Editor's Choice

மதுரை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து, மலட்டுத்தன்மையாகி, சுற்றுச்சூழல் அதிகளவு பாதிக்கப்படுகிறது.

ரசாயனத்தின் விளைவு (Effect of Chemicals)

மேலும் ரசாயன உரத்தை அதிகளவு பயன்படுத்துவதால் காய்கறி மற்றும் பழங்களில் நச்சுத்தன்மை அதிகளவு படிந்து விடுகிறது. அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு உடல் உபாதைகளையும், நோய்களையும் கொடுக்கின்றது.

இதனைத் தவிர்க்கும்வகையில் விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக தோட்டக்கலைத் துறைக்கு மாவட்டந்தோறும் அரசு தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஊக்கத்தொகை (Incentives)

இதில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத் தொகையும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை விவசாயம் செய்ய ஹெக்டேருக்கு ரூ.2500ம் மற்றும் காய்கறி பயிர்கள் விவசாயம் செய்ய ரூ.3800ம் ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது.

இத்துடன் சான்றிதழ் பெற ஒரு விவசாயிகளுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது. எனவே 
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை உண்டு. இத்திட்டத்தில் ஊக்க தொகை பெற சம்பந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

தகவல்
கே.ரேவதி
துணை இயக்குனர்
தோட்டக்கலைத்துறை, மதுரை
0452 -253 2351

Editor's Choice
ஏழைகளின் கனி, முக்கனிகளில் ஒன்று என பல நூறாண்டுகளாக விரவி வரும் வாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?.
மேம்போக்காக, வாழை பழம் மலச்சிக்கல் தீர்க்க உதவும் என்பது தவிர வாழை பழத்தின் நன்மைகள் பல நாம் அறியாதது. வலைதளங்களில் பார்த்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட வாழைப்பழ நன்மைகள் இந்த பதிவில் தொகுக்கபடுகின்றன.
 
1. மனச்சோர்வு (Depression) குறையும்:
 
சமீபத்தில் மைன்ட் என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில், மன அழுத்தம் உடையவர்கள், வாழைப்பழம் உண்டபின் மிக இளைப்பாறுதல் தெரிவதாக அறிவித்துள்ளனர். அதற்க்கு காரணம், வாழைப்பழத்தில் உள்ள திர்ய்ப்டோபன் (tryptophan) என்ற புரத சத்து நமது மூடை மாற்றி, மகிழ்ச்சியாகவும் ரெலாக்சாகவும் வைக்க உதவுகிறது. இதன் மூலம் மனச்சோர்வு குறைவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
 
2. அனிமியா:
 
இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் வாழைப்பழம், ரத்தத்தில் உள்ள ஹீமொக்லோபின்கள் அதிகரிக்க உதவி ரத்த சோகையை தீர்க்க உதவுகிறது.
 
3. இரத்த_அழுத்தம்:
 
வாழை பழத்தில் பொட்டசியம் அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் உள்ளதால், இரத்த அழுத்தம் தீர வழி வகுக்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கழகத்தின் சிபாரிசில், வாழைப்பழம் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புக்கு எதிரானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
4. புத்தி_கூர்மை:
 
வாழை பழத்தில் பொட்டசியம் சத்து அதிகம் இருப்பதால், புத்தி கூர்மைக்கு உதவுகிறது என சமீபத்தில் மிடில் செக்ஸ் என்ற பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
5. மலச்சிக்கல்:
 
இது நாமனைவரும் அறிந்த ஒன்று தான். மலச்சிக்கல் உள்ளவர்களிடத்தில் நார் சத்து அதிகம் உள்ளதால், வாழைப்பழம், சிறந்த மலம் இளக்கியாக செயல்படுகிறது.
 
6. ஹாங_ஓவர்:
 
நமது 'குடி' மகன்களுக்கானது. ஹாங் ஓவர் என்றால் என்னவென்று சொல்லி தெரியவேண்டியது இல்லை. வாழைபழ மில்க் ஷேக் இல் சிறிது தேனை ஊற்றி குடித்தால், ஹாங் ஓவர் தீரும் என்கிறார்கள்.
 
7. நெஞ்சரிப்பு:
 
ஏதாவது காரமாக சாப்பிட்டுவிட்டு நெஞ்சரிப்பு என சொல்கிறவர்கள் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடவும். சாப்பாட்டு அமிலங்களை இளக்கி நெஞ்சரிப்பு தீர உதவும்.
 
