Editor's Choice

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் சொகுசு கார் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்கான 'டீசர்' வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வடிவில் பம்பர், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், உட்புறத்தில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர், ஆடி கனெக்ட் சிஸ்டம், தாழ்வான கூரை அமைப்பு, 19 இன்ச் இரட்டை வண்ண அலாய் வீல், நான்கு டிரைவிங் மோடுகள், பார்க் அசிஸ்ட், 12.3 இன்ச் வர்ச்சுவல் காக்பிட், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பாங்க் அண்ட் ஒலுப்சன் சவுண்ட் சிஸ்டம், டிராபிக் ஜாம் அசிஸ்ட் உடன் அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா சிறப்பம்சம்.

இதன் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் இன்ஜின், 349 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 0--100 கி.மீ., வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டும். விலை ரூ.65-70 லட்சம்.

Editor's Choice

உத்தர பிரதேசத்தில், நான்கு பேருடன் வீட்டை விட்டு ஓடிய பெண், பஞ்சாயத்தார் முன்னிலையில், குலுக்கல் வாயிலாக, ஒருவரை கணவராக்கிய விசித்திர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

லக்னோவைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில், நான்கு நண்பர்களுடன் திடீரென வீட்டை விட்டு ஓடியுள்ளார். இரவு முழுதும் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்த அந்த பெண், காலையில் ஊர் திரும்பினார். உடனே, மகளை கடத்திச் சென்ற நான்கு பேர் மீது, போலீசில் புகார் கொடுக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.

அதை தடுத்த, பஞ்சாயத்து தலைவர், 'நான்கு பேரில் ஒருவரை, அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம்' என, கூறியுள்ளார். ஆனால், நால்வரும், அந்த பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, அந்த பெண்ணிடம் 'நீ யாரை விரும்புகிறாய் என சொல்; திருமணம் செய்து வைக்கிறோம்' என, பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை.

உடனே, பஞ்சாயத் தலைவர், 'குலுக்கல் முறையில் நால்வரில் ஒருவரை தேர்வு செய்யலாம்' என்றார். அதை பெண்ணும், பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். உடனே, நான்கு பேரின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் குலுக்கி போடப்பட்டன. அவற்றில் ஒன்றை, அப்பெண் எடுத்தார். இதையடுத்து, அந்த சீட்டிற்கு உரியவர், ஊரார் முன்னிலையில், அந்த பெண்ணை தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு, இதர நண்பர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

 

 
Editor's Choice

2021-ல் உலகளவில் அதிக செல்வம் ஈட்டிய நபர்களில் அமேசானின் ஜெப் பெசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முதல் தலைமுறை தொழிலதிபரான அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலின் படி முதல் தலைமுறை தொழிலதிபரான அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து, 3.6 லட்சம் கோடியாகியுள்ளது. இதன் மூலம் அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்டிய நபராகியுள்ளார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்துக்கு போட்டியிட்ட அமேசானின் ஜெப், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு அதானி குழும பங்குகளில் ஒன்றை தவிர அனைத்தும் 50 சதவீத வளர்ச்சி கண்டன. அதானியின் நண்பரும், ஆசியாவின் பணக்காரருமான முகேஷ் அம்பானி இந்த சமயத்தில் சுமார் 58,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

அதானி குழுமம் கடந்த சில மாதங்களில் உலகளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. மேலும் இந்தியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தங்கள் வசப்படுத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபடும் திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றனர். அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் இந்தாண்டு 96% உயர்ந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் 90%, அதானி மின் நிறுவனம், துறைமுகங்கள் போன்றவை 52% வருவாய் ஈட்டி உள்ளன.

 
Editor's Choice

அமெரிக்காவில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவைச் சேர்ந்த ஏழு பெண்களுக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவில், நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகட் மாகாண இந்தியர்கள் கூட்டமைப்பு, சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.இதில், நியூயார்க்கில் உள்ள, இந்திய துணை துாதர், ரந்திர் ஜெய்சால் பங்கேற்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, சாதனை பெண்கள் ஏழு பேருக்கு, நினைவு கேடயம், விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இந்த வகையில், வதேதராவைச் சேர்ந்த, நவரசனா கல்விக் கழக தலைவரும், 'தூய்மை இந்தியா' திட்டத்தின் துாதருமான, தேஜல் அமின் விருது பெற்றார். ஹார்ட்போர்டு ஹெல்த்கேர் மருத்துவமனையில், டாக்டராக உள்ள, உமா ராணி மதுசூதனா, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, சிறப்பான சேவை வழங்கியதற்காக பாராட்டப்பட்டார்.

