Editor's Choice

நாட்டில் பணப்புழக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மிகவும் அரிதாகக் காணப்படும் நிலையில், இன்னும் 2 ஆயிரம் நோட்டு அச்சிடப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய அரசு மக்களவையில் பதில் அளித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் தீவிரவாதம், கள்ள நோட்டு, கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இதைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டு, ரூ.500 நோட்டு, ரூ.200 எனப் பல வண்ணங்களில், அளவுகளில் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. ஆனால், மீண்டும் அச்சடிக்கப்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

''2018-ம் ஆண்டு, மார்ச் 30-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ரூ.2 ஆயிரம் கரன்சி நோட்டுகள் 336.2 கோடி உள்ளன. 2021, பிப்ரவரி 26-ம் தேதி நிலவரப்படி, 249.9 கோடி எண்ணிக்கையிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. எண்ணிக்கையில் இது 2.01 சதவீதமாகவும், மதிப்பில் 17.78 சதவீதமாகவும் இருக்கிறது.

குறிப்பிட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து அரசுதான் முடிவு எடுக்கும். கடந்த 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் அச்சகம் சார்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் 354.39 கோடி எண்ணிக்கையான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக 2019ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. 2017-18ஆம் ஆண்டில் 11.15 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் அச்சடிக்கப்பட்டன.

2018-19ஆம் ஆண்டில் மேலும் குறைக்கப்பட்டு, 4.66 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. 2019 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

Editor's Choice

தங்கத்தில் பணத்தை சேமிப்பது, நல்ல லாபம் அளிக்கக் கூடியது. ஆனால், தங்க நகைகளாக வாங்கும் போது, செய்கூலி, சேதாரம், வரிகள் என, குறைந்தபட்சம், 10 சதவீதம் முதல், 15 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது. அதற்குப் பதிலாக, தங்கத்தை முதலீட்டுக்காக வாங்க, பல வழிமுறைகள் உள்ளன.

மத்திய அரசு சார்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டு வரும், சாவரின் தங்க பத்திரங்கள், 'மியூச்சுவல் பண்ட்' நிறுவனங்களின் 'கோல்ட் இ.டி.எப்' மற்றும் 'கோல்ட் சேவிங்க்ஸ் பண்ட்' ஆகியவை, முக்கியமான முதலீட்டு வழிமுறைகளாகும்.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், 'கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட்' என்ற பெயரில், கோல்ட் இ.டி.எப்.,களை வெளியிடுகின்றன. இவற்றை வாங்கும் போது, தங்க நகையாக வாங்கும் போது ஆகும் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி., போன்ற செலவுகள் இல்லை. தேவைப்படும் நேரத்தில், இந்த பண்டுகளை, தேவைப்படும் அளவுக்கு விற்று, பணத்தை நம் வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம்.

கோல்ட் இ.டி.எப்.,பில், 50 ரூபாய் கூட, முதலீடு செய்ய முடியும். 1 கிராம் தங்கம், 1 'யூனிட்' எனப்படுகிறது. 1 யூனிட் வாங்க முடியவில்லை என்றால், 'கோல்ட் பீஸ்' என்ற முறையில், 1 யூனிட்டை, பல மடங்காக குறைத்தும் வாங்கிக் கொள்ள முடியும்.

இரண்டாவதாக, கோல்ட் சேவிங்ஸ் பண்ட். இந்த முறையில், மாதம், 100 ரூபாய் முதல், எவ்வளவு ரூபாய் வரையும் சேமிக்க முடியும். இதிலும், தங்கமாக தர மாட்டார்கள். தேவைப்படும் போது, நம் சேமிப்பை பணமாக வாங்கிக் கொள்ள முடியும்.

மூன்றாவதாக, ரிசர்வ் வங்கி, ஓராண்டில், நான்கு முறை, கோல்ட் பாண்ட் என்ற பெயரில், தங்க பத்திரங்களை வெளியிடுகிறது.  ஒருவர், 1 கிராம் முதல், 4 கிலோ வரை, தங்க பாண்ட் வாங்க முடியும். இதுவும் கையில் தங்கமாக வாங்க முடியாது. தங்கம் என்ற பெயரில், காகித பத்திரங்கள் அல்லது எலக்ட்ரானிக் பத்திரமாக வாங்கிக் கொள்ள முடியும்.

இதனால், முதலீட்டு காலத்திற்கு பின், எந்நேரம் வேண்டுமானாலும் அவற்றை பணமாக மாற்றிக் கொள்ள முடியும். முதலீட்டுக் காலம், எட்டாண்டுகள். அதற்கு முன், ஐந்தாண்டுகளில் குறிப்பிட்ட தொகைக்கு, தங்க பத்திரத்தை விற்று காசாக்க முடியும். நீண்ட காலம், எட்டாண்டுகளுக்கு காத்திருக்கலாம் என்பவர்கள், கோல்ட் பாண்ட் வாங்கலாம்.  நல்ல லாபம் அளிக்கக் கூடியது!

Editor's Choice

அமெரிக்க விண்வெளி ஏஜென்சி நாசா நீண்ட காலமாக செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 

துருக்கியின் சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் கற்கள் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ பள்ளத்திற்கு (Jezero Crater) அருகில் காணப்படும் பாறைகளுக்கு மிகவும் ஒத்தவை என நாசா கூறுகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள Jezero Crater என்பது நாசாவின் Perseverance Rover என்னும் ரோவர் தரையிறக்கிய இடமாகும். முன்பு ஜசீரோ பள்ளத்தில் நிறைய தண்ணீர் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது மட்டுமல்ல, இந்த பகுதி செவ்வாய் கிரகத்தின் மிகவும் ஆபத்தான பகுதி எனவும் கூறப்படுகிறது.

