Editor's Choice

கூகிள் தனது பாதுகாப்பை வலுப்படுத்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. கூகிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு,  பாஸ்வர்டை உள்ளிட தேவை இருக்காது. மறுபுறம், யாரேனும் password மற்றும் user  பெயர் கொண்டு உங்கள் கணக்கைத் திறக்க முயற்சித்தால், அதுவும் நடக்காது. அதாவது, வரும் காலத்தில் உங்கள் கணக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

கூகிள் டீஃபால்டாக மக்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும். அதாவது, இது முன்புபோல் ஒரு தேர்வாக, ஆப்ஷனாக இருக்காது. இது உங்கள் கணக்கில் தானாகவே செயல்படுத்தப்படும். 

கூகிளில் சைன் இன் செய்ய பயனர்கள் இரண்டு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூகிள் தனது வலைப்பதிவில் கூறியுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்களின் பாதுகாப்பு வலுவாக இருக்கும். சரியான முறையில் கான்ஃபிகர் செய்யப்பட்டுள்ள கணக்குகளுக்கு இந்த அம்சம் டீஃபால்டாக வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

இந்த அம்சம் செயல்படுத்தப்பட்ட பிறகு, உங்கள் சாதனம் இல்லாமல் வேறு யாராலும் உங்கள் Google கணக்கைத் திறக்க முடியாது. யாரிடமாவது உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட் ஆகியவை இருந்தாலும், அவரால் உங்கள் கூகிள் கணக்கை திறக்க முடியாது. நீங்கள் இரண்டு காரணி அங்கீகாரத்தின் மூலம் கணக்கில் லாக் இன் செய்யும்போது, உங்கள் தொலைபேசியில், எஸ்,எம்,எஸ், வாய்ஸ் கால் அல்லது கூகிள் செயலி மூலம் கோட் கிடைக்கும். இனி பாஸ்வர்ட் திருட்டால் உங்கள் கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தப்படக் கூடிய சாத்தியமே இல்லை என்றும் வலைப்பதிவில் கூறப்பட்டுள்ளது. 

வரவிருக்கும் காலங்களில், கூகிள் கடவுச்சொல்லின் பயன்பாடு முற்றிலும் முடிவுக்கு வரப்போகிறது. அனைத்து கணக்குகளுக்கும் மக்கள் ஒரு கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணமாகும். இரண்டு காரணி அங்கீகாரம் அல்லது டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷனுக்கு ஃபிசிக்கல் செக்யூரிட்டி கீ-யும் பயன்படுத்தப்படலாம். ஃபிசிக்கல் செக்யூரிட்டி கீ-ஐ மடிக்கணினியின் யூ.எஸ்.பி போர்ட் அல்லது தொலைபேசியின் அருகே வைத்து பயன்படுத்தலாம்.

Editor's Choice

சீனா தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு நிலையத்துக்கு தேவையான பல முக்கியமான கருவிகளை சீனா தற்போது வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.

விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு நிலையத்துக்குத் தேவையான முக்கியமான கருவியை, சீனா வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை நிர்ணயித்துள்ளன. அதுபோல, விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையத்தை அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆங்கில எழுத்தான, 'டி' வடிவில், இந்த ஆய்வு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அதற்கு தேவையான முக்கியமான சாதனங்கள், கருவிகளை, சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. அந்த வகையில் மிகவும் முக்கியமான கருவி, ராக்கெட் வாயிலாக, அனுப்பி வைக்கப்பட்டது. ஹைனான் தீவில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட், திட்டமிட்டபடி, வெற்றிகரமாக, புவி வட்டப் பாதையை அடைந்தது. 'டியானே' என்ற இந்த கருவி, விண்வெளி ஆய்வு நிலையத்தின் நிர்வாக மற்றும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும்.

நாசா அமைப்பு கடந்த ஆண்டு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் கடந்த வாரங்களில் இருமுறை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்தது.
 
Editor's Choice

வாட்ஸ் அப் எளிமையான செயலி என்றாலும், சில நேரங்களில் இதில் முன்பின் தெரியாத தொடர்புகளிலிருந்து வரும் மெசேஜ்கள் மற்றும் கால்கள் உள்ளிட்டவை நமக்கு தேவையற்ற தொல்லையை தருகின்றன. இதை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூடவே அறிமுகமில்லாத நபர்களின் தொந்தரவு உள்ளிட்ட பல தீமைகளும் இருக்கின்றன. தொல்லைகளில் இருந்து தப்பிக்க பயனர்களுக்கு, வாட்ஸ்அப் நிறுவனமே செய்து கொடுத்துள்ள ஒரு வழி தான் பிளாக்கிங் கான்டேக்ட்ஸ் (blocking contacts) அம்சம்.

