Editor's Choice

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அர்த்தராத்திரி லிங்கோத்பவ காலம். இதனையே மகாசிவராத்திரி என்கிறோம். இது இரவு நேரப் பண்டிகை. உபவாசமிருந்து கண்விழித்து வழிபட  வேண்டிய விசேஷ தினம், இதிலுள்ள சங்கேதங்களை கவனித்தால் ஆன்மீக சாதனைக்குத் தேவையான அனேக ரகசியங்கள் இருப்பது தெரியவரும். ‘ராத்திரி’ என்பது அனைத்து சந்தடிகளும் உலக  விவகாரங்களும் அடங்கிய நிலை. அதிலேயும் அர்த்தராத்திரி. இதனை ‘துரீய சந்தியா என்பார்கள்.

அனைத்து  துன்பங்களும் கதறல்களும் அடங்கிய அசையாத நிலை தியானத்திற்கு மிகவும் அவசியம். அந்த நிலையில் மனம் லயமாகி பரமானந்தத்தைப் பெறுகிறது. அந்த ஒருமுகப்பட்ட நிலையில் உலக ஈர்ப்புகள்  எல்லாம் அடங்கி விடும். அது பரமனில் லயிக்கும் நிலை. இதனையே கைவல்யம் என்பர். இத்தகைய ராத்திரி என்பது சாதகர்கள் சாதிக்க வேண்டிய நிலை. வெளிமுகமாகப் பாயும் திருஷ்டியை தடுத்து,  புத்தியை அந்தர்முகமாகத் திருப்பி அந்தரங்கத்தில் ஈஸ்வர ஜோதியின் மேல் குவியச் செய்வதே சிவராத்திரி. பகலில் பஹிர்முகம். இரவில் அந்தர்முகம். சாதாரண வாழ்க்கையில் கூட பகலெல்லாம் வெளியில் சஞ்சரிக்கும் உயிர்கள் இரவானவுடன் சொந்த வீட்டையடைந்து ஓய்வு எடுக்கின்றன. ஆழமாக ஆலோசித்தால் அனைத்துயிர்களின் சொந்த வீடும் ஈஸ்வரனின் நிலையமே. அது நம்  ஹ்ருதயத்திலேயே உள்ளது.

இந்திரியங்களின் வழியே வெளி உலகியல் விஷயங்களோடு ஒட்டிக் கொள்ளும் மனதை நம்மிடமிருக்கும் சைதன்யத்தின் மூல பிந்துவான ஆத்ம ஜோதியில் லயம் செய்யும்
அந்தர்முக பிரயாணமே சிவராத்திரி. அந்த தியானநிலை நித்திரையல்ல; மறதியுமல்ல; அது மனிதனின் விழிப்பு நிலை. நம்மை நாம் மறந்து திரியும் வௌிப்புற அலைச்சலை விட, அந்தர்முகமான இந்த  தியான நிலையிலேயே நம் சைதன்யம் பூரண விழிப்புணர்வோடு இருக்கிறது. அஞ்ஞானம் என்ற பெரிய நித்திரையை விலக்கும் ‘கண் விழிப்பே’ சிவராத்திரி விரதம். இது உபவாச விரதமும் கூட. ஆகார  நியமமே உபவாசம். நம் இந்திரியங்களின் மூலம் அனுபவிக்கும் போகங்களே ஆகாரங்கள். அவற்றை கட்டுப்படுத்தும் இந்திரிய நிக்ரஹம் உண்மையான உபவாசம். அப்படிப்பட்ட உபவாசத்தின் மூலமும்  கண் விழிப்பின் மூலமும் சர்வ வியாபக அந்தர்யாமியான சிவ சைதன்யத்துடன் ஒன்றுபடும் நிலையை அடையப் பெறுவோம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையின் முன் வரும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி இரவை ‘மாத சிவராத்திரி ’ என்பர். இது மாதத்தின் துரீய சந்தியா. வருடத்தின் இறுதி மாதமான பங்குனியின் முன் வரும்  மாசி மாதம் வருடத்தின் ‘சந்தியா’. (மாலைப்பொழுது) போன்றது. அந்த மாலை நேரத்தில் ‘சந்தியா’ ஸ்தானத்தில் மாசி மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி இரவு வருகிறது. எனவே அது ஆண்டிற்கு மாலை  நேரம். இந்த நேரத்தை ‘மகாசிவராத்திரி’ என்று அழைப்பதில் சிறப்பு உள்ளது.கர்ம ஈர்ப்புகளை எல்லாம் நிறுத்திவிட்டு ஜீவன் பரமாத்மாவின் சந்நதியில் அமைதி பெறுவதே லயம். அந்த லயநிலையில்தான்  அகண்டானந்தம் கிடைக்கிறது. பஹிர்முக பயணத்தால் ஓய்ந்து போன ஜீவன், ‘அலசிதிஸொலசிதி இந்தட நீ சரனிடெ ஜொச்சிதினி’ என்று எந்த அந்தர்யாமியுடன், தன்மயத்துவ நிலை பெறுவானோ அந்த  அந்தர்யாமியே ‘சிவன்’ - (அன்னமயா கீர்த்தனை).

