Editor's Choice

தனக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டுமென்று எழும் கோரிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ள ரத்தன் டாடா, இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்பதில் தான் மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஒரு பிரிவினர், சமூக வலைதளங்களில் ரத்தன் டாடாவிற்கு, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரத்தன் டாடா, 'சில தரப்பு மக்களால், எனக்கு 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்பட வேண்டுமென்று சமூகவலைதளங்களில் எழும் கோரிக்கைக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், எனது பணிவான வ‍ேண்டுகோள் என்னவென்றால், அந்தப் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டுமென்பதுதான்.

ஒரு இந்தியனாக இருப்பதை நல்வாய்ப்பாக உணரும் நான், நாட்டின் வளர்ச்சி மற்றும் வளத்திற்காக பங்களிக்க முயல்கிறேன்' என்றுள்ளார்.

ஹாவர்டு பல்கலையில் படித்த ரத்தன் டாடாவிற்கு, தற்போது 83 வயதாகிறது. இவர் தலைமையில், டாடா குழுமம் பெரியளவு வணிக வளர்ச்சியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது திட உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து, உடற்பயிற்சி செய்வது நல்லது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இதயத்தை பாதிக்குமா என்பதை விடவும், வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை மாற்றி, போதுமான தயாரிப்பு இல்லாமல், புதிய வகையான உடற்பயிற்சிகளை செய்யும் போது, எலும்பு, தசைகளை அதிகம் பாதிக்கும்.

அதே நேரம் இதய நோயிலிருந்து குணாமானவர்கள், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், புதிய, கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, நிச்சயம் இதயத்தை பாதிக்கும்.

இதய கோளாறு இருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், பாதிப்பில் இருந்து மீண்ட பின், தங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி, உடற்பயிற்சி செய்வதே பாதுகாப்பானது.

அந்தந்த வயதிற்கு ஏற்ற, பொதுவான சில உடற்பயிற்சிகளை அனைவரும் செய்யலாம். ஆனாலும் வயது, உடல் எடை, தேவைகளுக்கு ஏற்ப, பயிற்சிகளை செய்தால் கூடுதல் பலனை தரும்.

பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்தில், ஐந்து - ஆறு நாட்கள் தினமும், 20 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்க வேண்டியது அவசியம்.

நடக்கும்போது கைகளை நன்றாக வீசி நடப்பது தோள், கைகள், 'ரிலாக்சாக' உதவும் என, இதுவரையில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்திலும் உறுதியாகி உள்ளது.

Editor's Choice

ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாறுதலையும் செய்யாததை, ரியல் எஸ்டேட் துறையினர் வரவேற்றுள்ளனர்.

ரிசர்வ் வங்கி, வட்டியை அதிகரிக்காததால், வாடிக்கையாளர்களுக்கு, தொடர்ந்து குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இம்முறையும் வட்டியை சற்று குறைத்து அறிவித்திருந்தால், தேவைகள் மேலும் அதிகரித்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் தாக்கத்தால் வீடுகள் விற்பனை, கடந்த ஜூன் காலாண்டில், பலத்த சரிவைக் கண்டது. இருப்பினும், பண்டிகை காலம், மற்றும் வீட்டுக்கடன் வட்டி, 7 சதவீதமாக குறைந்தது ஆகிய காரணங்களால், டிசம்பர் காலாண்டிலிருந்து விற்பனை ஓரளவுக்கு அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் பெரிய அளவிலான சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அந்த அளவுக்கு இத்துறைக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்க கூடும் என நினைத்திருந்தோம். அதன் மூலமாவது தேவைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம்.ஆனால், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம், வட்டியை உயர்த்தாமல் இருந்தது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

Editor's Choice

ஹெச்.பி.வி (HPV Human papillomavirus) எனப்படும் வைரஸ் கிருமியால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) ஏற்படுகிறது. விழிப்புணர்வின் காரணமாக வளர்ந்த நாடுகளில் இந்நோயின் தாக்கமும் உயிரிழப்பும் குறைவாக உள்ளது. ஆனால், நம் நாட்டில் இந்நோய் பற்றிய அறியாமை அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு 1.04 லட்சம் பெண்கள் இங்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்.

