Editor's Choice

கொரோனா வைரஸை அகற்ற அனைத்து நாடுகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பல நாடுகளில் கொரோனாவின் அபாயத்தைக் குறைக்க, தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா வைரசை தோற்கடிக்க உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு சமீபத்திய ஆய்வில், எல்.ஈ.டி விளக்குகளின் உதவியுடன் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் படி இந்த நுட்பத்தை ஏர் கண்டிஷனிங் மற்றும் நீர் அமைப்புகளில் நிறுவ முடியும். புற ஊதா (UV) ஒளி உமிழும் டையோட்கள் (யு.வி.-எல்.ஈ.டி) கொரோனா வைரஸை வெற்றிகரமாக அழிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த தொழில்நுட்பம் மிகவும் மலிவானதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜர்னல் ஆஃப் ஃபோட்டோ வேதியியல் மற்றும் புகைப்பட உயிரியலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, விஞ்ஞானிகள் யு.வி.-எல்.ஈ.டி கதிர்வீச்சின் கிருமிநாசினி செயல்திறனை வைரஸில் வெவ்வேறு அலைகளுடன் மதிப்பீடு செய்துள்ளனர். இதில் கோவிட் -19 வைரஸ் ஏற்படுத்தும் SARS-CoV-2 உட்பட அனைத்து வைரஸ்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

புற ஊதா ஒளியைப் பரப்பும் எல்.ஈ.டி பல்புகளைப் பயன்படுத்துவதால் கொரோனா வைரஸை அகற்ற முடியும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய எல்.ஈ.டி பல்புகளைப் பயன்படுத்தி வைரஸைக் கொல்ல முடியும் என கூறப்படுகிறது.

வீடுகளுக்குள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட மேற்பரப்புகளுக்கு யு.வி.-எல்.ஈ.டி பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இந்த அமைப்பை ஒழுங்கான முறையில் வடிவமைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  

Editor's Choice

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். தோல்வியை ஒப்புக் கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார். ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக அவர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.

அதேசமயம் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தனர். எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது.

இதை தடுக்கும் விதமாக டிரம்ப் ஆதரவாளர்கள் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரமாக மாறிய இந்த நிகழ்வில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பானது. இதனையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் உலகம் முழுக்க எதிரொலித்ததன் காரணமாக சமூகவலைதளமான டுவிட்டரில் உலகளவில் டிரெண்ட் ஆனது. டுவிட்டரில் #USCapitol, #Dolandtrump, #Trump உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.

Editor's Choice

சென்னை, மயிலாப்பூரில், 'தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்' சார்பில், 19 ஆண்டுகளாக, பாரம்பரிய புராதன கார் மற்றும் பைக்குகள் கண்காட்சி நடத்தப்படுகிறது.பழைய கார்களை பாதுகாத்து, பராமரித்து, புதுப்பித்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவது, இதன் நோக்கமாகும்.இந்தாண்டின் கண்காட்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, ஏ.வி.எம்., ராஜேஸ்வரி திருமண மண்டப வளாகத்தில், 'சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ டிஸ்பிளே - 2021' என்ற பெயரில் காலை, 10:00 முதல் - 2:00 மணி வரை நடக்கிறது.

இதில், 50க்கும் மேற்பட்ட பாரம்பரியமிக்க கார்கள், 25க்கும் மேற்பட்ட பழமையான, இரு சக்கர வாகனங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.மேலும், கண்காட்சியின் சிறப்பம்சமாக, 1886ம் ஆண்டு, 'பென்ஸ்' மற்றும் 1896ம் ஆண்டு, 'போர்டு' நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட, நன்கு ஓடும் நிலையில் உள்ள, இரண்டு கார்கள் இடம் பெறுகின்றன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Editor's Choice

வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பசை தயாரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், 'மேற்சுழற்சி' செய்ய முடியுமா? முடியும். இதற்கான யுக்திகளை உருவாக்கியுள்ளனர், அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

உலோகங்கள், காகிதம் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம், மதிப்புக்கூட்டப்பட்ட புதிய பொருட்களை உருவாக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்தால், முன்பு இருந்ததைவிட மதிப்புக் குறைந்த பொருட்களையே உருவாக்க முடியும்.

