Editor's Choice

தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக்குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும்.

வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற மரங்கள் விளைந்து செழிக்க, அப்படி என்ன உசத்தி இந்த பனைமரத்துக்கு என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். பசேலென்று தழைத்திருக்கும் வாழையின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தத் தெரிந்த தமிழ் இனம் வாழையை விடவும் கூடுதலாக பயன்படுத்திய மற்றொரு தாவரம் பனை தான்.

அதுமட்டுமின்றி இந்தியாவில் விளையும் மொத்த பனை மரங்களில் 80 சதவிகிதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. தமிழின் மதிப்புமிக்க சொத்துக்களான இலக் கியங்களை தனது பழுத்த இலைகளில் (ஓலை) பல தலைமுறைகள் கடந்து தாங்கி வந்ததால் ஒரு வேளை பனைக்கு இந்த அங்கீகாரமாக இருக்குமோ? போரரஸ் என்னும் தாவர குடும்பத்தைச் சார்ந்த பனை மரம் அதிக பட்சமாக 30 மீட்டர் வரை கூட வளரும் தன்மை கொண்டவை. “கேட்டதைத் தரும் கற்பகத்தரு” என்றே தமிழர்கள் இதனை அழைத்தனர். காரணம் பழந்தமிழர் வீடுகளின் கூரைகளை கடும் வெப்பத்தின் பிடியில் காக்கும் பனை ஓலைகளைக் கொண்டு வேய்ந்தனர்.

அதற்கான உத்திரங்களை பனை மரங்களைக்கொண்டு உருவாக்கினர், பனையின் குருத்துக்களிலிருந்து செய்யப்பட்ட பெட்டிகள் மற்றும் சுளவு ஆகியவற்றில் பல சரக்கு பொருட்களை இட்டு வைத்தனர். பால் பொருட்கள் வைக்கப்பட்ட பானைகளை பனை உறிகளில் வைத்து தொங்கவிட்டனர், பனைஓலையில் செய்யப்பட்ட பாய்களில் படுத்துறங்கினர். பனையால் செய்யப்பட்ட துடைப்பங்கள், பனை நாரிலிருந்து கயிறுகள் ஆகியவற்றை பயன்படுத்தினர். பனை விசிறி, குடை, காதணிகள், சிறுவர் விளையாடும் காற்றாடி, பனையோலை வெடி, பனங் கள், வாசல் கால்மிதிகள், தடுக்குகள், மீன் மற்றும் இறைச்சிகள் வைக்கும் பெட்டிகள் என பனையால் நிறைந்தது தமிழர் வாழ்வு. இவற்றையெல்லாம் தாண்டி பனை நுங்கு, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனம்பழம், பதநீர், பனங்கிழங்கு என பனை தமிழர் வாழ்வில் தனது அத்துனை பாகங்களாலும் பின்னிப் பிணைந்தது. பனம்பழம் சிறந்த சத்துணவு. பனம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ சத்து கண்பார்வைக்கு மிகவும் நல்லது. தமிழகத்தைப்போலவே தமிழர்கள் மிகுந்து வாழும் யாழ்ப்பாணம், மன்னார், வடமராச்சி ஆகிய பகுதிகளிலும் பனை மரங்கள் அதிகம் வளர்க்கப்பட்டன. அங்குள்ள தமிழர்கள் பனம்பழத்திலிருந்து பெறப்பட்ட கூழிலிருந்து ஜாம், குளிர்பானங்கள், உணவுப்பொருட் களை தயாரித்தனர்.

பனம்பழத்திலிருந்து ஒருவித துணிசோப்பினை உருவாக்கினர். போர்க்காலங்களில் வேதியியல் பொருட்களால் ஆன துணிசோப்புக்கள் கிடைக்காத போது பனம்பழங்களையே அதற்குப்பதிலாக பயன்படுத்தினர். பனம்பழத்திலிருந்து ஒருவித பற்பசையையும் கண்டுபிடித்து அதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். பனம்பழம் ருசிக்க சுவையானது. ஏனைய பழங்களைப் போல் பனம்பழத்தை நேரடியாக உண்ண மாட்டார்கள். இதனை நெருப்பில் சுட்டு உண்பது தமிழகத்தில் வழக்கம். நெருப்பில் சுட்ட இப் பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், களியைப் பிழிந்து உண்பார்கள். இக் களியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருட்களையும் செய்வது உண்டு.

 பனங்கற்கண்டு

இக்களியைப் பிழிந்து, வெயிலில் காயவிட்டு பனாட்டு எனப்படும் உணவுப்பொருள் பெறப்படுகின்றது. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. தமிழகத்தில் பனம்பழத்தை சுட்டு வெல்லம் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உண்டு. பனங்கற்கண்டு இருமலுக்கும், சளித் தொல்லைகளுக்கும் சிறந்த மருந்து. பனங்கிழங்கும் வேகவைத்து சாப்பிட தோதான மாலை நேரத்து விருந்து. சுடவைத்த பாலில் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது சில தொழில் முறை பாடகர்களுக்கு குரல் வளம் காக்கும் உபாயமாக இருக்கிறது. சேர மன்னர்கள் போருக்குச் செல்லும்போது தங்கள் வெற்றியை உறுதி செய்யும் விதமாக பனம் பூவைச் சூடிச் செல்வார்கள்.