குறிப்பாக, கிராமப்புறப் பெண்கள் பலர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். ‘ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 200 பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் இறக்கிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

எப்படிக் கண்டறிவது..?

நோய் பாதிப்பு ஆய்வு (Screening Test) செய்து, இந்நோயின் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியலாம். உதாரணமாக, கர்ப்பப்பை வாய் திசுக்களை எடுத்து செய்யப்படும் பேப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை செய்யலாம். அல்லது திரவ அடிப்படையிலான சைட்டாலஜி (Cytology) பரிசோதனை செய்யலாம். பாதிப்பு கண்டறியப்பட்டால் தொடர்ந்து நோயறிதல் (Diagnosis) பரிசோதனை, சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்படும்.

21 வயதுக்கு மேல் பேப் ஸ்மியர் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

21 - 29 வயதுவரை உள்ளவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பேப் ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

30 - 65 வயதுவரை உள்ளவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பேப் ஸ்மியர் டெஸ்ட், அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை திரவ ஆய்வு (LBC+HPV DNA) செய்துகொள்ளலாம்.

அறிகுறிகள்..!

ஆரம்பநிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகள் எதுவும் வெளியே தெரிவதில்லை. முற்றிய நிலையிலேயே தெரிய வரும்.

மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்களில் ரத்தப்போக்கு.

உறவின்போது வலி.

உறவுக்குப் பின் உதிரப்போக்கு.

துர்நாற்றம்.

கடுமையான முதுகுவலி, இடுப்புவலி.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க செர்வரிக்ஸ் (Cervarix), கார்டசில் (Gardasil) என்ற இரண்டு தடுப்பூசிகள் உள்ளன. இவற்றில் செர்வரிக்ஸ் இந்தியாவில் கிடைக்கிறது. தற்போது அமெரிக்காவில் கிடைக்கும் கார்டசில், விரைவில் இந்தியாவிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை மட்டுமல்ல, ஹெச்.பி.வி வைரஸால் ஏற்படும் தொண்டை, ஆசனவாய்ப் புற்று, பிறப்புறுப்பில் ஏற்படும் மரு போன்றவற்றையும் இந்தத் தடுப்பூசிகள் தடுக்கும் என்பதால், இதை ஆண்குழந்தைகள் மற்றும் ஆண்களும் போட்டுக்கொள்வது நல்லது.

ஹெச்.பி.வி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 9 - 26 வயது வரை சிறப்பான காலமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

45 வயதுவரைக்கும்கூட போட்டுக்கொள்ளலாம்.

9 - 26 வயதுக்குட்பட்ட இரு பாலரும் மூன்று இடைவெளிகளில் கார்டசில் போட்டுக்கொள்ளலாம்.

9 - 26 வயதுக்குட்பட்ட பெண்கள் 3 இடைவெளிகளில் செர்வரிக்ஸ் போட்டுக்கொள்ளலாம்.

ஹெச்.பி.வி தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், மேலே குறிப்பிட்ட வயதுகள் மற்றும் இடைவெளிகளில் ஸ்கிரீனிங் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோய் பாதிப்பின் நிலையைப் பொறுத்து அறுவைசிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி என சிகிச்சைகள் உள்ளன.

