Editor's Choice

இங்கிலாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று வால்செல். இது 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலடியில் இருந்ததாக பழம்பொருள் ஆராய்ச்சி புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இங்கு பழம் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது புதையுண்ட  பொருட்களை கண்டெடுப்பது உண்டு. தற்போது இந்திய பூர்வீகம் கொண்ட ஒரு சிறுவன் விலங்கின் கொம்பு போன்ற ஒரு தொன்மையான பொருளைக் கண்டுபிடித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சித்தார்த் சிங் ஜமாத் என்றார் பரம்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட 6 வயது சிறுவன். வால்செல் பகுதியில் பழங்காலத்து விலங்கு கொம்பை தனது தந்தையுடன் சேர்ந்து கண்டுபிடித்துள்ளான். புழுக்களை தேடி ஈரமண்ணில் தான் குழி தோண்டியபோது இந்த கொம்பு தென்பட்டதாக அவன் கூறியுள்ளான்.

இவனது தந்தை விஷ் சிங் பழம்பொருள் ஆராய்ச்சி நிபுணர். 251 முதல் 458 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விலங்கின் கொம்பு இது என அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவுக்கு தனது மகனின் கண்டுபிடிப்பை அனுப்பி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது வைரல் ஆகியுள்ளது.

Editor's Choice

மைசூருவை சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது பெற்றோரை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய முன்வந்துள்ளார். இதற்காக ஆரோக்கியமான, திடகாத்திரமான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் தன்னை அணுகலாம் என்று விளம்பரம் செய்துள்ளார்.

தான் தனிமையில் இருப்பதால் மன உளைச்சலுக்கா ஆளாவதாகவும், அதனால் தான் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 73 வயதான பிராமண வகுப்பை சேர்ந்த தனக்கு அதே வகுப்பை சேர்ந்தவர் மணமகனாக வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
எனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். பின் என்னுடைய பெற்றோருடனேயே வசித்து வந்தேன். நன்றாக படித்தேன். அரசு வேலை கிடைத்தது.
 
என் பெற்றோரை நன்றாக கவனித்து கொண்டேன். சொந்த வீடு வாங்கினேன். வயதான எனது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. அதனால் நான் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடைய பெரிய வீட்டில் நான் ஒருவள் தனியாக இருப்பது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது.
 
இதனால்தான் நான் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எனக்கு பிள்ளைகள் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக இருக்கும் 73 வயதுக்கு மேற்பட்டவர் மணமகனாக கிடைத்தால்தான் அது எனக்கு பொருத்தமாக இருக்கும். அவர் என் மனதை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நம்புகிறேன் என  கூறினார்.

இந்த விளம்பரம் மைசூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Editor's Choice
பாலியல் குற்றம்சாட்டபட்ட ஆஸ்திரேலிய அமைச்சர்கள் கிறிஸ்டியன் போர்ட்டர் மற்றும் லிண்டா ரெனால்ட்ஸ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர், பிரதமர் ஸ்காட் மோரிசன் பல வார குழப்பங்களுக்குப் பிறகு அமைச்சரவை மறுசீரமைப்பை அறிவித்தார்.
 
போர்ட்டர் அட்டர்னி ஜெனரல் பதவியை இழந்தார். செனட்டர் ரெனால்ட்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து  நீக்கப்பட்டார். செனட்டர் மைக்கேலியா கேஷ் அடுத்த அட்டர்னி ஜெனரலாகவும், பீட்டர் டட்டன் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 
கிறிஸ்டியன் போர்ட்டர் அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரி மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் இருந்தார்.  1988 இல் 16 வயது சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் அதை அவர் மறுத்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
தனது நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒரு இளம் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் விசாரணையை தவறாக கையாண்டதாகவும், லிண்டா ரெனால்ட்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரு அமைச்சர்களும் பல வாரங்களாக விடுப்பில் இருந்தனர்.
 
போர்ட்டர் மற்றும் ரெனால்ட்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலியா முழுவதும் எதிர்ப்புக்கள் கிளம்பின  பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலின சமத்துவம் மற்றும் பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி வீதிகளில் இறங்கி போராடினர்.
Editor's Choice

போலந்தில், நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, 'பென்ஷன்' வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய நாடான போலந்தில், போலீஸ், எல்லைக் காவல்படை, தீயணைப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளில், நாய்கள், மற்றும் குதிரைகளும் பணியாற்றி வருகின்றன. இவை ஓய்வுபெற்ற பின், எதிர்காலத்திற்கு தேவையான உரிய பாதுகாப்பு அவற்றுக்கு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், அந்த விலங்குகளுக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கி, ஓய்வுபெற்ற பின், அவற்றுக்கு பென்ஷன் வழங்குவதற்கான புதிய சட்ட மசோதாவை, போலந்து உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. உள்துறை அமைச்சர் மேரியுஸ் கமின்ஸ்கி கூறியது: இந்த சட்ட மசோதா, அடுத்த சில மாதங்களில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.

