- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 156
உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் வியாழக்கிழமை ஒரு பிட்னஸ் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியின் உதவியுடன் நீங்கள் இதயத் துடிப்பை அளவிட முடியும். அது மட்டுமல்ல, நீங்கள் எரிக்கும் காலரியையும் அளவிடலாம்.
ஸ்மார்ட்போனின் கேமரா மூலம் இது செயல்படும். அடுத்த மாதத்திலிருந்து இந்த செயலியை பயன்படுத்த முடியும்.
ஸ்மார்ட்போன் சென்சாரை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் நடை தூரத்தைக் கண்டறிகிறது கூகிள் ஃபிட் செயலி. மேலும் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டறியலாம். கூகிள் பிக்சல் தொலைபேசியில் வரும் புதிய செயலியின் மூலம், உங்கள் பிட்னஸை தெரிந்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் தொலைபேசி லென்ஸில் விரல் வைக்க வேண்டும். சருமத்தின் நிறம் மாறும். இதன் அடிப்படையில், உங்கள் இதய துடிப்பு எவ்வளவு என்பதை கேமரா மூலம் அறிய முடியும். இதன் மூலம், நீங்கள் இதய துடிப்பு வீதத்தை அளவிட முடியும். பிட்டாக இருக்க இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதையும் இந்த செயலி விளக்குகிறது.
கூகிளின் ஃபிட் செயலில் சுவாசத்தை அளவிட, நீங்கள் கேமராவுக்கு முன்னால் நிற்க வேண்டும். நீங்கள் சுவாசிக்கும் போது கேமரா உங்களை கண்காணித்து உங்கள் சுவாச வீதம் எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்கும். இதன் மூலம் உங்கள் சுவாச வீதம், துடிப்பு மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றை விரைவாகக் கண்டறியும்.
மருத்துவரிடம் செல்லாமலேயே இதயத்துடிப்பு மற்றும் சுவாசவீதம் அறிந்து கொள்ளலாம் என்பது ஆச்சரியப் படக் கூடியது.


















