Editor's Choice

பெண்கள் ஆடைக்‍குறைப்பு செய்வதே பாலியல் குற்றங்களுக்‍குக் முதல் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த கருத்துக்கு அவரது முன்னாள் மனைவிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையில் பாலியல் அத்துமீறல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன் இரண்டு குழந்தைகளுடன் காரில் சென்ற பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது உலகளவில் பேசுபொருளாகியது. ஆண்கள் சபலப்படுவதை தடுக்க பெண்கள் உடல்பாகங்களை மூடி மறைக்கிற விதத்தில் உடை அணிய வேண்டும். பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு பெண்கள் குறைவான ஆடைகள் அணிந்து உடல் அழகை வெளிக்காட்டுவதே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒரு பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இம்ரான்கான் பாலியல் பலாத்கார மன்னிப்பாளராக உள்ளார் என பாலியல் சர்ச்சை கருத்துக்கு உலகளாவிய மகளிர் உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது முன்னாள் மனைவிகளும் இம்ரான்கானின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குற்றங்களில் ஈடுபடும் ஆண்களே குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என பிரிட்டனில் வசிக்கும் அவரது முன்னாள் மனைவிகள் ஜெனிமா கான் மற்றும் ரேஹம் கான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Editor's Choice

அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், போதை தலைகேறி என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்வது, பல,சமயங்களில் ஆபத்தாகி விடுகிறது.

அது தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு பெண் தனது சில நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கிறார். வீடியோவின் ஆரம்பத்தில், எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருக்கிறது, ஆனால்  காட்சி மாறுகின்றன. 

இந்த வீடியோவை டிக்டோக் பயனர் @ autumncathey6  என்பவர் எடுத்துள்ளார். வீடியோவை எடுத்துள்ள நபரும் அவரது சில நண்பர்களும் மது பானங்கள் குடித்த பின் தங்களது நடவடிக்கையில் என்ன மாற்றங்கள் என்பதை விளக்க முயன்றனர். வீடியோவில், மது பானங்களை எடுத்துக் கொண்ட பிறகு, அவர்கள் தாங்கள் எந்த அளவிற்கு குடித்துள்ளோம்,  எங்களின் நிலை என்ன என்பதைக் கூறுவதைக் காணலாம். இந்த வீடியோவை ட்விட்டரில் @fernvndoo என்ற பயனர் 'OH MY GOD' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

எல்லோரும் குடித்துவிட்டு பாரில்  இருந்து வெளியேறும்போது, ​​டிக் டாக் பயனர் தனது தோழர்களில் ஒருவரின் தோளில் சவாரி செய்கிறார், இருவரும் குடிபோதையில் இருக்கிறார்கள். எல்லாம் சரியாக போய் கொண்டிருந்த நேரத்தில், நடந்த விபரீதமான செயல் ஒன்றினால், ஏறிய போதை நொடியில் இறங்கியது. வீடியோவின் கடைசி பகுதி, நண்பரின் தோளில் சவாரி செய்யும் பெண் காரில் அமர்ந்திருப்பதையும், அவளது முன் பற்கள் பலவற்றை காணலாம். சிறுமியின் வாயிலிருந்து ரத்தம் வருவதையும் காணலாம்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Editor's Choice
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல மல்யுத்த சாம்பியன்ஷிப் கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாதி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினார். இறுதிப்போட்டி வரை அவர் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
 
தொடக்க சுற்றில் தென்கொரியாவின் ஜியென் உம்மை வீழ்த்திய அவர் அடுத்த பந்தயத்தில் கஜகஸ்தானின் எம்மா திசினாவையும், அரைஇறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஷோகிடா அக்மெடோவாவையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அரியானாவை சேர்ந்த 19 வயதான அன்ஷூ மாலிக் உலக ஜூனியர் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.
 
இதேபோல் 62 கிலோ பிரிவின் அரைஇறுதியில் 18 வயதான இந்திய வீராங்கனை சோனம் மாலிக் 0-6 என்ற கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து தொடர்ச்சியாக 9 புள்ளிகளை குவித்து கஜகஸ்தான் வீராங்கனை அயாலிம் காசிமோவாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்தார். இதனால் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி மூலம் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (53 கிலோ) தகுதி பெற்று இருந்தார். சோனம் மாலிக் தகுதியின் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கின் ஒலிம்பிக் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
Editor's Choice

ஒருபுறம், சீனா தனது நாட்டில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதாகக் கூறிக் கொண்டிருக்கையில், மறுபுறம் இந்த நாட்டின் பிச்சைக்காரர்கள் நாளுக்கு நாள் நவீனமாகி வருகின்றனர். சீனாவின் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க இ-வாலட்டை பயன்படுத்துகிறார்கள்  என்பதை அறிய ஆச்சரியமாக உள்ளது இல்லையா.  இதற்கு காரணம் சீனாவில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்துகிறார். அதனால், பிச்சைக்காரர்களுக்கு பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. 