தேவையற்ற கான்டேக்ட்ஸ் மற்று மெசேஜ்களிலிருந்து உங்களை விடுவிப்பதற்கான ஒரு வழி இது. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பாத கான்டேக்ட்ஸ்களை தடுப்பதே இந்த அம்சத்தின் நோக்கம். நீங்கள் ஒருவரை பிளாக் செய்யும் போது, அவர்களிடமிருந்து மெசேஜ்கள், கால்கள் அல்லது அவர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பெற மாட்டீர்கள். எனவே உங்களுக்கு வாட்ஸ்அப்பில் தொல்லை தரும் ஒரு தொடர்பை நீங்கள் பிளாக் செய்யலாம், அன்பிளாக் செய்யலாம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனுக்கான WhatsApp-ல் ஒரு கான்டாக்ட்டை பிளாக் செய்வது எப்படி..

* முதலில் வாட்ஸ்அப்பை ஓன் செய்து கொள்ள வேண்டும்

* வாட்ஸ்அப்பில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை டச் செய்யவும்

* கீழ் தோன்றும் மெனுவிலிருந்து செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்

* செட்டிங்ஸ் உள்சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தேர்வு செய்யவும்

* பின் Privacy சென்று அதில் Blocked contacts என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

* மேல் வலது மூலையில் இருக்கும் Add optionஐ தட்டவும்

* இறுதியாக அதில் நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் கான்டேக்ட்டை தேர்வு செய்து சேர்க்கவும்

நீங்கள் தடுக்க விரும்பும் தொடர்புடன் முன்பே சேட் செய்திருந்தால் அல்லது தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தால், தொடர்பின் பெயரை தட்டுவதன் மூலம் அவற்றை நேரடியாக சேட்டில் பிளாக் செய்யலாம். கீழே ஸ்க்ரோலிங் செய்து பின் பிளாக் கான்டேக்ட்டை தட்டவும்.

அன்பிளாக் (unblock) செய்வது எப்படி.?

* முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து கொள்ள வேண்டும்

* வாட்ஸ்அப்பில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை டச் செய்யவும்

* கீழ் தோன்றும் மெனுவிலிருந்து செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்

* செட்டிங்ஸ் உள்சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தட்ட வேண்டும்

* பின் தனியுரிமை ( Privacy) விருப்பம் சென்று அதில் பிளாக்ட் கான்டேக்ட்ஸ் (Blocked contacts) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

* பிளாக் செய்யப்பட்டிருக்கும் கான்டேக்ட்டை தட்டவும்

* பின் அன்பிளாக் செய்யவும்

IOS-ல்:

* ஃபோனில் இருக்கும் வாட்ஸ்அப் ஐகானை தட்டுவதன் மூலம் வாட்ஸ்அப்பை திறக்கவும்.

* உங்கள் திரையின் கீழ் வலது மூலையில் அமைந்துள்ள செட்டிங்ஸ் (Settings) ஐகானைத் தட்டவும்.

* செட்டிங்ஸ் மெனு சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

* பின் Privacy சென்று அதில் Blocked contacts என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

* மேல் வலது மூலையில் இருக்கும் Add optionஐ தட்டவும்

* இறுதியாக அதில் நீங்கள் அன்பிளாக்  (Unblock Contact)  கான்டேக்ட்டை தேர்வு செய்து சேர்க்கவும்

மாற்று முறை:

நீங்கள் அன்பிளாக் செய்ய விரும்பும் தொடர்பின் முந்தைய சேட்டை ஓபன் செய்து, பின்னர் தொடர்பின் பெயரை தட்டி அன்பிளாக் செய்வதற்கான விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

Editor's Choice

வாட்ஸ்அப்பில்  உங்கள் தொலைபேசியைத் தொடாமல் அல்லது தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம் என்பது தெரியுமா. இது தவிர, சேட்டிங்கை இன்னும் சுவாரஸ்யமாக ஆக்கும் அம்சங்களும் உள்ளன.  இருப்பினும், இதற்காக செட்டிங்குகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். 

பல முறை பிறர் நமக்கு அனுப்பும் தகவல்களுக்கு பதிலளிக்க மறந்து விடுகிறோம், அல்லது நேரம் இருப்பதில்லை.. இதற்கு, வாட்ஸ்அப்பில் உங்கள் தொடர்பிலிருக்கும் எந்த எண்ணையும் திறக்கலாம். நீங்கள் விரும்பினால், செய்தியைப் Unread, என மார்க் செய்து பிறகு பதிலளிக்கலாம். இந்த செட்டிங்கில் , அன்ரீட் என குறிப்பிட்ட தொடர்பு எண்ணில்  ஒரு மார்க் தோன்றும், இது உங்களுக்கு பின்னர் நினைவூட்டுகிறது. இதற்காக, Android தொலைபேசியில் சேட்டை அழுத்திப் பிடிக்க வேண்டும். வலது பக்கத்தில், ஒரு மார்க் ஆன்ரிட் ஆப்ஷன் தோன்றும்.  iOS இல் சேட்ட்டின் வலது பக்கத்தை ஸ்வைப் செய்யும் போது, ​​Unread  ஐகான் தோன்றும். அதன் மீது தட்டவும்.