 பனையில் இருந்து கிடைப்பது

 பனையிலிருந்து பெறப்படும் நுங்கும், பனங்கற்கண்டும் மட்டுமே இன்றைக்கு பெரும்பாலும் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. பதநீர் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன; அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன; வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது. பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் பற்கள் உறுதிப்படுகின்றன; உடல் வெப்பம் தணிக்கப்படுகிறது. பனை ஓலை, மட்டை, பத்தல் என்ற மூன்ற பகுதிகளை கொண்டது. பத்தல் என்பது மட்டையின் அடிப்பகுதியில் கருப்பாக இருக்கும். அந்த காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான கிராமவாசிகள் பத்தல்களை வெட்டிக் காலுக்குச் செருப்பாக அணிந்து கொள்வார்களாம். மேல் வாருக்குப் பனை நாரைப் பொருத்திக் கொள்வார்களாம். இதை அணிந்து கொண்டு செல்லும்பொழுது காலுக்கு மிருதுவாக இருப்பதுடன் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியதாக இருக்கும். சாலைப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பத்தல்களாலான செருப்புகளை அணிவதுண்டு. அடிப்பகுதி அதிகமாகத் தேய்ந்துவிட்டால் வேறு இரண்டு பத்தல்களை வெட்டிக் கால் செருப்புகளை செய்து கொள்வர். வளரும் பருவத்திலுள்ள வடலி பனையின் பத்தல் களில் அடிப்பாகத்தில் கருப்பாக கம்பி போன்ற உறுதியுடன் இருக்கும் பகுதிக்கு தும்பு என்று பெயர். இந்த தும்பியிலிருந்துதான் இயந்திரங்கள், கப்பல்களை சுத்தப்படுத்தும் துடைப்பான்களை செய்கிறார்கள். பனை ஓலைச்சுவடிகள்தான் நமது பொக்கிஷங்கள். அவற்றை எப்படி தயாரித்தார்கள் என்பது வியப்பான விஷயமே.

பனை ஓலைச்சுவடிகள்

சுவடிகள் தயாரிப்பதற்கு முதலில் பனையோலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு கத்தரிக்கப்பட்ட ஏடுகள் மிக நன்றாக உலர்த்தப்படும். ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும். இவ்வாறு இவை கொதிக்க வைக்கப்படுவதால் ஏடுகளில் ஒரு இலகுத்தன்மை ஏற்படு கிறது. பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும், காய்ந்த பிறகு கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள். இப்படிச் செய்வதால் ஏட்டிற்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோல ஆகிவிடும். இப்போது ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விடுமாம்.

தேசிய பனை ஆராய்ச்சி மையம்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பனை அதிகம் விளைவதால், தேசிய பனை ஆராய்ச்சி மையம், பனை பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகியன சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகம் பனை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பனை மரம் சிறப்பு

புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் பொற்பனைக்கோட்டை என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கோட்டை 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். பாரியின் மரணத்துக்குப் பின் அவ்வையாரின் முயற்சியால் மலையமான் மகன் தேவகன், பாரி மகளிரான அங்கவை மற்றும் சங்கவையை மணம் செய்துகொள்ள சம்மதித்தான். திருமணத்துக்கு வந்த மூவேந்தர்கள் பனம்பழம் வேண்டும் என கேட்டார்களாம். அது பனம்பழத்துக்கான விளைச்சல் காலமில்லை. என்றாலும் விருந்தினர் மனம் கோணாமல் இருக்க அவ்வையார் வெளியே வந்தார். மணப்பந்தல் போட்ட இடத்தில் பந்தலுக்காக வெட்டிப்போட்டு மீதியிருந்த பனை மரத் துண்டத்தைப் பார்த்து, “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும் மங்கைக் கறுகிட வந்துநின்றார் மணப் பந்தலிலே சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து, நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!” என்ற பாடலைப் பாட, பனந்துண்டம் முளைத்து வளர்ந்து உடனே பனம்பழம்  தந்ததாம். பனை மரம் வெறும் தாவரம் மட்டும் அல்ல. நம் தமிழர் வாழ்வின் அடையாளம்.

  திருக்குறளில் பனை

திருக்குறளில் மொத்தமே இரண்டு மரங்கள் தான் இடம்பெற்றுள்ளன. ஒன்று மூங்கில் மற்றது பனை. அறத்துப்பாலில் செய் நன்றி அறிதல் அதிகாரத்தில் 104 வது குறளில், ‘தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” ஒருவன் தினை அளவு நன்றி செய்தாலும் அதைச் சிறியது என்று எண்ணாமல் உதவியின் பயனை அறிந்தவர்கள், பனை அளவு பெரிதாகவே கருதுவர்.

Editor's Choice

எவர் ஒருவர் வேளா வேளைக்கு சரியான நேரத்தில் உணவு எடுக்கிராறோ, அவர் நிச்சியம் நோயாளியாக தான் இருப்பார்.

உடலின் உணவுத் தேவை நம் உடலுக்கு தான் தெரியுமே தவிர, சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு அல்ல.

ஒரு உயிரற்ற பொருளுக்கு, உயிரிணங்களின் தேவையை எப்படி கணிக்க முடியும்.

முதலில் இந்த மூன்று வேளை, சரியான நேரத்தில் உணவெடுப்பது நம்முடைய மரபன்று.

