Editor's Choice

தற்போதுமடிக்கணினியும் கைபேசியும் நம்முடைய அன்றாட பயன்பாட்டின் தவிர்க்கமுடியாத ஒருகருவியாக மாறிவிட்டன ஆயினும் கைகால்களை அசைக்கமுடியாதவர்களால் இவைகளை பயன்படுத்தி கொள்ளமுடியாது அதனை வெற்றி கொள்ள BrainGate எனும் ஆய்வு அமைப்பானது மனித மூளை, கணினி ஆகிய இரண்டிற்குமிடையேயான இடைமுகத்தை (brain-computer interface (BCI))என்ற செயல்முறையை பயன்படுத்தி கைகால்கள் செயல்படமுடியாமல் இருப்பவர்களால்கூட மடிக்கணினி சாதனத்தின் இடம்சுட்டியை நகர்த்துவது சொடுக்குதல் செய்வது ஆகிய செயல்களை மனித மூளையில்அவ்வாறான கட்டளைகளை சிந்திப்பதன் வாயிலாகவே செயற்படுத்திடமுடியும் என கண்டறிந்துள்ளனர்

மேலும் கைகால்கள் செயல்படமுடியாமல் இருப்பவர்களை மடிக்கணினி சாதனத்தின் வாயிலாக மனித மூளை, கணினி ஆகிய இரண்டிற்கும் இடையேயான இடைமுகத்தை இயலுமை செய்திடலாம் எனபிரவுன் பல்கலைகழக ஆய்வறிக்கைஒன்று கூறுகின்றதுஇந்த ஆய்வில் investigational BrainGate BCI என்ற செயல்முறையை பயன்படுத்தி கார்ட்டெக்ஸில் வைக்கப்பட்டுள்ள மோட்டாருடன் சிறிய சென்சார் மூலம் நேரடியாகச் செயல்படும் நரம்பியல் செயல்பாடு, பொதுவாக பயன்படுத்தப்படும் டேப்லெட் நிரல்களால் கைகளால் சுட்டியை சொடுக்குவதை போன்றேநம்முடையமனித மூளையின் சிந்தனையில் எழும் கட்டளைகளின் துனையுடன் செயல்படச்செய்து குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் இணையத்தின் வாயிலாக நேரடியாக குழுவிவாதம் செய்திடவும் மின்னஞ்சல்களை கையாளுதல் இசைகச்சேரிகளை கேட்டல் கானொளி காட்சிகளை காணுதல் இணையத்தின் வாயிலாக பொருட்களை கொள்முதல்செய்தல் ஆகியபல்வேறு பணிகளை மடிக்கணினியின் பயன்பாடுகளின் மூன்று மாதிரி செயல்திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தி

பரிசோதித்து ள்ளனர் மேலும் Bluetooth வாயிலாக கம்பியில்லாத சுட்டியை கையாளவும் முடியும் என கண்டறிந்துள்ளனர்
இதனை கடந்த 21 நவம்பர் 2018இல் PLOS ONE எனும் ஆய்விதழில் வெளியிட்டுள்ளன .மேலும் விவரங்களை கானொளி காட்சியாக காண https://www.youtube.com/watch?time_continue=47&v=O6Qw3EDBPhg எனும் இணையமுகவரிக்கு செல்க

