Editor's Choice

உங்களுடைய பளிச்சென்ற பற்களை காட்டி ஒரு புன்னகை பூத்தாலே போதும் எல்லாரையும் எளிதாக கவர்ந்து விடலாம். அதுமட்டுமல்லாமல் இது மற்றவர்கள் முன்னிலையில் உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அதுவே உங்கள் பற்கள் மஞ்சளாக இருந்தால் மற்றவர் முன்னிலையில் சிரிப்பீர்களா?

கண்டிப்பாக இல்லை அது உங்களுக்கு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தி விடும்.

இப்படி பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

காரணங்கள் :

அதிக அளவில் காபி பருகுதல்

வயதாகுதல்

பற்களை சரியாக பராமரிக்காமல் இருத்தல்

மருத்துவ சிகிச்சை:

இப்பொழுது பற்களை வெண்மையாக்க நிறைய மருத்துவ சிகிச்சைகள் வந்திருந்தாலும் ஒவ்வொரு செக்அப்புக்கும் பல் மருத்துவரை அணுகுவது என்பது கஷ்டமாகவும் இருக்கும்.

மேலும் சிகச்சைக்கு பிறகு பற்களை ரெம்ப கவனமாக பராமரிக்க வேண்டியிருக்கும். இந்த மாதிரியான எந்த தொல்லையும் இல்லாமல் வீட்டு முறைகளைக் கொண்டே உங்கள் பற்களை பளிச் பளிச் என்று மாற்றலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மஞ்சள் :

பற்களை வெண்மையாக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது. மஞ்சளில் உள்ள விட்டமின் சி, மக்னீசியம், செலினியம் போன்றவை வலிமையான பற்களை தருகிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது பல் சொத்தை போக்க உதவுகிறது.

எப்படி பயன்படுத்த வேண்டும்

லெமன், மஞ்சள் மற்றும் உப்பு :

லெமன் பற்களை ப்ளீச்சிங் செய்து வெண்மையாக்குகிறது. உப்பும் பற்களில் உள்ள கிருமிகளை போக்கி பற்களின் மஞ்சள் நிறத்தை சரி செய்கிறது.

பயன்படுத்தும் முறை :

மஞ்சள் கிழங்கை லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பெளலில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து அந்த பேஸ்ட்டை கொண்டு பற்களில் அப்ளே செய்யுங்கள்.

சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3 தடவை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள், தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை பற்களை வெண்மையாக்குகிறது.

பயன்படுத்தும் முறை :

4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, 2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை ஒரு சுத்தமான பெளலிற்கு சேர்த்து கலந்து கொள்ளவும். முதலில் 2-3 நிமிடங்கள் பற்களை நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். பிறகு இந்த மஞ்சள் கலவையை கொண்டு வாயை கொப்பளியுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். ஒரு வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால் பற்கள் சீக்கிரம் வெண்மையாகும்.

மஞ்சள், கடுகு எண்ணெய் மற்றும் உப்பு :

இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பயன்படுத்தும் முறை :

ஒரு சுத்தமான பெளலில் 1 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய், உப்பு, 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை டூத் பேஸ்ட் மாதிரி பயன்படுத்தி வாருங்கள். சில நிமிடங்கள் வரை தேய்க்கவும். இதை வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

மஞ்சள் மற்றும் வெண்ணிலா எஸன்ஸ் :

1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து பல் தேயுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைக்கு பை பை சொல்லி விடலாம்.

Editor's Choice
தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.
 
இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
இரத்த சோகை
 
நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.
 
கண்புரை
 
வயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.
 
மலச்சிக்கல்
 
மலச்சிக்கலால் பல நாட்களாக அவஸ்தைப்பட்டு வருகிறீர்களா? அப்படியெனில் 4-5 நாட்கள் சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்
 
வயிற்றுப்போக்கு
 
15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.
 
உடல் பருமன்
 
உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள #கெட்ட_கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
வயிற்றுக்கடுப்பு
 
வயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத் தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண, தினமும் 8-10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொள்ள வேண்டும்.
 
காலைச் சோர்வு
 
கர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.
 
குமட்டல் மற்றும் வாந்தி
 
மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
செரிமான கோளாறு
 
செரிமான கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக உடனே செரிமான பிரச்சனைகள் குணமாகும்.
 