இப்படி உண்ணாவிட்டால் அல்சர் ஏற்படும், அது வந்துவிடும், இது வந்துவிடும், என்று ஆங்கில மருத்துவம் கூறுவது மிகப்பெரிய பொய், ஏமாற்றுவேலை.

மூன்று வேளை சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை நம் தலை மீது கட்டியது யார் தெரியுமா,

மருந்து மாத்திரை கம்பனிகள். ஆம், அவர்களுடைய மருந்துகளை விற்று தீர்பதற்காக, நம்மை மூன்று வேளை உணவெடுக்க வைத்தார்கள்.

சரி, எப்பொழுது உணவெடுக்க வேண்டும்

இதோ நம் வள்ளுவன் வாக்கு

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

பொருள் : நாம் உண்ட உணவு செரிமானமாகி, கழிவுகள் நீங்கிய பின். பசி எடுத்து உண்டால், உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை.

நாம் இதை பின் பற்றி, நம்முடைய குழந்தைகளுக்கு செல்லி கொடுத்திருந்தால், இந்த அளவுக்கு நம் சமுதாயம் நோய் பிணியில் சிக்கி இருக்காது.

சரி, முடிந்து பேனதை பற்றி பேச வேண்டாம்.

ஒன்னு பன்னுங்க

ஒரு வாரம் கடிகாரம் பார்காமல்

பசியை உணர்ந்து சாப்பிட்டு வாங்க

உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தையும், அற்புதத்தையும் இங்கு பதிவிடுங்க.

நிறைய பேருக்கு பசினாலே என்னனு தெரியாது. இது பெருமை பட வேண்டிய விடையம் அல்ல.

பசியை உணராவிட்டால் உங்க உடலில் பிரச்சனை உள்ளதென்று அர்த்தம்.

பசி அறியா வயிறு பாழ்

( பசி னா என்ன னு தெரியனுமா, ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இருங்க, தெரிஞ்சுக்குவீங்க )

குறிப்பு : இரவு உணவை 8 மணிக்கு மேல் எடுக்க கூடாது

Editor's Choice
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்னை உடல்பருமன். பல நோய்களுக்கு மூல காரணம் உடல் பருமன். என்னென்னவோ வழிகளில் உடல் எடையை சரிசெய்ய பலரும் முயன்றுகொண்டிருக்கிறார்கள். உடல்பருமனை சரிசெய்வது கொஞ்சம் கடினமான காரியம்தான். கொஞ்சம் முயற்சித்தால் நாம் சரி செய்ய முடியும். இங்கு உடல் எடை குறைப்பிற்கான காரணங்களை பார்க்கலாம்.
 
நம் உடல் எடை, சராசரி எடையைவிட 20 சதவிகிதம் அதிகரிக்கும் அந்த நிலையையே `ஒபிசிட்டி’ என்கிறோம். அதாவது, திசுக்களில் அதிகப்படியாகக் கொழுப்புக்கள் சேரும் நிலை.
உலக அளவில் 12 பேரில் இருவர் ஒபிசிட்டி பிரச்னையால் பாதிக்கப்படுகிறார். சராசரியாக 2.8 மில்லியன் மக்கள் (28 லட்சம் பேர்) ஒபிசிட்டி காரணமாக நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள்.
இதன் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதால் கணக்கில் கொண்டு இது ஒரு நோயாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் உடலுக்குத் தேவையான கலோரிகளைவிட நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவு அதிகமாவதால், உடல்பருமன் ஏற்படுகிறது.
 
இது உடனடியாக ஏற்படும் ஒன்றல்ல. பல மாதங்களாக உடலில் சேரும் கொழுப்பே உடல்பருமன் ஏற்படக் காரணமாகிறது. இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
 
 ஒரு குழந்தையின் தாய், தந்தை இருவரும் பருமனாக இருந்தால், அந்தக் குழந்தை பருமனாக 80 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. தாய், தந்தை யாரேனும் ஒருவர் பருமனாக இருந்தால் 50 சதவிகித வாய்ப்பிருக்கிறது. எனவேதான் பரம்பரையாக உள்ள ஜீன்களின் வழியாக ஒபிசிட்டி ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
 
 பரம்பரை ஜீன்களில் சிலருக்கு புரோட்டீன் லெப்டின் குறைபாடு காணப்படும். இவர்களுக்கு பசியைத் தாங்கும் சக்தி குறைவாக இருக்கும். எப்போதும் பசிக்கிற உணர்வு மேலோங்கியிருக்கும். இதனாலும் உடல்பருமன் உண்டாகும்.
 
 அதிகமாக கடை உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள், உணவு மீதமாகிறதே என்பதற்காக அதையும் சேர்த்து அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறவர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடாதவர்கள், இனிப்பு, துரித உணவுகளை உண்பவர்களுக்கும் உடல்பருமன் ஏற்படலாம்.
 
 மன உளைச்சல், மனஅழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிப்பது போன்ற உணர்வு இருக்கும். இவர்கள் கட்டுப்பாடின்றிச் சாப்பிடுவதால் ஒபிசிட்டி ஏற்படலாம்.
 
 உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு, பருமன் ஏற்படுவது சகஜம். அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள், குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்காதவர்கள், அதிகமாக வாகனங்களைப் பயன்படுத்தி, குறைவாக நடப்பவர்கள் ஆகியோருக்கு உடல்பருமன் உண்டாகும்.
 
