Editor's Choice

கரீபியன் தீவில், பஹாமாஸ் நாட்டில் உள்ள ஒரு கடற்கரையில் 41 கிலோகிராம் எடையுள்ள ஒரு மர்மமான டைட்டானியம் பந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பந்தில் ரஷ்ய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள அடையாளம் தெரியாத டைட்டானியம் பந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த பந்து விண்கலத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, ஆர்டிக் கண்டத்தில் நிகழும் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளித் துறை ஆர்க்டிகா- எம் என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்டிக் கண்டத்தில் பெரிய பனிப் பாறை உருகும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது.இந்த நிலையில் ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளித் துறை ஆர்க்டிகா- எம் என்ற செயற்கைகோளை உருவாக்கியது.கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து, சோயூஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைகோள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக ரஷ்ய விண்வெளித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

Editor's Choice

தி கெட்டவே பவுண்டேஷன் என்கிற இந்த நிறுவனம் வளிமண்டலத்திற்கு வெளியே உலகைச் சுற்றி வரும் ஓர் உணவு விடுதி அமைக்க கடந்து 2019ஆம் ஆண்டு திட்டமிட்டது.

அன்றுமுதல் இதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. இந்த உணவு விடுதி அமைக்க எட்டு வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டது. 2027-ஆம் ஆண்டு இந்த உணவு விடுதி அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. வாயக்கர் ஸ்டேஷன் என்று பெயரிடப்பட்ட இந்த உணவு விடுதி மின்தூக்கி வசதி கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உணவு விடுதியை உருவாக்கிய நிறுவனத்தின் நிறுவனர் ஜான் பிளிங்கோ ஒரு முன்னாள் விமானி ஆவார். விமானியாக இருந்த போதே விண்வெளியில் பறக்கும் இந்த உணவு விடுதியை உலக நாடுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் உருவாக்கி சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார் ஜான்.

அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் ஒன்றை அனுப்பி சோதனை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து வளிமண்டலத்திற்கு வெளியே இந்த உணவு விடுதியை அமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Editor's Choice

இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு தெரியாமல் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவதாக ஒரு இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெளியான ஆய்வறிக்கையில், ‘திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களில் சுமார் 48 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்களில் தாய்மை அடைந்தவர்களும் உள்ளனர். இந்தியாவில் நடத்திய ஆய்வில் 30 முதல் 60 வயதுடைய பெண்கள் பங்கேற்றனர்.

இவர்களில் 78 சதவீதம் பேர் நன்கு படித்தவர்கள், 74 சதவீதம் பேர் படிக்காதவர்கள். திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஆண் மீது பெண்களுக்கு ஏற்படும் மோகத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கணவர் மீதான அதிருப்தி, மனம் விரும்பாத ஒரு வாழ்க்கை துணை உள்ளிட்டவையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, தனக்கு ஏற்ற அழகு, தன்னுடயை துணையிடம் இல்லை என்ற எண்ணமும், தன்னுடனான பாலியல் உறவை திருப்தி படுத்தாததும் காரணமாக கூறப்படுகின்றன. இதுவே தங்களது கணவர்களை வெறுக்க பெண்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது. இதுபோன்று பல்வேறு காரணங்களை சொல்லி திருமணத்தை மீறிய உறவை இந்திய பெண்கள் நியாயப்படுத்துகின்றனர்.

கடந்தாண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி, இந்தியாவில் திருமணமானவர்களில் கிட்டத்தட்ட 56 சதவீதம் பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டனர். 25 மற்றும் 50 வயதிற்குட்பட்ட 1,525 திருமணமான இந்தியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 48 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் காதலித்துள்ளனர். பணிக்காக வெளியூர் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் திருமணமான பெண்கள், அவர்களும் பணியாற்றும் சிலர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் உறவு வைத்திருப்பதாக கூறினர். அதேபோல் டிக்டாக் போன்ற செயலி, சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் ஆண்களிடம் குடும்ப பெண்கள் சிலர் சிக்கியதாக கூறினர்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Editor's Choice
சிலசமயங்களில் கனவுகளில் தோன்றும் சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடக்கப்போவதை உணர்த்தும். அந்த வகையில் கனவுகளில் பெண்கள் தோன்றுவது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அப்படி பெண்கள் கனவில் தோன்றும்போது அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் உங்களுக்கு நடக்கப்போவதை உணர்த்தும். இந்த பதிவில் பெண்கள் கனவில் தோன்றும்போது அவை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
 
உங்கள் கனவில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு நகையை பரிசளிப்பது போலவோ அல்லது கையில் கொடுப்பது போலவோ வந்தால் உங்கள் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சினை வரப்போகிறது என்று அர்த்தம்.
 