திருகுணங்களுக்கு, மூன்று அவஸ்தைகளுக்கு, மூன்று உடல்களுக்கு (ஸ்தூல, சூட்சும், காரண சரீரங்கள்) அதீதமாக, அந்த மூன்றையும் இயக்கும் பரம நிலையமே சிவஜோதி. இதனை அந்தரங்கத்தில்  அறிந்து கொள்ளும் தத்துவமே சிவராத்திரியின் உட்பொருள். ‘ராதி சுகம் ததாதீதி ராத்ரி’ சுகத்தையளிக்கும் காலம் ராத்திரி’. போகம் அனுபவிப்பவர்களைப் பற்றிய பேச்சு ஒரு புறமிருக்க, யோக ஆனந்த  நிலை பெறுவதே உண்மையான ராத்திரி.

‘யானிசா சர்வ பூதானாம் தஸ்ய ஜாகர்தி சம்யமீ - பகவத்கீதை. அனைவருக்கும் எது இரவோ யோகிக்கு அது பகல். நம்முடைய பகல் யோகிக்கு இரவு. வெளிப்புறத்தில் திரிபவர்கள் ஆத்மா விஷயத்தில்  உறக்கத்திலிருக்கிறார்கள். ஆனால் ஆத்மா விஷயத்தில் யோகிகள் விழிப்போடிருக்கிறார்கள். லௌகீக ஈர்ப்புகள் வெளி விஷயங்களில் விழித்திருக்கும். அத்தகைய வெளிப்புற விஷயங்களில் யோகிகள்  உணர்வற்றிருப்பார்கள். ஞானானந்த ஸ்வரூபன் நித்யம் விழித்திருப்பவன் சிவன் அந்தர்முக விழித்தலில் தென்படும் அந்த சாஸ்வத சத்திய தத்துவத்தை அறிந்து கொள்ளும் சாதனையே ‘சிவராத்திரி’.

Editor's Choice
சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.
 
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
 
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. 
 
காஞ்சி : திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள போளூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது காஞ்சி என்ற திருத்தலம். இதுவே சப்த கரை கண்ட தலங்களில் முதல் தலமாகும். இங்குள்ள இறைவனின் பெயர் ‘கரைகண்டீஸ்வரர்’ என்பதாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நாயக்க மன்னர்களும், நகரத்தாரும் திருப்பணி செய்துள்ளனர். இந்த ஆலயத்தில் சப்த கரை கண்ட தலங்களின் 7 சிவலிங்க திருமேனிகளும் ஓரிடத்தில் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களும், இந்த ஆலய இறைவனுக்கும் செய்யப்படுவது, இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.
 
கடலாடி : சேயாற்றின் வடகரையில் அமைந்த, சப்த கரை கண்டீஸ்வரர் தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திரு நாமம் ‘வன்னீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். இங்குள்ள பர்வதமலையின் அடிவாரத்தில், அண்ணாமலையாரின் பாதம் பட்ட இடம் உள்ளது. `கடவுளின் பாதம் பட்ட மலையடி’ என்பது, ‘கடவுளடி’ என்று ஆகி, பின்னர் ‘கடலாடி’ என்றானதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 25 கிலோமீட்டரில் இந்த இடம் உள்ளது.
 