 உடல்பருமனுக்கு வயது வரம்போ, பால் பாகுபாடோ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
 
 உடல் எடை, சராசரி எடையைவிட 10 சதவிகிதம் அதிகமாக இருக்கலாம். 20 சதவிகிதம் அதிகமானால், அது உடல்பருமனாகக் கருதப்படுகிறது.
 
இது, உடல் எடையை (கி.கி) நம் உயரத்தின் (மீ) வர்க்கத்தால் வகுத்தால் கிடைக்கும் எண். இது
 
1, 25-க்குக் குறைவாக இருந்தால் நார்மல்.
 
2, 25 முதல் 29.8 வரை முதல்நிலை பருமன்,
 
3, 30 முதல் 40 வரை இரண்டாம் நிலை பருமன்,
 
4, 40-க்குஅதிகமானால் மூன்றாம் நிலையாகக் கருதப்படுகிறது
 
1 முதல் நிலை
 
சிறிது உடற்பயிற்சியும், உணவு முறைகளில் மாற்றமும் செய்து கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தாலே போதுமானது.
 
2 இரண்டாம் நிலை
 
மருத்துவர் மற்றும் உணவு நிபுணரின் ஆலோசனையைக் கடைப்பிடிக்கலாம். இல்லையென்றால், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படும். மேலும், ஆஸ்டிரோ ஆர்த்தரைட்டீஸ், வெரிகோஸ் வெயின், சர்க்கரைநோய் போன்றவையும் ஏற்படலாம். இந்த வகையைச் சேர்ந்தவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
 
3 மூன்றாம் நிலை
 
மிகவும் மோசமான நிலையிலுள்ள இந்த வகையினர் சுறுசுறுப்புக் குறைவாக இருப்பதால், நோய்களால் பாதிக்கப்படுவர்.
 
டயட் தெரப்பி, உடற்பயிற்சி, மனஅழுத்தத்தைக் கட்டுபடுத்தும் முயற்சிகள், மருந்துகள் மூலமாகவோ, அறுவைசிகிச்சை மூலமாகவோ குணப்படுத்தலாம்.
 
1, முதல் நிலை
 
அவரவர் உடல் உழைப்புக்கேற்றபடி பசியுணர்வு தூண்டப்படுகிறது. கூலித் தொழிலாளி, கட்டட வேலை செய்கிறவர்கள் போன்ற உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், அலுவலகங்களில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களைவிட அதிகமாக உண்ண வேண்டும். சரியான உணவை, சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது மிக முக்கியம்.
 
2, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை
 
1 கண்டிப்பாக உணவுக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
2 முதற்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவைக் குறைக்க வேண்டும்.
 
3 அதாவது, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 800 முதல் 1,500 கலோரிகள் போதுமானது.
 
4 ஒருவர், ஒரு நாளைக்கு 2,000 கலோரிகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், 1,200 கலோரிகள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
5 கலோரி குறைவான உணவுகளான கோதுமை, பருப்புகள், தானியங்கள், பழங்கள், வெள்ளரி, பாதாம், பட்டை முதலியவற்றால் உடல்பருமன் வேகமாகக் குறையும்
 
6 உங்களின் பி.எம்.ஐ (BMI) 30-க்கு மேல் இருந்தால், கலோரி குறைவான உணவுகள் பருமனில் மூன்று முதல் 5 பவுண்டுகளை ஒரு வாரத்தில் குறைக்கும். 12 வாரங்களில் 44 பவுண்டுகள் குறைக்கும்.
 
6 புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்த பருப்புகள், காய்கறிகளை எப்போதும்போல உண்ணலாம். உருளைக்கிழங்கை தவிர்க்கவும்.
 
7 கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தால் பருமன் குறைவதோடு நோய்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
 
8 அதிகமாக நீர் அருந்துவது செல்களை உயிர்பிக்கும். அதோடு, சத்துக்கள் உடலின் எல்லா பாகங்களிலும் பரவ உதவும். எனவே நீர், ஜூஸ், மோர் முதலியவற்றைக் குடிப்பது நல்லது.
 
9 ஃபைபர் நிறைந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள், பருப்புகளை தாராளமாக உண்ணலாம். இதனால் பல நன்மைகள் கிடைக்கும். குறைந்த கலோரி உணவு, தேவையான வைட்டமின்கள், மினரல்கள், சீரான சிறுநீரகப் பணி, உட்கொள்ளும் உணவு குறைவது மற்றும் அதிகப்படியான கலோரிகளையும் கொழுப்பையும் குறைக்கும்.
 
வெஜிடபுள் சாலட், கீரைப் பொரியல், ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம்), பருப்புகள், நீர்த்த சூப் வகைகள்.
 
1 கலோரி குறைவான உணவுகளோடு உடற்பயிற்சியும் சேரும்போது வேகமாக உடல் எடை குறையும்.
 
2 ஏரோபிக் பயிற்சிகளில் அதிகமாகச் சக்தி செலவழிக்கப்படுவதால், உடல் எடை சமநிலையில் இருக்கும்.
 
