Editor's Choice

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி சிங் தோனி ஆகியோர் சமீபத்தில் ஒரு நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைபடங்கள் மாற்று வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி 'Mummy Nu Pasand' பாடலுக்கு நடனமாடும் சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் தீவிரமாக  இருக்கும் சாக்ஷி, நண்பரின் திருமணத்தில் எடுக்கபட்ட அட்டகாசமான படங்களை வெளியிட்டுள்ளார். 

இதனை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Editor's Choice

உத்தர பிரதேசம் மாநிலத்தில்  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சில சம்பவங்கள் தேசிய அளவில் பேசபடுகின்றன. குறிப்பாக உன்னாவ் மாவட்டத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது இதே மாவட்டத்தில் பாபுரா கிராமத்தில் கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வர வயல்வெளிக்கு சென்றுள்ளனர் மூன்று இளம் பெண்கள். வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது சகோதரர் வயல்வெளிக்கு சென்றார். அங்கு இரண்டு பேர் சடலமாக கிடந்தனர். மற்றொரு பெண் உயிருக்கு போராடினார். அதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறந்த பெண்கள் கை கால்கள் கட்டப்பட்டு இருந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இது கொலையா இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

''அனைத்து தரப்பினரப்பிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளோம். இறந்த பெண்களின் உடலில் காயங்கள் இல்லை. ஆனால் அவர்கள் உடல் கட்டப்பட்டு இருந்ததாக அவர்களது சகோதரர் தெரிவித்தார். ஆனால் நாங்கள் வரும் முன்பே உடல்களை எடுத்து சென்றுவிட்டனர். மேலும் அவர்களின் வாயில் வெள்ளையாக திரவம் ஒன்று படிந்து இருந்தது. இதனால் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என போலீசார் கூறுகின்றனர். 

இந்த விவகாரம் டுவிட்டரில் #Save_Unnao_Ki_Beti என்ற ஹேஷ்டாக்கில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களையும், ஆளும் யோகி ஆதித்யநாத் அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது நிச்சயமாக கொலையாக தான் இருக்கும், ஏனென்றால் இறந்த பெண்கள் உடல்கள் கட்டபட்டு இருந்தன. இதுப்பற்றி போலீசார் நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கு வன்முறைகளை தடுக்க முடியவில்லை என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே இறந்த பெண்களின் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் யாரையும் அரசியல் கட்சியினரையோ அல்லது பிற அமைப்பை சேர்ந்தவர்களையோ சந்திக்காத வண்ணம் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். மேலும் சிலர் அங்கு போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக இதை சம்பவத்தை சிபிஐ., விசாரிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

Editor's Choice

இணைய தளங்களில் ஆபாச படங்களை பார்க்கிறார்களோ இல்லையோ, கூகுளில் ஆபாச படங்களை பற்றி தேடினால் கூட அவர்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, யாரேனும் ஒருவர் இணையத்தில் ஆபாச படங்கள் குறித்து தேடினால் உத்தரபிரதேச மகளிர் கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 1090க்கு தகவல் தெரிவிக்கலாம். இதைத்தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படும். இதன்பின்னர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

இந்த திட்டத்தை சங்கு ஊதி போலீஸ் அதிகாரிகள் துவக்கி வைத்தனர். இத்திட்டம் ஏற்கெனவே ஆறு மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. ‘இணைய பயன்பாடு அதிகரித்து வரும் காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 1090 உதவி எண் பெரும் உதவியாக இருக்கும்’ என போலீஸ் ஏடிஜிபி நீரா ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘பொதுமக்கள் இணையத்தில் என்ன வகையான தகவல்களை தேடுகின்றனர்? ஆபாச படங்கள் குறித்து தேடுகின்றனரா என்பதை கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது ஆபாச படங்கள் குறித்து தேடினால் உடனடியாக தகவல் கிடைத்துவிடும். அந்த நபர் தொடர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்’ என்றார்.

Editor's Choice

நாடு சுதந்திரம் பெற்ற பின், பெண் குற்றவாளி ஒருவர், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ளார். 

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல், ஷப்னம் வீட்டில், அவரது பெற்றோர் உட்பட ஏழு பேர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஷப்னத்தின் தொண்டையிலும், கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது, அடையாளம் தெரியாத சிலர், வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக, தெரிவித்தார்.

போலீசார் தீவிரமாக விசாரித்த போது, காதலன் சலீமுடன் சேர்ந்து, வீட்டிலிருந்த ஏழு பேரையும் கத்தியால் குத்தி கொன்றதை ஷப்னம் ஒப்புக் கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010லும், உச்ச நீதிமன்றம், 2015லும் உறுதி செய்தன. ஷப்னத்தின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதையடுத்து, ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியானது.

