Editor's Choice

பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 750 கிராம்
கேழ்வரகு மாவு - 1 கப்
எண்ணெய் - 500 மி.லி.,
நெய், தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில், பாலை கொதிக்க விட்டு, சிறு தீயில் அடிபிடிக்காமல் கிளறவும்.

பால், மூன்றில் ஒரு பங்காக வற்றியதும் ஆற வைத்து, கேழ்வரகு மாவு, நெய் சேர்த்து பிசையவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி, பாகு பதத்திற்கு காய்ச்சவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை உருண்டைகளாக்கி பொரித்து, சர்க்கரைப் பாகுவில் ஊற வைக்கவும். சுவையும், மணமும் மிக்க, 'கேழ்வரகு குலோப் ஜாமூன்' தயார்.

Editor's Choice

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக போலீசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் எச்சரித்தும் கேட்காமல் தனது முககவசத்தை அகற்றி, போலீஸ்காரரை நோக்கி வேண்டுமென்றே இருமி தகாத வார்த்தைகளும் பேசினார்.

இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக பொது இடத்தில் மது அருந்தியது, வாகனம் ஓட்ட தடை இருந்தபோதும் மோட்டார் சைக்கிள் ஓட்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங்தியாம், தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.  

Editor's Choice

ஒடிசாவில், எட்டு மாத கர்ப்பிணியை, உச்சி வெயிலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்கவிட்ட பெண், எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

மயூர்பஞ்ச் மாவட்டம், சரத் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் வசிக்கும் விக்ரம் பரூலி, எட்டு மாத கர்ப்பிணியான அவரது மனைவியை, மருத்துவப் பரிசோதனைக்காக அருகில் உள்ள நகருக்கு, சமீபத்தில், இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். வழியில், போலீஸ் எஸ்.ஐ., ரீனா பக்ஸல் தலைமையில், போலீசார், அந்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

விக்ரம் பரூலி, 'ஹெல்மெட்' அணிந்திருந்த நிலையில், அவரது மனைவி அணியவில்லை. 'கையில் போதிய பணம் இல்லை. ரசீது கொடுத்தால், அபராதத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்துகிறேன்' என, விக்ரம் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த, எஸ்.ஐ., ரீனா பக்ஸல், வாகனத்துடன் விக்ரமை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, மூன்று மணி நேரம் காவலில் வைத்துள்ளார்.

நடுரோட்டில் அனாதையாக விடப்பட்ட கர்ப்பிணி மனைவி, கணவரைத் தேடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு, 3 கி.மீ., துாரம், உச்சி வெயிலில் நடந்தே வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவர்களது புகாரின் அடிப்படையில், போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடந்த சம்பவங்கள் உறுதியானதால், பணியில் நடத்தை விதிகளை மீறியதாக, எஸ்.ஐ., ரீனா பக்ஸல், அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Editor's Choice

சீனாவின் எவர் கிவன் கப்பல் கடந்த மார்ச் 23 அன்று சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்து சென்றது. கடும் காற்றினால் 22 ஆயிரம் டன் எடை, 400 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் கால்வாயின் ஓரம் இழுத்துச் செல்லப்பட்டு தரைதட்டி குறுக்காக நின்றது. முக்கிய கடல் வழி பாதை தடைபட்டதால் அவ்வழியில் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது.

கப்பல் தரை தட்டி சென்றதால் அதன் அடியில் ஏராளமான மணல் சேர்ந்துவிட்டது. அதற்காக மாஷ்அவர் எனும் மண்ணை அகழ்ந்து வெளியேற்றும் கப்பல் பயன்படுத்தப்பட்டது. இது மணிக்கு 700 யூனிட் மணலை வெளியேற்றும் திறன் கொண்டது. சுமார் 10 ஆயிரம் யூனிட் மணல் மற்றும் சேறு மாஷ்அவர் கப்பல் மூலம் அகற்றப்பட்டது. இதற்காக பணியாளர்கள் இரவும் பகலும் உழைத்தனர். கப்பலின் ஒரு பாதி மட்டும் மிதந்தது. அதனால் கப்பலின் பின் பாதி மிதந்தது. முன் பகுதி மணலில் சிக்கியபடியே இருந்தது. இதனால் இழுவை படகுகளால் கப்பலை இழுக்க முடியவில்லை.

