Editor's Choice

பழைய மற்றும் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுக்க வேண்டுமா? அதற்கான சில உதவிக்குறிப்புகள் உங்களுக்காக...

ஒரு புதிய மொபைலை வாங்கும்போதோ, அல்லது சில வாட்ஸ்அப் உரையாடல்களை நீக்கும்போதோ, வாட்ஸ்அப்பை டெலீட் செய்துவிட்டு மீண்டும் செயலியை நிறுவும்போதோ, தேவைப்படும் செய்திகளும் தவறாக நீக்கிவிடும் வாய்ப்புகளும் உள்ளன. அப்படி ஏதாவது நடந்தால், அகன்ற வாட்ஸ்அப்  செய்திகளை  திரும்பவும் மீட்டமைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

நீக்கப்பட்ட செய்திகளைப் படிக்க உங்களை அனுமதிக்கும் அதிகாரப்பூர்வ அம்சம் வாட்ஸ்அப்பில் இல்லை என்றாலும், WhatsRemoved+ என்ற மூன்றாம் தரப்பு செயலி உள்ளது. நீக்கப்பட்ட அனைத்து வாட்ஸ்அப் செய்திகளையும் இந்த செயலியைக் கொண்டு மீட்டமைக்கலாம்.

நாம் ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறும்போதெல்லாம், பழைய வாட்ஸ்அப் தொடர்புகள், மீடியா கோப்புகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் இழக்கிறோம், அது சில நேரங்களில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும். இப்போது அந்த சிக்கல் இல்லை. உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்களை இழக்காதபடி புதிய வழிமுறைகள் உள்ளன.

பொதுவாக தினமும் அதிகாலை 2 மணிக்கு வாட்ஸ்அப், பயனர்களின் உரையாடல்களை அரட்டைகளை காப்புப்பிரதி எடுக்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்றால் உங்கள் அமைப்பை (setting) நீங்களே மாற்றவேண்டும்.  

உரையாடல் காப்புப்பிரதியை இயக்க, வாட்ஸ்அப்பைத் திறந்து, Settings > go to Chats > என்ற பிரிவுக்குச் சென்று சென்று Chat backup கிளிக் செய்யவும்.

உங்கள் உரையாடல் காப்புப்பிரதியின் frequencyஐ ஒருபோதும் வேண்டாம் / தினசரி / வாராந்திர / மாதந்தோறும் (never/daily/weekly/monthly) என்ற தெரிவுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.  

நீங்கள் Android ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால் காப்புப்பிரதி சேமிக்கப்பட வேண்டிய Google கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஐபோன் பயனர்கள், WhatsApp > Chats > Chat Backup உள்ள அமைப்புகளுக்குச் செல்லவும், அங்கு நீங்கள் Auto Backup frequency அல்லது use Back Up என்ற தெரிவை தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஐக்லவுடில் (iCloud) காப்புப்பிரதியை உடனடியாகத் தொடங்க பேக் அப் நவ் (Back Up Now) என்ற தெரிவை பயன்படுத்தலாம்.

நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுப்பதற்கான படிகள்

உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் உரையாடல் காப்பு விருப்பம் தினசரி என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க. இது உங்கள் உரையாடல்களின் காப்புப்பிரதி தேவைப்படும் போதெல்லாம் மீட்டெடுப்பதை எளிதாக்கும்.

புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறும்போது அல்லது வாட்ஸ்அப் கணக்கை நீக்கும்போது நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை நாம் பெரும்பாலும் மீட்டெடுக்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறினால், முதலில் நீங்கள் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்க வேண்டும்.

தொலைபேசி எண்ணை உள்ளிட்டு உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழைந்து OTP ஐப் பெற்று உங்கள் எண்ணைச் சரிபார்க்கவும்.

செயலியை நிறுவிய பிறகு, உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்கள் அனைத்தையும் 'மீட்டமை' செய்வதற்கான தெரிவை பெறுவீர்கள்.

மீட்டமை என்ற விருப்பத்தை சொடுக்கவும், உங்கள் புதிய / நீக்கப்பட்ட அனைத்து வாட்ஸ்அப் செய்திகளும் உங்கள் புதிய ஸ்மார்ட்போனில் மீட்டமைக்கப்படும்.

