Editor's Choice

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் படைத்த நாள் மார்ச் 7. இவர் 1987-ம் ஆண்டு அகமதாபாத் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை படைத்தார்.

கிரிக்கெட் உலகில் கவாஸ்கர் கால்பதித்த நாட்களில் பந்துவீச்சாளர்களின், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் கையே ஓங்கி இருந்தது. இந்த காலகட்டத்தில் அவர்களை எதிர்த்தும் ரன்களைக் குவிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் சுனில் கவாஸ்கர். சர்வதேச அரங்கில் ‘லிட்டில் மாஸ்டர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது தொடர் சாதனைகள் இந்தியாவுக்கு பெருமையை பெற்றுத் தந்தன.

ஆரம்ப கட்டத்தில் கிரிக்கெட் உலகில் வேகமாக முன்னேறிய கவாஸ்கர், தன் இறுதிக் காலத்தில் கொஞ்சம் தடுமாறத் தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விடலாமா என்றுகூட அவர் யோசித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் யாரும் செய்ய முடியாத சாதனையை, 10 ஆயிரம் ரன்களை எட்ட வேண்டும் என்ற லட்சியம் அவரை தொடர்ந்து ஆடவைத்தது.

1987-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி அவரது ஆசை நிறைவேறியது. இப்போட்டியில் அரைசதம் அடித்த கவாஸ்கர், 58 ரன்களை எட்டிய நிலையில், 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். பேட்டைத் தரையில் ஓங்கி அடித்து தனது மகிழ்ச்சியை கவாஸ்கர் வெளிப்படுத்த, பாகிஸ்தான் வீரர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் கரகோஷத்துடன் அவரை வாழ்த்தினர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் அடுத்த சில நாட்களில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார் கவாஸ்கர்.

Editor's Choice

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏராளமான மக்கள் உயிர் இழந்தனர். பலருக்கு வாழ்நாள் முழுவதற்குமான உடல் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. உலக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த வைரசைப் பற்றி முன்னரே அறிந்திருந்தும், சீனா இதைக் குறித்த எச்சரிக்கையை உலகுக்கு அளிக்காமல் மறைத்து விட்டது. சீனா செய்த இந்த தவறுக்கான விளைவுகளை மனித இனமே இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் உருவாகி பரவியதன் யதார்த்தத்தை வெளிக்காட்டிய பத்திரிகையாளர் ஜாங் ஜான் சிறையில் உள்ளார். சிறையில் இருந்து அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில் வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனை நடைபாதையில் வரிசையாக நோயாளிகள் இருந்த காட்சிகளை ஜாங் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

மற்றொரு வீடியோவில், அவர் மருத்துவமனையை படம் பிடிப்பைத் தடுக்க முயன்ற ஒரு பாதுகாப்பு அதிகாரியை ஜாங் அமைதியாகக் கையாள்வதைக் காண முடிந்தது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு, 37 வயதான அவருக்கு சண்டைகளைத் துவக்கி பிரச்சனைகளை உருவாக்கியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத தண்டனையை எதிர்த்து அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால், ஜாங் மிகவும் மெலிந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கிறார் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நாசி குழாய்கள் வழியாக அவருக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்கப்பட்டதாக வழக்கறிஞர் கூறினார்.

"சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து, அவர் தனது சட்டவிரோத தண்டனைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறார்," என்று ஜாங்கிற்காக போராடும் சட்டக் குழுவின் உறுப்பினர் கூறினார்.

சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து சீன அரசாங்கம் செய்வது தவறு என்பதையும், தனக்கு இழைக்கப்பட்ட தண்டனை சட்டத்தையும் தனி மனித உரிமையையும் மீறும் வகையில் உள்ளது என்பதையும் அவர் எடுத்துக்காட்ட விரும்புகிறார்.

Editor's Choice

டென்னிஸ் உலகைக் கட்டி ஆண்ட மகாராணி என்று மார்ட்டினா நவரத்திலோவாவை சொல்லலாம். ஒற்றையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன், 167 தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற மார்ட்டினா நவரத்திலோவா, இரட்டையர் பிரிவில் 177 பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் வீராங்கனைகளிலேயே 10 மில்லியன் டாலர்களை சம்பாதித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை 1986-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி அவர் பெற்றார்.