இதற்கு, எம்.பி.,க்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளிப்பர் என நம்புகிறோம். இந்த பென்ஷன், ஓய்வுபெறும் விலங்குகளின் மருத்துவ செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.

Editor's Choice

நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் துபாயில் தொண்டு நிறுவனத்தினர் ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவிக்கு ஓவியம் வரைவதில் அதிக ஈடுபாடு உண்டு. நடிப்பில் அவர் இடைவெளி எடுத்திருந்த சமயங்களில் ஓவியம் வரைவதில் தீவிரமாக இருந்தார். சிறுவயது முதலே அவருக்கு படங்கள் வரைவதில் ஆர்வமுண்டு. ஆனால் அந்த வயதிலேயே அவர் நடிப்பில் பிஸியாக இருந்ததால் அவரால் அதில் கவனம் செலுத்த இயலாமல் போனது.

நடிகையாக வெற்றி பெற்று, போனி கபூரைத் திருமணம் செய்தபின் சில ஆண்டுகள் ஸ்ரீதேவி படங்களில் நடிக்கவில்லை. அப்போது அவர் 
ஐந்து வருடங்கள் தொடர்ந்து ஓவியங்களை வரைந்தார். இயற்கைக் காட்சிகள், தலைவர்கள் மற்றும் பெண்கள் படங்களை
ஓவியமாகத் தீட்டியுள்ளார் ஸ்ரீதேவி. அவரது நண்பர் சல்மான் கான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலருக்கு ஸ்ரீதேவி ஓவியங்களை பரிசளித்துள்ளார்.
மகள்கள் ஜான்வி மற்றும் குஷியை வரைந்து அவர்களிடம் தந்துள்ளார். அத்தை ஸ்ரீதேவியின் அன்புப் பரிசான ஓவியத்தை நடிகை
சோனம் கபூர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
ஸ்ரீதேவி வரைந்த அந்த ஓவியத்தைத் தான் ஒன்றைத் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு முன்பு வழங்கியிருக்கிறார். 
அந்த ஓவியத்தைத் துபாயில் ஏலம் விட தொண்டு நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஏலத்துக்கு வரவிருக்கும் அந்த ஓவியம் சமூக
வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.ஸ்ரீதேவி மறைந்தாலும் அவர் வரைந்த கலைவடிவமான ஓவியம் தற்போது புகழ் பெற்றுவருகிறது
Editor's Choice

மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ சோபியாவின் டிஜிட்டல் கலைப்படைப்பு வியாழக்கிழமையன்று ஏலத்தில் விடப்பட்டது.  688,888 டாலருக்கு Non-Fungible Token (NFT) வடிவத்தில் விற்கப்பட்டது. ஹாங்காங்கை சேர்ந்த ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ சோபியா. சுயமாக சிந்தித்து மனிதனின் முக பாவனைகளுக்கு ஏற்ப பதில் கூறுவதே இந்த ரோபோவின் சிறப்பு. 

2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சோபியா, 31 வயதான இத்தாலிய டிஜிட்டல் கலைஞரான ஆண்ட்ரியா போனசெட்டோவுடன் இணைந்து தனது கலை படைப்பை உருவாக்கியுள்ளது. வண்ணமயமான கலை படைப்புகளை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற ஆண்ட்ரியா, டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் போன்ற பிரபலமானவர்களின் உருவங்களை கலைப்படைப்பாக வடித்துள்ளார்.

ரோபோ சோபியாவின் படைப்புகள், கலை வரலாறு மற்றும் பல்வேறு தளங்களில், அதனுடைய சொந்த இயற்பியல் தன்மை அல்லது ஓவியங்கள் ஆகியவற்றின் கூறுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவின் படைப்பை, "பரிணாம வளர்ச்சியின் சுழல்கள்" என்று விவரிக்கிறார் ரோபோ சோபியாவை படைத்த படைப்பாளி டேவிட் ஹான்சன்.

பக்கம் 3 / 74