8. கொசுக்கடி:
 
வாழைபழ தோலின் உள் பக்கத்தை நமது தோலில் தேய்த்தால், கொசுக்கள் நம்மிடையே வராது என ஆய்வுகள் கூறுகின்றன.
 
9. நரம்புகள்:
 
வைட்டமின் B சத்து மிகுதியாக இருப்பதால், வாழைப்பழம் நமது நரம்புகளுக்கு நல்லது.
 
10. உடல்_பருமன்:
 
இப்போதைய கால் சென்டர் மற்றும் ஐ டி மக்கள், தங்களது மூளையை கசக்கி வேலை செய்வதால், அவர்களுக்கு உடல் பயிற்சி இல்லாத காரணத்தால், நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால், அதிகம் பசி எடுத்து, அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வாழைபழம் உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவு சீராக இருக்கும். எனவே பசியும் குறைவாகவே இருக்கும்.
 
11. அல்சர் அல்லது வயிற்றுப் புண்:
 
வயிற்றில் உள்ள பல வியாதிகளுக்கு வாழைபழம் அருமருந்து. அல்சர் வியாதி உள்ளவர்கள், வயிற்றின் ஓரத்தில் அமிலத்தின் சுவடுகள் ஒளிந்திருக்கும். வாழைப்பழம் அந்த அமிலத்தை சாந்தப்படுத்துவதால், வயிற்றின் அலறல்களில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.
 
12: புகைப்பழக்கம்:
 
வாழைப்பழத்தில் பொட்டசியம் மற்றும் மக்நீசியம் ஆகிய தாதுபொருட்கள் இருப்பதால், புகைப்பழக்கத்தை நிறுத்த நினைப்பவர்களுக்கு வாழைப்பழம் உதவும்.
 
13, மன_அழுத்தம் (Stress).
 
வாழைப்பழத்தில் பொட்டசியம் தாதுப்பொருள் மிகுதியாக இருப்பதால், இதயத்துடிப்பை சீராக்குகிறது,ஆக்சிஜெனை மூளைக்கு அனுப்பி, நீர் அளவை நேரான அளவில் வைக்க உதவுகிறது.
 
14. மாரடைப்பு:
 
"The New England Journal of Medicine," என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில், வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், மாரடைப்பை நாற்ப்பது விழுக்காடுகள் குறைக்க இயலும் என கூறுகிறது.
Editor's Choice
பிரண்டைக்குத் தான் இந்தப் பெயர்.
 
‌பிர‌ண்டை எ‌ன்பது கொடி போல வளரு‌ம். இத‌ன் த‌ண்டு‌ப் பகு‌திதா‌ன் உ‌ண்ப‌த‌ற்கு ஏ‌ற்றதாகு‌ம். ‌
 
பிர‌ண்டை‌யி‌ல் பல வகை உண்டு. ஓலை‌ப் ‌பிர‌ண்டை, உரு‌ட்டு‌ப் ‌பிர‌ண்டை களிப் பிரண்டை,சதுரப் பிரண்டை, முப்பிரண்டை, புளிப்பிரண்டை, செம்பிரண்டை, தீம்பிரண்டை எனப் பல வகை உ‌ண்டு. இவ‌ற்‌றி‌ன் குண‌ம் ஏற‌க்குறைய ஒன்றுதான்.
 
இ‌தி‌ல் மு‌ப்‌பிர‌ண்டை ‌கிடை‌ப்பது அ‌ரிது. எளிதில் கிடைக்கக் கூடியது சதுரப் பிரண்டை ஆகும்.இதில் ஆண் ,பெண் என இரு வகை உள்ளது.ஆண் பிரண்டை சுமார் இரண்டு மூன்று அங்குலத்திற்கு ஒரு கணுவும், பெண் பிரண்டை ஒன்று ஒன்றரை அங்குலத்திற்கு ஒரு கணுவாகவும் அமைந்திருக்கும். ‌
 
பிர‌ண்டையை ந‌ன்கு வத‌‌க்‌கி பு‌ளியுட‌ன் சே‌ர்‌த்து சமை‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் நா‌வி‌ல் அ‌ரி‌ப்பையு‌ம், வ‌யி‌ற்‌‌றி‌ல் எ‌ரி‌ச்சலையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். மு‌ற்‌றியதாக அ‌ல்லாம‌ல் இள‌ந்த‌ண்டை பய‌ன்படு‌த்தலா‌ம். இதனை‌ப் ப‌றி‌க்கு‌ம்போது கை‌யி‌ல் தே‌ங்கா‌‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ண்டு ப‌றி‌த்தா‌ல் கை‌யி‌ல் அ‌ரி‌ப்பு உ‌ண்டாகாது. ‌
 
பொது குணம்
 
பிரண்டையைப் பற்றிப் பேசுவதானால் முழுக்க முழுக்க வாய் முதல் ஆசனவாய்முடிய (அதாவது உதடு, வாய்,நாக்கு, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல்,பெருங்குடல், ஆசனவாய்) இவைகளில் ஏற்படும் எந்த வியாதியானாலும் குணப்படுத்தக் கூடிய அற்புத மூலிகையாகும்.
 
