Editor's Choice

எவ்வளவுதான் நாம் விரும்புவதைச் சாப்பிட்டாலும், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறதா என்பதையும் மறுபுறம் யோசிக்க வேண்டியதும் அவசியம். ஏனெனில், புதுப்புது நோய்கள், வெவ்வேறு உருவத்தில், நம்மைத் தாக்கக் காத்திருக்கின்றன. கெரோனா பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

எனவே இனிவரும் நாட்களில், நாம் உண்ணும் உணவில் சத்துள்ள பொருட்களைச் சேர்ந்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

அந்த வகையில், பால் என எடுத்துக்கொண்டால், மாட்டுப்பால் உடலுக்கு மிகவும் உகந்தது. குறிப்பாக பசும்பால் கொழுப்புச்சத்து குறைந்தது என்பதால், குழந்தைகளுக்கு வழங்குவது சிறந்தது.

அதே நேரத்தில் புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து மிகுந்த எருமை மாட்டுப்பால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைப் பயக்கின்றது.

எருமைப்பால்

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில், பெரும்பாலான மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக எருமைப்பாலையேப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில், எருமைப்பாலில் புரோட்டின் 4.5 கிராம், கார்போஹைட்ரேட் 4.9 கிராம், கொழுப்புச்சத்து 8 கிராம் இவற்றுடன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பசும்பாலில் இருப்பதைவிட சற்று அதிகமான கொழுப்புச்சத்தும் கொண்டது.

எருமைப்பாலின் 6 முக்கிய பயன்கள்

புரதச்சத்து நிறைந்தது (High Proteins)

உடல் தசைகள் வலுவடையவும், ஆணழகனாகவும் மாற விரும்பும் இளைஞர்கள், அதிகப் புரதச்சத்து நிறைந்த எருமைப்பாலை தினமும் பருகுவது நல்ல பலனைத் தரும். அதேபோல உடலில் உள்ள என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கும் எருமைப்பால் சிறந்தது.

வளர்ச்சியைத் தூண்டுகிறது (Development)

எருமைப்பால், பசும்பால் இரண்டிலுமே புரதச்சத்து அதிகளவில் காணப்படுகின்றன. எனினும், எருமைப்பாலை விட பசும்பாலில் 10 சதவீதம் புரதச்சத்து அதிகம். இதனால் குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது எருமைப்பால்.

இதய ஆரோக்கியம் (Health to Heart)

எருமைப்பால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக மிக உகந்தது. ஒரு டம்ளர் எருமைப்பாலில் 412.4 கிராம் கால்சியம் உள்ளது. இந்த கால்சியம், ரத்த அழுத்தத்தை சமன்செய்து, இதயத்திற்கு ரத்தம் சீராகப் பாய்வதை உறுதி செய்கிறது.

எலும்புகள் வலிமை (Strenght to Bone)

எருமைப்பாலில் கால்சியம் மட்டுமல்ல, மெக்னீஷியம், துத்தநாகம் , பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருப்பதால், எலும்பை வலுவடையச் செய்கிறது. மேலும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் அரணாகச் செயல்படுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)

எருமைப்பாலில் நிறைந்துள்ள வைட்டமின் A, வைட்டமின் C ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி உடலை நோய்கள் அண்ட விடாமல் தடுக்கின்றன.மேலும் இவ்விரு வைட்டமின்களும், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்டுகளாக செயல்பட்டு, உடலை சுத்தப்படுத்துகிறது.

சரும பராமரிப்பு (Skin Care)

எருமைப்பாலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பயன்படுகிறது. எனவே வீட்டில் ஃபேஷியல் செய்துகொள்ளும்போது, எருமைப்பாலைக் கொண்டு முதலில் முகத்தை சுத்தம் செய்து கொள்வது நல்லது. முகப்பூச்சிலும் எருமைப்பாலைக் கலந்து பயன்படுத்தலாம்.

Editor's Choice

இதய நோய்களுக்கு :

மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் மிக அதிக அளவில் நார்ச்த்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. இதய

Editor's Choice

நடைபயிற்சி

ஆரோக்கிய வாழ்க்கைக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. இந்த உடற்பயிற்சியை நீங்கள் ஜிம்மிற்கு (Gym) சென்றுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நடப்பது கூட ஒரு உடற்பயிற்சி தான். தினமும் நடைபயிற்சிக்கு உங்கள் நேரத்தை செலவிடுங்கள். நடைபயிற்சி செய்வதன் மூலம் உங்களால் உங்களின் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை நேரம் நடைபயிற்சிக்கு உங்கள் நேரத்தை செலவு செய்கீறீர்களோ அத்தனை அதிகமாய் உங்கள் எடையை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

வெண்ணீர் பருகுதல்

நம்மால் எளிய முறையில் பின்பற்ற முடிந்த விஷயங்களில் இதுவும் ஒன்று. உங்கள் காலை, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு 1 அல்லது 2 கப் சூடான தண்ணீர் குடிப்பது நல்லது. நீங்கள் சூடான நீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கிறது மேலும் உங்கள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை கரைக்கவும் இது உதவும். இது சீனா, இந்தியா, ஜப்பான், இலங்கை மற்றும் போன்ற ஆசிய நாடுகளில் பின்பற்றப்படும் எளிய முறை எடை இழப்பு நுட்பமாகும்.

உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்

அவசர அவசரமாக சாப்பிடும் போது, உணவை மென்று சாப்பிடாமல் பலர் அப்படியே விழுங்குவது வழக்கம். இது உடலில் கொழுப்பு உருவாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாம் சாப்பிடும் உணவு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் நம் செரிமான அமைப்பு அதை எளிதாக ஜீரணிக்கும். ஆனால் இந்த மிகவும் பிஸியான உலகில், நாம் உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லை. பிறகு நாம் எப்படி நன்றாக மெல்ல முடியும். ஆனால் நீங்கள் எடை குறைக்க விரும்பினால், குறைந்தபட்சம் 24 முறை உணவுவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அல்லது 30 முதல் 35 நிமிடம் நன்றாக மென்று சாப்பிடவும்.

முழு பழம் & காய்கறி உணவு

மாதத்தில் ஒரு வாரத்திற்காவது ஒரு முழுமையான பழங்கள் மற்றும் காய்கறி உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இந்த 7 நாட்களில், பழங்கள் மற்றும் காய்கறிகள் தவிர வேறு எந்த உணவு வகைகளையும் சாப்பிட வேண்டாம். இந்த எளிய முறையை நீங்கள் பின்பற்றினால், உங்கள் வீட்டிலேயே நீங்கள் எடை குறைக்கலாம். இந்த 7 நாட்களுக்கு கேரட், ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பைன் ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற பழவகைகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஆனால் இந்த 7நாட்களில் கனமான வேலைகளை செய்வதை தவிர்க்கவும். உணவுத் திட்டத்தில் திடீரென மாற்றம் ஏற்படுவதால், உங்கள் ஆற்றல் பல மடங்கு குறையும் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வாய்ப்புகள் இருக்கும். 

இசைக்கு நடனமாடுங்கள்

உங்களுக்கு பிடித்த இசைக்கு ஒவ்வொரு நாளும் 15 அல்லது 20 நிமிடங்கள் நடனமாடுங்கள். தனியாக நடனமாடலாம் அல்லது உங்கள் நண்பர்களுடன் நீங்கள் நடனமாடலாம். இந்த எளிய வழிகளால், நீங்கள் அதிக கலோரிகள் (Calories) எரிக்க முடியும் மற்றும் உங்கள் வயிற்றை சுற்றி உள்ள கூடுதல் கொழுப்பு குறையும் . கூடுதலாக நீங்கள் நன்றாக நடனம் ஆடக்கூட கற்றுக்கொள்ளலாம்.

அம்லா சாறு பருகுதல்

எடை இழப்புக்கான சிறந்த பானங்களில் அமலா சாறும் ஒன்றாகும்.இந்த பானம் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதுடன் அதிக கொழுப்புக்ளை எளிதில் கரைக்க உதவுகிறது, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சில ஆம்லா பழங்களை எடுத்து சாறு வடித்து எடுத்து தினமும் சூடான நீரில் சேர்த்து குடிக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்

மன அழுத்தத்தை குறைத்தல்

மன அழுத்தம் இருக்கும் போது உடல் எடையும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். தியானம், இயற்கையோடு அதிக நேரம் செலவு செய்வது, பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துதல், ஆன்மிக இடங்களுக்கு செல்வது என எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருங்கள்.

8 மணிநேரம் தூங்குங்கள்

தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் (NCBI) நடத்திய ஆய்வு ஒன்றின்படி, குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என தெரிவிக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் பல்வேறு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது ஒருவர் தூங்க வேண்டும். இரவு 9 மணிக்கு தூங்கிக் கொண்டு காலை 5 மணிக்கு எழுந்திருங்கள் விழிப்புடன் செயல்படலாம்.

Editor's Choice

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்

கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில்

Editor's Choice

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவில் நார்ச்சத்து என்று ஒன்று தேவையேயில்லை என்று கூறி வந்த ஆங்கில மருத்துவர்கள் கூட இன்று நம் உணவில் நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

Editor's Choice

கொரோனா கால பொருளாதார நெருக்கடிநிலையை சாமாளிக்க 35,000 கோடி ரூபாய் முதலீட்டில் 9 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய திட்டத்தினை மத்திய அரசு

பக்கம் 12 / 15