Editor's Choice

Amazon Redmi 9 Power வினாடி வினா ஜனவரி 23 முதல் அமேசான் பயன்பாட்டில் தொடங்கியது. பயனர்கள் சரியான பதில்களை அளிப்பதன் மூலம் வினாடி வினாக்களை வெல்ல முடியும்.  வினாடி வினாவில் ஐந்து கேள்விகள் உள்ளன, அவை Redmi 9 Power உடன் தொடர்புடையவை. கொடுக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான பதிலைக் கொடுத்தால், ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் வெல்ல முடியும்.

இந்த வினாடி வினா போட்டி பிப்ரவரி 14, 2021 வரை இயங்கும். இந்த வினாடி வினாவுக்கு மொத்தம் 9 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வினாடி வினாவின் பெயர் ‘Redmi 9 Power Quiz’. இந்த வினாடி வினா வெற்றியாளர் ஏப்ரல் 30ம் தேதி அறிவிக்கப்படுவார்.

Redmi 9 பவர் வினாடி வினாவில் பங்கேற்க தகுதி பெற, நீங்கள் வினாடி வினாவின் போது Amazon.in இல் பதிவு செய்ய வேண்டும். Amazon.in இல் உள்நுழைந்ததும், நீங்கள் Redmi 9 Power Quiz வினாடி வினா பக்கத்திற்குச் சென்று, அங்கு போட்டியில் 5 (ஐந்து) கேள்விகள் வெளியிடப்படுகின்றன.

கேள்வி 1- ரெட்மி 9 பவரின் பேட்டரி திறன் என்ன?
பதில் - 6000mAh பேட்டரி.

கேள்வி 2- ரெட்மி 9 பவரின் கேமரா அம்சங்கள் யாவை?
பதில் - இவை அனைத்தும்.

கேள்வி 3- ரெட்மி 9 பவரில் எந்த செயலி பயன்படுத்தப்படுகிறது?
பதில் - Qualcomm Snapdragon 662.

கேள்வி 4- ரெட்மி 9 பவர் வேகமாக சார்ஜ் செய்ய ஆதரிக்கிறதா?
பதில் - YES.

கேள்வி 5- ரெட்மி 9 பவரின் அம்சங்கள் யாவை?
பதில் - இவை அனைத்தும்.

Redmi 9 பவர் வினாடி வினாவில், நீங்கள் எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். உங்கள் எல்லா பதில்களும் சரியாக இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ஷ்ட டிராவிற்கு உரிமை கிடைக்கும், இது சரியான பதில்களை வழங்கிய பங்கேற்பாளர்களிடையே அமேசானால் செய்யப்படும். இதன் பின்னர், 9 வெற்றியாளர்களுக்கு Redmi 9 power வழங்கப்படும்.

Editor's Choice

பேருந்துகள், ரயில்களுக்காக காத்திருந்த காலம் மாறி தற்போது ஓலா, ஊபர் காலம் வந்துவிட்டது. விண்வெளி பயணத்திற்கும் ஒரு ஊபர் ராக்கெட் இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கான முயற்சியைத்தான் எலன் மஸ்கின் நிறுவனமான SpaceX எடுத்து வருகிறது.

உலகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலன் மஸ்க்கின் (Elon Musk) SpaceX விண்வெளி நிறுவனத்தின் ஒரு ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை 143 விண்கலங்களை விண்வெளியில் செலுத்தியது.  இது ஒரே மிஷனில் விண்வெளியில் அதிக விண்கலங்களை செலுத்துவதற்கான ஒரு புதிய சாதனையாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் உள்ள விண்வெளி வெளியீட்டு வளாகம் 40 இலிருந்து காலை 10 மணிக்கு பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் செலுத்தப்பட்டது. இது விண்வெளிக்கு செல்லும் வழியில் புளோரிடாவின் கிழக்கு கடற்கரையில் தெற்கே பறந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபயன்பாட்டுக்குரிய இந்த ராக்கெட் 133 வணிக மற்றும் அரசு விண்கலங்களையும் 10 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களையும் விண்வெளிக்கு கொண்டு சென்றது. இது நிறுவனத்தின் ஸ்மால்சாட் ரைட்ஷேர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சிறிய செயற்கைக்கோள் ஆபரேட்டர்களுக்கு, விண்வெளியின் சுற்றுவட்டப்பாதைகளுக்கு, நம்பகமான, மலிவான அணுகலை வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உலகளவில் பிராட்பேண்ட் இணையத்தை வழங்கத் தேவையான 800 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளி சுற்றுவட்டப்பாதைகளுக்கு SpaceX செலுத்துயது. இந்த துறையில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்தால் ஆண்டுதோறும் 30 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டக்கூடும் என்று நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எலன் மஸ்கின் ‘Starship’என்று பெயரிடப்பட்டுள்ள கோள்களுக்கிடையிலான ராக்கெட் திட்டத்திற்கு தேவையான நிதியைப் பெற எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