இந்த சிக்கலை தவிர்க்கிறது 'அப்சைக்கிள்' எனப்படும் மேற்சுழற்சி முறை. இந்த முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கிலிருந்து, பாலிஎத்திலினை பிரித்தெடுத்து, சில புதிய வினையூக்கிகள் மூலம் பசைகளை தயாரிக்கலாம்.

இந்த பசை, செயற்கை இடுப்பு மற்றும் மூட்டுக்களை பொருத்துகையில், பயன்படுத்தலாம். மேலும், பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை ஒட்டவும் பயன்படும். மற்ற பசைகளைவிட மேற்சுழற்சி பிளாஸ்டிக் பசைக்கு, 20 சதவீதம் கூடுதல் ஒட்டும் தன்மை உள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Editor's Choice

வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கருக்கலைவு நிகழ்வதற்கும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டின் விளைவையும், கருக்கலைவையும் மதிப்படும் முதல் ஆய்வாக இது கருதப்படுகிறது. "தெற்காசியாவில் ஆண்டுக்கு 3,49,681 கருக்கலைவுகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை. 2000 முதல் 2016 வரையிலான, ஆண்டு கருக்கலைவில் இது 7 சதவீதமாகும்" என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள காற்று தர வழிகாட்டுதலை விட அதிகம் இருக்கும் காற்று மாசினால் 29 சதவீதம் கருக்கலைவுகள் நிகழ்த்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருக்கலைவு ஏற்பட்ட 34,197 பெண்களை இந்த ஆய்வில் உட்படுத்தியுள்ளனர். அவர்களில் 27,480 பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. 6,717 பேருக்கு குழந்தை இறந்து பிறந்துள்ளது. கருக்கலைவில் 77 சதவீதம் இந்தியாவில், 12 சதவீதம் பாகிஸ்தானில், 11 சதவீதம் வங்கதேசத்தில் பதிவாகியிருக்கிறது.

செயற்கைக்கோள் மற்றும் வளிமண்டல நிகழ்வுகளின் இடஞ்சார்ந்த மாற்றங்களை அளவிட்டுள்ளனர். பின்னர் காற்று மாசுக்கு எந்த அளவுக்கு கர்ப்பிணிகள் ஆட்பட்டிருக்கிறார்கள் என்பதையும், பெண்களின் கருக்கலைவு அபாயத்தை இது எந்தளவு அதிகரிக்கிறது என்பதையும் மதிப்பிட்டுள்ளனர்.

ஒரு கன மீட்டர் பரப்பில் 10 மைக்ரோ கிராம் அளவிற்கு மாசு அதிகரித்தாலும் கருக்கலைவுக்கான அபாயம் 3 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

Editor's Choice

கடந்த ஆண்­டில், எட்டு முக்­கிய நக­ரங்­களில், வீடுகள் விற்பனை சரா­ச­ரி­யாக, 37 சத­வீ­தம் அள­வுக்கு
சரி­வைக் கண்­டுள்­ளது என, சொத்து ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ‘நைட் பிராங் இந்­தியா’வின்
அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா தொற்று நோய் பர­வ­லால், 2020ம் ஆண்­டில் தேவை­கள் குறைந்­த­தன் கார­ண­மாக,
விற்­ப­னை­யில் சரிவு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வீடு­கள் விற்­பனை, ஆம­தா­பா­தில் பெரிய அள­வி­லும்; புனே­வில் குறைந்த அள­வி­லும் பாதிப்பை சந்­தித்­துள்­ளது.

மஹா­ராஷ்­டி­ரா­வில் தற்­கா­லி­க­மாக பத்­தி­ரப் பதிவு கட்­ட­ணத்தை குறைத்­ததை அடுத்து, மும்பை உள்­ளிட்ட பகு­தி­களில், கடந்த ஆண்­டின் கடைசி நான்கு மாதங்­களில் விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது.

மும்­பை­யில் முழு ஆண்­டில், 20 சத­வீ­தம்அள­வுக்கு சரிவு ஏற்­பட்டுள்­ளது. சென்­னையை பொறுத்­த­வரை, வீடு­கள் விற்­பனை, 49 சத­வீ­தம் அள­வுக்கு சரி­வைக் கண்­டுள்­ளது. ஆம­தா­பா­தில், 61 சத­வீ­தம் சரிவு
ஏற்­பட்­டுள்­ளது.

பக்கம் 55 / 74