உத்தர பிரதேசத்தில், மதுராவில் உள்ள சிறையில், பெண்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தனி அறை உள்ளது. இந்த அறை, 150 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின், பெண் குற்றவாளி யாரும் தூக்கிலிடப்படவில்லை. மதுராவில் தான், ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி, விரைவில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நிர்பயா' குற்றவாளிகளை தூக்கிலிட்ட, மீரட்டைச் சேர்ந்த பவன் ஜலாட் தான், ஷப்னத்தையும் தூக்கிலிடுவதற்கான பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்துக்கு பின், தூக்கிலிடப்பட்ட முதல் பெண் குற்றவாளி ஷப்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

ஸ்மார்ட்போன் விற்பனையில் சீன தயாரிப்புகள் இன்னும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தாலும், செயலிகள் விஷயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 'ஆப்ஸ்பிளையர்' எனும் நிறுவன அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இறுதியில், அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில், 40 சதவீத செயலிகள், இந்திய தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது. அதேசமயம் சீன செயலிகள் பதிவிறக்கம் சரிந்துள்ளது.

இந்திய செயலிகளைப் பொறுத்தவரை பெரும்பாலானவை, பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்துபவையாக இருக்கின்றன. இதன் காரணமாக இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில், இத்தகைய செயலிகளை பயன்படுத்துபவர்கள் அதிகரித்திருக்கின்றனர்.

இருப்பினும், ஸ்மார்ட்போன்கள் விற்பனையை பொறுத்தவரை, சீன நிறுவனங்களே, இந்திய சந்தையில் கோலோச்சி வருகின்றன. கடந்த ஆண்டில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பு, 72 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டில் இது, 77 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, 'கவுண்டர்பாயின்ட்' அறிக்கை தெரிவிக்கிறது.

Editor's Choice
துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆறு மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த 30 பிள்ளைகளில் ஒருவர் இளவரசி  லதிபா அல்-மக்தூம், அவருக்கு வயது 35.  லதிபா  தந்தையின் பிடியிலிருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிவிட திட்டமிட்டார்.
 
அதன்படி, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், லதிபா அல்-மக்தூம்வின் உடற்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த டினா ஜவுஹைனென்  என்னும் பெண், பிரான்ஸ் நாட்டவரும் நண்பருமான ஒரு முன்னாள் உளவாளி என சிலரது உதவியுடன் அரண்மனையிலிருந்து தப்பினார்.
 
எட்டு நாட்களுக்குப் பின், இந்தியப் பெருங்கடலில், படகு ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு வழியாக விடுதலை பெற்றுவிட்டேன் என லதிபா நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரத்தில், பயங்கரம் ஒன்று நிகழ்ந்தது.

படகுகளில் வந்த அமீரக போலீசார் லதிபா  இருந்த படகை சூழ்ந்துகொண்டு, இளவரசிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
 
கண் விழிக்கும்போது, துபாயில் ஒரு அறையில் இருந்த லதீபாவிடம், காவலாளி ஒருவர்  நீ இனி சூரியனைப் பார்க்கவே முடியாது என்றார்!
 
லதிபாவுடன் கைது செய்யப்பட்ட பின்லாந்து நாட்டவரான டினா இரண்டு வாரங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
 
விடுவிக்கப்பட்டதும், அவர் இளவரசி லதிபாவின் கதையை வெளி உலகுக்கு சொல்ல, இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் துபாய் மன்னரை நெருக்குகின்றன. லதிபா உயிருடன் இருக்கிறாரா என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட, லதிபாவை சந்திக்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் உயர் ஆணையரான மேரி ராபின்சன்  வந்தார்.
 
ஆனால், மேரி ராபின்சனிடம்  லதிபாவுக்கு  மன நல பிரச்சினை என்றும், லதிபாவிடம் நண்பர் ஒருவர் உன்னைப் பார்க்க வருகிறார், நீ சாதாரணமாக இருப்பதுபோல் நடித்தால் சில நாட்களில் துபாயிலிருந்து வெளியேறிவிடலாம் என்றும் பொய் சொல்லி இருவரையும் சந்திக்கவைத்தனர்.

லதிபா மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்களை மேரி ராபின்சன்  வெளியிட்டார்.
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு லதிபாவிடமிருந்து, டினாவுக்குஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருப்பது முதல், தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து குளியலறையில் இருந்து லதிபா தெரிவித்தார். இதனையடுத்து அவரின் தொலைபேசி பேச்சு வைரலானது. அவரை பற்றிய சந்தேகங்களும் அதிகரித்தன.

அந்த வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, துபாய்  இளவரசியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை வலியுறுத்தியுள்ளது. இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரான டொமினிக் ராப் , இளவரசி லதிபா கடத்தப்பட்டு சூரிய ஒளி கூட கிடைக்காமல் வீடு ஒன்றில் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்ட மக்கள், அவர் உயிருடனும், நலமாகவும் இருப்பதை அறிய விரும்புவார்கள் என்றார்.
 
அத்துடன், லதிபா பிரச்சினையை அமீரகத்துடன் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையிலும் எழுப்ப இருப்பதாகவும், என்ன நடக்கிறது என்பதை உற்றுக்கவனிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 33 / 74