3 ஜாகிங், வாக்கிங், சைக்கிளிங் போன்றவை பருமன் குறைவதைத் துரிதப்படுத்துபவை. இவற்றை ஆரம்பிக்கும்போது 10 நிமிடங்களிலிருந்து தொடங்கி தொடர்ந்து சிறிது சிறிதாகக் கூட்டி 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.
 
4 வாக்கிங் முடித்தவுடன் சூப்போ, ஜூஸோ, நீரோ அருந்தலாம். அவை உடலின் நீர்த்தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
 
5 வாக்கிங் முடித்தவுடன் எப்போதும்போல தினசரி வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். ஓய்வு எடுக்கத் தேவையில்லை.
 
தானியங்கள்
 
பார்லி, ஓட்ஸ், முழு கோதுமை, ராகி, சோளம்.
 
பருப்புகள்
 
கொள்ளு, மொச்சை, சோயா பீன்ஸ், கடலைப் பருப்பு, பருப்புகள், ஆளி விதைகள்.
 
கீரைகள்
 
எல்லா கீரை வகைகளையும் சாப்பிடலாம். எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ்.
 
கிழங்கு வகைகள்
 
பீட்ருட், சேனை, இஞ்சி இவற்றை அதிகமாகவும், உருளைக்கிழங்கைத் தவிர்ப்பதும் நலம்.
 
காய்கறிகள்
 
சுரைக்காய், புடலங்காய், பீர்க்கை, புரோக்கோலி, சிவப்பு முட்டைக்கோஸ், சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு, தக்காளி, வெங்காயம், பூண்டு.
 
இறைச்சி :
 
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி, வான்கோழி இறைச்சி மற்றும் இறால் தவிர எல்லா மீன் வகைகள்.
 
பால் உணவுகள் :
 
பசும் பால், தயிர் முதலியவை. பாலாடைக்கட்டி, வெண்ணெய், கோவா, எருமைப் பால் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
 
மசாலாப் பொருட்கள் :
 
பட்டை, மிளகு.
 
இனிப்பு :
 
வெல்லம், தேன் இவற்றை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்குப் பதிலாக உபயோகிக்கலாம்.
 
எண்ணெய் :
 
மரசெக்கு எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்.
 
உடல்பருமனைக் குறைக்காமல் இருந்தால், பலவித நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, இதனைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு உடனடியாக பருமனைக் குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
 
தேவையானவை
 
கேரட் – 2, வெள்ளரி – 1, தக்காளி – 1, வெங்காயம் – 1, முட்டைக்கோஸ் – 1 சிறிய கப், ஆளி விதைப்பொடி – சிறிது லெமன் ஜூஸ் அல்லது தயிர் – தேவைக்கு.
 
செய்முறை
 
எல்லாக் காய்கறிகளையும் பொடியாக அரிந்து ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் லெமன் ஜூஸ் அல்லது தயிர் சேர்க்கவும். இதில் ஆளி விதை பொடியை மேலே தூவிப் பரிமாறவும். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற மாலை ஸ்நாக்ஸாக இது இருக்கும். இதனுடன் அவரவர் விருப்பத்துக்கேற்ப குடமிளகாய், புரக்கோலி, முட்டைகோஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
 
செய்முறை
 
சிறிது இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் இட்டு அதன் சத்துக்கள் இறங்கும் வரை மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்கவிடவும். இதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால்,
அதிகப்படியான கலோரிகளை எரிப்பதுடன் உடலின் நச்சுத்தன்மையைப் போக்கும்
 
Editor's Choice

குளிர்காலம் வந்தாலே பலவகை புதிய பழங்களும் காய்கறிகளும் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிடும்.  காய்கறி/பழக்கடைக்குப் போனாலே, பளீரென்ற பலவகை வண்ணத்தில் காய்கறிகளும் பழங்களும் நம் கண்ணுக்குத் தெரியும். குளிர்காலத்திற்கே உரிய பருவகாலப் பழவகைகளும் காய்கறிகளும் பல வகைகளில் கிடைப்பதால் உங்களது உடல் ஆரோக்கியத்துக்கு அதிகளவில் ஆதாயம் தருபவை எவை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க தேவையான ஐந்து குளிர்காலப் பழங்கள் மற்றும் ஐந்து குளிர்காலக் காய்கறிகள் பற்றி இங்கு விவரமாகக் காண்போம்.

குளிர்காலத்தில் உண்ண வேண்டிய ஐந்து முக்கியப் பழவகைகள்

1. ஆப்பிள்

‘ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால், மருத்துவரிடம்  போக வேண்டிய அவசியமே ஏற்படாது’ என்று புகழ்பெற்ற ஒரு பழமொழி சொல்கிறது. ஆப்பிளை உண்டால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களை நன்கு கவனித்தால், இது உண்மை என்பது நமக்கே புரியும். நரம்பு மண்டலச் செயல்பாட்டிற்கு ஆப்பிள் பேருதவி. இதிலுள்ள ஆண்டி-ஆக்சிடன்ட்டுகள் நியூரான்களின் செல்கள் இறப்பதைத் தடுப்பதால் நரம்பு மண்டலச் செயல்பாடு மேம்படுகிறது. ஆப்பிளை உண்பதால் நரம்புமண்டல ஆரோக்கியம் மேம்பட்டு இதனால் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் அல்ஜூமர் நோய் வரும் அபாயமும் தவிர்க்கப்படுகிறது. இதைத் தவிர, ரத்தம் கட்டிப்போய் பக்கவாதம் வரக்கூடிய அபாயத்தையும் நீரிழிவு நோய் வரும் அபாயத்தையும் ஆப்பிள் குறைக்கிறது.