Editor's Choice

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள கடல் பரப்பில் ஜப்பான் கடல் படையினர், மீனவர்கள் உள்ளே நுழைந்தால் சீன கடற்படை அவர்களை விரட்ட கனரக ஆயுதங்களை பயன்படுத்த முடியும். இதற்கு ஜப்பான் வெளியுறவுத்துறை கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.சமீபகாலமாக அண்டை நாடுகளுடன் சீன கம்யூனிச அரசு அதிக மோதலில் ஈடுபட்டு வருவது தெரிந்த விஷயம். இதற்கு ஜப்பானும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே தென் சீன கடல் பகுதியில் தைவான்,
தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த சீன கடற்படை தற்போது இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ஜப்பான் கடல் படையுடனும் மோதல் போக்கில் ஈடுபட வாய்ப்புள்ளது. சர்வதேச கடல் பரப்பு சட்டத்தை மதிக்காமல் சீனா இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக ஜப்பான் கேபினட் செயலாளர் கட்சுன்கோபா கேட்டோ குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஜப்பான் தனது கடல் பரப்பில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து உயர்மட்ட குழுக்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை கடந்த புதனன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் சீனாவின் இந்த சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிழக்கு சீனக்கடலில் உள்ள சென் காகூ தீவு ஜப்பானுக்கு சொந்தமென்று ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசு கூறிவருகிறது. மனித நடமாட்டம் இல்லாத இந்தத் தீவு தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. மேலும் இத்தீவுக்கு டாயோ என்று பெயர் சூட்டியும் உள்ளது. இந்தத் தீவில் ஜப்பான் அரசு கட்டடங்கள் கட்டினாலும் இந்த தீவைச் சுற்றி ஜப்பான் கடற்படை கப்பல்கள் இருந்து வந்தாலும் சீனா கனரக துப்பாக்கிகள் கொண்டு அவர்களை தாக்கும்.

இதில் ஐநா தலையிட்டு இந்த பிரச்னைக்கு சுமூகத் தீர்வு கொண்டுவர வேண்டும் என்று ஜப்பான் விரும்புகிறது. ஆனால் அதற்கு சீனா கட்டப்படுமா என்று தெரியவில்லை. இவ்வாறாக தொடர்ந்து இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டு ஆசிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

Editor's Choice
பிரான்சுக்கு வருகை தந்த சுலோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் , பிப்ரவரி 3ம் தேதி அதிபர் மேக்ரானை  சந்திக்க எலிசி அரண்மனைக்கு வந்தார்.
 
இகோர் மாடோவிக்கை  மேக்ரான் வரவேற்றதை அடுத்து இருவரும் அரண்மனைக்கு வெளியே செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். இருவரும் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மழை பெய்யத்தொடங்கியது. உடனே பெண் உதவியாளர் ஒருவர் வந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ஒரு கருப்பு குடையை வழங்கினார். மேக்ரான்  அதை சுலோவாக்கிய பிரதமருக்கு  பிடித்தார்.
 
இரண்டாவது பெண் உதவியாளர் வந்து மேக்ரானுக்கான குடையை முதலில் வந்த பெண் உதவியாளிரிடம் கொடுத்தார். அவர் அதை மேக்ரானுக்கு  பிடித்தார். இரண்டாவது பெண் உதவியாளர் மேக்ரான்  பிடித்திருந்த குடையை வாங்க முன்வந்தார், ஆனால் அவசியமும் இல்லை என்று அவரிடம் மேக்ரான் சைகை காட்டினார்.
 
இரண்டு பேரும் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு, எலிசி அரண்மனைக்குள் செல்ல திரும்பியபோது, ​​ஒரு இராணுவ உதவியாளர் அணுகி, மேக்ரானிடம் குடையை வாங்க முன்வந்தார்.மேக்ரான்  அவரிடமும் குடையை வழங்காமல் தொடர்ந்து இகோர் மாடோவிக்கு தானே குடை பிடித்தார்.
 
மீண்டும் இரண்டாவது பெண் உதவியாளர் திரும்பி வந்து குடையை வாங்க முன்வந்தார், ஆனால் மேக்ரான் மீண்டும் தராமல் விலகிக் கொண்டார்.அரண்மனைக்கு உள்ளே செல்லும் வழியில் உள்ள படிகளின் உச்சியில் ஏறியபோது மேக்ரான் அந்த குடையை இகோர் மாடோவிக்கிடமே வழங்கி முகக்கவசம் போட்டுக்கொண்டார்.
 
அங்கிருந்த உதவியாளர்களில் ஒருவர் உடனே இகோர் மாடோவிக்கிடமிருந்த குடையை வாங்கிக்கொண்டார். யாரிடமும் தராமல் மேக்ரான் சுலோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக்கு குடை பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பக்கம் 45 / 74