செக் நாட்டில் உள்ள பரேக் நகரில் 1956-ம் ஆண்டு பிறந்தவர் மார்ட்டினா நவரத்திலோவா. அவரது தந்தை மிரோஸ்லாவ் சுபெர்ட். மார்ட்டினாவின் தாயார் ஜானா சுபெர்ட், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ் மற்றும் ஸ்கீயிங் ஆகிய போட்டிகளில் வல்லவராக இருந்தார். மார்ட்டினாவின் பாட்டியும் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு செக் நாட்டுக்காக பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் ஆடியுள்ளார். மார்ட்டினாவுக்கு 3 வயதாக இருந்தபோதே, அவரது பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, நவ்ரெட்டில் என்பவரை மார்ட்டினாவின் தாயார் திருமணம் செய்துகொண்டார்.

மார்ட்டினாவின் தாயார், தனது மகளையும் தன்னைப்போலவே விளையாட்டு வீராங்கனையாக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் 4 வயது முதலே அவருக்கு டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி கொடுத்தார். ஆரம்ப காலகட்டங்களில் தனது பாட்டி பயன்படுத்திய மரத்தால் ஆன டென்னிஸ் ராக்கெட்டையே மார்ட்டினாவும் பயன்படுத்தி வந்துள்ளார். அம்மா, பாட்டி தந்த ஊக்கத்தால், வேகமாக முன்னேறிய மார்ட்டினா நவரத்திலோவா, தனது 15-வது வயதிலேயே செக் நாட்டின் தேசிய டென்னிஸ் சாம்பியன் ஆனார். இதைத் தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய மார்ட்டினா நவரத்திலோவா, 1980-களில் டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக பவனி வந்தார்.

Editor's Choice

அனா எஸ்ட்ராடா (Ana Estrada) என்ற பெரு நாட்டுப் பெண்ணுக்கு இந்த இறக்கும் உரிமை கிடைத்துள்ளது. ரோமானிய கத்தோலிக்க நாடான பெருவில், கருணைக்கொலை சட்டவிரோதமானது.

படுத்த படுக்கையாக இருக்கும் எஸ்ட்ராடா, எழுந்து நடமுடியாத நிலையில் இருக்கிறார். நோயால் முடங்கி படுக்கையில் இருந்து கஷ்டப்படுவதற்க்கு பதிலாக தான் இறக்க விரும்புவதாக இந்தப் பெண் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வந்த நிலையில்,  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என பெரு நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்தார். 

"இது ஒரு தனிப்பட்ட வழக்காக இருந்தாலும், இது ஒரு முன்னுதாரணமாக செயல்படும் என்று நம்புகிறேன்" என்று 44 வயதான எஸ்ட்ராடா செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

"கண்ணியமான மரணத்திற்கு" உரிமை உண்டு என்று தீர்ப்பளித்த பெரு நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

"இந்த தீர்ப்பு எனக்கு மட்டுமல்ல, என்னை உதாரணமாகக் கொண்டு, பெருவில் சட்டம் மற்றும் நீதியில் ஒரு மாற்றம் வருவதற்கான காரணகர்த்தாவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்" என்று எஸ்ட்ராடா கூறினார்.

எஸ்ட்ராடா மூன்று தசாப்தங்களாக பாலிமயோசிடிஸ் (polymyositis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குணப்படுத்த முடியாத நோயாகக் கருதப்படும் இது படிப்படியாக தசைகளைத் தாக்குகிறது. எஸ்ட்ராடாவுக்கு சுவாசிக்க ஒரு சுவாசக் கருவி தேவைப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்ட்ராடா "நேரம் வரும்போது" இறக்கும் உரிமைக்கான தனது சட்டப் போரைத் தொடங்கினார்.

கருணைக்கொலை உலகம் முழுவதும் விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது, பெரு உட்பட பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில், கொலம்பியா மட்டுமே இந்த நடைமுறையை அதுவும் சில நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கிறது. 

எஸ்ட்ராடாவின் மரணத்திற்கு தேவையான அனைத்து நிபந்தனைகளையும் மாநில சுகாதார காப்பீட்டாளர் எஸ்ஸாலுட் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நிறைவு செய்ய அந்தப் பெண் முடிவு செய்ததிலிருந்து 10 நாட்களுக்குள் இவை அனைத்தும் நடக்க வேண்டும்.  