மாம்பாக்கம்: சப்த கரைகண்ட தலங்களில் மூன்றாவது இடம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் ‘கரைகண்டேஸ்வரர்’ தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது இந்தக் கோவில் என்று கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. மகாவிஷ்ணு, அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டு நிலைபட்ட இடம் ‘கலசப்பாக்கம்’ என்றும், கலசத்தில் இருந்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் ‘மாம்பாக்கம்’ என்றும், கலசத்தில் கட்டியிருந்த நூல் ஒதுங்கிய இடம் ‘பூண்டி’ என்றும், கலசம் மீது வைக்கப்பட்ட தர்ப்பைப் புல் தங்கிய இடம் ‘பில்லூர்’ என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. மாம்பாக்கத்தைச் சுற்றியே, கலசப்பாக்கம், பில்லூர், பூண்டி ஆகிய ஊர்கள் உள்ளன. போளூரில் இருந்து 19 கிலோமீட்டரில் மாம்பாக்கம் உள்ளது.
 
தென்மகாதேவ மங்கலம் : போளூரில் இருந்து 16 கிலோமீட்டரில் உள்ளது, மாதிமங்கலம் எனப்படும் தென்மகாதேவ மங்கலம். இது போளூருக்கும், செங்கத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள இறைவன் ‘மத்திய கரைகண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ராஜகோபுரம் இல்லாவிட்டாலும், இரண்டு பிரகாரங்களைக் கொண்ட பெரியகோவில் இதுவாகும். சப்த கரைகண்ட தலங்களில் 4-வது தலம் இது.
 
எலத்தூர் : சப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம், எலத்தூர். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும். இங்குள்ள இறைவனின் திருநாமமும் ‘கரைகண்டேஸ்வரர்’ என்பதுதான். இத்தல இறைவனின் உருவம், சிறிய பாணமாக காட்சி தருகிறது.
 
பூண்டி: சேயாற்றின் வடரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்தான். அகத்தியர் கோபத்திற்கு ஆளான இரண்டு அடியார்கள் இங்கு நரியாக இருந்து, ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருபுறமும் இரண்டு கல் நரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதினாறு பட்டைகள் கொண்ட ‘ஷோடச லிங்க’த் திருமேனியுடன் கரைகண்டேஸ்வரர் அருள்கிறார்.
 
குருவிமலை : காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு ‘குரு மூலை’ என்று பெயர். இதுவே காலப்போக்கில் ‘குருவிமலை’ ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது, சப்த கரைகண்ட தலங்களில் 7-வதாக அமைந்த இந்த தலம். இங்கும் கரைகண்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் வீற்றிருக்கிறார். இதுவும் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்தான். ஆனாலும் கோவில் முழுவதும் உருக்குலைந்து, பின்னர் பலரின் முயற்சியால் தற்போதைய நிலையில் எழுந்து நிற்கிறது.
Editor's Choice

வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. வெற்றிலைக்காம்பு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சேதாரம் இல்லாத 6 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நுனிப்பகுதி இருக்க வேண்டும். நுனிப்பகுதி இல்லாத வெற்றிலையை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. முதலில் கையில் வைத்திருக்கும் 6 வெற்றி இலைகளிலிருந்து காம்புகளை மெதுவாக கிழித்து எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.

6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக 6 காம்புகளையும் நல்லெண்ணெயில் போட்டுவிடலாம். பின்பு தீபத்தை ஏற்றி விட வேண்டும். ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றியில் இருந்தும் நல்ல நறுமணம் வீசும்.

இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும். வாரம் ஒரு முறை இப்படி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தையும் இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Editor's Choice

மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரும். மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும். வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும். மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம். திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும். 

Editor's Choice

குலதெய்வம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த பூஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அசைக்க முடியாத கருத்து. இதற்காகத்தான்  குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும் குல தெய்வ வழிபாடு கோடிதெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.