தொலைபேசியைத் தொடாமல், தட்டச்சு செய்யாமல், பதில் அனுப்புவதற்கு கூகிள் அஸிஸ்டென்ட் உதவியை நீங்கள் எடுக்க வேண்டும். இதில், நீங்கள் கூறுவதை அப்படியே  தட்டச்சு செய்யும். 

 வாட்ஸ்அப் சேட்டிங்கை மேலும் சுவார்ஸ்யமானதாக ஆக்க , புதிய எழுத்துருவை முயற்சி செய்யலாம். இதில்  சாய்வு எழுத்துருவைத் தேர்வு செய்யலாம். வார்த்தையை போல்ட் செய்யலாம். Bold செய்ய வேண்டிய எழுத்துக்களின் முன்னும் பின்னும் ஸ்டார் இணைத்தால்,  உங்கள் செய்தியை அனுப்பும்போது, ​​அது Bold எழுத்துருவில் காணப்படும். மறுபுறம், சாய்வு  எழுத்துருவைப் பொறுத்தவரை, வார்த்தையின் முன்னும் பின்னும் அண்டர் ஸ்கோர் குறியை பயன்படுத்தப்பட வேண்டும்.

Editor's Choice
ட்ரூகாலர் இந்தியாவில் பயனர்களுக்கான கோவிட்-19 ஹெல்த்கேர் டைரக்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவமனைகள் கண்டறிவதற்கான சிறந்த வழி இது என கூறப்படுகிறது. ட்ரூகாலர் ஆண்ட்ராய்டு சாதனத்தின் பீட்டா பதிப்பில் உள்ள மெனு ஐகானில் கிடைக்கிறது.

இந்த அம்சம் பெற விரும்பும் பயனர்கள் ப்ளே ஸ்டோரில் பயன்பாட்டை புதுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக இது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது இருப்பினும் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த அம்சமானது இந்தியாவில் உள்ள அனைவரும் தங்களது அருகில் உள்ள மருத்துவ உதவியை கண்டறிய உதவுகிறது. இந்த சமயத்தில் தங்களுக்கு மிகவும் தேவைப்படும் சரியான சுகாதார எண்களை கண்டறிவது கடினமாக இருக்கும் எனவே இந்த பயன்பாட்டை ட்ரூகாலர் இணைத்திருக்கிறது.
 
ஆரம்பத்தில் பீட்டா பதிப்பில் மட்டுமே இது கிடைத்தாலும் விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சமானது நாடு முழுவதும் இருக்கும் மாநிலங்களை சேர்ந்த கோவிட்-19 அனுமதிபெற்ற மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை உள்ளடக்கி இருக்கிறது.  இதில் ஒரு சர்ச் பட்டன் தேர்வு இருக்கும், இது உங்களுக்கு விரைவான தகவல்களை கண்டறிய உதவுகிறது. இருப்பினும் மருத்துவமனை படுக்கைகள் குறித்த விவரங்கள் வழங்கப்படாது.

கோவிட் ஹெல்த்கேர் டைரக்டரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் ஒவ்வொரு நாளும் புதுப்பித்து வழங்குகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அதிகமான மருத்துவமனை தொலைபேசி எண்கள் கிடைப்பதை இந்த அம்சம் உறுதி செய்கிறது.

 

Editor's Choice

அமேசான் பிரைம் மியூசிக்,'போட்காஸ்ட்ஸ்' சேவையை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பிரபல படைப்பாளிகளின் போட்காஸ்ட்டுகள் மற்றுமின்றி; உலக அளவில் பிரபலமானவர்களுடையதும் அமேசான் பிரைம் மியூசிக்கில் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு மொழிகளில் வணிகம், செய்திகள், இசை, நகைச்சுவை ஆரோக்கியம் என, பல்வேறு விதமான போட்காஸ்டுகள் அமேசான் பிரைம் மியூச்கில் கேட்க கிடைக்கும். இந்த சேவைக்காக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே கிடைக்கும்.

போட்காஸ்ட்ஸ் என்பது வானொலி ஒலிபரப்பை போன்ற ஒரு சேவையாகும். நமக்கு பிடித்தமான விஷயங்களை, பேட்டிகளை, இசையை மற்றவர்களுக்கு தொகுத்து வழங்க போட்காஸ்ட் தளம் சிறந்த வழியாகும்.

இந்த போட்காஸ்ட் ஒளிபரப்பை டவுன்லோடும் செய்துகொள்ளலாம். அமேசான் பிரைம் மியூசிக்கில் கிட்டத்தட்ட, 90 லட்சம் போட்காஸ்டுகள் இடம்பெற்றுள்ளன.

பக்கம் 6 / 21