Editor's Choice

கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி இந்திய அரசு சீன நிறுவனங்களுக்கு சொந்தமான 118 செயலிகளை தடை செய்தது இதில் ஒரு குறிப்பிட்ட தகுந்த ஒரு ஆப் பப்ஜி.கடந்த முறை டிக் டாக் உடன் 50 க்கும் மேற்பட்ட ஆப்களை இந்திய அரசு தடை செய்த பொழுது பப்ஜியும் தடை செய்யப்படும் என்று சிலர் யூகித்து வந்த நிலையில் இந்த உத்தரவானது வந்துள்ளது. இந்த உத்தரவிற்கு பிறகு பப்ஜி செயலி இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் உடைய ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த உத்தரவிற்கு அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டு இருந்த பலர் தங்களது எதிர் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்தனர். சரி பப்ஜி என்றால் என்ன வென்று பார்த்தால் அது ஒரு FIRST PERSON SHOOTING GAME வகையை சார்ந்ததுதான். ஆனால் அதில் பேட்டில் ராயல் என்னும் விளையாடும் முறையில் உங்களுடன் விளையாடும் நபர்களுடன் பேசிகொண்டே விளையாட முடியும், மற்றும் ஜெயித்தால் சிக்கன் டின்னர் என்று அதை கூறுவர், இது போன்ற சிறுசிறு விஷயங்களும், நல்ல அணிமேஷநும் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கையை 5 கோடி ஆக்கியது. ஆனால் இந்த கேம் முதலில் கணினியில் விளையடும் வகையில் தான் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பிற்கு பிறகு 2018 மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது இருப்பினும் கேமின் செயலி மீது பலரும் குற்றம்சாட்டி வந்தனர். அதாவது இந்த செயலி வன்முறையை தூண்டுவது போல் இருக்கிறது என்றும் இதை விளையாடி பல மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் மேலும் சிலர் அதில் வரும் கேரக்டருக்காக அந்த கேமின் IN APP PURCHASE என்று கூறப்படும் முறை மூலம் விதவிதமான ஆடைகளை, துப்பாக்கிகள், தொப்பிகள், போன்ற சிறு சிறு விஷயங்களுக்காக பெருமளவில் பணம் செலவு செய்து விணாக்குகின்றனர் என்னும் குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. ஆனால் பப்ஜி விளையாடுபவர்கள் இவர்கள் கூறும் அனைத்தும் இதைப் போன்று இருக்கும் பல விளையாட்டுகளுக்கு பொருந்தும் என்றும், பப்ஜி அனைவராலும் விளையாட படுவதால் அனைவரின் கண்களும் அதன்மீது மட்டுமே படுகின்றன என்றும் கூறுகின்றன. ஆனால் இப்போது வந்த தடையோ இந்தக் காரணங்களுக்காக வந்த தடையல்ல.

பப்ஜி சீன நிறுவனத்துடைய கேம் என்றும் எனவே டிக் டாக் போல சீன அரசின் விதியான சீனாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் அவர்களின் நிறுவனத்தின் தகவல்களை அரசு மேற்பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனப்படும் விதிக்கு உட்பட்டவை தான். எனவே இந்திய பயனாளர்களின் தகவல்கள் மற்றும் மொபைல் போனில் இருக்கும் தகவல்களையும் திருடி சீன அரசுக்கு கொடுக்கும் ஆபத்து உள்ளது என்றும் மற்றும் உளவு பார்க்கவும் பல்வேறு விதங்களில் சீனாவிற்கு இது பயன்படும் எனவே, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து உள்ளதாக கூறி தடை செய்தது.

மற்றும் பலர் இந்தியா மற்றும் சீனாவிற்கும் இடையில் எல்லையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்தியா கொடுக்க நினைக்கும் பொருளாதார நெருக்கடி என்றும் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் டிக் டாக்கை போல பப்ஜியும் முழுக்க முழுக்க சீன தயாரிப்பபோ சீனா நிறுவனமோ அல்ல.

பப்ஜி முதலில் கணினியில் 2017 ஆம் ஆண்டு வெளியிிட்டது BLUEHOLE என்னும் ஒரு தென்கொரிய நிறுவனம் பிறகு அதனுடைய மொபைல் செயலியை 2018 இல் வெளியிடும் பொழுது சீன நிறுவனமான TENCENT இடம் லைசன்ஸ் அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டது.

அதாவது பப்ஜி கேம் தென்கொரிய நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அறிவு சார் பொருள். ஆனால் அதை எளிய முறையில் கூற வேண்டுமென்றால் ஒரு FEANCHISING முறை போல் லைசன்ஸிங அக்ரிமெண்ட் மட்டுமே

சீன நிறுவனத்துடன் போட்டுக்கொண்டு பப்ஜி கார்ப்பரேஷனில் ஒரு 10% பங்குகளையும் அதனிடம் கொடுத்து ஒரு பார்ட்னர் போல் சேர்த்துக்கொண்டது.

இதனால் அந்த சீன நிறுவனத்திடம் பயனாளர்களின் தகவல்கள் போகும் வழி ஏற்பட்டது. எனவே இந்திய அரசு பப்ஜி மொபைல் செயலியை தடை செய்வதாக தற்போது ஆணை வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்தத் தடை பப்ஜியை கணினியிலோ PLAYSTATION இலோ விளையாட அல்லது பதிவிறக்கம் செய்ய இந்த தடைபொருந்தாது.

