Editor's Choice

ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.  தங்கள் லேப்பில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது. அட்டைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

Editor's Choice

வேகமாக வளரும் தொழில்நுட்பங்களில், மூளைக்கும் கணினிக்கும் இடைமுகம் ஏற்படுத்தும் நுட்பமும் ஒன்று. 'பேஸ்புக்', தனது பயனாளிகளின் மனதைப் படிக்க ஒரு இடைமுகத்தை ஆராய்ந்து வருகிறது. எலான் மஸ்கிற்கு சொந்தமான, நியூராலிங்க், மனித மூளைக்குள் ஒரு சிறு கருவியை பதித்து, மூளைத் திறனை பன்மடங்காக்க முயன்று வருகிறது.

இந்த நுட்பங்களுக்காக, மூளை அல்லது மண்டையோடு அருகே கருவிகளை பதிக்க வேண்டி உள்ளது. இதற்கு மாற்றாக, நடைமுறை மீயொலி இருக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சியாளர்கள், மூளையின் இயக்கத்தை, நடைமுறை மீயொலி அலைகள் துல்லியமாக படம்பிடித்துவிடும் என கூறுகின்றனர்.

இதன் மூலம், ஒரு குரங்கின் மூளையை, நடைமுறை மீயொலி கருவி மூலம் கண்காணித்தால், அது அடுத்து எந்த திசையில் கண்களை திருப்பும், எந்தக் கையால் பொருளைத் தொடும் என்பவைகளை இயக்கப்படங்களாக எடுக்க முடியும். இந்தப் படங்களை செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களிடம் கொடுத்தால், 89 சதவீதம் வரை துல்லியமாக, குரங்கின் அடுத்த அசைவுகளை கணிக்க முடிவதாக, ஆய்வாளர்கள் நியூரான் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்து உள்ளனர்.

Editor's Choice

கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கிளை நிறுவனமான ஜெட் புரோஃபல்யூஷன் லேபரட்டரி, 'இன்சைட் ரோவர்' என்கிற சிறிய ரக ரோவர்-ஐ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

இரண்டு ஆண்டுகளாக இந்த சிறிய கருவி செவ்வாய் கிரகத்தின்மீது அமர்ந்துள்ளது. அங்கு இருக்கும் முக்கிய தகவல்களைத் திரட்டி அவ்வப்போது நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவரும் இந்த சிறிய ரக ரோவர் சமீபத்தில் நாசாவில் நில அதிர்வு ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளது.

ஒரு கிரகத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத் தகடுகளின் நகர்வால் நில அதிர்வு ஏற்படும். இது அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும். பூமியில் ஏற்படும் நில அதிர்வு போல செவ்வாய் கிரகத்திலும் 3.3 மற்றும் 5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் சர்பேரோஷ் ஃபோசா என்கிற பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர். 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா கனவுத் திட்டமாக வைத்துள்ளது. இதனை நிறைவேற்ற இந்த சிறிய தகவல்களே நாசா விஞ்ஞானிகளுக்கு உதவிவருகின்றன.
Editor's Choice

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS)  கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு புதிய திரிபு வகை, ஒரு புதிய நம்பிக்கையை விண்வெளி வீரர்களுக்கு கொடுத்துள்ளது. 

விண்வெளியில் இருக்கும் வீரர்கள்,  தங்கள் தேவையான காய்கறிகளை தாங்களே பயிரிட்டு வளர்த்துக் கொள்ளலாம் என்று ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (JPL) இணைந்து  மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது

விண்வெளியில் நிலவும் தனித்துவமான சூழ்நிலையில், தாவரங்கள் வளர உதவும் எரிபொருளை உருவாக்க, இந்த  புதிய பாக்டீரியா திரிபு வகை  உதவக்கூடும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தலைமையில், தாவர வளர்ச்சியை மேம்படுத்தும் பாக்டீரியா மற்றும் தாவர நுண்ணுயிரிகளை ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அப்பா ராவ் பொடில், CSIR அமைப்பை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ராம்பிரசாத் ஆகியோர் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

மெத்திலோபாக்டீரியாசி வகையில் சேர்ந்த இந்த பாக்டீரியா விகாரங்கள் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்யப்பட்டன

ஒரு திரிபு மெத்திலோரூப்ரம் ரோடீசியம்  என அடையாளம் காணப்பட்டாலும், மற்ற மூன்று முன்னர் கண்டுபிடிக்கப்படாத புதிய  இனத்தைச் சேர்ந்தவை.