‌திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌பிர‌ண்டை ‌நி‌ச்சயமாக உதவு‌ம். ‌பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பெறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம்.
 
பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
 
‌‌பிர‌ண்டையை நெ‌ய்‌வி‌ட்டு வத‌க்கி துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல ப‌சி உ‌ண்டாகு‌ம்.அசீரணம் போகும்.
 
‌எலு‌ம்பு மு‌றிவு‌க்கு, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவர, மு‌றி‌ந்த எலு‌ம்புக‌ள் ‌விரை‌வி‌ல் கூடும்.
 
இவைகள் யாவரும் அறிந்த முறைகள். ஆனால் வைத்திய முறையில் பிரண்டையை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி.?
 
பிரண்டைப்_பற்பம்
 
பிரண்டையைக் கொண்டுவந்து அதன் கணுக்களை வெட்டி நீக்கி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மூன்று படி பிரண்டை எடுத்துக் கொள்ளவும்.இதோடு சுத்தி செய்து கடல் நீரில் தீட்சை செய்த சோற்றுப்பு ஒரு படி சேர்த்து கல் செக்கில் இட்டு நன்றாக மெழுகு பதத்திற்கு ஆட்டி அடை தட்டி வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். உலர்ந்த பின் அகலில் இட்டு மேலகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்த பின் முப்பது வரட்டிகள் வைத்துப் புடமிட வேண்டும்.ஆறிய பின் பிரித்துப் பார்க்க வில்லைகள் வெந்து பற்பமாகி இருக்கும். இதனைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
 
பயன்கள்:
 
சிறு குழந்தைகளுக்கு அசீரணத்தால் ஏற்படும் பேதி, வயிறு உப்புசத்தினால் வேகமாகப் பீச்சி அடிக்கும பேதி, நுரைத்து பச்சையாக போகும் பேதி, சீதபேதி, தயிர் போல் கட்டி கட்டியாக வாந்தி எடுத்தல்,எது சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் உடனே வாந்தி எடுத்தல் இவைகளுக்கு பிரண்டை பற்பம் அரிசி எடை அளவு பாலில் மூன்று வேளை கொடுத்தால் மேற்படி வியாதிகளை உடனே கண்டிக்கும்.
 
உஷ்ணபேதி, சீதபேதி இவைகளுக்கு சாதம் வடித்த கஞ்சி,அல்லது மோர் இவைகளில் கொடுக்க உடன் குணமாகும். வயிற்றுப் போக்கிற்கு இதைவிடச் சிறந்த மருந்தில்லை. பெரியவர்களுக்கு வாயில் காணும் புண்,வாய் நாற்றம்,உதடு வெடிப்பு,நாக்கு வெடிப்பு(அச்சரம்) நாக்கு புண், உணவுகுழல் புண், வயிற்றுப் புண், வயிற்றுக் கட்டி (குன்மக் கட்டி) கருப்பைக் கட்டி, கருப்பை புண்,வெள்ளைப்படுதல், மாதவிலக்கு இல்லாத நிலை, மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி, அதிக உதிரம் பேசிறுகுடல்புண்,பெருங்குடல் புண்,ஆசனவாய் அரிப்பு, மலத்துடன் சீழ்,ரத்தம் வருதல்,சதை வளருதல் போன்ற அனைத்து வகையான மூலம் எனப்படும் நோய்கள் போன்றவற்றிக்கு தினம் இரண்டு வேளை 2 முதல் 3 அரிசி எடை அளவு பற்பத்தை வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டுவர யாவும் குணமாகும்.
 
செரிமான சக்தியைத் தூண்ட
 
சீரண உறுப்புகளில் நீர் சுரப்பிகளைத் தூண்டி கடினமான பதார்த்தங்களையும் எளிதில் சீரணமாக்க பிரண்டை பற்பம் வேலை செய்கிறது.
 
சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டை பற்பம் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
 
இரைப்பை, சிறுகுடல்,பெருங்குடல் இவைகளில் ஏற்படும் இரணங்கள்,வயிற்றில் ஏற்படும் குன்மக் கட்டிகள்,ஆபரேசன் செய்தாலன்றித் தீராது என கைவிடப்பட்ட கேஸ்கள்,நாள்பட்ட தீராத வயிற்றுவலியால் துன்பப்படுபவர்கள் தொடர்ந்து 40 முதல் 90 நாட்கள் வரை பிரண்டைப் பற்பம் சாப்பிட்டு வந்தால் கத்தியின்றி, ரத்தமின்றியே வயிற்றிலுள்ள எந்தக் கட்டியும், எந்தப் புண்ணும் ஆறும்.நோயும் தீரும்.
 
நவமூலம் என்று சொல்லப்படும் மூல வியாதிகளை அடியோடு அறுக்க வல்லது.
 
முதுகு_வலி, #கழுத்து_வலி_குணமாக
 
சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
 
இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை பற்பத்தைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.
 
இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டை பற்பத்தை இரு வேளை தேனுடன் சாப்பிட்டு வர இந்த நோய் அடியோடு ஒழியும்.
 
இதயம்_பலப்பட:
 
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. இதற்கு பிரண்டை பற்பத்துடன் நற்பவள பற்பம் சேர்த்து மோருடன் சாப்பிட்டு வர ரத்த நாள அடைப்புக்கள் நீங்கும்.இதயம் பலப்படும்.இரத்த ஓட்டம் சீராகும்.மேலும் இதனுடன் பிரண்டையைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
 
உடல்_பருமன் -:
 
பிரண்டை பற்பத்தை அரை கிராம் அரிசி களைந்த நீரில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.
 
உடல்_தேற
 
பித்த உஷ்ணம் அதன் சம்பந்தமான தேகமுடையவர்களுக்கு சர்வாங்கமும் சூடேறி உருவத்தில் மெலிந்து காணப்படு வார்கள். இவர்களுக்கு பால் அல்லது வெண்ணை அனுபானத்துடன் சாப்பிட நல்ல உடல் பருமன் ஏற்படும்.
 
இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்து வந்தால் தீராத எலும்புருக்கி, ஆஸ்துமா, நுரையீரல் புண்,T.B, இளைப்பு, மதுமேகம், நீரிழிவு போன்றவை மண்டல மருந்திலேயே குணமடையும்.
 
சூதகவலி - : மூன்று வேளை கால் கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.
 
பிரண்டை உப்புடன் ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலம், கிராம்பு, முறையாக செய்த லிங்கச் செந்தூரம் இவற்றை கலந்து மாத்திரை செய்து பாலுடன் இரண்டு வேளை சாப்பிட்டு அதனுடன் நரசிம்ம லேகியம் சாப்பிட்டு வர தாது பலப்பட்டு பலவீனம், விந்து நீர்த்தல், விந்து முந்துதல், கைநடுக்கம்,நரம்புத் தளர்ச்சி குணமாகி விந்தணுக்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படும் அளவு கூடி வீரியம் ஏற்படும், உடல் வன்மை பெரும்.
 
முன் பதிவில் குறிப்பிட்ட காஞ்சிரம் மற்றும் ஜீவசக்தி மாத்திரையை விட இம் மருந்து அதிக வீர்யமானது.அது ஆறு மாதத்தில் குணமாக்கும் நோயை இம் மருந்து மூன்று மாதத்தில் குணமாக்கும். குழந்தை இல்லாதவர்களுக்குக் கொடுத்து குழந்தை பாக்கியம் ஏற்பட்டுள்ளது.
 
காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்க இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம்.மருத்துவரின் மேற்பார்வையில் தான் இதைச் செய்ய வேண்டும்.
 
பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு, முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.
 
பிரண்டை பற்பம் செய்து வைத்தால் மருந்து தான் கைவசம் இருக்கிறதே என்று அளவுக்கு மீறி எதையும் சாப்பிட்டு விட வேண்டாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
Editor's Choice
கருணைக் கிழங்கிற்கு அப்படி ஏன் பெயர் வந்தது தெரியுமா? ஏனென்றால் இது உடலுக்கு எந்த பிரச்சினையையும் தராது. இருக்கின்ற பிரச்சினைகளை சரி செய்யும் கருணைக் கிழங்கு உடலில் எந்த நோயையும் தங்க விடாது
 
அந்தக் கருணைக்கிழங்கு உடல் எடையை எப்படிக் குறைக்கிறது இன்னும் என்னென்ன மாயங்களைச் செய்யும் என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்..
 