Editor's Choice

எல்.ஜி. நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் சேவையை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்மார்ட்போன் விற்பனையில் இருந்து வெளியேறுகிறது.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமான எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது . புதிது புதிதாக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்திருக்கிறது. எல்ஜி நிறுவனத்தின் மொபைல் பிரிவை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் எல்ஜி நிறுவனம் இந்த முடிவை அறிவித்திருக்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது இருக்கும் கடும் போட்டி காரணமாக எல்ஜி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும், அதனால் அந்த நிறுவனத்தின் மொபைல் உற்பத்தி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தற்போதுள்ள எல்ஜி போன்களான விங், வெல்வெட், கியூ-சீரிஸ், டபிள்யூ-சீரிஸ் மற்றும் கே-சீரிஸ் போன்றவை தொடர்ந்து தொடரும், ஆனால் இந்த போன்கள் நிறுவனத்தின் சர்விஸ் இருக்கும் வரை இருக்கும். எல்ஜி தனது தற்போதைய மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆதரவு மற்றும் ஹார்டவெர் அப்டேட்களை வழங்கும், இது வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும். இதன் பொருள் என்னவென்றால், ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பெறும் அதே நேரத்தில் இந்தியாவில் வெல்வெட் போன்கள் ஒரு சாப்ட்வெர் புதுப்பிப்பைப் பெறவில்லை. மொபைல் பிரிவை மூடும் இந்த காலகட்டத்தில் நிறுவனம் சப்ளையர்கள் மற்றும் வணிக கூட்டாளர்களுடன் ஒத்துழைக்கும் என தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து எல்ஜி நிறுவனம் வெளியேறுவதால் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிவித்திருக்கிறது எல்.ஜி. ஸ்மார்ட் போன் மொபைல் பிரிவில் பணியாற்றிய அவர்களை தங்களின் மற்ற பிரிவுக்கு மாற்றி வருகிறது எல்ஜி நிறுவனம்.

Editor's Choice

ஆரக்கிள் உடனான நீண்டகால பதிப்புரிமைப் போரில் கூகுள் திங்களன்று ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையை உருவாக்க ஆரக்கிளின் மென்பொருள் குறியீட்டைப் பயன்படுத்துவது கூட்டாட்சி பதிப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்று கூறி அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
Google மென்பொருள் குறியீட்டைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்டத்தின் கீழ் நியாயமில்லை என்று கூறிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஆரக்கிள் மற்றும் கூகுள்  இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆண்டுக்கு 175 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்டுள்ளன, 2010 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் தொடர்பாக ஆரக்கிள் வழக்குத் தொடர்ந்தது.  

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் (U.S. Court of Appeals) 2018 ஆம் ஆண்டில் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள ஃபெடரல் சர்க்யூட்டில் கூகுள் முறையிட்டது.

அந்த தீர்ப்பு கூகுளுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் நிலைமை உருவானது.  முதலில் ஆரக்கிள் 8 பில்லியன் டாலரை இழப்பீட்டுத் தொகையாக கேட்டாலும்,  புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் 20 பில்லியன் டாலர் முதல் 30 பில்லியன் டாலர் வரையிலான மிகப் பெரியத் தொகையை கூகுள் செலுத்த வேண்டியிருக்கும் என்ற நிலைமை உருவானது.  

கூகுள் தனது ஜாவா மென்பொருளின் 11,330 வரிக் கணினி குறியீட்டையும், அது ஒழுங்கமைக்கப்பட்ட முறையையும் நகலெடுத்து, ஆண்ட்ராய்டை உருவாக்கி பில்லியன் கணக்கான டாலர்கள் வருவாய் ஈட்டியதாக ஆரக்கிள் குற்றம் சாட்டியது.

அண்ட்ராய்டு, டெவலப்பர்கள் மில்லியன் கணக்கான பயன்பாடுகளை உருவாக்கியுள்ளனர், இப்போது உலகின் 70% க்கும் மேற்பட்ட மொபைல் சாதனங்கள் அதன் அடிப்படையிலேயே  இயங்குகின்றன.

தான் கணினி நிரலை நகலெடுக்கவில்லை, மாறாக கணினி நிரல் அல்லது தளத்தை இயக்க தேவையான ஜாவாவின் மென்பொருள் குறியீட்டின் கூறுகளைப் பயன்படுத்தியது என்று கூகுள் உறுதியாக சொன்னது. மேலும் கூட்டாட்சி பதிப்புரிமைச் சட்டம் வெறும் "செயல்பாட்டு முறைகளை" பாதுகாக்காது என்றும் வாதிட்டது.

தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் கூகுளுக்கு மிகப் பெரிய நிம்மதி கிடைத்திருக்கும்.

