Editor's Choice

மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவதால், மனிதர்கள் வாழ பூமியில் இடமிருக்காது என்கின்றனர் விஞ்ஞானிகள். அதற்கு மாற்று வழி என்ன என ஆராய்ந்தால், அதற்கான பதில் விண்வெளியில் உள்ளது. சந்திரன், விண்வெளி நிலையம் அல்லது செவ்வாய் கிரகம் என அனைத்தும் மனிதர்கள் வாழும் இடமாக மாறலாம். இதனுடன்,  முதல் மனித குழந்தை எப்போது விண்வெளியில் பிறக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் சுவாரஸ்யமான தகவலை அளித்துள்ளனர். 

அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிறிஸ் இம்பே, வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் விண்வெளியில் வாழத் தொடங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சி பணியோடு நிற்காமல்,  சாதாரண மக்களை போல் வாழ்க்கை நடத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

2051 அல்லது அதற்கு முன்பாகவே, முதல் மனித குழந்தை விண்வெளியில் பிறக்கக்கூடும் என்று கிறிஸ் இம்பேயின் ஆராய்ச்சி கட்டுரை தெரிவிக்கிறது.

விண்வெளி பயணத்திற்கான போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா என பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான் திட்டம்’  மூலம் உலகில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும்  4-வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. இது வரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. சமீபத்தில் சீனாவின் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. 

எலோன் மஸ்கின் நிறுவமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), விண்வெளி தொடர்பான பணிகளில் நாசாவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்களை சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

இது தவிர, ஜெஃப் பெசோஸின் நிறுவனம் ப்ளூ ஆரிஜின்ஸ் விண்வெளிப் பணியில் ஈடுபட்டுள்ளது. ப்ளூ ஆரிஜின்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம் சூரிய மண்டலத்தில் ஒரு காலனியைக் கட்டும் திட்டத்தை வகுத்துள்ளது.

Editor's Choice

உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரோ தற்போது மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கலாம். பிரச்சனை இல்லை.

முதலில் இந்த போக்கில் எந்த தீங்கும் இல்லாத மாதிரிதான் இருந்தது. ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும்.

ஏதேனும் தொழில் யோசனையின் ஒரு பகுதியா இது? ஒரு தரவு வங்கி தயாரிப்பதற்காக, உங்கள் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வேண்டுமென்றே கேட்கிறார்களா? இதற்கு பின் ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதா? இதில் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டுமா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடுவதற்கு முன்னால், இதுகுறித்து பேஸ்புக் என்ன கூறியுள்ளது என்று பார்க்கலாம். "இது பயன்பாட்டாளர் ஒருவரால் தொடங்கப்பட்ட மீம். தானாகவே வைரலாகி உள்ளது. இந்த ட்ரென்டை பேஸ்புக் தொடங்கவில்லை" என்கிறது.

"ஏற்கனவே இருக்கும் புகைப்படத்தை வைத்துதான் மீம்கள் செய்யப்படுகின்றன. பேஸ்புக் இதனை எந்த வகையிலும் பயன்படுத்தவில்லை. ஆனால், பேஸ்புக் பயனாளர்கள், முகம் அடையாளப்படுத்தும் தன்மை என்று அறியப்படும் பேஷியல் ரெகக்னிஷன் வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."

பேஸ்புக் தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால், #10YearChallenge குறித்து மட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த மாதிரியான விளையாட்டுகள் அல்லது மீம்கள் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கின்றன. இவற்றின் திட்டம் தரவுகளை சேகரிப்பது.

இந்த சவால் ஒரு டைம் பாஸோ அல்லது கேளிக்கையோ இல்லை, இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது.

"இந்த புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்படும்போது, அவற்றை மார்ஃப் செய்து மாற்றலாம், உங்களை இலக்காக ஆக்க முடியும்."

"பேஷியல் ரெகக்னிஷன் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை வைத்து 10 ஆண்டுகளில் எந்த அளவிற்கு வடிவம் மாறியுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்" என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

இந்த புகைப்படங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது தானே? ஏற்கனவே பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படம், தற்போது இதனால் என்ன ஆபத்து?

"குறிப்பிட்ட புகைப்படம் பேஸ்புக்கில் ஏற்கனவே இருப்பது உண்மைதான். ஆனால், அது எங்கேயோ இருந்தது. இந்த சவாலை ஏற்று உங்கள் புதிய புகைப்படத்தோடு, பழைய புகைப்படத்தை வைக்கிறீர்கள்."

"இதுபோன்று செய்யும்போது, இதுவரை சமூக வலைதளங்களில் இல்லாத புதிய தரவுகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதனை சைபர் கிரிமினல்கள் தவறாக பயன்படுத்த முடியும்."

"எனவே, இது மாதிரியான சவால்களை தவிர்ப்பது அவசியம். ஏனென்றால், நீங்கள் உங்கள் புகைப்படத்தை பகிரும்போது, நிறுவனங்களுக்கு உங்களது பழைய மற்றும் முக்கியமான தகவல்களை தருகிறீர்கள். மேலும், எந்த அளவிற்கு அவற்றை தவறாக பயன்படுத்த முடியும் என்பதை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்கிறார்கள் அவர்கள்.

