Editor's Choice

டோக்கியோவில் வரும் ஜூலையில் துவங்க உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் துவங்கியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. கடந்த 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. அட்டவணைப்படி 2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.

கொரோனா பரவலால் 2020ம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 24ம்தேதி முதல் செப்.5ம் தேதி வரை பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும் துவக்க விழாவில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் நிகழ்ச்சியும், இந்த முறை பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்தால், அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதற்கான மருத்துவ வசதிகளை பெரிய அளவில் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். மேலும்  புகுஷிமாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி, எவ்வித ஆரவாரமும் இல்லாமல் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற உள்ள விளையாட்டு வீரர் உட்பட நிர்வாகிகள் சிலரே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

ஒளிப்பதிவு கருவிகளில், ஜூம் லென்ஸ் எனப்படும், வெகு தொலைவு காட்சி ஆடிகள் மிகவும் சிக்கலானவை. இந்த ஆடியை திருகி, முன், பின்னாக நகர்த்தினால்தான் படங்களின் துல்லியத்தை, காட்சியின் விரிவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.

ஆனால், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய - எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள லென்ஸ் வித்தியாசமானது.

பழைய 'சிடி' மற்றும் 'டிவிடி' தயாரிக்க பயன்படும் ஜெர்மானியம், ஆன்டிமனி, டெலுரியம் ஆகியவற்றுடன், புதிதாக செலினியம் என்ற வேதிப் பொருளையும் கலந்து, புதிய ஆடியை, எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

இந்த ஆடி மீது வெப்பத்தை செலுத்தினால், அதை அசைக்காமலேயே, காட்சியில் மாற்றங்களை கொண்டுவர முடியும். அதே சமயம், ஆடியின் கண்ணாடித் தன்மையில், எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆடியின் குவியப் புள்ளி மட்டும் வெப்பத்திற்கேற்ப மாறுகிறது. இது ஜூம் லென்சின் வேலையை கச்சிதமாக செய்யப் போதுமானது.

இந்நுட்பம் ட்ரோன்கள், செல்போன்கள், இரவு பார்வை கருவிகள் போன்றவற்றுக்கான, சிறிய ஜூம் லென்சுகளை தயாரிக்க வருங்காலத்தில் பயன்படும். இக்கண்டுபிடிப்பை பற்றிய ஆய்வுக் கட்டுரை, 'நேச்சர் கம்யூனிகேசன்ஸ்' இதழில் வெளிவந்துஉள்ளது.

Editor's Choice

ஆதார் அட்டையை PAN உடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2021 ஆகும். மார்ச் 31 க்குள் ஆதார் பான் உடன் இணைக்கப்படாவிட்டால், PAN செயலிழக்கச் செய்யப்படலாம். இதற்குப் பிறகு, இதை உபயோகித்தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

மார்ச் 31 க்கு முன், பல பணிகளை செய்து முடிப்பது அவசியமாகும்.  2020-21-க்கு தாமதமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2021 ஆகும்.  எந்தவொரு வணிக ஆண்டிற்கும் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் வருமானத்தை தாக்கல் செய்யலாம். இருப்பினும், தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதால், நீங்கள் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.

2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான அட்வான்ஸ் வரியின் நான்காவது தவணையை மார்ச் 15 க்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒருவரது வரி ஒரு வருடத்தில் ரூ.10,000 க்கும் அதிகமாக இருந்தால், அவர் 4 தவணைகளில் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரியை ஜூலை 5, செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 க்கு முன் செலுத்த வேண்டும். இருப்பினும், தொழில்முறை வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நேரடி வரி தகராறு தீர்க்கும் திட்டமான ‘பேச்சுவார்த்தை மூலம் நம்பிக்கை’-யின் கீழ், விவரங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை மார்ச் 31 வரையும் கட்டணம் செலுத்துவதை ஏப்ரல் 30 வரையும் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வரி சிக்கல்களை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Editor's Choice

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் அமேசான்.காம் தலைவர் ஜெப் பெசோஸ்-ன் கள்ள காதல் விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்த நிலையில், ஜெப் பெசோஸ்-ஐ அவரது மனைவி மெக்கென்சி ஸ்காட் விவாகரத்துச் செய்தார்.

உலகின் 3வது பணக்காரர் ஆக விளங்கும் மெக்கென்சி ஸ்காட் சியாட்டில நகரத்தைச் சேர்ந்த டேன் ஜூவெட் என்ற கெமிஸ்ட்ரி ஆசிரியரை காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

மெக்கென்சி ஸ்காட் - டேன் ஜூவெட் திருமணம் உலகப் பணக்காரர்கள் தங்களது சொத்துக்களை நன்கொடையாக அளிக்க வலியுறுத்தும் வகையிலும், இதன் மூலம் பெறப்படும் நிதியைப் பல நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்த பில்கேட்ஸ், மெலின்டா கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் இணைந்து உருவாக்கிய Giving Pledge தளத்தின் மூலம் மெக்கென்சி ஸ்காட் - டேன் ஜூவெட் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் டேன் ஜூவெட்.
 