ஏனென்றால் பப்ஜி கணினி கேம் முழுக்க முழுக்க தென்கொரிய நிறுவனமான BLUEHOLEக்கு சொந்தமானது. அதைப்போல் அந்த தடை வந்து இரண்டு நாட்களுக்குள் பப்ஜி மொபைல் செயலி ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டது,

இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு பப்ஜி விளையாடுபவர்கள் இடமிருந்து சமூக வலைத்தளங்களான ட்விட்டர் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மற்றும் சிலர் இந்தத் தடையானது தற்பொழுது நீடித்து வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொரோனா பிரச்சனைகளிலிருந்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப அரசு செய்யும் விஷயங்களுள் ஒன்றுதான் இது என்று கூறினர்.

ஆனால் இவை எவற்றுக்கும் பப்ஜி நிறுவனம் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. ஆனால் பப்ஜி நிறுவனம் இந்த தடை வந்ததால் சீன நிறுவனமான TENCENTட்டை நீக்கிவிட்டு இந்திய நிறுவனம் ஒன்றுடன் பார்ட்னர்ஷிப் வைத்து இந்தியாவில் மீண்டும் பப்ஜியை கொண்டு வந்துவிடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையதளங்களில் பரவி வந்தது.

இதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால் இந்தியாவில் 5 கோடி பேருக்கு மேல் பப்ஜி விளையடுகின்றனர். இது கிட்டத்தட்ட 25%. எனவே அவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய சந்தையை விட்டு விட்டு போய்விட மாட்டார்கள் என்றும் சீன நிறுவனமான TENCENT உடனான உறவை முறிக்க நேரிடும் என்றும் பலர் அவர்களுடைய எதிர்பார்ப்பை கூரிவந்தனர்.

இறுதியில் தற்போது தடைக்கு பின் கிட்டத்தட்ட

ஒரு வாரம் கழித்து செப்டம்பர் 8ஆம் தேதிதான் பப்ஜி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் எதிர்பார்த்தது போலவே பப்ஜி நிறுவனம் என்ன கூறியது என்றால் பப்ஜி கார்ப்பரேஷன் இந்திய அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு பப்ஜி செயலியை இயக்க நினைக்கின்றது என்றும், இந்தியாவில் பப்ஜி கார்ப்பரேஷன் மற்றும் BLUEHOLE நிறுவனம் சீன நிறுவனமான TENCENTனுடன் இந்தியா வில் தனது உறவுகளை முறித்துக் கொண்டது என்றும் அறிவித்து உள்ளது. மற்றும் அதற்கு பதிலாக வேறு இந்திய நிறுவனத்துடன் கைகோர்க்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த செய்தியால் பப்ஜி விளையாடுபவர்கள் கூடிய விரைவில் பப்ஜி தடை நீங்கும் என்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதைப்போலவே பப்ஜி தடை செய்த பொழுது ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டன. ஆனால் அதன் இந்திய சர்வர்கள் தடை செய்த பின்னரும் தற்பொழுது வரை செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன அதை விளையாடுபவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் OFFICIAL UPDATEகள் எதுவும் பண்ண முடியாது ஆனால் விளையாட முடியும். ஆனால் மறுமுனையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட டிக் டாக் ஆப், ஆப் ஸ்டோர்களில் இருந்து மருனாளே நீக்கப்பட்டது மற்றும் அந்த செயலியை அடுத்த நாள் ஓப்பன் செய்து எவரும் பயன்படுத்த முடியாதது போல் இந்தியாவில் BLOCK செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

தற்போது ஏராளமான இயந்திரகற்றலிற்கான நூலகங்கள் நாம் பயன்படுத்த தயாராக உள்ளன அவைகளுள் அப்பாச்சி மஹூட்ஆனது மிகப்பிரபலமானதாகும் ஏனெனில் மற்ற அனைத்தும் ஆய்வு சார்பாகமட்டுமே உள்ளன இந்தApache Mahout ஆனது ஆய்விற்கு மட்டுமல்லாது பயன்பாட்டிற்கும் ஏற்றதாகவிளங்குகின்றது மற்றவைகளில்ஆவணங்களும் எடுத்துகாட்டுகளும் அரிதாக கிடைக்கின்றன ஆனால் Apache Mahout இல் ஆவணங்களும் எடுத்துகாட்டுகளும் ஏராளமாக கிடைக்கின்றன. மற்றவைகளை-விட அதிக விரிவாக்கத்-தன்மை கொண்டது.முன்கூட்டியே வகைபடுத்தப்பட்டது நாம் கோரியாவாறு வகைபடுத்தி வடிகட்டுகின்றது k-meansபோன்ற ஒரேதன்மை கொண்ட தொகுதியாக செய்திடுகின்றது

