- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 172
டிஜிட்டல் நிதி சேவை தளமான Paytm அதன் வாடகை கட்டண அம்சத்தை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது..!
நீங்கள் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு வாடகையை (Home Rent) ஆன்லைனில் செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ரூ .1000 வரை Cashback பெற உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.
வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள் தனது மாதாந்திர வாடகையை உடனடியாக தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கள் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம். இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ .1000 வரை கேஷ்பேக் வழங்குவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் கேஷ்பேக் சம்பாதிப்பதைத் தவிர, பயனர்கள் கிரெடிட் கார்டு புள்ளிகளையும் இதனால் சேகரிக்க முடியும்.
வீட்டு உரிமையானருக்கு வாடகைப் பணம் செலுத்தும் போது, வாடகையில் இருக்கும் நபர், Paytm முகப்புத் திரையில் உள்ள “Recharge & Pay Bills” பிரிவில் இருந்து "Rent Payment”- ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பயனர்கள் கிரெடிட் கார்டிலிருந்து நேரடியாக வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றலாம்.
- UPI, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற பிற கட்டண முறைகள் மூலம் வாடகை செலுத்தும் தன்மையையும் தருவதாக Paytm கூறுகிறது.
வாடகை செலுத்துபவர், வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கு விவரங்களை மட்டுமே உள்ளிட்டால் போதும், வேறு எதுவும் உள்ளிட தேவை இல்லை.
- டாஷ்போர்டு அனைத்து வாடகை கட்டணங்களையும் கண்காணிக்க உதவுகிறது. கட்டணம் செலுத்த வேண்டிய தேதிகளையும் இது நினைவூட்டுகிறது. மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு உடனடி கட்டண உறுதிப்படுத்தலையும் இது அனுப்புகிறது.
இது குறித்து Paytm இன் துணைத் தலைவர் நரேந்திர யாதவ் கூறுகையில்., "வீட்டு வாடகை என்பது நம் நாட்டில் வாடகை வீடுகளில் இருப்பவர்களின் அதிகபட்ச தொடர் செலவாகும். இந்த இக்கட்டான சூழலில், அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குள், எங்கள் வாடகை செலுத்தும் அம்சம் ஏற்கனவே மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பணப்புழக்கத்தை பராமரிக்க உதவி வருகிறது. மேலும், அவர்களின் கிரெடிட் கார்டு சுழற்சியின் படி வாடகையை அவர்கள் செலுத்துகின்றனர். இந்த சேவையின் விரிவாக்கத்துடன், வாடகைக் கொடுப்பனவுகளில் Paytm அதன் சந்தைத் தலைமையை தொடரும்.” என்றார்.
மேலும், "நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு பயன்பாட்டு பில்கள், கிரெடிட் கார்டு பில்கள் போன்ற தொடர் கட்டணங்களை செலுத்துவதில் அதிகப்படியான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். விரைவில், கல்வி கட்டணம், வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தவும், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் செயல்முறை செயலாக்கப்படும்.” என்று கூறினார்.
பங்குச் சந்தை முதலீட்டின், ‘பிதாமகர்’ என போற்றப்படுபவர் வாரன் பபெட், தன்னுடைய 11 வயதிலேயே முதலீட்டை துவங்கியவர்.
இவரைப் போலவே, இப்போது, தென் கொரியாவைச் சேர்ந்த, 12 வயதே ஆன, குவான் ஜூன். இவர், பங்குச் சந்தை முதலீட்டில் வெளுத்து வாங்குகிறார்.கடந்த ஆண்டு இவன் வாங்கிய பங்குகள் மூலமாக, 43 சதவீத வருமானத்தை பெற்றிருக்கிறார். தன்னுடைய தாயிடமிருந்து ஒரு தொகையை வாங்கி, பங்குச் சந்தை முதலீட்டில், கடந்த ஏப்ரலில் இறங்கி இருக்கிறார்.
அப்போது, கொரிய சந்தை சரிவிலிருந்து மீளத் துவங்கிய நேரம். அந்த சமயத்தில், டிவியில் பேசிய முதலீட்டு ஆலோசகர் ஒருவர், இப்போது விட்டால் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது என்று பேசியதால் ஈர்க்கப்பட்டு, சந்தையில் முதலீட்டை துவங்கி இருக்கிறார். குவான் ஜூனுடைய ரோல் மாடலும் வாரன் பபெட் தான்.