53.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு ஜெப் பெசோஸ், மெக்கென்சி ஸ்காட் விவாகரத்துச் செய்யச் சுமார் 38 பில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான் பங்குகளை வழங்கப்பட்டது. இந்தப் பங்குகளின் மதிப்புத் தற்போது 53.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மெக்கென்சி ஸ்காட் சுமார் 6 பில்லியன் டாலர் அளவிலான தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
 
மெக்கென்சி ஸ்காட் நன்கொடைகள் மெக்கென்சி பெசோஸ் என இருந்து அவரது பெயரை விவாகரத்துக்குப் பின் மெக்கென்சி ஸ்காட் என மாற்றிக்கொண்டார். மேலும் விவாகரத்துக்கு முன்பாகப் பெரிய அளவில் நன்கொடை அளிக்காத மெக்கென்சி தற்போது தனது சொத்து மதிப்பில் பெரும் பகுதியை நன்கொடையாக அளித்து வருகிறார்.
 
3வது பணக்கார பெண் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின் படி மெக்கென்சி ஸ்காட் தற்போது உலகின் 22வது பெரும் பணக்காரர் ஆகவும், பெண்கள் பட்டியலில் 3வது பெரும் பணக்காரர் ஆகவும் இருக்கிறார். இந்நிலையில் மெக்கென்சி ஸ்காட்-ன் புதிய கணவர் டேன் ஜூவெட்-ம் தனது சொத்துக்களில் பெரும் பகுதியை நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளார்.
Editor's Choice

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அடிப்படை வீதத்தை 0.10 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. SBI பிரதான கடன் விகிதத்தை (Prime Lending Rate) 0.10 சதவீதம் அதிகரித்து 12.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும், MCLR விகிதத்தில் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.

SBI நீண்ட காலத்திற்குப் பிறகு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. சில காலமாக, வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைத்துக்கொண்டிருந்தது.

சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்கான வீட்டு வட்டி விகிதங்களை SBI குறைத்தது. இதனுடன் வங்கி பல கூடுதல் சலுகைகளையும் வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள்  கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, நகைகள் வாங்குவதிலும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்கான வீட்டு வட்டி விகிதங்களை SBI குறைத்தது. இதனுடன் வங்கி பல கூடுதல் சலுகைகளையும் வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, நகைகள் வாங்குவதிலும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

SBI-யின் தங்க கடன் சலுகை வர்த்தகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆகையால் இதன் பெயர் SME Gold Loan என வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், 1 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம். SBI-யின் இந்த சலுகையின் மூலம், வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். 

SBI-யின் இந்த சிறப்பு தங்க கடன் சலுகை 7.25 சதவீதம் என்ற மிகக் குறைந்த ஆண்டு வட்டி விகிதத்திலேயே கிடைக்கிறது. இதை இந்த வகையில் புரிந்துகொள்ளலாம். நீங்கள் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் தங்கக் கடனை எடுத்தால், இதற்கான வட்டியாக 7,250 ரூபாயை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். தனது SME Gold Loan-னின் வட்டி விகிதம் மற்ற அனைத்து வங்கிகளையும் விட குறைந்தது என்றும், இதில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் SBI கூறுகிறது.

Editor's Choice

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி பெண்களுக்காகப் பிரத்தியேகமாக ஒரு சோஷியல் மீடியா மற்றும் நெட்வொர்கிங் தளத்தை உருவாக்கியுள்ளார்.

'Her Circle' எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்தச் சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பான ஒரு தளத்தை அளிப்பது மட்டும் அல்லாமல் கன்டென்ட், சோஷியல் மீடியா, கோல் புல்ஃபில்மென்ட் கம்யூனிட்டி ஆகியவை இருக்கும் என இப்புதிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் நீதா அம்பானி புதிய வர்த்தகத்தைத் துவங்குவதும், உருவாக்குவதும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், முகேஷ் அம்பானிக்கும் புதியது இல்லை. ஆனால் நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தின் இயக்குநராக இருந்தாலும், நேரடி நிர்வாகத்தில் இல்லை.

நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் திருபாய் இண்டர்நேஷனல் ஸ்கூல், மும்பை இந்தியன்ஸ் - ஐபிஎல் கிரிகெட் அணி, மெட்ரோபோலிடன் மியூசியம் ஆப் ஆர்ட், இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி, ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஆகியவற்றில் முக்கியப் பதவிகள் வகிப்பது மட்டும் அல்லாமல் மொத்தமாகத் தலைமை ஏற்று நிர்வாகம் செய்து வருகிறார் நீதா அம்பானி.

 

பக்கம் 17 / 74