பசியின்மை மற்றும் சுவையின்மை
 
உங்களுக்கு சரியாக பசி எடுப்பதில்லையா? சுவை எதுவும் தெரியவில்லையா? அப்படியெனில் அதனை சரிசெய்ய, மோரில் கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து பருக வேண்டும்.
 
சிறுநீரக பிரச்சனைகள்
 
கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.
 
பூச்சிக்கடி
 
பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகும்.
 
Editor's Choice

ஒரு பொருள் நம் அருகில் இருக்கும் பொழுது அதனுடைய அருமை தெரியாது என்று பெரியோர்கள் கூறுவர்.அது உண்மைதான் போலும்,நாம் விளையாட்டிற்காகவும் குப்பை செடியாகவும் மட்டுமே பார்த்த சொடக்கு தக்காளியின் நன்மைகளை நாம் அறிந்திருப்பதை விட வெளிநாட்டவர் நன்றாக அறிந்திருக்கின்றனர்.
அதனால்தான் இந்த சொடக்கு தக்காளியை பாக்கெட் செய்து சில நாடுகளில் கிலோ 5000 ரூபாய் வரைக்கும்,சில நாடுகளில் 30000 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கின்றனர்.நாம் அதனை குப்பை செடியாக பார்த்து வருகின்றோம். 80 கிட்ஸ் மற்றும் 90 கிட்ஸ்யை கேட்டால் அனைவருக்கும் இந்த சொடக்கு தக்காளியை தெரியும். ஏனெனில் அந்த சொடக்கு தக்காளியை நெற்றியில் வைத்து உடைத்து அவர்கள் விளையாடி மகிழ்வர். அவ்வாறு இந்த காயை உடைக்கும் பொழுது சொடக் என்று சப்தம் எழும்பும். அதனாலேயே அதற்கு சொடக்கு தக்காளி என்று பெயர் பெற்றது.இனிமேலாவது இந்த சொடக்கு தக்காளியின் மருத்துவத்தை அறிந்து நாம் அதனைப் பயன்படுத்துவோம்.வாங்க அந்த சொடக்கு தக்காளி பழத்தின் நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.


சொடக்கு தக்காளியில் உள்ள சத்துக்கள்!

இந்த சொடக்கு தக்காளியில் விட்டமின் பி1,பி2, பி3,
விட்டமின் ஏ,விட்டமின் சி, இரும்புச் சத்து பாஸ்பரஸ்,பொட்டாசியம்,
புரோட்டீன்,கார்போஹைட்ரேட் போன்ற எண்ணற்ற சத்துகள் இதில் அடங்கியுள்ளன.

View pictures in App save up to 80% data.
சொடக்கு தக்காளியின் பயன்கள்!

இந்த சொடக்கு தக்காளியின் செடியின் இலையையும் காயையும் சிறிதளவு எடுத்து நன்றாக நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து,பின்பு இந்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து தினமும் வடிகட்டி குடித்து வந்தால் உடலில் கீழ்கண்ட பிரச்சினைகளை குணப்படுத்தும்.

1.இந்த நீரை தினமும் குடித்து வருவதனால் எப்பேர்ப்பட்ட மூட்டுவலியும்,விரைவில் குணமாகும்.குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கு எப்பேர்பட்ட மருந்து போட்டாலும் அது கேட்காது. ஆனால் இந்த சொடக்கு தக்காளி நீரை குடித்து வந்தால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மூட்டு வலி பிரச்சனை அடியோடு தீரும்.

2. இதில் விட்டமின் பி1 அதிகளவில் இருப்பதனால் தினமும் காலையில் குடித்து வருகையில் இதயத் தமனியில்
தேங்கிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் சக்தி இதற்கு உள்ளது.மேலும் கீழ் வாத பிரச்சினையை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

3.இந்த நீரை புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் புற்று நோயினால் ஏற்படக் கூடிய பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்க வல்லது.மேலும் அந்த புற்றுநோய் கட்டியால் ஏற்படும் வலிகளையும் குறைக்க இந்த சொடக்கு தக்காளி நீரானது பயன்படுகின்றது என்பது மருத்துவர்களின் கூற்றாகும்.