ஞாயிறன்று முழு நிலவு வந்ததால் ராட்சத அலைகள் சூயஸ் கால்வாயில் எழும்பின. அது சாதகமான சூழலை ஏற்படுத்தியது. மீட்பு பணியில் ஈடுபட்ட போஸ்காலிஸ் நிறுவனம் சக்தி மிக்க 2 இழுவை படகுகளை பயன்படுத்தியது. அது தவிர சூயஸ் கால்வாய் நிறுவனம் 11 இழுவை படகுகளை பயன்படுத்தி கப்பலை மிதக்க வைத்தனர். கப்பல் மீட்கப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியடைந்தாலும், கப்பல் மாலுமி உட்பட 25 இந்திய பணியாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது. விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரிய வரும் வரை அவர்களை வீட்டுக்காவலில் வைக்க வாய்ப்புள்ளது என்றும் சூயஸ் கால்வாய் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Editor's Choice

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் ஏப்ரல் 13-ந் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரமலான் மாதம் கொண்டாடப்படவில்லை. இந்தநிலையில், தற்போதும் கொரோனா பரவல் அவ்வப்போது அதிகரித்து வருவதால், இந்த மாதத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று பரவாதபடி, துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்கள் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
* அமீரகத்தில் பொதுவாக பள்ளிவாசல்களில் இரவு நேரத்தில் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடைபெறும். இந்த தொழுகையானது 30 நிமிட நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். எனினும் பெண்கள் தொழுகைக்கூடம் மூடப்பட்டிருக்கும்.
 
* எந்தவிதமான சந்திப்பு நிகழ்ச்சிகளும் இருக்க கூடாது. குறிப்பாக நோன்பு திறக்கும் நேரத்தில் கூட்டம் கூட அனுமதி கிடையாது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தங்களது உணவுப் பொருட்களை பங்கிட்டு கொள்ள வேண்டும்.
 
* நோன்பு திறக்கும் கூடாரங்களுக்கு அனுமதி கிடையாது. நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் பள்ளிவாசலுக்கு கொண்டு வரக் கூடாது. உணவகங்கள் கடையின் உட்புறமோ அல்லது வெளிப்புறமோ வினியோகம் செய்ய அனுமதி கிடையாது.
 
துபாய் நகரில் மேற்கொண்ட பொதுவான விதிமுறைகளுடன் நன்கொடை வசூலிப்பதற்காக அமைக்கப்படும் கூடாரங்களுக்கு அனுமதி கிடையாது. அதிகமான கூட்டம் இருக்கும் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. இரவு நேர சிறப்புத் தொழுகையின் போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
 
சார்ஜா பகுதியிலும் நோன்பு திறக்கும் கூடாரங்கள் அமைக்க அனுமதி கிடையாது. நோன்பு திறக்கும் உணவுப் பொருட்களை வினியோகம் செய்வது தொடர்பாக சிறப்பு விளம்பரங்கள் செய்ய கூடாது.
 
அஜ்மான் பகுதியில் வழங்கப்பட்ட நோன்பு திறக்கும் கூடாரங்களுக்கான அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அனுமதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் மட்டுமே அசர் தொழுகைக்குப் பின்னர் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் மக்ரிப் தொழுகைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
 
ராசல் கைமா, உம் அல் குவைன் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அவசர சேவை மற்றும் பேரிடர் குழுக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது.
Editor's Choice

வாகனப் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த வகையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு, கூடுதலாக பசுமை வரி விதிக்க, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் அனுமதி அளித்தது. இந்த பசுமை வரி வாயிலாக வசூலிக்கப்படும் தொகையை, சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், மாநில அரசுகளின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு, பசுமை வரி விதிக்கும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. மேலும், 15 முதல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்களை பயன்படுத்துவோர், அதை தானாக முன்வந்து பயன்பாட்டில் இருந்து அகற்றும் திட்டத்தை, 2021 - 22ம் ஆண்டுக் கான பட்ஜெட்டில், மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுதும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள வாகன விபரங்களை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுதும், நான்கு கோடி வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன. இதில், இரண்டு கோடி வாகனங்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த பட்டியலில், 70 லட்சம் வாகனங்களுடன், கர்நாடகா முதலிடம் வகிக்கிறது. உத்தர பிரதேசத்தில், 56.54 லட்சம் வாகனங்களும்; டில்லியில், 49.93 லட்சம் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன. இந்த வரிசையில் கேரளா நான்காம் இடமும்,  தமிழகம் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

பக்கம் 2 / 74