Editor's Choice

சித்திரை விண்மீனில் முழுநிலா வரும் மாதம் சித்திரை  மாதம். விசாக  நட்சத்திரத்தில் வெண்ணிலா வரும்  மாதம் வைகாசி மாதம். இம்முறையில் பௌர்ணமியும் மிருக  சீர்ஷமும் சேர்ந்தது மார்கழி!வெப்பம் மிகுந்த நம் நாட்டிற்குக் குளிர்ந்த பனியைத்  தருகிற இம்மாதம் ஒரு ‘விழா மாதம்’ என்றால் அதில் வியப்பென்ன இருக்கிறது? இம்மார்கழி மாதம் அதிகாலையிலேயே நாம் எழுந்துவிடுகிறோம்! நாம்  மட்டுமல்ல!  தேவர்களும் எழுந்து தெய்வ தரிசனம் பெறுகிறார்கள்!

தை  முதல் நாள் முதல் உத்ராயணம் என்கிற பகல்பொழுது தேவர்களுக்கு! அப்படியானால் அதற்குமுன் வருகிற இம்மார்கழி தேவர்களுக்கு அருணோதய நேரம்!

விண்ணுலகினர் அதிகாலை எழுந்து ஆண்டவனை வழிபடும் அதே
நேரம் மண்ணுலகினரும் மகாதேவனை வழிபடும் மாதமே மார்கழி மாதம்!
இறைவனை வழிபடுவதுதான் சாலச்சிறந்தது!

கல்வியும், செல்வமும் உரிய பயன் பெறுகிற இம்மாதத்தின் மகிமையை எண்ணி எண்ணி மகிழ வேண்டும்! அதனால்தான் பரந்தாமன் தான் அருளிச்செய்த ‘ஸ்ரீபகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் 35-வது ஸ்லோகத்தில் ‘மாஸானாம் மார்கசீர்ஷோஹம்’ என்கிறார்.  அதாவது ‘மாதங்களில் நான் மகிமைமிக்க மார்கழியாகத் திகழ்கிறேன்’ என்கிறார்.

ஆண்டாள் மார்கழி முழுவதும் பாட ஒரு மகத்தான  கீதம் தந்தார். அதுவே திருப்பாவை !
அத்திருப்பாவை தந்த திருப்பாவை போலவே மாணிக்கவாசகர் திருவெம்பாவை தந்தார்.
இந்த இரு ‘பாவை’களின் மூலமாகத்தான் நாம் பக்தி உலகத்தையே  பார்க்க முடிகிறது.

இம்மாதத்தைச் சிலபேர் பீடைமாதம் என ஏன் பேசுகின்றனர்?

‘தை  பிறந்தால் வழி பிறக்கும்!’ என அடுத்து வரும் மாதத்தை ஏன் அற்புதமாக வரவேற்கின்றனர்? உண்மையில் இம்மார்கழி மாதம் பீடு உடை மாதம்! பீடை மாதம் அன்று!

வீட்டுக் கொண்டாட்டங்களை விட்டுவிட்டு இறைவனையே சிக்கெனப் பற்றிக்கொள்வதால் தான். சீக்கிரத்தில் அதாவது  அடுத்த மாதத்தின்  ஆரம்பத்திலேயே நமக்கு வழி பிறக்கிறது. எனவே ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்பது அம்மாதத்திற்குரிய பெருமை அல்ல என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்!

 

Editor's Choice

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலகில் 40-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம்கட்ட சோதனை நிலையில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தும் மாடர்னா தடுப்பு மருந்தும் தற்போது புகழ் பெற்று வருகின்றன. ஆசிய நாடுகள் பலவற்றுக்கு இந்த தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தடுப்பு மருந்துகளுக்குள் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

பைசர், மாடர்னா ஆகிய தடுப்புமருந்துகளுமே எம்-ஆர்என்ஏ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. உடலில் உள்ள உயிரிகளை கொரோனா வைரஸில் உள்ள புரதம் போன்ற ஓர் புரதத்தை தயாரிக்க இந்த எம்-ஆர்என்ஏ உந்தித்தள்ளுகிறது. இதன்மூலமாக கொரோனா வைரஸ் புரதத்தை படிப்படியாக அழித்து நுரையீரலை தூய்மைப்படுத்துகிறது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 95 சதவீத பலன் அளிக்கும் நிலையில் மடர்னா தடுப்பு மருந்து 94% பலன் அளிக்கிறது.

