Editor's Choice

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், தற்போது பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனம்புரம் பஞ்சாயத்தில், ஆனந்தவள்ளி என்பவர் பகுதிநேர துப்புரவு பணியாளராக வேலை பார்த்தார். பட்டியலினத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 10 ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்துள்ளார்.  சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆனந்தவள்ளி, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

10 ஆண்டுகளாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தூசித்தட்டி, துப்புரவு வேலை செய்து அதே அலுவலகத்தில்  தலைவராக பொறுப்பேற்று நாற்காலியில் அமரும்போது, அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

Editor's Choice

தனிநபர்கள், தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அதை, 2021, ஜனவரி 10 தேதி வரை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2019-20ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, தனிநபர்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, ஜூலை, 31ம் தேதியாகும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் மக்களால் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலையில் , கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, கடைசி நாள், நவம்பர், 30 என அறிவித்தது. பின், இந்த அவகாசமும் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர், 31ம் தேதி என அறிவிக்கப்பட்டது.

இந்த அவகாசம் முடிவடைய உ்ள்ள நிலையில், தனி நபர்கள், 2021, ஜனவரி, 10ம் தேதி வரை, தங்களுடைய கணக்கை தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இது, மூன்றாவது நீட்டிப்பாகும்.
அதே நேரத்தில், கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய, அல்லது சர்வதேச நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பிற வரி செலுத்துவோர்களுக்கு, வருமான வரி கணக்கை தாக்க செய்ய, பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்களுக்கும், பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரி தணிக்கை அறிக்கையை வழங்குவதற்கான கால அவகாசமும் டிச. 31- ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

ஒவ்வொரு ஆண்டும் கடந்து போய்க்கொண்டே தான் இருக்கிறது. இந்த 2020ம் ஆண்டு ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. காரணம் கொரோனா எனும் கொடிய நோய் உலகை நிலைகுலைய செய்துவிட்டது.

இதனால் 2020க்கு மக்கள் குட்பை சொல்லியும், புத்தாண்டு நல்லதாக அமைய வேண்டும் என 2021-ஐ வரவேற்றும் மக்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டுவிட்டரில் இந்த விஷயம் தான் டிரெண்டிங்கில் உள்ளது. பெரும்பாலும் #GoodBye2020, #lastdayof2020, #HappyNewYear2021, #Happy2021, #Year2020 ஆகியவை தான் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின்றன.

2020ம் ஆண்டு தங்களுக்கு எப்படி இருந்தது என்பதை கருத்துக்காக பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 2020, கொரோனா பாதிப்பு ஆண்டாகத்தான் அமைந்தது. அதனால் அது தொடர்பான விஷயங்கள் தான் டுவிட்டரில் பலரும் கருத்தாக பதிவிட்டு வருகின்றனர். என்னதான் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டாலும், அதேசமயம் ஊரடங்கால் குடும்பத்தினர் உடன் பலரும் நேரத்தை செலவிட முடிந்தது. அந்த சின்ன சந்தோஷத்தையும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் 2020ல் தாங்கள் சாதித்த விஷயத்தையும், சறுக்கிய விஷயத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

கொரோனாவையும் தாண்டி புயல் உள்ளிட்ட பல இன்னல்களும் இந்தாண்டில் கடந்து போனது. இத்தனை இடர்கள், துன்பங்கள் கடந்து சென்றாலும் மக்களின் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. தங்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வரும், சோகங்கள் நீங்கி சுகங்கள் பெருகும், வரும் ஆண்டாக நல்லதொரு ஆண்டாக அமையும் என நம்புகின்றனர். கொரோனா எனும் கொடிய அரக்கன் நம்மை விட்டு நீங்குவான் என்ற நம்பிக்கையோடு 2021 புதிய ஆண்டை வரவேற்போம்.

Editor's Choice

நாட்டின் எந்த மூலையிலிருந்தும் நீங்கள் ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறையான Paytm மற்றும் Google Pay உடன் பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த புத்தாண்டுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்பு பரிசை உங்களுக்கு வழங்கப் போகிறது, இதன் மூலம் உங்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல் மற்றும் பணம் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கு ஆதார் எண் மட்டுமே தேவைப்படும். இதற்காக, RBI உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் சிறந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. சமீபத்திய ரிசர்வ் வங்கி விதிப்படி, நாட்டின் எந்த மூலையிலிருந்தும் நீங்கள் ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறையான Paytm மற்றும் Google Pay உடன் பரிவர்த்தனை செய்யலாம்.

சில்லறை கட்டண முறையை தேசிய அளவில் இயக்குவதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன் மூலம், நிறுவனங்கள் தங்கள் சொந்த பெயரில் சில்லறை சந்தையில் பல்வேறு அமைப்புகளை நிறுவவும், நிர்வகிக்கவும், இயக்கவும் முடியும். அத்தகைய நிறுவனம் சில்லறை கட்டணம், ஷாப்பிங்கிற்கான ATM, சில்லறை விற்பனை புள்ளிகள், ஆதார்  அடிப்படையிலான கட்டண முறை, பாதுகாப்பான கட்டண நுழைவாயில் உள்ளிட்ட அனைத்து முக்கிய விஷயங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

 

Editor's Choice

நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என அறிவித்த நிலையில், அவரது கட்சி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியனும் அரசியலை விட்டு போவதாகவும், மீண்டும் வரமாட்டேன் எனவும் அறிவித்துள்ளார்.

வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், அக்கட்சிக்கு மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார்.  ரஜினி தனது நிலைப்பாட்டை மாற்றி 'இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை' என நேற்று திடீரென அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தமிழருவி மணியனும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 50 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. 2 திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல், ஊழல் மலிந்த சாக்கடையாக சரிந்துவிட்டது. மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றது தான் நான் செய்த ஒரே குற்றம்.

மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். திமுக.,வில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். ஆனால் நான் போகிறேன்; வரமாட்டேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

பொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டரின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!

பாடிபில்டர் டோலோச்சோ தனது வாழ்க்கையை செக்ஸ் பொம்மை மார்கோவுடன் தொடங்க அதை திருமணம் செய்துள்ளார். 'காதலுக்கு கண் இல்லை', 'காதல் கண்ணை மறைக்கும்', 'காதல் வயது வித்தியாசத்தைப் பார்க்காது', 'காதலுக்கு ஜாதி, மதம் கிடையாது' என்றெல்லாம் பல ஏக வசனங்கள் காதலைப்பற்றி காதலர்கள் பேசுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற பாடிபில்டர் இந்த ஆண்டு அதை நிரூபித்துள்ளார். 

யூரி டோலோச்ச்கோ தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்திய பொம்மையுடன் எட்டு மாதங்கள் டேட்டிங் செய்துள்ளார். கடந்த ஆண்டு அந்த பொம்மையை ப்ரொபோஸ் செய்தாராம். அதன்படி இந்த மாதம் அவர் இறுதியாக அந்த பொம்மையை திருமணமும் செய்திருக்கிறார். இந்தச் செயல் வினோதமான அல்லது வழக்கத்திற்கு மாறானதாக தோன்றலாம். டோலோச்சோ மார்கோ என்ற தனது செக்ஸ் பொம்மையை அவர் மிகவும் நேசிக்கிறார் என்பது தெரிகிறது. 

கஜகஸ்தானைச் சேர்ந்த அந்த பாடிபில்டர் தன் திருமண விழாவின் ஒரு சிறு காணொளிப் பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

பக்கம் 59 / 74