இது ஹடூப்புடன் மிகவலுவாக கட்டப்பட்டு செயல்படுகின்றது பயனாளர்கள் அதிக அளவிலான தகவல்களைகொண்டு இதனை பயன்படுத்திகொள்ள இது எப்போதும் தயாராக இருக்கின்றது வெக்டார் மேட்ரிக்ஸ் நூலகங்களுடன் உள்ளிணைந்தே கிடைக்கின்றது ஏராளமான தன்னார்வாளர்கள் இதனை செயல்படுத்திடும்போது ஏற்படும் சந்தேகங்களை தீர்வுசெய்து சுமுகமாக செயல்படுவதற்காக உதவதயாராக இருக்கின்றனர் ஃபேஸ்புக், ட்விட்டர் லிங்காடின் போன்ற மிகப்பெரியஜாம்பவான்களான சமூதாய வலைபின்னல்-களி்ன் பின்புல சேவையாக இதனை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மேலும் விவரங்களுக்கு https://mahout.apache.org/என்ற இணைய பக்கத்திற்கு சென்றறி்ந்து கொள்க

முதுமுனைவர்.ச.குப்பன்

Editor's Choice

வருங்காலத்தில் நாம் ஏதேனும் மிகப்பெரிய உணவகங்களுக்கு காலைச் சிற்றுண்டிக்காக சென்றால் நமக்கு எந்தமாதிரியான இலை போடுவது எவ்வாறான தண்ணீர் எவ்வாறான பாத்திரத்தில் வைப்பது என்னென்ன சிற்றுண்டிகள் நமக்கு பரிமாாறுவது ஆகிய அனைத்தும் நாம் கேட்காமலேயே நாம் விரும்புவதை தானாகவே பரிமாறும் காலம் வரவிருகி்ன்றது அவ்வாறான தானியங்கியான செயல் அனைத்தும் செயற்கை நுண்ணறிவான இயந்திர கற்றலின் வாயிலாக செயல்பட-விருக்கின்றன தற்போதே நம்முடைய மகிழ்வுந்தில்நாம் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தானியங்கியாக மகிழ்வுந்தின் கதவினை திறத்தல் மூடுதல் போன்ற பணிகள் இந்த இயந்திர கற்றலின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன கூகுளின் ஓகேகூகுள் , ஆப்பிலின் ஸிரி, அமோஸானின எகோ ஆகியவை இவ்வாறான செயற்கை நுண்ணறிவான இயந்திர கற்றலின் வாயிலான நடைபெறும் செயலிற்கான எடுத்துகாட்டுகளாகும் இவ்வாறான செயற்கை நுண்ணறிவின் இயந்திர கற்றலின் அடிப்படையிலான கட்டற்ற கருவிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன அவைகளை பற்றிய ஒரு பறவைபார்வை பின்வருமாறு

1.ApacheMahout என்பது பொதுவான கணிதம், இயல்கணிதம் ,புள்ளியியல் ஆகியவற்றின் கணிக்குகளை எளிதாக தீர்வுசெய்வதற்கான ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இயந்திர கற்றலின்அடிப்படையில் பெரியளஅளவு தரவில் எழும் சிக்கலான பிரச்சினைகளை விரைவாக எளிதாக தீர்வுசெய்வதற்காக அப்பாச்சி அனுமதியின் அடிப்படையல் அப்பாச்சி மென்பொருள் நிறுவனத்தால் வெளியிடப்-பட்டதாகும் இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://mahout.apache.org/ எனும் இணைய தளத்திற்கு செல்க

2.H2O என்பது H2o.aiஎன்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட மேககணினி சூழலில் தரவுதொகுதிகளை ஆய்வுசெய்யப்பயன்படும் மற்றொருஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இயந்திர கற்றல் கருவியாகும் இது தரவுகளில் ஆழ்ந்த கற்றலிற்கும் முன்மாதிரி ஆய்விற்கும் உடல்நல பாதுகாப்பிற்கும் மோசடிகளை ஆய்வுசெய்து உண்மை கண்டறியவும் பெரும்பாலாக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இது ஆர், பைத்தான், ஜாவா ஆகிய கணினிமொழிகளின் வாயிலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://www.h2o.ai/ எனும் இணைய தளத்திற்கு செல்க