ஜாதக கட்டங்களில் குறைகள் இல்லாத நிலையிலும் கிரக சஞ்சாரங்களில் பாதக சூழ்நிலைகள் இல்லாத நிலையிலும் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்சனைகளும் தொடர்கின்றது என்றால் அதற்கு குல தெய்வ தோஷம் காரணமாக இருக்கும். அதே போல கிரகங்களின் கோசார பலன்களும். கிரக பெயர்ச்சியின் நல்ல பலன்களும் முழுமையாக பலன் தர வேண்டுமென்றால் அதற்கு குலதெய்வ அனுக்கிரகம் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.

பொதுவாக குலதெய்வ வழிபாடு என்பது இனத்திற்கு இனம்.. ஜாதிக்குஜாதி குலத்துக்கு குலம்...மாறுபடும். ஒரே ஜாதியில் இருப்பவர்களில் கூட குடும்பத்துக்கு குடும்பம் வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும் மாறுபடுகின்றன.

பல இடங்களில் குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களாகவும் தங்களின் குல மக்களுக்களின் நன்மைக்காக உயிர்தியாகம் செய்தவர்களாகவும் இருப்பதுண்டு. அந்த குலத்தினரால் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவே குல தெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதனால் தான் குலதெய்வ வழிபாட்டினை ஒரு கடமையாகவும் கடனாகவும் சம்பிரதாயங்கள் சொல்கின்றன.

பொதுவாக குலதெய்வ தோஷம் இருந்தால் எந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, காரணமற்ற காரியதடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்ப அமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரிய தடைகள் தொடரும்.

குல தெய்வ வழிபாடுகளை அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை அந்தந்த குடும்பத்தின் சம்பிரதாய பின்பற்றுதல்களுக்கு ஏற்றவாறு வருடத்திற்கொருமுறை செய்தாலே போதுமானது. காலகட்டளை இருக்கும் குலதெய்வ வழிபாடுகளுக்கு குறிப்பிட்ட நாளில் மட்டுமே செய்ய வேண்டும். அந்த நாள் தவிர்த்து செய்யகூடாது. காலகட்டளை இல்லாத தெய்வங்களுக்கு சௌகர்யமான நாளில் வழிபாடு செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் கால கட்டளை இல்லாத குல தெய்வங்கள் குறைவு.

குலதெய்வ பூஜைகளை பொருத்தவரை சுத்த பூஜை ..உதிர பூஜை என்று இருவகைகளில் நடத்தப்படுகின்றன. சுத்த பூஜை என்றால் உயிர்பலி கொடுக்காமலும் உதிர பூஜை என்றால் உயிர்பலியுடனும் நடத்தப்படுவதாகும். எந்த பூஜையாக இருந்தாலும் அந்த முறையில் சரியாக பின்பற்றப்பட வேண்டும்.

கணித ஜோதிடத்திலோ எண்கணிதத்திலோ குலதெய்வம் கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமானது. குலதெய்வம் தெரிந்து கொள்ள வம்சகள பிரசன்னம் எனப்படும் பிராணதேவதா பிரசன்னத்தின் மூலம் சரியாக கண்டுபிடிக்கலாம். அவ்வாறு கண்டுபிடிக்கும் போது வெறுமனே குலதெய்வத்தின் பெயர் மட்டுமல்லாது இருக்கும் இடம், தற்போதைய நிலை, படைக்கவேண்டிய பொருட்கள், வஸ்திரத்தின் நிறம்,வழிபாட்டிற்குறிய நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாத நிலையோ அல்லது கோவில் சிதிலமடைந்த நிலையோ இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் குலதெய்வத்தின் அம்சபீடம் வைத்து வீட்டிலேயே வழிபடுவது பலன் தரும்.

Editor's Choice
தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை அதிகரிக்கும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.
 
தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், அதில் வைக்கப்பட வேண்டிய விளக்குகளும் நம் முன்னோர்களால் சொல்லிவைக்கப்பட்டுள்ளன. அதன்படி கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் வைக்க வேண்டும். திண்ணைகளில் நான்கு விளக்குகள், மாடக்குழி, நிலைப்படி மற்றும் நடைகளில் இரண்டு விளக்குகள், பூஜை அறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.

பக்கம் 3 / 15