கருணைக்_கிழங்கு சாப்பிடுவதால் நமக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன நம்மை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
 
ஜீரண_சக்தி
 
வெள்ளைப்படுதல்
 
ஆசனவாய்_பிரச்சினைகள்
 
காய்ச்சல்
 
உடல்_எடையைக்_குறைத்தல்
 
என பல வழிகளில் கருணைக்கிழங்கு நமக்குப் பயன்படுகிறது.
 
கருணைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் #ஜீரண_மண்டலத்தின் இயக்கம் சீராகும். சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமடையும்.
 
அது மட்டுமல்லாது உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்து உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் அமையும்.
 
உடல்_சூட்டினால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கு கருணைக் கிழங்கு மிகவும் உதவி செய்கிறது. இது மூலத்தினால் உண்டாகும் சூடு, எரிச்சல் ஆகியவற்றைப் போக்கும் நாள்பட்ட காய்ச்சலைத் தீர்க்கும்..
 
பெண்களுக்கு இருப்பதிலேயே பெரிய பிரச்சினையென்றால் அது #மாதவிடாய் சம்பந்தப்பபட்ட பிரச்சினைகள் தான்.. ஏனெனில் அதை மையமாக வைத்துதான் மற்ற எல்லா பிரச்சினைகளும் அவர்களுக்கு உண்டாகின்றன.
 
அந்த பிரச்சினைகளை எல்லாம் கருணைக்கிழங்கு சரிசெய்யும் குறிப்பாக #வெள்ளைப்படுதலை தடுப்பதில் கருணைக்கிழங்கு மிகத் தீவிரம் காட்டுகிறது.
 
மூலநோய் உள்ளவர்கள் உட்காருவதற்கு பெரும் துன்பப்படுவார்கள் அதிகப்படியான உடல் சூட்டின் காரணமாக இந்த பிரச்சினை உண்டாகிறது.
 
அப்படி #மூலநோய் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு தினமும் கருணைக்கிழங்கை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும் சாப்பிட்டவுடன் தாகம் அதிகம் எடுக்கும் அந்த சமயங்களில் மோரைக் குடித்து வந்தால் மூலநோய் விரைவில் தீரும் ஆசனவாய் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளும் தீரும்.
 
உடல்_பருமன் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு சிக்கலாக இருக்கிறது. இத்தகைய பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வுகளில் ஒன்றாக கருணைக் கிழங்கும் இருக்கிறது.
 
அடிக்கடி உணவில் கருணைக்கிழங்கை சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து உடல் #பருமனைக்_குறைக்கும்.
 
இந்த கருணைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சூரணத்தை தான் நாம் #வனசூரணாதி எனும் பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் உடல் எடையை குறைப்பதற்கு வாங்கி சாப்பிடுகிறோம்.
 
Editor's Choice

எந்த எண்ணய் நல்ல எண்ணெய் என்று கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.பெரும்பாலான நோய்களுக்கு அன்றாடம் உபயோகப்படுத்தும் எண்ணெயும்ஒரு காரணம் என்கிறார்க ள் நாம் அதிகம் பயன்படுத்தாத கடுகு எண்ணெயில் ஆரோக்கியம் கூடுதலாக இருக்கிறது. இனி உங்கள் சமையலிலும் கடுகு எண்ணெய் மணக்கட்டும்.

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்

வடிவேலு காமெடிக்கு பிறகு எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்ற விழிப்புணர்வு அதிகரித்து விட் டதோ என்று தோன்றும் அளவுக்கு மக்கள் நோயிலிருந்து காத்துகொள்ள உணவுபொருள்களில் நல்லதை நாட தொடங்கி விட்டார்கள்.

அன்றாடம் சமைக்கப்படும் உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் உடலுக்கு கேடு விளைவிக் காமல் இருக்க வேண்டும். இதில் உண்டாகியிருக்கும் அதிகப்படியான விழிப்புணர்வு காரணமாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை மீண்டும் முன்பைவிட வேகமாக உயிர்த்தெழுந்திருப்பதைக் காணலாம். அந்த வகையில் கடுகு எண்ணெயின் பயன்களை இப்போது பார்க்கலாம்.

கடுகு எண்ணெய்

கடுகு விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கடுகு எண்ணெய் தனிச்சுவையைக் கொண்டது. பழங்காலத்தில் சமையலறையில் கடலை எண்ணெய், நல்லெண்ணெயோடு கடுகு எண்ணெயும் முக்கியமாக இடம் பிடித்திருந்தது.