சீனாவில் நடந்த டிஜிட்டல் புரட்சி காரணமாக இங்குள்ள பிச்சைக்காரர்களும் நவீனமாகிவிட்டனர். அந்த நாட்டில்  பிச்சைக்காரர்கள் e-wallet பயன்படுத்தி, அதில தொகையை செலுத்துமாறு கோருகின்றனர். இதனால், பணம் இல்லை என யாரும் சாக்கு சொல்ல முடியாது என்பதால் அவர்கள், இந்த டிஜிட்டல் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர்.   சீனாவில் பிச்சைக்காரர்கள் கியூஆர் குறியீடு (QR Code)  கொண்ட ஒரு அட்டையை வைத்துக் கொண்டு நகரத்தின் சுற்றுலா தலங்கள் அல்லது வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் நிற்பதை காணலாம். இதுபோன்ற இடங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வருகிறார்கள். அவர்களிடன் பிச்சை எடுக்க அவர்கள் நவீன முறையை பின்பற்றி வருகிறார்கள்.

 

Editor's Choice

ஐபிஎல் உரிமையாளர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்கள் சார்பாக விளையாடுவதற்கு பெரும் தொகையை செலுத்துகிறார்கள். அதிலும் நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. 

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் பிற நட்சத்திர வீரர்களுக்கு, அவர்கள் விளையாடிட்ய முதல் ஐபிஎல் போட்டியில் எத்தனை சம்பளம் வழங்கப்பட்டது?

1. எம்.எஸ் தோனி :
2008 ஐ.பி.எல். போட்டிகளில் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அந்த சீசனில்  ரூ .6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 14 வது சீசனான தற்போதையை போட்டித் தொடருக்கு கிரிக்கெட் வீரர் தோனிக்கு ரூ .15 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

2. விராட் கோலி  :
ஆர்சிபி (Royal Challengers Bangalore) கேப்டன் விராட் கோலி 2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் அணிக்காக ரூ.12 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, கோஹ்லி மிகவும் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் ஒருவர்.

3. ரோஹித் சர்மா :
ரோஹித் சர்மா 2011 ஆம் ஆண்டில்,  மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். அதற்கு முன், ரோஹித் 2008 ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் ஆணிக்காக விளையாடினார்.  2008 ஆம் ஆண்டில் அவர் பங்கேற்ற  முதல் போட்டிக்கு ரோஹித்திற்கு ரூ.3 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

4. ஏபி டிவில்லியர்ஸ் :
ஐ.பி.எல் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் 100 கோடிக்கு மேல் வாங்கிய ஐந்து வீரர்களில் ஒருவர். 2008 ஆம் ஆண்டில், டெல்லி டேர்டெவில்ஸ், அணிக்காக விளையாடினார். ஐபிஎல் முதல் சீசனில் AB de Villiers மொத்தம் ரூ .1.2 கோடியை சம்பளமாக் பெற்றார்.

5. ஹார்டிக் பாண்ட்யா :
மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா, முதல் போட்டியில் ரூ .10 லட்சம் சம்பளத்தில் அணியில் சேர்ந்தார். பாண்ட்யா தற்போது ரூ .11 கோடி. சம்பாதிக்கிறார்

Editor's Choice

3,000 டன் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானத்தை வட கொரியா முடித்துவிட்டதாக தென் கொரியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, சரியான நேரத்தில் அதைத் இயக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும் தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. 

"2019 ஜூலை மாதத்தில் 3,000 டன் நீர்மூழ்கிக் கப்பல் குறித்து வடகொரியா செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுவிட்டது என தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் நம்புகின்றனர்".

நீரில் மூழ்கக்கூடிய ஏவுகணை சோதனையை, ஒரு புதிய நிலைக்கு நகர்த்தியதாக வட கொரியா கூறியுள்ளது, இது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையாக (submarine-launched ballistic missile (SLBM)) இருக்கலாம் என்று சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இந்த செய்தி உண்மையானதாக இருந்தால், வட கொரியாவின் முதல் உண்மையான பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கும். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற வருடாந்திர ராணுவ அணிவகுப்பில் வடகொரியா அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை ஆயுதங்களை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 47 / 90