பிப்ரவரி 2017 இல் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. தற்போது, SpaceX நிறுவனம், 143 செயற்கைக்கோள்களை அடுத்தடுத்து விண்ணில் செலுத்தி புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட 143 செயற்கைக்கோள்களில் வணிக மற்றும் அரசாங்கத்தின் கியூப்சாட்கள், மைக்ரோசாட்கள், சுற்றுப்பாதை பரிமாற்ற வாகனங்கள் மற்றும் 10 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஆகியவை அடங்கும். ஒரே விண்வெளி பயணத்தில் பயன்படுத்தப்பட அதிக அளவிலான அதிகபட்ச விண்கலங்களாகும் இவை. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் இந்த தொகுதி விண்மீன் தொகுப்பில் துருவ சுற்றுப்பாதையில் வைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் கூட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

Itel தனது ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவை மற்றொரு புதிய வெளியீட்டுடன் வலுப்படுத்த தயாராக உள்ளது. ஆதாரங்களின்படி, நிறுவனம் பிப்ரவரி 1 ஆம் தேதி அமேசான் (Amazon) இல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்ட பிரீமியம் லுக் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக்கூடும். ரெண்டர் படங்களின்படி, ஏ சீரிஸ் போர்ட்ஃபோலியோவில் உள்ள Itel-ன் இந்த புதிய சாதனம் ஒரு பெரிய டிவைசாகவும் இரட்டை பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும். இந்த ஃபோனில் கவர்ட் டிஸ்பிளேவுடன் கூடிய 5.5 அங்குல பெரிய திரை இருக்கும்.

ஃபோனில் இரட்டை பாதுகாப்பு அம்சத்துடன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை இருக்கும். அதாவது, வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் கொண்டு இந்த ஸ்மார்ட்ஃபோனை (Smartphone) மிகச்சிறந்த அம்சங்களுடன் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஃபோன் ரூ .6,000 விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தனது முதன்மை Itel Vision 1 PRO மூலம், ரூ. 7,000த்தில் மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளில் ஒன்றாக மாற Itel முயற்சிக்கிறது. இதில பல பிரீமியம் அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த பிரிவில் உள்ள மிகச்சிறந்த தொலைபேசிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. Itel-இன் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நிறுவனம் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை (Technology) மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டயர்-3 இன் டிஜிட்டல் மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான சமீபத்திய கவுண்டர் பாயிண்ட் ஆய்வின் படி, Itel அதன் முதன்மை விஷன் தொடரில் Vision 1 ஐ அறிமுகப்படுத்தி டயர்-3, டயர்-4 நகரங்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் மலிவு விலையில், புதிய தலைமுறை ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கவுண்டர் பாயிண்ட் ஆய்வின் படி, இந்தியாவில் அதன் சந்தைப் பங்கு 6% முதல் 9% ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இது இந்தியாவின் ஒட்டுமொத்த மொபைல் ஃபோன் துறையில் முதல் 5 நிறுவனங்களில் இடத்தைப் பெற்றுள்ளது. வரவிருக்கும் காலங்களில், ITEL தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் எந்தெந்த புதிய அம்சங்கள் கொண்ட ஃபோன்களை கொண்டு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Editor's Choice

யானை எண்ணும் பணிகள் இயந்திர கற்றல் (Machine Learning) மூலம் செய்யப்படுகிறது. பலவிதமான பின்னணிகளில் யானைகளை அடையாளம் காண ஓர் அல்காரிதத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

"இது ஒரு யானை, இது யானை அல்ல என நாங்கள் சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்துக் கூறுகிறோம்" என பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஓல்கா இசுபோவா கூறினார்.

"இப்படிச் செய்வதன் மூலம், நம் சதாரணக் கண்களால் பார்க்க முடியாத சின்னச் சின்ன விவரங்களைக் கூட அடையாளம் காண இயந்திரத்துக்கு பயிற்சியளிக்க முடியும்" என்கிறார் ஓல்கா.