4.இந்த சொடக்கு தக்காளியில் விட்டமின் பி3 அதிகமாக இருப்பதினால்,உடலில் புதிய ரத்தம் ஊறுவதற்கு வழி செய்யும்.

5. இந்த சொடக்கு தக்காளி பழத்தை தினமும் காலையில் ஐந்து அல்லது பத்து பழம் சாப்பிட்டு வருகையில் சிறுநீர் மற்றும் கல்லீரலில் ஏற்படும் பைரோசிஸ் எனப்படும் கிருமி தொற்றுகளைத் சரிச்செய்யும்.

6. அதுமட்டுமல்லாமல் இந்த சொடக்கு தக்காளி பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால்,நம் உடலில் நினைவாற்றல் அதிகரிக்கும்.இது மட்டுமின்றி ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் சக்தியும் இந்த சொடக்கு தக்காளி பழத்திற்கு உண்டு.

7. நம் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்க இந்த சொடக்கு தக்காளி இலை மற்றும் கனிகளை மஞ்சளுடன் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மீது பூசி வந்தால் கட்டிகள் சுலபமாக கரைந்துவிடும். கட்டினால் ஏற்படும் வலிகளும் முற்றிலும் நீங்கிவிடும்.

Editor's Choice
தாவர இயல் பெயர்: Bael, Aegle marmelos
 
இதன் மறு பெயர்கள்: கூவிளம், சரபீதலம், அலுவீகம், அல்லூரம், ஆலூகம், சட்டாம், சிறிய பலகியம், திரிபத்ர, பில்வம், பூவிதாத, சலய, மாங்கல்ய, சாண்டல்லியம், கற்கடக நிலை மல்லிகம், குசாபி, வில்வை
 
வளரும் இடங்கள்: இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும்.
 
பயன் தரும் பகுதிகள்: இலைகள், கொட்டைகள், பட்டை, மலர், பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.
 
பொதுவான தகவல்கள் : வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
 
கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் கூவிளம் என்பதும் காட்டப்பட்டுள்ளது.
 
கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது. வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும்.
 
ஆன்மீகத்தில் வில்வ மரம் :-
 
இந்து மதத்தில் வில்வ மரம் மிகப் புனிதமானது.சிவ வழிபாட்டில் வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது. நேபாளத்தில் கன்னிப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு பிரபலமானது.
 
சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாத்தினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம்.
 
வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலங்கை. இவைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பெளர்ணமியில் சிவனுக்குச் சாத்தினால் மெய்ஞ்ஞானம் ஏற்படும். வில்வம் பக்தியையும், முக்தியையும் அளிக்கக்கூடியதாகும்.
 
வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
 
ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.
 
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
 
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
 
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
 
சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
 
வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.
 
ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ண புஷ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன். வில்வப் பழத்தின் மகத்துவம்:-
 
வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கிறது. வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும்.
 
வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும். இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகளை நீக்கும். தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும். சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கூடக் கரைக்கும். இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
 
15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம் தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.
 
மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள். இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள். கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.
 
அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.
 
வில்வப் பழம் மன இறுக்கத்தையும் போக்க வல்லது. இன்னும் சொல்லப் போனால் கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஓர் அமுதம் என்றே வில்வப் பழத்தைச் சொல்லலாம். அவர்கள் இரண்டு கிராம் அளவில் கஷாயம் தயாரித்து தினசரி ஒருவேளை குடிக்கலாம். இதனால் மனம் நிம்மதி அடையும். மனம் ஒரு ஆலயமாக மாறும். இதனை இன்னொரு சிவ மூலிகை என்று சொன்னாலும் அது மிகையாகாது.
 
வில்வ மரத்தைப் பற்றிய மேலும் சில பொதுவான தகவல்கள்:-
 
மணமுடைய இலைகளைப் பெற்ற முட்களுள்ள பெரிய மரம் வில்வம். மாற்றடுக்கில் மூன்று கூட்டிலைகளைக் கொண்டது. ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட மரத்தை மகாவில்வம் என்பர். ஆனால், மகா வில்வம் மிகவும் அரிதாகக் காணக் கிடைக்கிறது.
 
