒலிம்பிக் பதக்கம் என்பது எனது சாதனைகள் பட்டியலில் இல்லாத ஒரு விஷயம். டோக்கியோவில் பதக்கத்துடன் எனது டென்னிஸ் வாழ்க்கையை முடிக்க  விரும்புகிறேன். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நான் உணர்கிறேன் என சானியா கூறினார்.

Editor's Choice

மலர்கள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம், இயற்கை விரும்பிகளுக்கு பிரியமான காலம். ஆனால், சுவாச ஒவ்வாமை உள்ளோருக்கு, காற்றில் பரவும் மகரந்த துகள்கள் பெரிய அவஸ்தையை அளிக்கும்.

அமெரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றத்திற்கும், தாவரங்கள் மகரந்தம் உற்பத்தி செய்யும் காலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால், உலகெங்கும் வெப்பநிலை கூடி வருகிறது. இதனால், தாவரங்கள் பூ விடும் பருவமும் முன்கூட்டியே தொடங்கிவிடுவதாக யூட்டா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், காற்றில் மகரந்த துகள்கள் விரவும் காலமும் அதிகரித்துள்ளது.

இதனால், மூச்சுத் திணறல், சளி, ஆஸ்துமா போன்றவற்றுக்காக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை கூடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தின் கடும் விளைவுகள் அடுத்த, 50 ஆண்டு களுக்குப் பிறகுதான் தெரிய வரும் என்பது இல்லை. இப்போதே அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கு உதாரணம்தான் மகரந்தப் பருவம் நீடித்திருப்பது என்கின்றனர் யூட்டா விஞ்ஞானிகள்.

 
 
Editor's Choice

உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயினை கண்டார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பென்குயின் ஒன்றும் உலா வருவதைக் கண்ட அவர் இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளார். ஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப் போல முதன்முதலாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   

பக்கம் 28 / 74