3.TensorFlow இது கூகுள் நிறுவனத்தின்கூகுள்ப்ரெயினால் உருவாக்கப்பட்ட துவக்கத்தில் ஜிமெயில், கூகுளின் போட்டோ கூகுளின் தேடுபொறி ஆகிய பணிகளை சிறப்பாக செயல்படுவதற்கு உதவிடுவதற்கான ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவிபயன்படுத்தி கொள்ளப்பட்டது இது நிரலாளர்களுக்கு எண்களின் கணித செயலிற்காக பயன்படுத்திகொள்ளப்படுகின்றது பல்வேறு தளங்களிலும் கணினி மடிக்கணினி கைபேசி ஆகிய அனைத்திலும் செயல்படுத்தி பயன்பெறமுடியும் ஆய்வாளர்களின் ஆய்விற்கான எண்களின் கணக்கீட்டு செயல்களுக்கு பேருதவியாய் இது இருக்கின்றது Tpu,CPU, GPUஆகிய எதிலும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் அப்பாச்சி2 அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://www.tensorflow.org/ எனும் இணைய தளத்திற்கு செல்க

4.Caffe பெர்க்ளி மையத்தால் வெளியிடபட்டதொரு செயற்கை நுண்ணறிவான இயந்திர கற்றலின் கட்டற்ற கருவியாகும் இது BSD2 அனுமதியின் அடிப்படையில் வெளியிபட்டுள்ளது இதனை பல்லூடகம்(Multi media) ,காட்சிஊடகம் (vision domains) ஆகியவற்றின் பேரளவு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது CPU, GPUஆகிய எதிலும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் இது ஆழ்ந்த கற்றலிற்கு அடிப்படையாகவும் மில்லியன் கணக்கான உருவப்படங்களை ஆய்ந்தறியவும் பயன்படுகின்றது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://caffe.berkeleyvision..org/ எனும் இணைய தளத்திற்கு செல்க

5.Oryx2 இதனை ஸ்பார்க அப்பாச்சி காஃப்கா வெளியிட்டுள்ளதொருசெயற்கை நுண்ணறிவான இயந்திர கற்றலின் கட்டற்ற கருவியாகும் இதுபேரளவு நிலையில் இயந்திரகற்றலைநேரடியாக கற்க அனுமதிக்கின்றது இது செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்களுக்கு புதிய பயன்பாடுகளை உருவாக்கிடவும் அதனை வகைபடுத்திடவும் ஒன்றாகசேர்த்திடவும் பயன்படுகின்றது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://oryx.io/ எனும் இணைய தளத்திற்கு செல்க

முதுமுனைவர்.ச.குப்பன்

Editor's Choice

நம்முடைய பிள்ளைகளை கண்காணிப்பதற்காக ஒரு தனியார் புலனாய்வாளரை நியமிக்கும் தேவையெல்லாம் தற்போது முடிந்துவிட்டன. அவ்வாறான செயல் அதிக செலவுபிடிக்ககூடியது மட்டுமல்லாமல், மிகவும் சிக்கலானதாகும். காலங்கள் மாறிவிட்டன. இப்போது, நம்முடையபிள்ளைகளின் கைபேசிகளில் எந்தவொரு மென்பொருளையும் நிறுவுகைசெய்திடாமலேயே எளிதாக கண்காணிக்க முடியும் இந்த கட்டுரையில், பிள்ளைகளின் கைபேசியை கண்காணிப்ப்பதற்கான பத்துஉறுதியான வழிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்

ClickFree :இது தற்போதைய சந்தையில்உள்ள சிறந்த கைபேசிகண்காணிப்பு பயன்பாடுகளில் ஒன்றாகும். உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது, இது Times and Forbes போன்ற மிகப்பெரிய ஊடகங்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரபலத்தின் காரணம் என்னவென்றால், கைபேசியில் கண்காணிப்பதைப் பொறுத்தவரை,இது உரை செய்திகளை நிகழ்நேரத்தில் படிப்பது, இருப்பிடத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் செய்ய முடியும்.இதனைப் பயன்படுத்துவதில் சிறந்த பகுதி என்னவென்றால், மற்ற பயன்பாடுகளைப் போலல்லாமல், அணுகலைப் பெறநாம் Jailbreak அல்லது கைபேசியை வேரூன்றி பார்த்திட வேண்டியதில்லை.