இந்த விவகாரம் பற்றி பேசிய எஸ்ஸலுட் சுகாதார காப்பீட்டு நிறுவனம், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு நெறிமுறையை உருவாக்க மருத்துவ கமிஷன்களை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இறப்பதற்கு மற்றவர்களுக்கு உதவுவதை உள்ளூர் சட்டம் தடை செய்திருந்தாலும், எஸ்ட்ராடாவுக்கு உதவி செய்த யார் மீதும் எந்தவித குற்றச்சாட்டுகளும் இருக்காது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Editor's Choice

கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங், Friendship என்ற ரொமாண்டிக் மற்றும் காமெடி கலந்த தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழில் தயாராகும் திரைப்படம் இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்படும். இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி சக்கைப்போடு போட்டுவருகிறது. இதனால் தான் ஹர்பஜன் சிங் முழு நேர நடிகராகிவிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்னமும் ஹர்பஜன் சிங் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன் சிங்கின் திரைப்பட டீஸரை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரய்னா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழகத்தில் பிரபலமானவர். இந்த திரைப்படத்தில் பஞ்சாபிலிருந்து வந்த கல்லூரி மாணவராக நடிக்கிறார் ஹர்பஜன். அது மட்டுமல்ல, ஒரு பிரபல மற்றும் முன்னணி கிரிக்கெட் வீரர் இந்திய திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை.

சூப்பர் ஸ்டார் கீதம் என்ற தலைப்பில் நடிகர் சிலம்பரசன் பாடிய இந்த படத்தின் முதல் தனிப்பாடல் 2020 ஜூலை 3 ஆம் தேதி ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு யூடியூபில் வெளியிடப்பட்டது.

Editor's Choice

கூகுள் சமீபத்தில் 164 பயன்பாடுகளை 100 மில்லியனுக்கும் அதிகமான முறை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது. CopyCatz Apps என அழைக்கப்படும் இந்த செயலிகள் பதிவிறக்க முக்கியமான செயலிகளை நகலெடுக்கின்றன. பின்னர் இவைகள் டவுன்லோட் செய்த பயனர்களை விளம்பரங்களால் மூழ்கடிக்கின்றன.

அப்படியான விளம்பரங்கள் மால்வேர் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறன்களை கொண்டிருக்கும்.

கூகிள் இந்த பயன்பாடுகள் அனைத்தையும் அதன் கோப்பு அங்காடியிலிருந்து அகற்றிவிட்டாலும், அத்தகைய பயன்பாடுகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் நிறுவிய பயனர்கள், கவனக்குறைவாக, தங்கள் சாதனத்திலிருந்து உடனடியாக நிறுவல் நீக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே நீங்கள் உடனடியாக அகற்ற வேண்டிய 37 பயன்பாடுகளின் முழுமையான லிஸ்ட் இதோ:
01. WiFi Key – Free Master WiFi
02. Super Phone Cleaner 2020
03. Repair System for Android and Speed ​​Booster
04. Secure Gallery Vault: Photos, Videos Privacy Secure
05. Ringtone Maker – MP3 Cutter
06. Name Art Photo Editor
07. Smart Cleaner – Battery Saver, Super Booster
08. Rain Photo Maker – Rain Effects Editor
09. Chronometer
10. Largest Alarm Clock
11. Ringtone Maker Ultimate New Mp3 Cutter
12. Video Music Cutter and Merge StudioWifi File Transfer 2019
13. WiFi File Transfer 2019
14. Wifi Speed ​​Test
15. WPS WPA WiFi Test
16. Lock App with Password – Apply to All App Protector
17. Photo Editor Awesome Frame Effect 3D
18. Loved’s Memory 2020 – Love Counter with Together
19. Magnifying zoom + flashlight
20. Max Cleaner – Speed ​​Booster Pro 2021
21. Motocross Racing 2018
22. Knox Cool Master – Cool Down 2020
23. OS 13 Launcher – Phone 11 Pro Launcher
24. OS Launcher 12 for iPhone X
25. Battery Saver Pro 2020 – New Power Saver
26. Block Puzzle 102 New Tentris Mania
27. DJ Mixer Studio 2018
28. GPS Speedometer
29. Graffiti Photo Editor – Graffiti Maker
30. iSwipe Phone X
31. 3D Photo Editor
32. 3D Tattoo Photo Editor and Ideas
33. Applock 2020 – App Locker and Privacy Guard
34. AppLock New 2019 – Privacy Zone and lock your apps
35. Assistive Touch 2020
36. Audio Video Editor
37. Audio Video Mixer

பக்கம் 19 / 74