இந்த எண்ணெய் பார்ப்பதற்கு சிவந்த நிறத்தில் இருக்கும். அன்றாடம் நமது உடலுக்கு 3:1 என்ற விகிதத்தில் எண்ணெய் தேவைப்படுகிறது. அவற்றை அளவாக பயன்படுத்தினாலும் அந்த எண் ணெய் சத்துகள் உடலுக்கு நன்மையை அளிக்க வேண்டும். ட்

மாறாக கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்துவிடக்கூடாது. அந்த வகையில் உங்கள் சமையல றையில் கடுகு எண்ணெயும் வைத்திருங்கள்.இது ஆரோக்கியத்தையும் அழகையும் சேர்த்து கொடுக்கும்.

கடுகு எண்ணெய் சத்து

கடுகு எண்ணெயில் ஒமேகா 3, வைட்டமின் ஈ ,பி 6 சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக் கின்றன. இவற்றில் 6 0 சதவீதம் மோனோசாச்சுரேட் கொழுப்பு அமிலம் இருக்கிறது. மேலும்21 சதவீ தம், பாலி அன்சாச்சுரேட் அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

இந்த சத்துகள் எல்லாமே நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கி றது. உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்வதிலும் கடுகு எண்ணெய் துணைபுரி கிறது. ஆரோக்கியம் மற்றும் அழகு குறித்த பராமரிப்புகளிலும் கடுகு எண்ணெயில் இருக்கும் சத்துகள் துணைபுரிகிறது.

செரிமானத்தை எளிதாக்கி பசி உணர்வை தூண்டுகிறது

பெரும்பாலான நோய்களுக்கு காரணமே செரிமானக் கோளாறுதான்.உண்ணும் உணவு எளிதில் செரிமானமாகும் போது பசி உணர்வும் இயல்பாகவே தூண்டப்படுகிறது. கடுகு எண்ணெய் பயன் படுத்தும்போது செரிமான பாதையில் இருக்கும் தொற்றுகளை நீக்கி செரிமானத்தைத் தூண்டு கிறது.

அவ்வபோது ஜீரணக்குறைபாட்டால் மந்தமாக இருப்பவர்கள் கடுகு எண்ணெயில் சமைத்த உணவு பயன்படுத்தும்போது செரிமானத்தை துரிதமாக்குகிறது. இதனால் பசி உணர்வும் தூண்டப்படுகி றது. செரிமானக்கோளாறால் மந்த சோர்வு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது கடுகு எண்ணெய்.

இதயத்துக்கு நல்லது

உடலில் இருக்கும் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு கெட்ட கொழுப்புகள் உடலில் சேரவிடக் கூடாது. குறிப்பாக கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கும் போது அவை இதயத்தைப் பதம்பார்த்து விடு கிறது.

கடுகு எண்ணெயில் மேனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் கொழுப்புகள் இருக்கிறது. இவை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இதில் ஒலிக் மற்றும் லினோ லெனிக் அமிலம் லினோலிக் அமிலத்துக்கிடையே சமநிலையில் இருக்கிறது. இவையும் இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

கடுகு எண்ணெயை உயர்ந்த வெப்பநிலையில் சமைக்கும் போதும் அதன் குணம் மாறுவதில்லை. ஆய்வு ஒன்றில் கடுகு எண்ணெயைப் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் சம்பந்தமான பாதிப்பு குறிப்பிட்ட அளவில் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

சருமப்பராமரிப்பிலும் கடுகு எண்ணெய்

இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து சருமத்துக்கு இயற்கை சன்ஸ்க்ரீனாக விளங்குகிறது. சரும துவாரங்களில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற வியர்வை சுரப்பிகளைத் தூண்டி இறந்த செல் களை வெளியேற்றி சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது.

சருமத்துக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் போன்று கடுகு எண்ணெ யும் பயன்படுத்தலாம். சருமத்தை மிருதுவாக்கி நாளடைவில் சருமத்தில் நல்ல நிறமாற்றத்தையும் அளிக்கிறது.

கூந்தல் உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கடுகு எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் கலந்து மசாஜ் செய்வதால் தலையில் இருக்கும் பொடுகை விரட்டி கூந்தலுக்கு போஷாக்கு தருகிறது.வெகு குறைந்த நாளில் கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது கடுகு எண்ணெய்.

ஆயுர்வேத மருத்துவத்தில் உடலுக்கு மசாஜ் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.சருமத்துக்கு பொலிவையும் மினுமினுப்பையும் கொடுக்கிறது.

சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு

சளி மற்றும் இருமல் பாதிப்பு உண்டாகும் போது கை வைத்தியத்துக்கு இதைப் பயன்படுத்தலாம். சுவாசக் குழாயில் இருக்கும் அடர்த்தியான சளி இருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். சளி யை இளக்கி வெளியேற்ற கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

கடுகுஎண்ணெயை இலேசாக சூடாக்கி குழந்தைகளுக்கு மார்பில் தடவுவதன் மூலம் சளி கரைந்து வெளியேற்றுகிறது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு தட்டி, சிட்டிகை கிராம்பு பொடியைச் சேர்த்து கடுகுஎண்ணெயில் கலந்து இலேசாக சூடாக்கி மார்பு, காலில் தேய்த்துவந்தால் சைனஸ் பிரச்சனை குறையும்.

குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் மிகவும் கை கைகொடுக்கும் கைவைத்தியம் என்றும் சொல்லலாம். காய்ச்சலைக் குறைக்கவும். உடலில் தசைகளில் உண்டாகும் வலியைக் கட்டுப்படுத் தும் வலி நிவாரணியாகவும் கூட கடுகு எண்ணெய் உதவுகிறது.

தொற்று கிருமிகளை அழிக்கவல்லது

கடுகு எண்ணெயில் இயல்பாகவே தொற்றுக்கிருமிகளை எதிர்க்கும் பண்புகள் அடங்கியிருக்கிறது. இது கேடு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.

கடுகு எண்ணெய் மட்டுமே பயன்படுத்தலாமா

நிச்சயமாக ஒரு எண்ணெயை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர் கள். ஒரே வகையான எண்ணெய் அது நன்மையே தரும் என்றாலும் அதை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவது உடல் நலனுக்கு நன்மை பயக்காது.

நல்ல சத்துகள் இருக்கும் எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது அதில் இருக்கும் கெடு தல் பயக்கும் பொருள்கள் சிறிதாக இருந்தாலும் அவையும் குறிப்பிட்ட அளவு உடலில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதனால் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் என அனைத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத் துவதே நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Editor's Choice

1. எந்த வகையான உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் குழந்தை பிறக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

2. கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பிறந்த குழந்தையின் எடை மூன்று கிலோ இருக்க வேண்டும். அதற்கும் கீழ் என்றால் குறைந்த பட்சம் 2.75 கிலோ வரை இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதைவிட குறைவாக இருந்தால் ஊட்டசத்து குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அக்குழந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

3. கருவில் குழந்தை வளரும்போதே சிசுவுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், குழந்தை குறித்துக் கவலையின்றி வாழலாம். ஏனென்றால் அது இயற்கையாகவே ஆரோக்கியமான உடலைப் பெற்று விடும். சரி என்னென்ன உணவுகள் சிசுவின் எடையை அதிகரிக்க உதவும் என்பது பற்றிப் பார்க்கலாம். எந்த வகையான உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் பிறக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

4. காய்கறிகளை விட முட்டையில் அதிகளவு புரோட்டின் இருக்கிறது. மேலும் இதில் கூடுதலாக போலிக் ஆசிட், கோலின் மற்றும் இரும்புச் சத்து ஆகியவையும் உள்ளதால் தினமும் ஒரு வேக வைத்த முட்டையைச் சாப்பிட்டு வந்தாலே கர்ப்பிணிப் பெண்களுக்குப் போதுமானது. மருத்துவர் பரிந்துரைத்தல்படி அளவில் சிறு மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதனால், அளவுக்கு அதிகமான முட்டையை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடலில் புரதத்தின் அளவு அதிகமானால், குழந்தை குண்டாகப் பிறக்கும் அபாயம் உள்ளது.

5. கர்ப்பிணிகள் உலர்ந்த பழங்களைத் தினசரி சாப்பிட வேண்டும். அதாவது உலர்ந்த திராட்சை, அத்திப் பழம், பேரீட்சை ஆகியவற்றைத் தினசரி மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் நான்கு ஐந்து பழங்களாவது சாப்பிட்டு வர வேண்டும்.

6. முந்திரி, பாதாம் உள்ளிட்ட கொட்டை வகைகளில் புரதத்துடன் விட்டமின்களும் இருப்பதால், இவற்றையும் தினசரி உட்கொள்ள வேண்டும். உலர்ந்த பழங்களைப் போலவே இவற்றை மாலை நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. அல்லது பகல் நேரங்களில் அவ்வப்போது ஒன்று இரண்டுப் பழங்களாகச் சாப்பிடலாம்.