2. திராட்சை

திராட்சை ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய ஒரு பழம். ஆனால், குளிர்காலத்தில் உண்ணும்போதுதான் இப்பழத்தின் உண்மையான ஆதாயங்களை நம்மால் பெற முடியும். ஆண்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதால் சருமநோய் அண்டாமல் தடுக்கவும் திராட்சை உதவும். கண்கள், முட்டிகளுக்கும் திராட்சை வலிமை தருகிறது. ஆகவே, முதியோர்கள் இதைத் தவறாமல் உண்ண வேண்டும்.

3. ஆரஞ்சு

இந்தியாவில் குளிர்காலத்தில் பரவலாகக் கிடைக்கும் ஒரே பழம் ஆரஞ்சுப் பழமாகத்தான் இருக்க முடியும். இவற்றை எடுத்துச் சென்று நாம் வேலை செய்யும் இடத்தில் அமர்ந்தும் உண்ணலாம். குளிர்காலத்தில் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் தேவையான வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது. ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதில் இன்னொரு முக்கிய ஆதாயமும் உள்ளது. தொடர்ந்து ஆரஞ்சைச் சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள்களின் எதிர்மறை விளைவை மட்டுப்படுத்தவும் ஆரஞ்சு உதவுகிறது.

4. மாதுளம்பழம்

குளிர்காலத்தில் நாம் செய்யும் ஆரோக்கியமான தேர்வு என்றால் அது மாதுளம்பழம் உண்பதே. உடலின் இரத்த அழுத்த மட்டங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஹைப்பர்டென்ஷன் நிலைக்கு நாம் செல்வதை மாதுளம்பழம் தடுக்கிறது. உடலுக்குத் தேவையான செரிமான சக்தியைத் தரும் நார்ச்சத்து மாதுளம்பழ்த்தில் அதிகம் உள்ளது. இறுதியாக, மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டால் மாதுளம்பழச்சாறை தொடர்ந்து உண்டு வந்தால் அவ்வலி சரியாகி விடும்.

5. கொய்யாப்பழம்

ஆப்பிள் போன்றே கொய்யாப்பழமும் ஆண்டுதோறும் தங்குதடையின்றி கிடைக்கக்கூடிய ஒரு பழம். ஆயினும் குளிர்காலத்தில் இதை உண்ணும்போதுதான் இதிலிருந்து அதிகபட்ச ஆதாயம் தரக்கூடிய பல விளைவுகளை நாம் பெற முடியும். இனப்பெருக்க சக்தியைப் பெருக்க கொய்யாவிலுள்ள ‘ஃபோலேட்’ மிகவும் உதவுகிறது. தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டைச் சீரமைப்பதற்கும் கொய்யாப்பழம் தேவைப்படுகிறது. உடலில் ரத்தகாயம் ஏற்பட்டால் அது ஆறுவதற்குத் தேவையான கிருமிநாசினியும் இப்பழத்தில் உள்ளது. அடிபட்ட இடத்தில் கொய்யாவைத் தடவினால் திசுக்கள் சீக்கிரம் குணமாகி விடும். நார்ச்சத்து அதிகமுள்ள கொய்யாப்பழம் மலச்சிக்கலுக்கும் பெருமருந்தாக உதவுகிறது.

குளிர்காலத்தில் உண்ண வேண்டிய ஐந்து முக்கியக் காய்கறிகள் 

1. கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகள் ஆண்டுதோறும் சந்தையில் கிடைக்கின்றன; எனினும் அவற்றின் சிறந்த வகைகள் குளிர்காலத்தில்தான் கிடைக்கும். கிழங்கிலுள்ள ஒரு தனிமம் இதயநோய், குடல்நோய் வராமல் தடுக்கிறது. இவற்றால் கிடைக்கும் மற்ற ஆதாயங்களைத் தவிர, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டட்தை மேம்படுத்தவும் கிழங்குகள் உதவுகின்றன. இவற்றில் குறைந்த அளவு மட்டுமே கலோரிகள் உள்ளதால் குளிர்காலத்தில் இவற்றை உண்பது பொருந்தும்; மேலும் இவற்றில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளன. இதனால் குளிர்காலத்தில் சில்லென்ற தட்பவெப்பநிலையில் உண்ண ஏதுவாக கிழங்குகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. 

2. கேரட்டுகள்

பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் சில காய்கறிகளுள் கேரட்டும் ஒன்று. இதில் வைட்டமின்களும் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. கேரட்டைத் தொடர்ந்து உண்டுவந்தால் உடலில் ஏற்படும் வைட்டமின் ‘B’, ‘C’, ‘D’, ‘E’ மற்றும் ‘K’ குறைபாடு தொடர்பான நோய்களைச் சீக்கிரமாகக் குணப்படுத்த முடியும். முக்கிய வைட்டமின்கள் தவிர, கேரட்டில் ஃபோலேட்டுகள், இரும்பு, தாமிரம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்களும் உள்ளன. கேரட்டால் உண்டாகும் ஆரோக்கியம் தொடர்பான ஆதாயங்கள் பல. உதாரணமாக, தினமும் கேரட்டை உண்டுவந்தால் கண்களின் பார்க்கும் திறன் மேம்படுவதுடன் புற்றுநோய்க்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி உருவாகி, அது தாக்காமல் பாதுகாப்புடன் இருக்கலாம். கேரட்டை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

