- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 159
நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது பெட்ரோல் - டீசல். இந்தியாவில் உள்ள மக்கள்தொகைக்கு பெட்ரோல் - டீசலின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு செய்யப்பட்டதும் ஜூன் முதல், அவற்றின் விலை மெல்ல உயர்ந்து வருகின்றன. அதிலும் கடந்த 10 தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.45 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.84.77ஆகவும் உள்ளது. கொரோனா தளர்வுகளுக்கு பின் பெட்ரோலுக்கான தேவை அதிகரித்து வருவதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் இந்த விலை ஏற்றம் இருப்பதாக சொல்கிறார்கள்.
பொதுவாக பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துவிட்டால் மற்ற பொருட்களின் விலையும் மெல்ல உயர துவங்கிவிடும். இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். சமூகவலைதமான டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்டிங்கில் உள்ளது.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இருந்த பெட்ரோல் - டீசல் விலையையும், இப்போது உள்ள விலையையும் பட்டியலிட்டு கருத்து பதிவிட்டு வருவதோடு, ஆளும் பா.ஜ., அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வட மாநிலத்தில் ஒருவர் பெட்ரோல் பங்கு முன்பாக பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டதாக குறிக்கும் விதமாக பேட், ஹேல்மட்டுடன் செஞ்சுரி அடித்தபடி இருக்கும் போட்டோ ஒன்றும் வைரலாகி உள்ளது.
பலரும் தங்களது கவலைகளை கூட மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். கோஹ்லி செஞ்சுரி அடிப்பார் என எதிர்பார்த்தோம், ஆனால் இங்கு பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்துள்ளது என பதிவிட்டு வருகின்றனர்.


