பொதுவாக வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். கபவாதங்களைத் தணிக்கும். காமத்தை விருத்தி செய்யும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. இது அனைத்து வகையான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
 
வில்வத்தின் மேலும் பல மருத்துவப் பயன்கள்:
 
* வில்வத்தின் தளிர் இலைகளை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கக் கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு என அனைத்தும் நீங்கும்.
 
* வில்வ இலைகளை சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் நல்ல செரிமானம் ஏற்படும். உண்ட உணவில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் கலந்து உடல் வலுப்பெற உதவும்.
 
* வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியும், கரிசலாங்கண்ணி இலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்.
 
* வில்வ இலையை தினம் 5 முதல் 10 வரையில் தின்று வந்தால் ஆஸ்த்மா நோயின் கடுமை குறையும்.
 
* வில்வத்தின் பழச்சதையை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட பேதி, சீதபேதி, பசியின்மை குணமாகும்.
 
* வில்வப்பிஞ்சை அரைத்துத் தயிரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, புண் போன்றவை விரைவில் குணமாகும்.
 
* வில்வப்பூவையும், துளசி இலையையும் சமமாகத் தேவைக்கு ஏற்ப எடுத்து சிதைத்துச் சாறு எடுத்துக் கொண்டு, சிறிது தேன் கலந்து காலை, மாலையாக வேலைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மிகக் கடுமையான அனைத்து வகைக் காய்ச்சலும் தணிந்து நோய் நீங்கும். அத்துடன் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.
 
* வில்வ இலையைக் கைப்பிடி அளவு எடுத்து இரவு தண்ணீரில் குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தினசரி காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லியளவு இந்த ஊற வைத்த நீரை குடித்து வந்தால் - உடம்பில் ஏற்படும் கை, கால் வலிகள் கட்டுப்படும். அத்துடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீரை குடித்து வர காலப்போக்கில் புத்தி தெளியும்.
 
* வில்வப் பழச் சதையை, காய்ச்சிய பாலில் கசக்கி விட்டு, திப்பி நீக்கி சாப்பிட்டால் கணைச் சூடு குறையும்.
 
* வில்வப் பழத்தைச் சேகரித்து அதிமதுரத் தூள், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த அதிகரிப்பால் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
 
* வில்வக் காயுடன், வெள்ளைப் பூண்டு வைத்து அரைத்து, தேமல் மீது தடவி வர, தேமல் மறைந்து சருமம் இயல்பு நிலையைப் பெறும்.
 
* வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
 
* வில்வப் பழ ஓட்டை எடுத்துக் கடைந்து கஷாயம் வைத்து, தேன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
 
* வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.
 
* வில்வாதி குளிகை - நஞ்சு, காலரா, அஜீரணம், இடுவிஷம், காய்ச்சல், கை கால் வலி ஆகிய அனைத்தையும் நீக்கும்.
 
* வில்வாதி லேகியம் - வாந்தி, இருதய நோய், காமாலை, குன்மம், கிரஹனி, சுவையின்மை, பீனிசம், இருமல், இழுப்பு, மண்ணீரல் வீக்கம், இது விஷம், மூல நோய், பாண்டு ஆகிய அனைத்தையும் தணிக்க வல்லது.
 
* வில்வாதி தைலம் இருதய நோயைத் தணிக்கும்.
 
* வில்வ இலையை வதக்கி அதை போட்டு குடிநீர் செய்து 21 நாட்கள் தொடர்ந்து காலையும் மாலையும் அருந்தி வர எல்லா விதமான பித்த ரோகங்களும் குணமாகும்.
 
* வில்வ இலைப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் புண், வாந்தி, மயக்கம் போன்ற அனைத்தும் தீரும்.
 
* வில்வ இலைச் சூரணம் காச நோய், வாய்ப்புண், குடற்புண் ஆகிய அனைத்தையும் நீக்கும் தன்மை கொண்டது.
 
- A. Gurumoorthi
Editor's Choice

உங்களுடைய பளிச்சென்ற பற்களை காட்டி ஒரு புன்னகை பூத்தாலே போதும் எல்லாரையும் எளிதாக கவர்ந்து விடலாம். அதுமட்டுமல்லாமல் இது மற்றவர்கள் முன்னிலையில் உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அதுவே உங்கள் பற்கள் மஞ்சளாக இருந்தால் மற்றவர் முன்னிலையில் சிரிப்பீர்களா?