3. பட்டாணிகள்

பல்வேறு ஆரோக்கிய ஆதாயங்களைத் தரும் பட்டாணி இன்னொரு முக்கியமான குளிர்காலக் காய்கறி ஆகும். இத்துடன் கிடைக்கும் உபரியான ஆதாயம் என்னவெனில் பெரும்பாலான இந்திய உணவுகளில் இதைச் சுலபமாகச் சேர்த்து விடலாம். வைட்டமின் ‘B’, வைட்டமின் ‘K’ ஆகிய இரண்டும் பட்டாணியில் அதிக அளவில் உள்ளன. வீக்கத்திற்கெதிராகவும் ஆண்டி-ஆக்சிடன்ட்டாகவும் உடலுக்குள் பட்டாணி வேலை செய்கிறது. இதைப் பச்சையாகவோ (அ) சமைத்த பின்போ உண்ணலாம்; எப்படி உண்டாலும் இது உண்பவருக்குத் தீங்கிழைக்காது. உடல் எடை அதிகரிப்பதையும் அல்ஜீமர் நோய் ஏற்படாமலும் தடுப்பதும் இதன் பிற ஆதாயங்களாகும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பட்டாணி உதவும்.

4. கீரை

கீரைதான் இந்திய வீடுகளில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படும் இலையுடைய காய்கறி. இதில் உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் பல அவசியமான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. கீரையைச் சாப்பிடுவதால் புற்றுநோய், ஆஸ்துமா ஆகியவை தாக்காமல் பாதுகாக்கலாம். இரத்த அழுத்தத்தையும் கீரை மிகவும் குறைப்பதால் ஹைப்பர்டென்ஷனால் அவதிப்படுபவர்களுக்கு இது பேருதவி செய்யும். இறுதியாக, கீரை உண்பதால் சருமம் ஆரோக்கியமாக இருப்பதுடன் தலைமுடியும் நன்றாக வளர்கிறது. 

5. (சிவப்ப முள்ளங்கி)

குளிர்கால மாதங்களில் கிடைக்கும் உச்சபட்ச உணவு வகைகளில் ஒன்றாக டர்னிப் கருதப்படுகிறது. டர்னிப்பின் பச்சைப் பகுதி முழுதும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனால் நுரையீரல் வீக்கம், எம்பைசெமா ஆகியவை கட்டுப்படுத்தப்படுவதுடன் நுரையீரலும் நலம் பெறுகிறது. டர்னிப் உண்பதன் இன்னொரு ஆதாயம் என்னவெனில் இது சிலரிடத்தில் சிறுநீரகக் கற்களையும் கரைத்துவிடுகிறது. பெரிய அளவிலான கற்கள் இல்லையெனில், தொடர்ந்து டர்னிப் உண்டுவந்தால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினையைச் சுலமாகச் சமாளித்துவிடலாம். 

Editor's Choice
பழங்காலம் முதல், இன்றுவரை, எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமென்றால், அது, நாம் கொண்டாகும் முக்கனிகளில் முதல் கனியான, மாம்பழம் மட்டும்தான்.
சத்துக்கள் :
 
மாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம். மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும் தன்மைமிக்கவை.
 
சரும அழகு:
 
மாம்பழத்தில் உள்ள மற்றொரு ஊட்டச்சத்து, சருமத்துக்கு பொலிவுதரும், AHA எனும் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம். தோலின் மினுமினுப்புக்காக, கிரீம்களிலுள்ள இந்த செயற்கை அமிலத்தை நாடவேண்டியதில்லை. அதற்குபதில், மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது, அதில் இயற்கையாகவே உள்ள AHA, உடலின் சருமத்தை ஜொலிக்கவைத்து, மென்மையாக்கும்.
 
 
மாம்பழம் மட்டும் உடலுக்கு நன்மைகள் தருவதில்லை, அதன் மரப்பட்டை, இலைகள், பூக்கள் போன்றவையும், மருத்துவ குணங்கள் மிக்கவைதான். அதைவிட, மாம்பழத்தின் கொட்டைகள், அதிக பலன்களைத் தரவல்லவை
 
 
மாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன. 1௦௦ கிராம், மாங்கொட்டையில் உள்ள தாதுக்கள்; நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் 21 கிராம், ஆஷ் 2 கிராம், மக்னீசியம் 34 கிராம், பாஸ்பரஸ் 20 கிராம், பொட்டாசியம் 158 கிராம், சோடியம் 7 கிராம், வைட்டமின் B1 . 8 கிராம், வைட்டமின் B2 .3 கிராம், வைட்டமின் B6 19 கிராம், வைட்டமின் B12 12 கிராம், வைட்டமின் C 56 கிராம், வைட்டமின் A 27 கிராம், வைட்டமின் E 3 கிராம், வைட்டமின் K 59 கிராம். இத்தனை சத்துமிக்க, மாங்கொட்டையை முறையாக உட்கொள்வதன் உடலின் பல்வேறு பாதிப்புகளை சரிசெய்துவிடும். அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போமா?
 