Editor's Choice
கொரோனாவைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க பெரும்பாலான பணிகள் ஆன்லைன் மயமாகி விட்டது. இந்த நிலையில், வீட்டில் இருந்தே பணியாற்றுவது (work from home jobs) குறித்த தேடல்கள் கூகுளில் கடந்த ஆண்டு 140 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
 
உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அச்சம் பலருக்கும் அதிகரித்து இருப்பதால், இந்தியர்கள் பெரும்பாலான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற துவங்கி உள்ளனர். கடந்த ஒரே ஆண்டில் மட்டும் ஆன்லைன் மருத்துவம்  பற்றிய தேடல் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 
 
ஆன்லைன் தேடல் சதவீதம் மணிப்பூர், பீகார் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நகரங்களில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. 2020 ஆண்டு ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் சேவைகளின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
 
கல்வி சார்ந்த தேடல்களில் கல்விமுறை கடந்து தொழில்முறை, புதிய திறன் வளர்த்தல், தொழில் துவங்குதல், வருவாய் ஈட்டுதல் போன்ற துறைகள் பற்றி இந்தியர்கள் அதிகளவு தேடியுள்ளனர். 2020 கூகுள் தேடல் பற்றிய விவரங்களை அந்நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது.
இந்தியர்களால் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தகவல்கள் பட்டியலில், அமெரிக்க தேர்தல், பிகார் தேர்தல், தில்லி தேர்தல் ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன. மேலும், அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், பிரதமரின் விவசாயிகள் திட்டம் (பிஎம் கிஸான் ஸ்கீம்), சர்ச்சைக்குறிய தொலைக்காட்சி பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி ஆகிய தகவல்களும் முதல் பத்து இடங்களில் வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

Read more at: https://yourstory.com/tamil/the-most-searched-keywords-google-in-india-2020
இந்தியர்களால் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தகவல்கள் பட்டியலில், அமெரிக்க தேர்தல், பிகார் தேர்தல், தில்லி தேர்தல் ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன. மேலும், அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், பிரதமரின் விவசாயிகள் திட்டம் (பிஎம் கிஸான் ஸ்கீம்), சர்ச்சைக்குறிய தொலைக்காட்சி பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி ஆகிய தகவல்களும் முதல் பத்து இடங்களில் வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

Read more at: https://yourstory.com/tamil/the-most-searched-keywords-google-in-india-2020
 
2020ல் இந்தியர்கள் அதிகம் தேடியது ஐ.பி.எல் தொடரை தான். மேலும் IPL போட்டிகள் மூலம் பலமுறை அந்த வார்த்தை தேடப்பட்டது. மக்கள் கொரோனா தொற்றையும் தாண்டி IPL ஐ தான் அதிகம் தேடியுள்ளனர்.

2020ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மூன்றாவது கேள்வி, 'எனக்கு அருகிலுள்ள பட்டாசு கடை' ('Cracker shop near me') என்பது தான். கொரோனாவை விட ஆபத்தானதாக இல்லையென்றாலும் இதையும் மக்கள் அதிகம் தேடியுள்ளனர். ஐந்தாவது அதிகம் தேடப்பட்ட வினவல் எனக்கு அருகிலுள்ள 'இரவு தங்குமிடங்கள்' ('Night Shelters Near me') என்பது நமது 'குடி' மகன்களுக்கு மதுபானக் கடைகளுக்கான தேடல்களால் இது 5ம் இடத்தை பெற்றது.

கிரிக்கெட் மற்றும் கொரோனா வைரஸ் தவிர, நவம்பரில் நடந்த அமெரிக்கத் தேர்தல்களிலும் இந்தியர்கள் ஆர்வம் காட்டினர், 'அமெரிக்கத் தேர்தல்கள்' ('US Elections' ) பலமுறை தேடப்பட்ட ஒன்றாகும். பிரதமர் கிசான் யோஜனா மற்றும் பீகார் தேர்தல்கள் (PM Kisan Yojana and Bihar Elections) முதல் ஐந்து தேடல் இடங்களை கொண்டுள்ளது. குடியுரிமை திருத்தம் சட்டத்தின் தேடல் வினவல்களும் முதல் 10ல் இடம் பிடித்தன, ஆயிரக்கணக்கானோர் 'CAA' மற்றும் 'என்றால் என்ன' ('What is') என்ற கேள்வியையும் பலமுறை தேடியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் (Joe Biden) 2020ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் ஆனார், அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான அர்னப் கோஸ்வாமியும் (Arnab Goswami) அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அமெரிக்கத் தேர்தல்கள் இந்தியர்களிடமிருந்து கணிசமான கவனத்தைப் பெற்றன,

கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கத்தில் கொரோனா வைரஸை பெற்ற பாடகியும், நடிகையுமான கனிகா கபூர், அதிகம் தேடப்பட்ட மூன்றாவது நபராக உள்ளார். இந்தியர்கள் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்னையும் தேடினர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை தேடியுள்ளனர். அவர் கொரோனா தொற்றிற்கு ஆளானதால் விரைவில் மீண்டு வர அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனையை செய்தனர்.
 
ஏறக்குறைய அனைத்து 'என்ன' ('What is') வினவல்கள் கொரோனா வைரஸால் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் , கூகுள் 'பினோட் என்றால் என்ன' ('What is Binod') என்ற பதிலைத் தேடும் ஆயிரக்கணக்கான தேடல்களும் பதிவுவாங்கின. இது ஒரு யூடியூப் வீடியோவில் இருந்து வளர்ந்த வைரஸ் சமூக ஊடக உணர்வு மற்றும் நினைவு பற்றிய குறிப்பாகும்.