யாராவது உங்களது பேஸ்புக் படங்களை பேஷியல் ரெக்ககனைஷன் அல்காரிதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் அது தவறாகுமா?

தொழில்நுட்பம் என வரும்போது நீங்கள் என்ன தரவுகளை உற்பத்தி செய்கிறீர்கள் மற்றும் அந்த தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியம்.

இம்மாதிரியான சவால்களில் இருந்து உங்களின் முகம் உங்களின் வயது சார்ந்து எப்படி மாறியுள்ளது என்ற தகவல்களை அவர்களின் விளம்பரத்துக்கு பயன்படுத்தமுடியும்.

முக ஆதாரங்கள் எந்தவொரு தருணத்திலும் காப்பீடுக்கான மதிப்பீடு மற்றும் உடல் நலன் சார்ந்த சேவைகளில் பயன்படுத்த முடியும். நீங்கள் உங்களின் வயதை ஒப்பிடும்போது விரைவாக முதுமை அடைகிறீர்கள் எனில் நீங்கள் காப்பீடு நிறுவனங்களுக்கு நல்ல நுகர்வோர் கிடையாது.

காவல்துறைக்கோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துக்கு இந்த தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தரவுகள் மட்டும் கிடைப்பதில்லை, குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களின் தகவல்களும் அவர்களின் கைகளுக்குச் செல்கின்றன என்ற அச்சகமும் இன்னமும் இருக்கிறது.

Editor's Choice

ஒரு ஆளை நேரே பார்த்து பேசும் உணர்வை, காணொலி அழைப்புகள் ஏற்படுத்துவதில்லை. எனவே, 'புராஜக்ட் ஸ்டார்லைன்' தொழில்நுட்பத்தின் மூலம், 'கூகுள்' அந்த இடைவெளியை நிரப்ப வருகிறது.ஒரு மாய ஜன்னலுக்கு இந்தப் பக்கம் நீங்கள். அந்தப் பக்கம் உங்கள் நண்பர். அவரது, உயரமும், அகலமும் அசல் அளவில், முப்பரிமாணத்தில் மறுபக்கம் திரையில் தெரியும்.நீங்கள் நேரில் பேசுகையில் செய்வதை போலவே, அவரது கண்களை பார்த்து பேசலாம். தோல், உடை, தலைமுடி என்று அனைத்தும் அதே நிறத்தில் தெரியும்.

இதனால், நேரிலேயே அந்த நபருடன் உரையாடி கொண்டிருப்பதை போன்ற உணர்வு ஏற்படுத்தும் கூகுள் ஸ்டார்லைட். சில கேமராக்களையும், உணரிகளையும் கொண்ட, 'பூத்' போன்ற பெட்டியில் அமர்ந்து பேச வேண்டும். இவை தவிர, மூன்று தொழில்நுட்பங்கள் இதில் இயங்குகின்றன. ஒரு தொழில்நுட்பம் பேசுபவரை அப்படியே, 'ஸ்கேன்' செய்யும். இன்னொன்று, அந்த தகவல்களை 'டிஜிட்டல்'முறையில் சுருக்கி இணைப்பு வழியே அனுப்பும்.

அடுத்த நுட்பம், முப்பரிமாணத்தில், அதே நபரின் உருவத்தை, முக பாவனை, உடல் அசைவுகளை மறுமுனையில் உள்ள பெரிய திரையில் காட்டும். இதனால், தற்போதுள்ள தொலைதொடர்பு வசதிகளை வைத்தே ஸ்டார்லைட் தொழில்நுட்பம் இயங்கும் என்பது தெளிவாகிறது. அதாவது கொரோனா யுகத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் இது.

Editor's Choice

கூகிள் நிறுவனம் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. 

கூகிளின் புதிய அறிவிப்பின்படி, கூகிள், தனது ஆண்ட்ராய்டு 12-ன் இரண்டு பிள்டிலும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு ரூ .7 கோடி ரூபாய்க்கான ரொக்கப்பரிசை வழங்கும். 

கூகிள் சமீபத்தில் Android 12 இன் பொது பீட்டா பதிப்பை வெளியிட்டது. Android 12 இன் பீட்டா பதிப்பு தற்போது சில பயனர்களுக்கு மட்டும் அளிக்கப்படுகின்றது. அதன் ஸ்டேபிள் பதிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும். 

Android 12 இன் பீட்டா பதிப்பில் சில அம்சங்களை நீங்கள் அனுபவிக்க முடியும். பீட்டா பதிப்பில் பிழைகள் (Bugs) இருக்கலாம். இதை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். இது உங்கள் தொலைபேசியின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் Android 12 இல் உள்ள குறைபாட்டை கண்டறிந்து சொல்லலாம் என கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மே 18 முதல் ஜூன் 18-க்குள் தவறுகளை கண்டுபிடிப்பவர்களுக்கு, பரிசுத் தொகையுடன் 50 சதவிக்கித போனஸ் தொகையும் கிடைக்கும் என கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சில ஆண்ட்ராய்டு அல்லாத குறைபாடுகள் அண்ட்ராய்டு பாதுகாப்பை பலவீனப்படுத்துகின்றன என்று நிறுவனம் கருதுகிறது.