Spyic:இதுகைபேசிகளை கண்காணிக்க பயன்படுத்தக்கூடிய மற்றொரு பிரபலமான பயன்பாடாகும். இது சக்திவாய்ந்த வசதிகள், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் குளிர் வலை இடைமுகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இணைய அடிப்படையிலான சேவை என்பதால், பிள்ளைகளின் சாதனத்தில் எந்த பயன்பாட்டையும் நிறுவ வேண்டியதில்லை. கணினி அல்லது கைபேசியிலிருந்து நாம் கண்காணிக்க முடியும் என்பதால், பயன்பாட்டின் பெயர்வுத்திறன் அதிகரித்துள்ளது. மேலும், இந்த பயன்பாடு மிகவும் பாதுகாப்பானது. நாம் ஐபோனில் எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை என்பதால், கைபேசியின் பாதுகாப்பை நாம் ஆபத்தில் வைக்க வேண்டியதில்லை.ஆயினும்ஆண்ட்ராய்டில் இந்த பயன்பாட்டை நிறுவ வேண்டும். இருப்பினும், பயன்பாடு வெறும் 2 எம்பி அளவு மட்டுமேயாகும் , ஆயினும் இந்த பயன்பாட்டினை நிறுவுகைசெய்தவுடன் நிறுவப்பட்ட பயன்பாட்டின் பட்டியல் மற்றும் பயன்பாட்டு பட்டியிலிருந்து உருவப்பொத்தான் மறைந்துவிடும்.

Spyier: இந்த பயன்பாட்டின் மூலம், பிள்ளைகளின் கைபேசியை உண்மையில் தொடாமல் கண்காணிக்க முடியும். இது ஒரு அற்புதமான மென்பொருள் தீர்வாகும், இது கைபேசியின் கண்காணி்ப்பு முழுவதையும் எளிதாக்குகிறது. சக்திவாய்ந்த வசதிகளின் வரிசையுடன், இலக்கு கைபேசியில் நாம் அனைத்தையும் அணுக முடியும். மேலும், இது நீக்கப்பட்ட செய்திகளை கூட மீட்டெடுக்கும்வசதிகொண்டது. எனவே, பயன்பாட்டில் எதுவும் மறைக்கப்படாது. வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பார்ப்பதைத் தவிர, அழைப்பு பதிவுகள், பல்லூடக கோப்புகள், இணையஉலாவலின் வரலாறு, இருப்பிடம் மற்றும் காலண்டர் நிகழ்வுகளையும் நாம் சரிபார்க்க முடியும்.

Minspy:இதுகைபேசிகளில்கண்காணிக்க பயன்படுத்தக்கூடிய மற்றொரு பயன்பாடாகும். இது மிககுறுகிய காலத்தில், சிறந்த கைபேசி கண்காணிப்புபயன்பாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது. இது ஒரு மலிவு விலையில் வழங்கும் பரந்த அளவிலான வசதிகளை கொண்டுள்ளது.இந்த பயன்பாட்டின் மூலம், பிள்ளைகளின் சாதனத்தில் நமக்கு எதுவும் மறைக்கப்படாது. எனவே, சிறந்த உரை கண்காணிப்பு பயன்பாட்டு அனுபவத்தைப் பெற விரும்பினால், இதுநம்முடைய செல்லகண்காணிப்பு பயன்பாடாக விளங்குகின்றது.iOS சாதனத்தில் பயன் பாட்டைப் பதிவிறக்க வேண்டியதில்லை. ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு, அதை சில நொடிகளில் பதிவிறக்கம் செய்து மறைத்துவிடலாம்.

Spyine:இது ஆண்ட்ராய்டு , iOS கைபேசிகளில் கண்காணிக்க அனுமதிக்கும் ஒரு மென்பொருளாகும். இந்த பயன்பாட்டின் மூலம்,பிள்ளைகளின் இணையஉலாவி வரலாற்றுடன் முழுமையான பார்வையைப் பெறமுடியும். ஒருசில, எளிய சொடுக்குதல்கள் மூலம், பிள்ளைகளின் கைபேசியின் செய்திகளைப் படிக்கவும், அழைப்பு பதிவுகளை சரிபார்க்கவும் மற்றும் பலவற்றை செய்ய முடியும். இது பெற்றோர் களுக்காக உருவாக்கப்பட்ட கைபேசி பயன்பாடாகும்,இதனால் பெற்றோர்கள் தங்களுடையகுழந்தைகளின் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். இந்த சேவைகள் அனைத்தையும் மலிவு விலையில் நேர்த்தியாக வழங்கப்படுகின்றது.