விஞ்ஞானிகள் முதலில் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அட்டோ தேசிய யானைகள் பூங்காவைப் பார்த்தார்கள்.

"இந்த யானைகள் பூங்காவில், யானைகள் அதிகளவில் வாழ்கின்றன" என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பாதுகாப்பு விஞ்ஞானி முனைவர் இஸ்லா டுபொர்கே கூறினார்.

"இங்கு மரம் அடர்ந்த பகுதிகளும், சவானா எனப்படும் மரம் அருகிய புல்வெளிகளும் உள்ளன. எனவே எங்கள் அணுகுமுறையை சோதிக்க இது ஒரு நல்ல இடம். இந்த முயற்சிக்கு இது ஒரு நல்ல சான்றாக அமைந்தால், இதை செயல்படுத்தத் தயாராகிவிடலாம்" என்கிறார் இஸ்லா.

"ஏற்கனவே பாதுகாப்பு அமைப்புகள் விமானங்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்பதற்கு பதிலாக, இந்த முறையைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளன" எனவும் கூறினார்.

வணிக செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்களைப் பெற, இயற்கை மற்றும் வன விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் பணம் செலுத்த வேண்டும்.

பல நாடுகளின் எல்லைகளை உள்ளடக்கிய யானைகளின் வாழ்விடங்களில் விமானங்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்பதற்கு அனுமதி பெறுவது மிகவும் சிக்கலானது. அப்படிப்பட்ட பகுதிகளில் அருகி வரும் யானைகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும் பணியை இது கணிசமாக மேம்படுத்தும்.

விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் பணிகளுக்கும் இதைப் பயன்படுத்தப்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

"இந்தப் படங்களை நீங்கள் விண்வெளியில் இருந்து எடுக்க முடியும் என்பதால், உங்களுக்கு யானைகள் நடமாடும் வனப்பகுதியில் ஆட்கள் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. குறிப்பாக கொரோனா வைரஸ் நெருக்கடி நிலவும் இந்த காலத்தில் இது மிகவும் உவியாக இருக்கும்" என்கிறார் முனைவர் இஸ்லா.

"விலங்கியலைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் மிகவும் மெதுவாக நகரும். எனவே விலங்குகளின் பாதுகாப்புக்கு அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருக்கிறது" என்கிறார் இஸ்லா.

செயற்கைக்கோள் படங்களை முதலில் பார்க்கும் போது பச்சை நிறப் பிளவுகளுக்கு மத்தியில், சாம்பல் நிறக் குமிழ்கள் இருப்பது போலத் தோன்றின. ஆனால், நெருக்கமாக அப்படத்தை ஆய்வு செய்தால், அக்குமிழ்கள் மரங்களுக்கிடையில் அலைந்து திரியும் யானைகள் எனத் தெரிய வந்தன.

விஞ்ஞானிகள் இந்த படங்களை ஆப்பிரிக்க யானைகளைக் கணக்கிட பயன்படுத்துகின்றனர்.

புவியின் மேற்பரப்பிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தன் சுற்று வட்டப்பாதையில் புவியைக் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களிலிருந்து இந்தப் படங்கள் வருகின்றன.

இந்த தொழில்நுட்பத்தால், மேக மூட்டம் இல்லாத ஒரு நாளில், 5,000 சதுர கி.மீ வரை யானைகளின் வாழ்விடத்தை கணக்கிடுவதற்கான சாத்தியமிருக்கிறது.

Editor's Choice

கடந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தார் face book நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க்.

"அமெரிக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி வேலை செய்கிறார்கள், எதிர்காலத்தைக் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய மக்களிடம் நிறைய பேச விரும்பினேன்" என தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும், மக்களுடன் பேச வேண்டும் என்பது தான் அவரின் இலக்கு.

அது 2020-ம் ஆண்டில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் அது தொடர்புடையது என சிலரால் பார்க்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்து மறுத்தார் மார்க்.

அவரை அமெரிக்க அதிபர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. அவரிடம் பணம், அதிகாரம் என எல்லாமே இருந்தது.

ரகசியமாக மார்க் அடைய விரும்பும் அல்லது அடைய விரும்பியதாக பலரும் நம்பும் அமெரிக்க அதிபர் பதவியை, இந்த வருடம் ஜோ பைடன் ஏற்றுக் கொண்டார்.

அப்படி பதவி ஏற்றுக் கொண்டதன் மூலம், சுக்கர்பெர்க்கு ஒரு தலைகீழ் மாற்றத்தை கொடுத்து முடித்தார் பைடன்.