மரபணு பகுப்பாய்வுகள் அவை மெத்திலோபாக்டீரியம் இன்டிகத்துடன் நெருக்கமாக தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்தின.

Editor's Choice

நாம் தவறுதலாக எதையாவது, 'டுவீட்' செய்துவிட்டால், அதை அழிக்கவோ; தடுக்கவோ முடியாமல் போய்விடும். இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், டுவிட்டர் நிறுவனம், 'அன்டு டுவீட்' எனும் வசதியை வழங்கும் முயற்சியில் இருக்கிறது.

குறிப்பாக, இந்த வசதியை அதனுடைய பணம் செலுத்தி சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்காக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த, அன்டு டுவீட் வசதியை, டுவீட் செய்த குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பயன்படுத்தி கொள்ளலாம். கருத்துக்களைவிட, 'டைப்' செய்யும் போது ஏற்படும் எழுத்துப் பிழை உள்ளிட்ட காரணங்களால், தாங்கள் செய்த டுவீட்டை அழிக்க விரும்பும் நபர்களே அதிகமாக இருப்பதாக, டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

Editor's Choice

கூகுள் தளத்தில்  வெளியிடப்படும், தங்கள் உள்ளடக்கங்களுக்காக பணம் செலுத்த வேண்டும்  உலகின் மிகவும் பிரபலமான  தேடுதல் தளமான கூகிளை ஐரோப்பிய ஊடக நிறுவனங்கள் கோரி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய செய்தி நிறுவனங்களுக்கும் Google நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 

கூகிள் நியூஸ் ஷோகேஸ் என்பது செய்தி வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்திற்கு ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான ஒரு உலகளாவிய தயாரிப்பு ஆகும். இதில் கூட்டாளி உறவு உள்ள செய்தி வெளியீட்டு நிறுவனங்களுக்கு, அவர்கள் உள்ளடக்கத்தை நிர்வகிக்கவும், பயனர்களுக்கு பணம் செலுத்துவதன் அடிப்படையில்,  மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை வழங்கவும் அனுமதிக்கும் புதிய சேவையாகும்.

கூகிள் அக்டோபரில் ஷோகேஸ் வழியாக வெளியிடப்படும் செய்திகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகளவில் செய்தி வெளியிட்டு நிறுவனங்களுக்கு  ஒரு பில்லியன் டாலர் செலுத்த திட்டமிட்டுள்ளது, இது முதலில் ஜெர்மனியில், பின்னர் பெல்ஜியம், இந்தியா, நெதர்லாந்து மற்றும் பிற நாடுகளில் தொடங்கப்படும்.

கூகிள் நிறுவனத்துடன் ஆர்.சி.எஸ் மீடியா குழுமம் உட்பட பல இத்தாலிய செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டன.  ஆர்.சி.எஸ் மீடியா குழுமம் தினமும், கொரியேர் டெல்லா செரா  மற்றும் பிரபலமான விளையாட்டு நாளேடான காஸெட்டா டெல்லோ ஸ்போர்ட், நிதி செய்தி வெளியீட்டாளரான  Il Sole 24 ore மற்றும் ரோம் சார்ந்த செய்தி நிறுவனமான, Caltagirone editore  ஆகியவற்றின் செய்திகளை வெளியிடுகிறது.

இந்த ஒப்பந்தங்களில் 13 இத்தாலிய நிறுவனக்கள் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன, கூகிள் ஷோகேஸ் பயனர்கள்,  76 தேசிய மற்றும் உள்ளூர் செய்தி நிறுவனக்களின் உள்ளடக்கத்தை அணுகலாம்.

அமெரிக்க தொழில்நுட்பக் குழு ஜெர்மனி, பிரேசில் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பிற செய்தி நிறுவனங்களுடன் இதேபோன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 11 / 21