Neatspy:இதன் மூலம்,நம்முடைய குழந்தைகளின் கைபேசியை எளிதாக கண்காணிக்க முடியும். இந்த பயன்பாட்டின்வாயிலாக நம்முடைய குழந்தைகளின் கைபேசியில் செய்திகள், அழைப்புகள் , பயன்பாடுகளைப் பார்க்க நம்மை அனுமதிக்கிறது. நாம் அவர்களின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்காணிக்கலாம் மற்றும் செல்ல முடியாத மண்டலங்களை உருவாக்க Geofencing ஐப் பயன் படுத்தலாம்.இந்த பயன்பாட்டில் இன்னும் பல வசதிகள் உள்ளன. இது சேமித்த தொடர்புக்குள் பதுங்குவதற்கும் நம்முடைய சந்தேகத்திற்குரியதாக இருப்பதைக் குறிக்கவும்நம்மை அனுமதிக்கிறது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள், அவற்றின் அழைப்பு காலம், கைபேசி எண்கள் மற்றும் நேர முத்திரைகள் ஆகியவற்றை நாம் சரிபார்க்கலாம். 100% கண்ணுக்கு தெரியாமல் நம்முடைய பிள்ளைகளின் கைபேசிகளை எப்போதும் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.

Auto Forward:பயன்பாடுகளை கண்காணிக்கும்போது, குறைந்தபட்ச மேற்பார்வை தேவைப்படும் ஒன்றை நாம் விரும்புகின்றோமெனில். இதன் மூலம், பயன்பாட்டை அமைப்பதற்கும் அதை உள்ளமைப்பதற்கும் பிள்ளைகளிடமிருந்து குறைந்தபட்ச குறுக்கீடு உள்ளது.இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தானியங்கி அமைவு வசதி உறுதி செய்கிறது.நாம் செய்ய வேண்டிய ஒரே செயல், அதை பிள்ளைகளின் சாதனத்துடன் இணைப்பது மற்றும் மீதமுள்ளவற்றை இது கவணித்துகொள்ளும்.

Phonespector:இது Auto Forwardஇற்கு ஒத்ததாக செயல்படுகின்ற ஒரு கைபேசி கண்காணிப்புபயன்பாடு ஆகும், இது பிள்ளைகளின் கைபேசிகளில் தானாக அமைக்கப்படும்.ஆண்ட்ராய்டு கைபேசியைப் பொறுத்தவரை, நாம் செய்ய வேண்டியது கைபேசியில் ஒரு முறை அணுகலை வழங்குவதாகும். IOS தொலைபேசிகளைப் பொறுத்தவரை, நாம் பிள்ளைகளின் கைபேசியைப் பெற வேண்டியதில்லை .இருப்பினும், பயன்பாடு நேரடி மாதிரிசெயலை வழங்காது. எனவே, அதை வாங்குவதற்கு முன் அதை முயற்சிக்க நம்மை அனுமதிக்கின்றது.

Phonesheriff: இது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கைபேசிகளை சரிபார்க்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு நல்ல பயன்பாடாகும். இது பிளாக்பெர்ரி அல்லது iOS கைபேசிகளுடன் பொருந்தாது ஆண்ட்ராய்டுகளில் மட்டும் செயல்படுகின்றது. இந்த பயன்பாட்டின் மூலம், நாம் உரைகளைப் படிக்கவும், அவற்றின் உலாவல் வரலாற்றைக் கண்காணிக்கவும், பயன்பாட்டுக் கட்டுப்பாட்டைப் பெறவும் முடியும். இது விலைமலிவானது. மேலும், இதைப் பயன்படுத்த நாம் திட்டமிட்டால், அதைப் பற்றி நம்முடைய குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். இந்த பயன்பாடு மறைக்கப்படாது என்பதே இதற்குக் காரணம்.

Spytomobile: கைபேசி கண்காணிப்பின் ஆடம்பரமான வார்த்தையான ‘தரவு திரட்டு’ என அறியப்டுகிறது. இதன் மூலம், நம்முடைய குழந்தைகளின் தரவுகளை அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கைபேசியிலிருந்து பெற முடியும். இது செய்தி கண்காணிப்பு, அழைப்பு கட்டுபாட்டாளர், இருப்பிட கட்டுபாட்டாளர் மற்றும் தொடர்புகளுக்கான அணுகலை வழங்குகிறது.இது தினசரி கட்டணத்தின் அடிப்படையில் கிடைக்கின்றது. எனவே, நாம் நீண்ட காலத்திற்கு இந்த பயன்பாட்டைப் பயன்படுத்த விரும்பினால், அது விலை உயர்ந்ததாக இருக்கும். இருப்பினும், நம்முடைய குழந்தைகளின் கைபேசியை ஒரு முறை மட்டுமே அணுக விரும்பினால், இந்த பயன்பாடு சரியானது.