கூகிள் பக் பவுண்டி புரொக்கிறாமில் (Google Bug Bounty Program) பங்குகொள்ள நினைக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் Android 12 Beta 1 மற்றும் Android 12 Beta 1.1 ஆகியாவற்றை பகுப்பாய்வு செய்ய வேண்டும். பாதுகாப்பு பரிசுத் திட்டத்தில் தகுதி வாய்ந்த சாதனத்தில் இருக்கும் பிழைகள் (Bugs) இருக்கும். இது நிறுவனத்தின் பிற பரிசுத் திட்டத்தின் ஒரு பகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்சல் 5, பிக்சல் 4a, பிக்சல் 4a 5G, பிக்சல் 4, பிக்சல் 4XL, பிக்சல் 3 a, பிக்சல் 3a XL, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL.

Editor's Choice

அமேசான் நிறுவனம், தனது இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் சேர்க்கப்பட்ட இந்த ‛பிரத்யேக கட்டுரைகள்' என்ற புதிய பகுதியில், எக்ஸ்குளூசிவ், டிரெண்டிங் செய்திகள், பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் நிர்வாகம், விளையாட்டு, வணிகள் மற்றும் நிதி, உடல்நலம், சமூகம் மற்றும் லைப் ஸ்டைல் புத்தகம், உணவு, நடப்பு விவகாரம், கற்பனை கதைகள், பயணக்கட்டுரைகள், ஆட்டோமொபைல், போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளன. பல்வேறு செய்தி நிறுவனங்களில் கட்டுரைகள் மற்றும் பதிப்பகங்களின் செய்திகளை ஒரே இடத்தில் படிக்கும் வகையில் ஏற்படுத்தி உள்ளது. இந்த வசதி குறித்து ஒரு சில பயனாளர்களுக்கே தெரிய வந்துள்ளது.

இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த வசதி குறிப்பிடப்படவில்லை. அந்த இணையதளத்தில், தேடுதல் பக்கத்தை பயன்படுத்தி ‛‛ பிரத்யே கட்டுரைகள் '' தேடுவதன் மூலம் பார்க்க முடியும். 5 நிமிடங்களுக்குள் படிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், சில செய்திகளை படிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை தாண்டும் வகையிலும் உள்ளது.

இந்த பகுதியில் உள்ள செய்திகள், அவுட்லுக், இந்தியா டுடே, வெஸ்ட்லேண்ட், ஹார்பர் கலின்ஸ், ஹசேட்டே இந்தியா உள்ளிட்ட இணைய பக்கங்களில் இருந்தும் அமேசான் பிரைம் வீடியோவில் இருந்தும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இணையம் மற்றும் மொபைல் ஆப்பில் வெளிப்படையாக பார்க்க முடியவில்லை. இதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்னர், இதனை சோதனை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

  

Editor's Choice
வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது.
 
2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 26ம்தேதி மாலை 3 15 முதல் 06.23 வரை நிகந்தது. இது இந்தியாவில் பார்க்க முடியவில்லை.
 
இரண்டு ஆண்டுகள் கழித்து ஏற்படும் முழு சந்திர கிரகணம் இதுவாகும். சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைகிறது. எனவே நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னுவதால், "இரத்த நிலவு" என்று அழைக்கப்படுகிறது. 
 
சூரிய அஸ்தமனத்தை ஒத்த பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளிச்சம் சிதறடிக்கப்படுவதால் தூசுகளும் மேகங்களும் ஒன்றாக சூழ்வதால், சந்திரன் அதிக அளவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் தான் சூப்பர் ப்ளட் மூன் (Super Blood Moon) என்றும் அழைப்படுகிறது. 
 
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது பூமியின் நிழலால் நிலவு மூடப்பட்டிருக்கும். பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் அளவை பொறுத்து சந்திர கிரகணங்களின் வகைகள் வேறுபடுகின்றன.
 
மே மாதத்தின் மொத்த சந்திர கிரகணத்தின் போது சிவப்பு நிறத்தில் தோன்றுவதோடு கூடுதலாக, சந்திரன் பெரிஜியில் இருக்கும், அதாவது அதன் சுற்றுப்பாதை பாதையின் ஒரு பகுதியாக இது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த நிகழ்வு "சூப்பர் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது. 
 
வானியலாளர்களின் கூற்றுப்படி, சந்திரன் இயல்பை விட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தின் முழு நிலவு வசந்த காலத்தில் ஏற்படுவதால் "ஃப்ளவர் சந்திரன்" (Flower Moon) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இந்த நிகழ்வை "சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" (Super Flower Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.
 
தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இதுதென்பட்டது. இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி காணலாம்.
 
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிஃபித் ஆய்வகம் (Griffith Observatory) மற்றும் தெற்கு வானியல் சங்கம் ( Astronomical Society of South) ஆகியவை இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பியது. 

பக்கம் 3 / 21