பைசர் தடுப்பு மருந்துக்கு இரண்டு டோஸ்கள் தேவைப்படுகின்றன. ஒரு டோஸ் தடுப்பு மருந்தை நோயாளியின் உடலில் செலுத்தி 21 நாட்கள் கழித்து மற்றொரு டோஸை செலுத்த வேண்டும்.

மாடர்னா தடுப்புமருந்துக்கும் இரண்டு டோஸ்கள் தேவைப்படுகின்றன. ஒரு டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தி 28 நாட்கள் கழித்து அடுத்த டோஸை செலுத்தவேண்டும்.

பைசர் தடுப்பு மருந்தின் உள்ள ஓர் முக்கிய பின்னடைவு இந்த தடுப்பு மருந்து குப்பிகளை -70 டிகிரி காலநிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் மாடர்னா தடுப்பு மருந்தை மைனஸ் 20 டிகிரி காலநிலையில் வைத்து இருந்தாலே போதுமானது. பைசர் தடுப்புமருந்து 5 நாட்கள்வரை மட்டுமே கெடாமல் இருக்கும். ஆனால் மாடர்னா தடுப்பு மருந்து 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

இரண்டு தடுப்பு மருந்துகளும் தீவிரமான பக்கவிளைவுகளை அளிக்க வாய்ப்பில்லை. ஆனால் அவ்வப்போது சிறிய பக்கவிளைவுகளை அளிக்க வாய்ப்பு உண்டு.
மாடர்னா தடுப்பு மருந்து இரண்டாவது டோஸ் செலுத்திய பின்னர் மிதமான காய்ச்சல், லேசான தலைவலி உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

பைசர் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்ட 2 பிரிட்டன் குடிமக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக முன்னதாக செய்தி வெளியாகியது. ஆகமொத்தம் இரண்டு தடுப்பு மருந்துகளிலும் நிறை மற்றும் குறைகள் உள்ளதை மறுக்க முடியாது.

Editor's Choice

வரும் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச டோக்கன் விநியோகம் இன்றிரவு முதல் நிறுத்தப்படுகிறது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இலவச டோக்கன் தரப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பரமபத வாசலை திறந்து வைக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோயிலுக்கு அளவுகடந்த கூட்டம் வரும் என கருதி இலவச டோக்கன் விநியோகம் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Editor's Choice

அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் தாத்தா.

உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!

ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க.

. வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!

ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது

கட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா...

" சாப்பாடு இறங்குதா..?"

"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"

"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"

"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"

"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்...

இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி.

அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?

அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மால்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்.

இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..! இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும்.

டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர்.

இரவு உறங்கி போனது...!

மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்.. என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர்.

கண்மூடி படுத்திருந்தவர்..... ஓர் இருமலோடு விழித்து கொண்டார்

ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,

மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார்.

"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித. எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி தாத்தா.

இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.

தொடர்ந்து..." இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்

அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,

தேங்காய் - 1 ,

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.

இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது.

(1)வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.

(2)கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.

(3)கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும்.
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.

இதை அனைவரும் பருகலாம்,

தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.

கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து உபயோகிக்கலாம்.

ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.

Editor's Choice

கடலுார் மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா பட்டத்தில், 1.2 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