மென்பொருள் எதையும் நிறுவுகைசெய்திடாமல் கைபேசியில் கிடைக்கக்கூடிய பிள்ளைகளை கண்காணிப்பதற்கான சிறந்த பயன்பாடுகளை இப்போது நாம் அறிந்துகொண்டோம். மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு பயன்பாட்டையும் பயன்படுத்துவது மலிவு விலையில் பல வசதிகளை நமக்கு வழங்கும். மேலும், இது நம்மையும் நம்முடைய அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்!

முதுமுனைவர்.ச.குப்பன்

Editor's Choice

Google வரைபடத்துடன் நாம் சென்ற அல்லது செல்ல விரும்பும் இடங்களை நினைவில் வைத்துகொள்வது மிகவும் எளிதானதாக இருக்கும். வழிசெலுத்தல் , வரைபட சேவைகளுக்கு வரும்போது, கூகிள் வரைபடம் போலவே செய்யக்கூடிய ஒன்றைக் கண்டு பிடிப்பதில் நமக்கு சிரமமாக இருக்கும். ஏற்கனவே இருந்ததைப் போலவே, கூகிள் அதை புதிய வசதிகளுடன் இன்னும் பயனுள்ளதாக தொடர்ந்து புதுப்பித்து வருகிறது,

Savedஎனும் தாவலில் மேம்பாடுகளை வெளியிடுவதாக கூகிள் திறவுசொற்களில் அறிவித்தது, இதுநாம் சென்றிருந்த இடங்களை கண்காணிக்க வும் அல்லது விரும்பிடும்போது பார்வையிடவும் எளிதாக்குகிறது.

ஒட்டுமொத்தமாக, புதிய Savedஎனும்தாவல் முக்கிய இடங்களை நினைவில் வைத்திருப்பதை எளிதாக்குகிறது. இது கூகிள் வரைபடத்தின் தற்போதைய பகுதியை எடுத்து, பயனாளர் இடைமுகத்தினை(UI) சுத்தமாகவும் நட்பாகவும் மாற்றுவதற்கு மாற்றியமைக்கிறது.

நாம் சமீபத்தில் சேமித்த இடங்கள் மேலே உள்ள ஒரு பகுதிக்கு நகர்த்தப்படுகின்றன. அதனால் இப்போது நாம் சாப்பிட ஒரு இடத்தைத் தேடிடும்போது, Savedஎனும் தாவலின் மேலே அது விரைவாக அணுகமுடியும்.

நம்முடைய புதிய இருப்பிடத்திற்கு அருகில் நாம் சேமித்த இடங்களை மற்றொரு புதிய வசதி காட்டுகிறது.

வெளிப்படையாக, இது இப்போது நமக்கு பொருத்தமான இடங்களை வெளிப்படுத்துகிறது. நாம் எந்த இடத்தில் தற்போது நாம் இருந்தாலும் நம்முடைய தெருவில் உள்ள ஒரு கடையை எளிதாக சென்றடைவதை போன்று நாம் விரும்பும் பகுதியை இந்த புதிய வசதியின் வாயிலாக எளிதாக தேடிபிடித்திட முடியும்

Savedஎனும் தாவலுக்கு செல்லும் இறுதி புதிய வசதிநாம் பார்வையிட்ட இடங்களின் பட்டியல் (நம்மிடம் இருப்பிட வரலாறு இயக்கப்பட்டிருப்பதாகக் கருதி). நாம் எப்போதாவது ஒரு நகரத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அதன் பெயரை நம்முடைய நாவின் நுனியில் வைத்திருந்தால், இந்த வசதி நாம் இருந்த இடங்களைக் காண்பிக்கும் மேலும் நம்முடைய நினைவகத்தைப் புதுப்பிக்க உதவும்.

கூகிள் வரைபடத்திற்கான புதுப்பித்திலில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது, எனவே நம்முடைய சாதனத்திற்கான புதுப்பிப்பை நாம் பதிவிறக்கம் செய்து விரைவில் அதை அணுக முடியும். புதிய பதிப்பை நாம் இன்னும் காணவில்லை என்றால், பொறுமையாக இருங்கள், அது விரைவில் வந்துசேரும்.

பெரும்பாலான பயனாளர்கள் இப்போது Android இல் கிடைப்பதை உறுதிசெய்துள்ளார்கள், ஆனால் iOS புதுப்பிப்பைப் பெறுவது சற்று மெதுவாகத் தான்தெரிகின்றது.

பக்கம் 63 / 74