நுண்ணுயிரிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஏரியைச் சுற்றியுள்ள பெரிய குன்றுகள் காணாமல் போயுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

சால்டா ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் பண்டைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததா என்பதையும் அங்குள்ள வளிமண்டலத்தையும் புரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

Editor's Choice

ராஜஸ்தானில், புகார் கொடுத்த பெண்ணுக்கு ஆதரவாக விசாரணை நடத்த, பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்த போலீஸ் உதவி கமிஷனர், கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், பெண் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் அதிகாரியாக, போலீஸ் உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ரா நியமிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு ஆதரவாக விசாரணை நடத்த, கைலாஷ் லஞ்சம் கேட்டுள்ளார். அதனை கொடுக்க மறுத்த பெண்ணை, பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி வற்புறுத்தி உள்ளார்.

இதற்காக, அந்த பெண்ணை, தன் வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இதுகுறித்து,  டி.ஜி.பி.,யிடம், அந்த பெண் புகார் செய்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், கைலாஷ் போஹ்ராவை  கைது செய்தனர்.

 

Editor's Choice

அமெரிக்காவில் போலீசார் தாக்குதலில் கொல்லப்பட்ட கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு ரூ.196 கோடி இழப்பீடு வழங்க மின்னாபோலீஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மின்னாபோலீஸ் நகரில், கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி கருப்பின வாலிபரான ஜார்ஜ் பிளாய்ட் போலீசால் கொடூரமாகத் தாக்கி கொல்லப்பட்டார். அவரின் உயிர் போகும் வரை 9 நிமிடங்கள் அவரது கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து போலீஸ் மிதித்துக் கொண்டிருந்த புகைப்படம் வெளியானதால், மிகப்பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இதை கண்டித்து போராட்டங்கள் நடந்தன.

மேலும், பிளாய்ட்டின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டும் சட்டரீதியாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பிளாய்ட் குடும்பம் சார்பில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரும், மின்னாபோலீஸ் நிர்வாக போலீஸ் தரப்பு வழக்கறிஞரும் இழப்பீட்டுத் தொகை தொடர்பாக நேற்று சந்தித்து பேசினர். அதில், பிளாய்ட் குடும்பத்துக்கு ரூ.196 கோடி இழப்பீடு வழங்க மின்னாபோலீஸ் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அமெரிக்க வரலாற்றில் சிவில் உரிமைகளுக்காக ஒருவருக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தொகை இதுதான்.

2 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையால் உயிரிழந்த அமெரிக்கப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.145 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதே இதுவரையில் அதிகப்பட்ச தொகையாக இருந்தது. இந்த சுமூக உடன்பாடு பற்றி பிளாய்ட் குடும்ப வழக்கறிஞரான பென் க்ரம்ப் கூறுகையில், ‘‘இந்த நீதி கிடைப்பதற்காக நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளோம். ஜார்ஜ் பிளாய்ட் வாழ்க்கை மதிப்புமிக்கது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தி உள்ளது. கருப்பினத்தவர்களின் வாழ்க்கை முக்கியமானது என்பதும் இதில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், எவ்வளவு பணமும் பிளாய்ட்டை திரும்பக் கொண்டு வராது,’’ என்றார்.

Editor's Choice

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைதளம் டுவிட்டர். பிரபலங்கள் முதல் ஒருநாட்டு குடிமக்கள் வரை அனைவரும் தங்களது சமூக கருத்துக்களை இதில் பதிவிடுவது வழக்கம். அவ்வப்போது டுவிட்டரில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதும் அவை உடனே டுவிட்டர் நிர்வாகத்தால் சரி செய்யப்படுவதும் வழக்கம். இதுபோல தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மெம்பிஸ் என்ற வார்த்தையை தங்கள் டுவீட்டில் பயன்படுத்துவோர் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக மூடப்பட்டது. இது எதனால் என்று பலர் விவாதிக்கத் துவங்கினார். சிறிய 'பக்' காரணமாக பல பயனாளர்களது கணக்கு தற்காலிக முடக்கத்துக்கு உள்ளானது. இது டுவிட்டர் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. பின்னர் உடனடியாக சரி செய்யப்பட்டது.

வட அமெரிக்காவின் நேஷனல் பஸ்கெட்பால் அசோஷியேஷன் ஒரு வீடியோவை பதிவிட்டது. இதற்கு சிலர் ஆதரவும் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர். மேற்கொண்டு பிரச்னைகளைத் தவிர்க்க இந்த வீடியோவுக்குத் தொடர்புடைய மெம்பிஸ் டிபி என்கிற பாஸ்கெட்பால் வீரரது கணக்கு டுவிட்டர் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து மெம்பிஸ் என்று யார் பதிவிட்டாலும் அவரது கணக்கு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. டுவிட்டர் பயனாளர்கள் குழம்பினர். உடனடியாக கணினி கோடிங்கை டுவிட்டர் நிறுவனம் மாற்றி அமைத்து இதனை சரி செய்தது.

பக்கம் 12 / 74