செவிலியர், ராஷ்மி அகர்வால், பல் டாக்டர், அபா ஜெய்ஸ்வால், சட்ட ஆலோசகர், சபீனா தில்லான், நடிகையும், தயாரிப்பாளருமான, ராஷனா ஷா ஆகியோருக்கும், விருது வழங்கப்பட்டது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு, உணவு உள்ளிட்ட உதவிகளையும், இலவச முக கவசங்களையும் வழங்கிய, 'மாஸ்க் ஸ்குவாட்' என்ற, மகளிர் அமைப்பை பாராட்டி, கேடயம் வழங்கப்பட்டது.

Editor's Choice

இனவெறி காரணமாகத்தான் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைக்கு இளவரசர் பட்டம் தரவில்லையா? என்ற கேள்விக்கு இங்கிலாந்து அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினர் தாமாக விலகிக் கொள்வதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் அவர்கள் இருவரும் பேட்டி அளித்தனர். அதில், தான் ஒரு கறுப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் தனக்கு பிறக்கும் குழந்தையின் நிறம் குறித்து இங்கிலாந்து அரச வம்சத்தினர் கவலைப்பட்டதாக மேகன் கூறினார்.

ஹாரி-மேகன் குற்றச்சாட்டுகள் குறித்து இங்கிலாந்து அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு ஆர்ச்சி உட்பட 9 பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே இளவரசர், இளவரசி ஆக முடியாது.

இளவரசர் பிரின்ஸ் வில்லியம்சின் 3 குழந்தைகள் மட்டுமே இளவரசர், இளவரசிகளாக உள்ளனர். மன்னர் 5ம் ஜார்ஜ் 1917ல் விதிமுறை ஒன்றை வகுத்தார். அதாவது, மன்னரின் குழந்தைகளுக்கும், மன்னர் மகனின் குழந்தைக்கும், வேல்ஸ் இளவரசரின் மூத்த மகனின் மூத்த மகனுக்கும் மட்டுமே இளவரசர் பட்டம் வழங்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை திருத்தம் செய்யும் அதிகாரம் ராணிக்கு வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி 2012ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இளவரசர் வில்லியம்சின் 3 குழந்தைகளும் இளவரசர், இளவரசிகளாக பட்டம் சூட்டப்பட்டனர். இல்லாவிட்டால் பிரின்சின் மூத்த மகன் ஜார்ஜ் மட்டுமே இளவரசராக பட்டம் சூட்டப்பட்டிருப்பார். அந்த வகையில், ஹாரி-மேகன் தம்பதிக்கு பிறந்த ஆர்ச்சிக்கு அரச வம்சப்படி மவுண்ட்பேட்டன்-விண்ட்சர் பட்டமே சூட்டப்படும். ஆனால், அப்பட்டதை ஹாரி-மேகன் வேண்டாமென தவிர்த்ததாக கூறப்படுகிறது. எனவே, எந்த இனவெறிக்காகவும் ஆர்ச்சருக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்படவில்லை என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Editor's Choice

தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக கோபமடைந்த அந்நாட்டு பிரதமர் செய்தியாளர்கள் மீது சானிடைசர் கொண்டு ஸ்பிரே அடித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அந்நாட்டில் ராணுவ புரட்சியின்போது அரசுக்‍கு எதிராக அமைச்சர்கள் 3 பேர் போர்க்‍கொடி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்‍கில் 3 அமைச்சர்களுக்‍கும்  நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இந்த 3 அமைச்சர்களையும் நீக்‍கி பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அமைச்சரவையை மாற்றி அமைத்தார்.

இந்நிலையில், தாய்லாந்தில் வழக்‍கமான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், 3 அமைச்சர்களை பதவி நீக்‍கம் செய்து அமைச்சரவை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு கோபமடைந்த அவர், திடீரென மேஜை மீது வைக்‍கப்பட்டிருந்த சானிடைசரை எடுத்துக்‍கொண்டு செய்தியாளர்களை நோக்‍கி வந்தார். பின்னர் அமர்ந்திருந்த செய்தியாளர்கள் ஒவ்வொருவர் மீதும் சானிடைசரை தெளித்தார். இச்சம்பவம் அங்கிருந்த செய்தியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

பக்கம் 16 / 74