முன்பட்டம், பின்பட்டம் என இரண்டு போகமாக விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் ஏரி பாசனம் மூலம் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, பின்பட்டசம்பா நெற்பயிர்களில் அதிகளவில் ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் நடப்பாண்டு சம்பா மகசூல் பாதியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆணைக்கொம்பன் ஈ பூச்சி கொசு வடிவில் இருக்கும். அதன் அடிவயிறு பளிச்சென சிவப்பாக காணப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் கால் இல்லாத பூச்சிகள் நெல் பயிர்களின் துார்களை துளைத்து, நடுக் குறுத்தை தாக்குகிறது.இந்ததாக்குதலால் நெல் குறுத்து வெங்காய குழல் அல்லது வெள்ளிக் குறுத்து போல் ஆகிவிடும். இந்த துார்களில் மேற்கொண்டு வளர்ச்சி ஏற்படாது என்பதால் நெல் கதிர்கள் உருவாகாது.நெற் கதிர்களில் 50 சதவீதம் வரை ஆணைக்கொம்பன் ஈதாக்கி சேதப்படுத்துகிறது. இதனால் மகசூல் பாதியாக குறையும் அபாயம் உள்ளது.இதனை கட்டுப்படுத்த பயிர்அறுவடை செய்த பின்னர் நிலத்தை உடனடியாக உழவு செய்ய வேண்டும்.வயல்களில் களைகள் இல்லாமல் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்கு பொறிகள் வைத்து, பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Editor's Choice

பல்வேறு நோய்களில் இருந்து நாம் விடுபடவும், இனி வராமல் தடுக்கவும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகள். அவற்றின் பட்டியல் இதோ!

கருப்பு கவுனி அரிசி

இது மன்னர்கள் சாப்பிட்ட அரிசி.

புற்றுநோய் வராமல் தடுப்பதுடன், இன்சுலின் நன்றாகச் சுரக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

பூங்கார் அரிசி

சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும்.

காட்டுயானம் அரிசி

நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் சரியாகும்

கருத்தக்கார் அரிசி

மூலம், மலச்சிக்கல் ஓடிப்போகும்

காலாநமக் அரிசி

புத்தர் சாப்பிட்டதும் இந்த அரிசியைத்தான். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகத்திற்கு ஏற்றது.

மூங்கில் அரிசி

மூட்டுவலி, முழங்கால் வலி குணமாகும்

அறுபதாம் குறுவை அரிசி.

எலும்பு முறிவுகள் குணமாகும்.

இலுப்பைப்பூசம்பார் அரிசி

பக்கவாதத்திலிருந்து குணமடைய உதவும். கால்வலியும் காணாமல் போகும்.

தங்கச்சம்பா அரிசி

பல், இதயம் வலுவாகும்

கருங்குறுவை அரிசி

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்

கருடன் சம்பா அரிசி

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்

கார் அரிசி

தோல் நோய்க்கு தீர்வு கிடைக்கும்.குடல் சுத்தமாகும்

நிலம் சம்பா அரிசி

இரத்த சோகை நீங்கும்

சீரகச் சம்பா அரிசி

அழகு தரும். எதிர்ப்பு சக்தி கூடும்

தூய மல்லி அரிசி

உள் உறுப்புகள் வலுவாகும்.

குழியடிச்சான் அரிசி

தாய்ப்பால் அதிகரிக்கும்

சேலம் சன்னா அரிசி

எடையினை குறைக்க உதவுகின்றது

சிவப்பு காட்டு அரிசி

இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

சிவப்பு அரிசி

கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள் எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது

குள்ளகாற் அரிசி

இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்

குதிரைவாலி

தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்

கை குத்தல் அரிசி

உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது. புற்று நோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது. 

சாமை

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்

பிசினி அரிசி

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்

சூரக்குறுவை அரிசி

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்

வாலான் சம்பா அரிசி

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு ஆண்மை சக்தி பெருகும்

வாடன் சம்பா அரிசி

அமைதியான தூக்கம் வரும்

ஆக நம் வாழ்வில் இரண்டறக் கலந்தவற்றுள் அரிசியும் ஒன்று. அதனால்தான் மண்ணில் வந்தபோதும், அரிசி சோறு ஊட்டி நம்மை வரவேற்கின்றனர்.

பின்னர் நம்மை வழிஅனுப்பிவைக்கும்போதும் இறுதிமரியாதையிலும் அரிசியைச் சேர்த்துள்ளனர்

பாரம்பரிய அரிசியை உணவில் சேர்த்துக்கொண்டு நோய்களுக்கு குட்பை சொல்வோம்.

பக்கம் 5 / 15