"தொழில்நுட்ப முற்றொருமை நிறுவனங்களுக்கு மத்தியில், ஃபேஸ்புக் ஒரு முக்கிய வில்லனாகத் தான் பார்க்கப்படுகிறது."

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும், சிலிகான் வேலிக்கும் ஒபாமா நிர்வாகம் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பைடன் கூட அவர்களுக்கு நண்பர்களாக கருதப்பட்டிருக்கலாம், ஆனால் இப்போது இல்லை.

உண்மையில், இணையத்தின் தீமைகளுக்கான ஒரு சொல்லாகத் தான் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தினார் அதிபர் பைடன்.

ஒராண்டுக்கு முன் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய பைடன் "உங்களுக்குத் தெரிந்தது போல, நான் ஃபேஸ்புக்கின் பெரிய ரசிகனல்ல. நான் எப்போதும் மார்க் சுக்கர்பெர்க்கின் பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது. அவர் தான் உண்மையான பிரச்னை என நான் நினைக்கிறேன்," என்றார் பைடன்.

பைடன் மட்டும் அவ்வாறு கூறவில்லை. அவரின் தொலைத்தொடர்பு பிரிவின் துணை தலைவர் பில் ரஸ்ஸோவும் ஃபேஸ்புக்கிற்கு எதிரான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். "அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஃபேஸ்புக் தளத்தில் பரவும் போலிச் செய்திகள் ஒரு பிரச்னை என நீங்கள் கருதினால், இனி வருங்காலங்களில், ஃபேஸ்புக் எப்படி நம் நாட்டின் ஜனநாயகத்தை கிழித்தெரியும் என்பதைப் பொருத்திருந்து பாருங்கள்," பின் பில் ரஸ்ஸோ ட்வீட் செய்திருந்தார்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்தவைகளுக்கு ஃபேஸ்புக் தான் காரணம் என ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். குடியரசுக் கட்சியினர் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை இலக்கு வைத்து பிரசாரம் செய்தது, டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இதில் சில பழைய கணக்குகளைத் தீர்த்துக் கொள்வதும் அடக்கம்.

அது தான் திருப்புமுனை என்றால், ஜனநாயகக் கட்சி மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இடையிலான உறவு தற்போது இன்னும் மோசமாக இருக்கிறது. ஃபேஸ்புக் தன் தளத்தில் அனுமதித்த விஷயங்கள் குறித்து மொத்த ஜனநாயகக் கட்சியும், பைடன் உட்பட திகைத்துப் போயினர்.

2019-ம் ஆண்டு சிஎன்என் பத்திரிகையாளரிடம் பேசிய போது, "பேஸ்புக் தளத்தில் அவர்கள் செய்வது போல நீங்கள் செய்ய முடியாது. எதை வேண்டுமானாலும் கூறலாம். அது அடிப்படையில் தவறாக இருந்தால் நீங்கள் அதை ஒப்புக் கொள்ளக்கூட வேண்டாம். நிலைமை கைமீறி சென்றுவிட்டது." என ஃபேஸ்புக்கை சாடினார் பைடன்.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை மறுகட்டமைப்பது மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு பயனர்களுடன் இருக்கும் உறவுமுறையை மறுசீரமைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும். அது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பேரழிவைக் கொடுப்பதாக இருக்கும்.

சட்டப் பிரிவு 230 நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பது ஃபேஸ்புக்கின் முக்கிய பிரச்னையாக இருக்கும்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மீது, பயனர்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு வழக்கு தொடுப்பதிலிருந்து பாதுகாக்கும் சிறிய, ஆனால் முக்கியமான சட்டம் இது.

ஜோ பைடன் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்கிறார். உண்மையில், ஓர் ஆண்டுக்கு முன் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய போதே அதை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கூறினார்.

இது மார்க் சுக்கர்பெர்க்குக்கு பேரழிவைக் கொடுக்கும். திடீரென ஃபேஸ்புக் தளத்தில் பயனர்கள் பதிவிடும் அத்தனை விஷயத்துக்கும் மார்க் சுக்கர்பெர்க்கும் அவரது நிறுவனமும் பொறுப்பாகும். சட்டப் பிரிவு 230 ரத்து செய்யப்பட்டால் தற்போது ஃபேஸ்புக் செயல்படுவது போல செயல்படுமா என்பது சிரமமே.