கனவில் மணமகள் அழுவது போன்று வந்தால் அது மிகவும் மோசமான அறிகுறியாகும். இப்படி கனவு வந்தால் உங்களுக்கு சகோதர உறவுகளுடன் பிரச்சினை வரப்போகிறது என்று அர்த்தம்.
 
உங்கள் மனைவி அல்லது காதலியை தவிர வேறு ஒரு பெண் உங்கள் பால் ஈர்ப்பு கொண்டால் நீங்கள் உங்கள் மரியாதையையும், கௌரவத்தையும் இழக்கப்போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்கள் பூர்வீக சொத்தை இழக்கவும் நேரலாம்.
 
பெரும்பாலும் பெண்கள் நிர்வாணமாக இருப்பது போன்ற கனவுகள் ஆண்களுக்கு வரலாம். சிலசமயம் நம்மை நாமே மூன்றாவது நபராக பார்க்க நேரிடலாம். எனவே உங்கள் கனவில் நீங்களே உங்களை பார்க்கும்போது, ஏதேனும் ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்க்க நேர்ந்தால், உங்கள் அதிர்ஷ்டம் அனைத்தும் உங்களை விட்டு சென்று துரதிர்ஷ்டமாக மாற போகிறது என்று அர்த்தம்.

ஒரு பெண் அரங்கத்திலோ, மேடையிலோ அல்லது சாலையிலோ ஆடுவதை கனவில் கண்டால் அது கூறவருவது என்னவென்றால் உங்கள் திருமண உறவோ அல்லது காதல் உறவோ முறிய போகிறது என்று அர்த்தம்.

நீங்கள் உங்கள் மனைவியுடனோ அல்லது வேறு யாராவது அவர் துணையுடனோ பயணம் செய்வது போல கனவு கண்டால் உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக இருக்க போகிறது என்று அர்த்தம். மேலும் உங்கள் வீட்டில் விரைவில் குழந்தை செல்வம் வரப்போகிறது என்பதன் கூட அடையாளமாக இருக்கலாம்.

இது மிகவும் அதிர்ஷ்டமான கனவாகும். ஏனெனில் உங்கள் கனவில் ஒரு பெண் விளையாடுவது போல காட்சிகள் வந்தால் நீங்கள் விரைவில் பெரிய செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் ஒரு பெண்ணுக்கோ அல்லது உங்களுக்கு ஒரு பெண்ணோ Bye சொல்லி பிரிவது போல தோன்றினால் விரைவில் உங்கள் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
 
வெள்ளை உடையணிந்த பெண்ணை உங்கள் கனவில் பார்த்தால் மகிழ்ச்சியாக இருங்கள். ஏனெனில் வெள்ளை உடையணிந்த பெண் உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்று அர்த்தம்.
 
உங்கள் கனவில் தேவதைகளை பார்க்க நேர்ந்தால் அது உங்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது எனவும் உங்களுக்கு எந்தவித தீங்கும் நேரப்போவதில்லை என்று புரிந்து கொள்ளுங்கள். சொல்லப்போனால் உங்கள் வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டம் இருக்கப்போகிறது என்று அர்த்தம்.
 
Editor's Choice

இந்தாண்டு இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என்றும், ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பிளே ஆப் போட்டிகள் மற்றும் மே 30ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, ஆமதாபாத் என மொத்தம் 6 மைதானங்களில் 56 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மைதானத்திலும் தலா 10 போட்டிகள் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 
 
Editor's Choice

திருமணம் முடிந்து பெண்ணை அழைத்துச் செல்லும்போது, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் சோர்வான மணமகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.  

உணர்ச்சி ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் காரணமாக மாரடைப்பு ஏற்படக்கூடும். இது ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறனை முடக்கும். மகிழ்ச்சியான திருமண வீட்டின் குதூகலம் சோகமாக மாறிய நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்தது. 

ஒடிசாவின் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த மணமகள் குப்தேஸ்வரி சாஹூ பெண் அழைப்பு சடங்கின்போது, குடும்பத்தை விட்டு பிரியமுடியாமல் அழுதிருக்கிறார். ஒரு கட்டத்தில் விக்கி விக்கி அழுத அவர் திடீரென்று மயக்கமடைந்துவிட்டார்.

மணமகள் ரோஸி, மயக்கமடைந்தவுடன், கூடியிருந்த உற்றார் உறவினர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார்கள். ஆனால், ரோஸிக்கு மீண்டும் சுயநினைவு வரவேயில்லை.

உடனே ரோஸி துங்குரிபள்ளு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணமகள் ரோஸி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறப்புக்கான காரணம் இதய செயலிழப்பு என அடையாளம் காணப்பட்டது.

உணர்ச்சி ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் காரணமாக மாரடைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர் கூறினார்.

 

பக்கம் 20 / 74