கண்டிப்பாக இல்லை அது உங்களுக்கு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தி விடும்.

இப்படி பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

காரணங்கள் :

அதிக அளவில் காபி பருகுதல்

வயதாகுதல்

பற்களை சரியாக பராமரிக்காமல் இருத்தல்

மருத்துவ சிகிச்சை:

இப்பொழுது பற்களை வெண்மையாக்க நிறைய மருத்துவ சிகிச்சைகள் வந்திருந்தாலும் ஒவ்வொரு செக்அப்புக்கும் பல் மருத்துவரை அணுகுவது என்பது கஷ்டமாகவும் இருக்கும்.

மேலும் சிகச்சைக்கு பிறகு பற்களை ரெம்ப கவனமாக பராமரிக்க வேண்டியிருக்கும். இந்த மாதிரியான எந்த தொல்லையும் இல்லாமல் வீட்டு முறைகளைக் கொண்டே உங்கள் பற்களை பளிச் பளிச் என்று மாற்றலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மஞ்சள் :

பற்களை வெண்மையாக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது. மஞ்சளில் உள்ள விட்டமின் சி, மக்னீசியம், செலினியம் போன்றவை வலிமையான பற்களை தருகிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது பல் சொத்தை போக்க உதவுகிறது.

எப்படி பயன்படுத்த வேண்டும்

லெமன், மஞ்சள் மற்றும் உப்பு :

லெமன் பற்களை ப்ளீச்சிங் செய்து வெண்மையாக்குகிறது. உப்பும் பற்களில் உள்ள கிருமிகளை போக்கி பற்களின் மஞ்சள் நிறத்தை சரி செய்கிறது.

பயன்படுத்தும் முறை :

மஞ்சள் கிழங்கை லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பெளலில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து அந்த பேஸ்ட்டை கொண்டு பற்களில் அப்ளே செய்யுங்கள்.

சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3 தடவை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள், தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை பற்களை வெண்மையாக்குகிறது.

பயன்படுத்தும் முறை :

4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, 2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை ஒரு சுத்தமான பெளலிற்கு சேர்த்து கலந்து கொள்ளவும். முதலில் 2-3 நிமிடங்கள் பற்களை நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். பிறகு இந்த மஞ்சள் கலவையை கொண்டு வாயை கொப்பளியுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். ஒரு வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால் பற்கள் சீக்கிரம் வெண்மையாகும்.

மஞ்சள், கடுகு எண்ணெய் மற்றும் உப்பு :

இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பயன்படுத்தும் முறை :

ஒரு சுத்தமான பெளலில் 1 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய், உப்பு, 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை டூத் பேஸ்ட் மாதிரி பயன்படுத்தி வாருங்கள். சில நிமிடங்கள் வரை தேய்க்கவும். இதை வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

மஞ்சள் மற்றும் வெண்ணிலா எஸன்ஸ் :

1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து பல் தேயுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைக்கு பை பை சொல்லி விடலாம்.

Editor's Choice
பெயர் காரணம் :
 
பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வைப்பர். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்கும் பலம் (Strength) உடையவர்களாக இருப்பார்கள். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா(Samba Groom) என்று பெயர் இட பெற்றது.
 
தனித்துவம் (Specialty):
 
இந்தியாவில் தொன்றுதொட்டு பயிரிடப்படும் பாரம்பரிய (Traditional)நெல் வகைகள் மிகவும் மருத்துவக் குணம்(Medicinal Value) வாய்ந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை உடையது. அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity Power). இதில் புரதம்(Protein), நார்சத்து (Fibre) மற்றும் உப்பு (Salt) சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது.
 
மாப்பிள்ளை சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
 
நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetes) நன்மை தரும்.
உடலுக்கு வலுவைத் (Body strength) தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு.
அரிசி சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் (Nerves) பலப்படும்.
உடல் வலுவாகும்(Body Strength).
உடலை பலபடுத்தும், ஆண்மை(Masculinity) கூடும்.
 
மாப்பிள்ளை சம்பா நீராகாரம்
 
மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.
 
பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.
 
மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.
 
மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.
 
இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.

பக்கம் 7 / 15