இதற்கு முன்பு, மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம், ஃபேஸ்புக் நிறுவனம் மீது மத்திய வர்த்தக கமிஷன் மற்றும் 46 அமெரிக்க மாகாணங்கள் சட்டத்துக்கு முரணாக, தன் போட்டி நிறுவனங்களை வாங்கி, தன் முற்றொருமையை பராமரிப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது.

"ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றிய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் சேவைகளை" எல்லாம், முந்தைய நிலைக்குக் கொண்டு செல்லும் வழியைப் பார்ப்பதாக மத்திய வர்த்தக கமிஷன் கூறியுள்ளது. அதாவது ஃபேஸ்புக் நிறுவனத்தை உடைப்பது.

ஃபேஸ்புக் அதை நிச்சயம் எதிர்க்கும். ஆனால் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரிக்க விரும்புபவர்களுடன் கூட்டணி அமைக்க பைடன் விரும்புவார் எனத் தோன்றுகிறது.

"ஃபேஸ்புக் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உடைப்பது போன்ற விவரங்களில் நாம் உண்மையிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும்" என கடந்த 2019-ம் ஆண்டு கூறினார் பைடன்.

"ஆன்டி டிரஸ்ட் விதிமுறைகளை பைடன் அரசு மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன். ஜனநாயகச் சிக்கல் மட்டுமின்றி தனியுரிமை மற்றும் நுகர்வோர் நலம் சார்ந்த பிரச்னைகள் என பல பிரச்னைகள் இருக்கின்றன," என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஊடக சட்ட நிபுணர் ஜமீல் ஜாஃபர்.

அதிபர் பைடன், தொழில்நுட்ப நிறுவனங்களில் போட்டியை மீண்டும் கொண்டு வர, பிரத்யேகமாக ஒரு புதிய ஆன்டி டிரஸ்ட் சார் (Anti Trust Tsar) கொள்கையை கொண்டு வர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இப்போது ஜோ பைடன் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு என்ன செய்வதாக இருந்தாலும், ஃபேஸ்புக் நிறுவன சாம்ராஜ்யம் மற்றும் மார்க் சுக்கர்பெர்க்குக்கு எதிரான வெறுப்புணர்வைச் சுற்றியே அது இருக்கும்.

Editor's Choice

ஆன்லைன் கட்டண மோசடி சம்பவங்களில் இருந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி  ‘Airtel Safe Pay’ என்ற டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதற்கான இந்தியாவின் பாதுகாப்பான பயன்முறையை அறிமுகப்படுத்தியது.

‘Airtel Safe Pay’ மூலம், UPI அல்லது நெட்பேங்கிங் அடிப்படையிலான கட்டணங்களை Airtel பேமண்ட்ஸ் வங்கி மூலம் செலுத்தும் Airtel வாடிக்கையாளர்கள், இனி அவர்களது வெளிப்படையான அனுமதியின்றி தங்கள் கணக்குகளை விட்டு பணம் வெளியேறுவது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

Airtel Safe Pay முற்றிலும் இலவசமானது. Airtel Thanks App-ன் முகப்புத் திரை மூலமாகவோ அல்லது பேங்கிங் செக்ஷனிலிருந்தோ இதை ஆக்டிவேட் செய்யலாம்.

“டிஜிட்டல் முறை கட்டணங்கள், குறிப்பாக தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் வழக்கமாகி விட்டதால், வேகமாக வளர்ந்து வரும் மோசடிகளின் சவாலுக்கும் நாம் தீர்வு காண வேண்டும். நாங்கள் அறிமுகப்படுத்தும் இந்த தனித்துவமான அம்சம், airtel வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளில் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய முடியும்.

“Airtel Safe Pay எங்களது அடுத்த புதுமையான முன்முயற்சியாகும். இதில், எங்கள் பாதுகாப்பான இணைப்புகளும் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் தளங்களும் இணைந்து ஒரு தனித்துவமான சந்தை சிக்கலைத் தீர்க்கின்றன.

 ‘Airtel Safe Pay’-வை பயன்படுத்தி, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்கள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை (Digital Payments) செலுத்துவதோடு பாதுகாப்பாக பணத்தையும் அனுப்பலாம்.

சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்கள் Airtel Payments Bank கணக்கை திறக்கலாம். Airtel Thanks App மூலம் ஒரு வீடியோ கால் செய்து கணக்கை திறக்க முடியும். அதன் பின்னர், அவர்கள் பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் கட்டணங்களை செலுத்திக்கொண்டே பல நன்மைகளையும் அனுபவிக்கலாம். 

பக்கம் 50 / 74