Editor's Choice

அமெரிக்காவில், குடியுரிமை பெறாமல் தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டினருக்கு, எச் - 1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாவால், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களும், சீன நாட்டினரும் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்து, எச் - 1பி விசா வழங்கும் நடைமுறைகளில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

அதனால், இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், பெரும் சிரமத்திற்கு
உள்ளாயினர். கடந்த ஜனவரியில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், 'விசா வழங்கும் நடைமுறைகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்' என, வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், எச் - 1பி விசா கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதை மறு பரிசீலனை செய்ய, ஜோ பைடனின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை, யு.எஸ்.சி.ஐ.எஸ்., எனப்படும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை, தெரிவித்துள்ளது.

Editor's Choice

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஒரே இரவு 18 அங்குலம் அளவுக்கு பனி கொட்டி தீர்த்தத்தால் சாலைகள், வாகனங்கள் அனைத்தும் உறைபனி வியாபித்துள்ளது. அலாஸ்காவில் 2ம் கட்ட பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் உறைபனி கொட்டி வருகிறது. ஆங்கரேஜ் என்ற நகரத்தில் ஒரே இரவில் 18 அங்குலம் அதாவது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு உறைபனி கொட்டியிருக்கிறது. இதனால் சாலைகள், வீடுகள், வாகனங்கள் அனைத்தும் பணிக்குவியலால் மூடப்பட்டுள்ளன.

மலை நகரமான ஆங்கரேஜில் மட்டும் 18 அங்குலம் பனிப்பொழிவு பதிவாகி இருக்கிறது. சில இடங்களில் மட்டும் 16 அங்குலம் அளவுக்கு பனி பெய்துள்ளது என்று தெரிவித்தார். சாலைகளை பனி மூடியிருப்பதால் அலாஸ்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு பனிபொழிவின் விழுக்காடு மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Editor's Choice

ஐ.ஐ.டி பம்பாயில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் கணினி அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் தினேஷ் படேல், தமிழ் உட்பட 47 மொழிகளை பேசும் ரோபோவை உருவாக்கியுள்ளார். ஒன்பது இந்திய மொழிகளையும் 38 வெளிநாட்டு மொழிகளையும் பேசுகிறாள் ‘ஷாலு’.  தமிழ், ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, மராத்தி, பங்களா, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம் என 9 இந்திய மொழிகள் ஷாலுவுக்கு அத்துப்படி. 

ரோபோ பெண்ணைப் போன்றே இருக்கிறது. ஷாலுவுக்கு கோபம், சிரிப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். ஆனால், கைகளை அசைப்பது போன்ற பல மனித சைகைகளை செய்ய முடியாது,  

பிளாஸ்டிக், அட்டை, மரம், அலுமினியம் போன்ற கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஷாலு உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது, 50,000 ரூபாய் செலவில் ஷாலு ரோபோவை உருவாக்கிவிட்டேன் என்று படேல் சொல்கிறார்.  

ஷாலுவால் மனிதர்களை அடையாளம் காணமுடியும், மனப்பாடம் செய்யவும், பொது அறிவு, கணிதம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.

“ஷாலு மக்களுடன் பேசும், சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தும், செய்தித்தாளைப் படிக்கும், வேறு பல செயல்களையும் செய்யும். பள்ளிகளில் ஆசிரியராகவும் அலுவலகங்களில் வரவேற்பாளராகவும் பயன்படுத்த உகந்த ரோபோ”.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸைப் பயன்படுத்தி ஷாலு ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் mask போன்றவற்றை பயன்படுத்தி, ரோபோவை அழகுபடுத்த முடியும் என்று படேல் கூறுகிறார். அலுவலக வேலை மற்றும் அன்றாட வீட்டு வேலைகளுக்கு ஷாலு ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பல துறைகளிலும் பயன்படுத்தலாம். ஷாலு அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஒரு உத்வேகம்.

Editor's Choice

‘இதர போதை பொருட்கள் போல், செல்போன் போதையும் நமக்கு கேட்டை விளைவிக்கும். நேரம் காலமில்லாமல் செல்போனில் மூழ்கிக் கிடந்தால் உடல், மன நலன் கட்டாயம் பாதிக்கும்’.

நாம் செல்போன் போதைக்கு அடிமையாகி வருகிறோம் என்பதற்கான அறிகுறிகள்.....

*அலுவலகத்தில் அல்லது வீட்டில் உள்ள வேலைகளை முடிப்பதில் சிக்கல்
*குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து விலகி இருப்பது
*மற்றவர்களுக்கு தெரியாமல் செல்போனை பயன்படுத்துவது
*செல்போன் காணாமல் போய்விடுமோ என்ற பயம்
*செல்போனை வீட்டிலேயே விட்டுவிட்டு வரும் போது பயம், பதட்டம் ஏற்படுவது அல்லது பீதி போன்ற உணர்வு
*ஓய்வில்லாத பதட்டமான மனநிலை
*கோபம் அல்லது எரிச்சல்
*தூக்கப் பிரச்னைகள்
*செல்போனுக்காக ஏங்கி தவிப்பது.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் படிப்படியாக செல்போன் பயன்பாட்டை குறைக்க பாருங்கள். புத்தகம் படிப்பது, அலுவலக, வீட்டு வேலைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். நண்பர்களுடன், உறவினர்களுடன் நேரடியாக பேசி மகிழலாம். தோட்டம் அமைக்கலாம். வீட்டை அழகு படுத்தலாம். அப்படி முடியாவிட்டால் நீங்களும் மனநல மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