7. முருங்கைக் கீரை, அரைக் கீரை, மணத்தக்காளி என எந்த வகை கீரையாக இருந்தாலும் கர்ப்பிணிகள் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும். அகத்திக் கீரையைத் தவிர்ப்பது நல்லது. அது பேறு காலத்தில் சாப்பிடும் மாத்திரை காரணமாக ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கீரை வகைகளில், வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இருப்பதால், இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.

8. கர்ப்பிணிப் பெண்கள் தினசரி குறைந்தது 2 டம்ளர் அளவு பால் குடிக்க வேண்டியது அவசியம். தினசரி 200-500 மி.லி பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். காலை, மாலை என இரு வேளை அளவான அளவில் பால் எடுத்துக்கொள்ளலாம். பாக்கெட் பால்களைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக பசு அல்லது எருமை மாட்டுப் பாலை பருகினால் நல்லது.

9. யோகர்ட்டில் போதுமான அளவு புரோட்டினும், பாலை விட அதிகளவு கால்சியமும் உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி காம்ளக்ஸ் மற்றும் துத்தநாகமும் இருப்பதால், குழந்தை உடல் எடை குறைந்து பிறப்பதைத் தடுக்கும். இது சாதாரணமாகப் பால் விற்பனை நிலையங்களிலேயே கிடைக்கிறது.

10. வைட்டமின் சி நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம், மேலும் ஃபைபர், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டசத்துகள் நிறைந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. அன்னாசி, பப்பாளி போன்ற வெப்பம் தரும் பழ வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

11. ஆரஞ்சு ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் கர்ப்பிணிகளுக்கு நல்லது. பழமாக சாப்பிட விரும்பாத கர்ப்பிணிகள் அவற்றை ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். ஃபிரஸ் ஜூஸ் என பல பழங்களைக் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸைவிட, தனித்தனியே எடுத்துக்கொள்வது நல்லது.

12. கேரட், பீட்ரூட், வெண்டைக் காய் போன்ற பச்சை காய்கறிகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை உள்ளன. விட்டமின் ஏ, ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுகிறது. மேலும் இது குழந்தை ஆரோக்கியமான உடல் எடையைப் பெறவும் உதவுகிறது. பச்சைக் காய்கறிகளைக் கர்ப்பிணிகள் சாப்பிடும்போது அதை நன்கு வெந்நீரில் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும்.

13. கர்ப்பிணிகளுக்கு மீன் ஆரோக்கியம் தரும் உணவு. ஆனால் மீனை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் பகுதிகளில் வளரும் மீன்களில் ரசாயன பொருட்கள் இருக்கலாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். ஏரி அல்லது அணைகளில் பிடிக்கப்பட்ட மீன்களோ அல்லது ஆழ்கடல் மீன்களோ என்றால் அச்சம் தேவையில்லை. இதுவும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

14. கம்பு சோறு, சோள சோறு போன்றவற்றில் புரதம், இரும்புச் சத்து, நார்ச் சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை தினசரி முளைக் கட்டிய தானியங்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

15. வைட்டமின்கள் ,தாது உப்புகள் என கவனத்தில் கொண்டு உணவு எடுத்துக்கொள்வதால், உடலுக்கு தேவையான கொழுப்பு கிடைக்காமல் போய் விடும். வெண்ணெயில் உடல் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. வெண்ணெயைத் தனியாகவோ அல்லது பிரட், பாதாம், உலர்ந்த பழங்கள் போல வேறு ஏதேனும் உணவுப் பொருளுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

16. உடலுக்கு தேவையான இரும்புச் சத்து, தானியங்கள் மட்டுமின்றி இறைச்சியிலும் கிடைக்கிறது. நன்கு வேக வைத்த இறைச்சியை வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். ஆடு இறைச்சி, குறிப்பாக ஆட்டு ஈரலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான இரும்புச் சத்துடன், பிற விட்டமின்களும் கிடைக்கும்.

17. சூரியகாந்தி எண்ணெய் அல்லது பால்ம் ஆயில் பயன்படுத்துவதைவிட, நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. நல்லெண்ணெய் உடலுக்குக் குளிர்ச்சி தரும். மேலும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையாது இருக்கும்படிப் பார்த்துக்கொள்கிறது. இதன் காரணமாகக் குழந்தையின் வளர்ச்சியும் சீராகிறது.

18. வாரம் மூன்று அல்லது நான்கு முறை இளநீர் குடிப்பது கர்ப்பிணிகளுக்கு நல்லது. உடலின் வெப்பம் தணிவதால், கர்ப்பிணிகளின் உடல் எடையுடன் சிசுவின் உடல் எடையும் சீராக இருக்க உதவுகிறது.

பக்கம் 8 / 15