 
இரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது, இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. ஹீமோகுளோபின், இரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் சேர்க்கும். இரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
 
கண் கீழிமைகளை கீழ்நோக்கி இழுப்பதன் மூலம், அவற்றின் பின்புறம், இரத்த ஓட்டம் இன்றி, தோல் வெளுத்து காணப்படுவதை வைத்து, இரத்த சோகையின் அளவை அறியலாம். இவர்களுக்கு, அடிக்கடி சோர்வும் தலைவலியும் ஏற்படும். இரத்த சோகை பாதிப்பை இயற்கையாக குணப்படுத்துவதில், பல காலமாக, மாங்கொட்டை பயன்படுகிறது. மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து, பொடியாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை, தினமும் தேனில் குழைத்து, சாப்பிட்டு வரவேண்டும்.
 
 
வயிற்றுப்போக்கு தொடர்ந்து போகும்போது, உடலில் உள்ள நீர் மொத்தமாக வெளியேறி, உடல் வறண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும். மாம்பருப்பு, அந்த பாதிப்பைப் போக்கும். மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து பொடியாக்கி, அத்துடன் ஓமப்பொடி, சுக்குப்பொடி, கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டு, அதில் பாதி தேக்கரண்டி அளவு எடுத்து, நெய் சேர்த்து குழைத்து, வாயிலிட்டு விழுங்க, வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
 
#கர்ப்பிணிப் பெண்கள்:
 
மாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.
 
 
உடல் எடைக்குறைப்பிற்கு, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம். மாம்பருப்பை அரைத்து வத்தக்கொழம்பாக செய்து, சாப்பிடலாம். மாங்கொட்டை கொழம்பு, கிராமங்களில் இன்றும் ஃபேமஸ், மாம்பருப்பில் சுவையான துவையலும் செய்து சாப்பிடுவார்கள். அதையும் முயன்று பார்க்கலாம். இதன்மூலம், சமச்சீரான உணவு கிடைத்து, உடல் எடையைக்குறைக்கமுடியும்.
 
உயர் இரத்த அழுத்தம்:
 
இரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும். இதயத்தூய்மை என்றவுடன், ஏதோ, தத்துவ வகுப்போ, போதனைகள் செய்து நம்மை, நூடுல்ஸ் ஆக்கி, நெளிய வைத்துவிடுவார்களோ?, என்ற அச்சம்வேண்டாம். இது உடல்ரீதியானது. மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்தஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் எல்லாம், எட்டாத தூரத்துக்கு ஓடிவிடும்.
 
 
சர்க்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம், உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை, நெருங்கவிடாது மாம்பருப்பு தூள்.
 
 
உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். உடலில் அழியும் திசுக்களுக்கு மாற்றாக தினமும் உருவாகும் திசுக்களின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும், புரதம் இன்றியமையாத ஒன்றாகும். இரத்த ஹீமோகுளோபின் வலுப்பட தேவைப்படும் புரதம், நகம், முடி வளரவும் பயன்படுகிறது. பொதுவாக இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிகமாகக் காணப்பட்டாலும், பால் மற்றும் பீன்ஸ் வகை காய்கறிகளிலும் புரதச்சத்து நிறைய இருக்கிறது.
 
அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில், புரதச்சத்து, அதிகமாக உள்ளது. மாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் வளர்ச்சி சீராகும்
Editor's Choice
முற்றாத முருங்கை கீரைகள் இரண்டு கட்டு கழுவி வெயிலில் உலர்த்தி, மிக்சியில் பொடித்து சலித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
 
ஒரு வானலியில்...
 
1. காய்ந்த மிளகாய் 25 கிராம்,
 
2. உளுந்தம் பருப்பு 150 கிராம்,
 
3. மிளகு 25கி.,
 
4. சீரகம் 10 கி,
 
போட்டு சிவக்க வறுத்து பின் அதையும் நைசாக அரைத்து முருங்கை இலை பொடியுடன் கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும்.
 
இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடிக்கு பதிலாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கு க்ரீன் ரைஸ் என்று கலர்புல்லாக கொடுக்கலாம்.
 
தோசை மேல் தூவி, சப்பாத்தி மாவில் சேர்த்து, இட்லி மாவு ஊற்றி அதில் டாப்பிங்காக, மோரில் கலந்து, என்று உங்கள் கற்பனைக்கு ஏற்றார் போல் எப்படி வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
 
முருங்கைகீரை பொடி முற்றிய சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பாஸ்பரஸும, இரும்பு சத்தும், இரத்த சுத்திக்கும், நரம்பு வீரியத்திற்கும் மிகவும் துனை புரியும்.
 
பெரும்பாலன நோய்களுக்கு காரணமான மலச்சிக்கலை விரைவில் சரி செய்யும். இளமையுடன் வைக்கும். ரத்த சோகை நீக்கி, ஹீமோகுளோபினைக் கூட்டும் அதிசய கீரை பொடி இந்த முருங்கை கீரை பொடி.
 
உடல் அசதி, அதிக எடை, மூட்டு வலி, சளி, இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, சிறு நீரக நோய், போன்ற விஞ்ஞான மருத்துவத்திற்கும் சவால் விடும் வியாதிகளை விரைந்து சீர்படுத்தும் அதிசய சிரஞ்சீவி இந்த முருங்கை கீரை.
 

பக்கம் 10 / 15