ஒருவர் எந்த விஷயத்திற்காக அதிக நேரம் செலவிட ஆரம்பிக்கிறாரோ,  அதில் அவருக்கு ஈடுபாடு அதிகம் என்று தெரிந்துகொள்ளலாம். அந்த விஷயத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்த தொடங்குகிறார் என்றால் அந்த விஷயத்திற்கு அவர் அடிமையாக தொடங்குகிறார் என்று அர்த்தம். அந்த விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார், அதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார் என்றால் அதில் போதையாகி அவர் அடிமையாகி விட்டார் என்று அர்த்தம்.

வீட்டில் இருக்கும் எல்லோரும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போனை பயன்படுத்தும் பழக்கத்தை படிப்படியாக குறைக்க வைக்க வேண்டும்.

 

Editor's Choice

மதுரை அருகே யானையை வைத்து விவசாயி போரடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியை சேர்ந்தவர் மதன் பாபு. பி.டெக் பட்டதாரி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், விவசாய ஆர்வத்தில் வேலையை ராஜினாமா செய்தார். மதுரை மேலமாசி வீதியில், இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார். இவர் அரசு அனுமதியுடன் பெண் யானையை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.

திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த யானையை வாடகைக்கு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் அறுவடை செய்த நெல்லை, யானையை வைத்து போரடித்து, அதை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போர் அடித்தது பழந்தமிழர் வரலாறு என கூறுவதுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த காட்சி உள்ளதாக பலரும் கமென்ட் அடித்து வருகின்றனர்.

டிராக்டர் வைத்து போர் அடிக்கிறோமே, யானையை வைத்து அடித்தால் என்னவென்று தோன்றியது. எங்களது 13 ஏக்கர் விவசாய நிலத்தில், 5 ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளோம். அந்த 5 ஏக்கரில் விளைந்த நெல்லை, ஒரே நாளில் யானையை வைத்து போர் அடித்தோம் என்றார் மதன் பாபு .

Editor's Choice

ஜெயலலிதா, எந்தளவுக்கு சாந்தமாக இருப்பாரோ, அந்தளவுக்கு கோபக்காரர் என்பது, கட்சியின், 2ம் கட்ட தலைவர்களுக்கு தெரியும். அதனால் தான், அவரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றபடி செயல்படுவர்.

கடந்த, 2001 சட்டசபை தேர்தலின் போது, நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஜெ., ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாருக்கு மாலை, 5:00 மணிக்கு அவர் சென்ற போது, நான்கு தொகுதிகளிலும், அவரது வேட்பு மனுக்கள், குற்ற வழக்குகளை காரணம் காட்டி, தள்ளுபடி செய்யப்பட்டதாக, தகவல் தரப்பட்டது. இதையடுத்து, டெம்போ வேனில் இருந்து கீழே இறங்கியவர், அருகில் நின்ற திறந்த ஜீப்பின் பேனட்டில் ஏறி நிற்க, தொண்டர்கள் வெகுண்டெழுந்தனர்.

ஜெ., முகம் சிவக்க, மைக்கை வாங்கி பேசுகையில், 'இது நியாயமா, தேர்தல் கமிஷன் செய்தது நியாயமா' என, தன், 'டிரேடு மார்க்' கேள்விகளை எழுப்ப, ஒட்டுமொத்த கூட்டமும், 'இல்லை' என, குரல் கொடுத்தது. ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஜெ., 'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவசிரிப்பு. நல்ல தீர்ப்பை சொல்லும் நாள் வரும் போது, சிரிப்பவர் யார், அழுபவர் யார் தெரியும் அப்போது எனக்கூற, ஒட்டுமொத்த தொண்டர்களும் உற்சாகமுற்றனர்.

அதேபோல, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இடைத்தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் சாதாரண தொண்டர் நீலமேகவர்ணத்தை வேட்பாளராக அறிவித்தார். நீலமேகவர்ணத்திற்காக, ஆறுமுகனேரி விருந்தினர் மாளிகையில், ஐந்து நாட்கள் தங்கி, தொகுதி முழுக்க, ஜெ., பிரசாரம் செய்தார். செட்டிகுளம் என்ற ஊரில், பிரசாரத்திற்கு சென்ற போது, கிராமத்தினரை காணவில்லை.  இதை கவனித்த ஜெ., பிரசாரத்தை முடித்து விட்டு, 'யார் இன்சார்ஜ்' என, கேள்வி எழுப்பினார்.

முன்னாள் எம்.பி.,யும், அப்போதைய அமைச்சர் ஒருவரும் வந்து, 'அம்மா...' என நிற்க, 'அறிவு இருக்கா; நான் உங்களை பாக்கவா வந்தேன். கிராமத்தினரையே காணோம். நான் பேசுவதை அவர்கள் கேட்டால் தானே, நம் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவர். இது தெரியாதா' என, கடிந்து கொண்டார்.

பக்கம் 15 / 74