தின வர்த்தகம் எல்லாம் செய்யாமல், 10 முதல் 20 ஆண்டுகள் வரை நீண்ட காலத்துக்கு முதலீட்டை தொடரப் போவதாகவும்; அதுவே அதிக லாபமளிக்கும் என்றும் மிகத் தெளிவாக பேசுகிறார்.தென் கொரிய சந்தையே இப்போது இவரைஆச்சரியமாக பார்க்கிறது.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வேண்டுமென்றே பாதுகாப்பு தரம் குறைந்த வாகனங்களை இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்வதாகவும்; மன்னிக்க முடியாத இந்த செயலை உடனே நிறுத்துமாறும் மத்திய அரசின் உயரதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த, வாகன பாதுகாப்பு சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக செயலர் கிரிதர் அரமானி, இந்தியாவில், வாகன தயாரிப்பாளர்கள், பாதுகாப்பு தரம் குறைந்தவற்றை வேண்டுமென்றே பயன்படுத்தி, இந்திய மாடல் கார்களின் தரத்தை குறைப்பதாக செய்திகள் வருகின்றன. இந்தசெயலை நிறுத்த வேண்டும். இது மன்னிக்க முடியாததாகும்.மிகக் குறைவான உற்பத்தியாளர்கள் மட்டுமே, பாதுகாப்பு மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதுவும் விலையுயர்ந்த மாடல் கார்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது.
பல தர பரிசோதனைகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில், வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களை விட, உள்நாட்டில் விற்கப்படும் கார்களில் பாதுகாப்பு தரம் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலை மாற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஓட்டுனர்கள் தேவைப்படாத, தானியங்கி கார்கள் விலை, தற்போதைய கார்களின் விலையை விட குறைவாக இருக்கும் என, ‘சாப்ட்பேங்க்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மசயோஷி சன் கூறியுள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில், தானியங்கி கார்கள் பெருமளவில் தயாரிக்கப்படும். இதன்பிறகு, இக்கார்களின் விலை, வழக்கமான கார்களின் விலையை விட குறைவாக இருக்கும்.தொழில்நுட்ப புரட்சிகளை நம்மால் நிறுத்தவோ, அதன் வேகத்தை குறைக்கவோ ஒருபோதும் முடியாது. நாம், நம்மை அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். மக்கள் உயிர் காக்கும். போக்குவரத்து விபத்துகள் இருக்காது. ஒருவர் மற்றவருடன் தொடர்புடன் இருக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
காற்றிலிருந்து குடிநீர் எடுக்க, பல தொழில்நுட்பங்கள் வரத் துவங்கியுள்ளன. அதில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள ஏரோஜெல் தொழில்நுட்பம் மிக சுவாரஸ்யமானது.உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளான ஏரோஜெல், மிகவும் நுண்ணிய துளைகளைக் கொண்டது.
அதுமட்டுமல்ல, காற்றிலுள்ள நீராவி மூலக்கூறுகளை ஈர்க்கவும், அவற்றை விலக்கிவிடவும் செய்யும் தன்மை கொண்டவை. இதனால், ஆவியாக உள்ள நீர் மூலக்கூறுகள், ஏரோஜெல்லினால் ஈர்க்கப்பட்டு, பிறகு திரவ நீராக மாறியதும் விலக்கப்படுகின்றன. இப்படி விலகும் நீரை ஒரு கலனில் சேமித்து வைக்கவேண்டியது தான்.
ஏரோஜெல் ஈர்த்துத் தரும் நீர், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, மனிதர்களுக்கு குடி நீராக இருக்கும் தன்மை உடையவை என, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ எடையுள்ள ஏரோஜெல்லை காற்றில் படும்படி வைத்தால் அது ஒருநாளைக்கு 17 லிட்டர் குடி நீரை ஈர்த்து, வடித்து தரும் திறன் கொண்டது. ஆனால், 1 கிலோ எடையுள்ள ஏரோஜெல்லை, தட்டையாக விரித்து வைக்வேண்டும் என்றால், அதிக இடம் தேவை என்பதுதான் குறை.
அதே சமயம், குடிநீரை காற்றிலிருந்து பிரித்தெடுக்க, மின்சாரமோ, வேறு எரிபொருளோ தேவையில்லை என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வெயில் நேரத்தில், ஏரோஜெல் நீர் வடிகட்டி அதிக நீரை ஈர்க்கிறது என்பதால், நம்மூர் மொட்டை மாடிகளில் தண்ணீர் பந்தல் போல போட்டுக்கொள்ளலாம். நிழலுக்கு நிழல், தண்ணீருக்கு தண்ணீர்!
பக்கம் 42 / 74