இருப்பினும், நெட்ஃபிக்ஸ் மனி ஹீஸ்ட் (Netflix's Money Heist), அதிக தேடல்களுடன் முன் வரிசை அலங்கரித்தது. தற்கொலை செய்து கொண்ட அவரது துயர மரணத்திற்குப் பிறகு வெளியான சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த திரைப்படமான தில் பச்சாரேவும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படமாக மாறியது.

கூகுள் புள்ளிவிவரங்கள் ஆன்லைன் உணவு வரிசைப்படுத்தல் தொடர்பான வினவல்களில் 70 சதவீதம் அதிகரிப்பு மற்றும் மொபைல் கேமிங் தொடர்பான வினவல்களில் 137 சதவீதம் அதிகரிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன. கூகுள் தேடல் வரலாறு பொதுவாக ஒரு தேசிய மட்டத்தில் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் நம் அனைவருக்கும் சென்ற ஆண்டின் நினைவூட்டலாகும். 2020 பலருக்கு பேரழிவு தரும் ஆண்டாக இருந்து வருகிறது. ஆனால் 2020ம் ஆண்டில் கூகுளில் மொத்த தேடல்களில் 70 சதவிகிதம் 6 முக்கிய மெட்ரோ நகரங்களுக்கு வெளியே இருந்து வந்தது, இது ஆழமான இணைய ஊடுருவலைக் குறிக்கிறது.
Editor's Choice

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு  உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  

இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா  பெர்சவரன்ஸ் ரோவர்  (Perseverance Rover) என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.

வானவில் பூமியில் பொதுவாக காணப்படும் தோறும், மழையும் வெயிலும் இணைந்து வரும் போது வானின் வானவில் தோன்றுகிறது, ஆனால் இப்போது செவ்வாய் கிரகத்தில் நாசாவின் விண்கலம் அனுப்பிய “வானவில்” புகைப்படம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயற்கையாக பூமியில் மழை மற்றும் வெயில் அடிக்கும் போது தோன்றும் வானவில், வறண்ட வளிமண்டத்தை கொண்ட செவ்வாய் கிரகத்தில் எப்படி தோன்றியது என  வியக்கின்றனர் விஞ்ஞானிகள். 

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், தனது  கேமராவில் இப்போது “வானவில்” என்று தோன்றும் படத்தைக் கிளிக் செய்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு வானவில் ஏற்படக் காரணம்  இல்லை என்பதால்  இது ஒரு "டஸ்ட்போ" (dustbow ), அதாவது தூசிகளின் ஊடே ஏற்படும் வானவில் ஆக இருக்கலாம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். ,  "டஸ்ட்போ" நீர் துளிகளுக்கு பதிலாக தூசியால் ஏற்படும் வானவில் ஆகும்.

“டஸ்ட்போக்கள்” நம் அனைவருக்கும் புதியதாக இருந்தாலும், செவ்வாய் கிரகதில் பனி மிக அதிகம் இருப்பதால் “பனிவில்” ​​(icebows) அங்கே பொதுவானது. 2015 ஆம் ஆண்டில்  நாசா இந்த தகவலை வெளியிட்டது. 

1990 களில் பாத்ஃபைண்டர் மிஷனின் போது செவ்வாய் கிரகத்தில் “பனிப்பாறைகள்” முதன்முதலில் கண்டறியப்பட்டன.  அப்போது விண்கலம் செவ்வாய் வான பரப்பிற்கு மேலே மேகங்களை புகைப்படம் எடுத்தது. அவை பனித் துகள்களால் ஏற்பட்ட தோற்றமாக அவர்கள் கருதினர்.

Editor's Choice
ஹெச்எம்டி குளோபல் புதிய நோக்கியா பிராண்டு ஆடியோ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஏப்ரல் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகிறது. புதிய ஆடியோ சாதனம் மழை, கூட்ட நெரிசல் மிக்க பகுதி, உடற்பயிற்சி, விளையாட்டு என பல செயல்களின் போது பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
 
நோக்கியா பிராண்டு விரைவில் ப்ளூடூத் வசதி கொண்ட நெக்பேண்ட் இயர்போன்களை ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. புதிய இயர்போன் ப்ளூடூத் 5.1 வசதி, குவால்காம் நிறுவனத்தின் ஆப்ட்எக்ஸ் ஹெச்டி ஆடியோ தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
 
இத்துடன் ரேபிட் சார்ஜிங் வசதி, பிளாக், புளூ மற்றும் கோல்டன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆடியோ சாதனம் தவிர ஏப்ரல் 8 ஆம் தேதி நோக்கியா எக்ஸ் சீரிஸ் மற்றும் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

பக்கம் 10 / 21